1954ல் துவங்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் என்எல்சி. என்எல்சி தொழிலாளி பற்றி, உள்ளே போனால் பணம், வெளியே வந்தால் பொணம் என்பார்கள். சுற்றியுள்ள பகுதிகளின் மக்களின் நிலம், வீடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, சமூக பாதுகாப்பு வாழ்வுரிமை என்று சொல்லப்பட்டு துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம்.
ஆரம்ப காலத்தில் 20,000க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் இருந்தனர். புதிய பொருளாதாரக் கொள்கை பின்னணியில் நேரடியாகவும், மறுபுறம் இன்கோசர்வ் சொசைட்டியின் மூலமும் பணி நியமனம் நடைபெற்றது. இந்த நிலை 1990 முதல் 1997 வரை இருந்தது. இதற்குப் பிறகு நிரந்தரத் தொழிலாளி வேலை நியமனம் நடைபெறவில்லை. சொசைட்டியும் இயங்கவில்லை.
நிரந்தரத் தொழிலாளி ஓய்வு, விபத்தில் இறப்பு ஆகியவற்றால் ஏற்படும் காலியிடங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டே நிரப்பப்பட்டன. இந்த நியமனமும் நிலம், வீடு, தந்தவர்களுக்கே தரப்பட்டது.
இவ்வாறு ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் தொழிலாளர் உரிமை, அடிப்படை வசதிகள், பி.எஃப், மருத்துவ வசதிகள், இஎஸ்அய் உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. நிலத்தை இழந்து, வீட்டை இழந்து, அடிப்படை வசதிகளை இழந்து, உரிமைகளை இழந்து இன்று 13,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் என்றாவது நிரந்தப்படுத்தப்படுவோம் என்ற கனவில், 20 ஆண்டுகளாக, மிகவும் குறைந்த கூலியைப் பெற்றுக் கொண்டு உழைக்கிறார்கள்.
2005ல் ஏஅய்டியுசி தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொழிலாளர்களின் பாதுகாப்பு, மருத்துவ வசதி, பி.எஃப், ஊதிய உயர்வு ஆகிய பிரச்சனைகளில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு சில பயன்களும் பெறப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, 2012ல் உச்சநீதிமன்றம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
நிரந்தரத் தொழிலாளர்கள் மிக அதிகளவில் ஓய்வு பெற்று வருகிற இந்த நேரத்திலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் என்எல்சி நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை வஞ்சிக்கிறது. என்எல்சி நிர்வாகம் தற்போது அவுட் சோர்சிங், கான்ட்ராக்ட் முறையை கையில் எடுத்துள்ளது. எல்அண்டுடி, ஏபிபி, சீமென்ஸ், டியுகேஆர்ஏஎஃப், பாபு இன்ஜினியரிங் போன்ற நிறுவனங்களின் 3000க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்எல்சியில் வேலை செய்கின்றனர். இதன் மூலம் நிர்வாக அதிகாரிகளால் ஆண்டுக்கு ரூ.100 கோடி அளவில் ஊழல் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பகாசுர நிறுவனங்களின் 3000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் வேலை செய்வது, நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்து வாழ்வுரிமை இழந்த குடும்பங்களில் உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் வேலை தருவது, அருகில் உள்ள சில முன்னாள் இன்னாள் ஊராட்சி தலைவர்களுக்கு கையூட்டு கொடுத்து இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவது என பல முயற்சிகள் மூலம் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என்று நிர்வாகம் காட்டப் பார்க்கிறது.
ஒப்பந்தத் தொழிலாளர் வியர்வையில், இரத்தத்தில் நவரத்னா அந்தஸ்து பெற்று என்எல்சி உயர்ந்து நிற்கிறது. நல்ல லாபத்துடன் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ச்சி பெற்று வருகிறது. உத்தரபிரதேசம், தூத்துக்குடி என பிளாண்ட் 2, பிளாண்ட் 3 துவங்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சிக்குக் காரணமான ஒப்பந்தத் தொழிலாளிக்கு மருத்துவ வசதி கிடையாது. என்எல்சி மருத்துவமனையில் மருத்துவம் கிடையாது.
பள்ளியில் ஒப்பந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி கிடையாது. இந்த நிறுவனத்திற்காக நிலத்தை, வீட்டை, வாழ்வுரிமையை இழந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆட்சியாளர்களால் நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். மிகவும் குறைந்த கூலியில் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத சூழலில் வாழ்கிறார்கள்.
என்எல்சியில் தொமுச, அண்ணாதொச, ஏஅய்டியுசி, சிஅய்டியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. நிர்வாகத்து டன் பேச்சு வார்த்தையில் பங்கு கொள்கிற சங்கங்களாக, ரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவை தொமுசவும் அண்ணா தொசவும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் ஏஅய்டியுசி சங்கம் இயங்குகிறது. 2005 முதல் பலகட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளது.
2012ல் 40 நாட்களுக்கு மேல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி நிரந்தரத் தொழிலாளர்கள், பொது மக்கள் ஆதரவோடு போராடி, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பெற்றது. இந்த போராட்டத்திற்கு அவிதொசவும் ஏஅய்சிசிடியு வும் ஒருமைப்பாடு தெரிவித்து நிகழ்ச்சிகள் நடத்தின.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் என்எல்சி நிர்வாகம் மோசடி செய்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக 13,000க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.200 சம்பளமாக தரப்பட்டு வருகிறது. பல்வேறு தடைகளைத் தாண்டி 37 நாட்களுக்கு மேல் தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். என்எல்சி நிர்வாகம் போராட்டத்தை ஒடுக்க பல முனைகளிலும் செயல்படுகிறது.
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த கோரி கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் அவிதொச சுவரொட்டிப் பிரச்சாரம் நடத்தியது. ஏஅய்சிசிடியு 8ஆவது மாநில மாநாட்டில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மோடி, தினம் தினம் நிறையப் பேசுகிறார். அரசு தொலைக்காட்சி, வானொலி எல்லாம் ஆக்கிரமிக்கிறார். நாட்டின் ஒரு பகுதியில் முக்கியமான ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 37 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருப்பது பற்றி மட்டும் அவர் பேச மறுக்கிறார். அவர் ஆட்சி யாருக்கானது என்பதை என்எல்சி தொழிலாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.