COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 1, 2014

ஜெயா ஆட்சியில் வளர்ச்சியா, வீழ்ச்சியா?

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 83,103 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், சென்னை 13,506 பேருடன் முதலிடத்திலும், கோவை 6383 பேருடன் இரண்டாமிடத்தில் இருப்பதாகவும் செப்.23ல் தமிழக காவல் துறை அய்.ஜி. உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்டவர்களில் 3% பேர் மாணவர்கள். தேசிய குற்றப் பதிவுத் துறை கணக்கின்படி 2013ல் மட்டும் தமிழகத்தில் தற்கொலை செய்தோர் 16,601 பேர். பெரும்பான்மையான தற்கொலைக்கான அடிப்படை காரணங்கள் வறுமை, கந்துவட்டி, கடன்தொல்லை போன்றவை. தமிழக பொருளாதார வளர்ச்சி பற்றிய திமுக, தேமுதிக, பாமக, மதிமுக கட்சிகளின் விவாதங்கள், உழைக்கும் மக்களின் நொறுங்கிப் போயுள்ள வாழ்க்கைத் தரம், அற்ப கூலி, வேலை இழப்புகள், கூலியை/சம்பளத்தை கொள்ளையடித்துவிடும் விலை உயர்வு, அதிகரித்து வரும் புதிய கொத்தடிமை முறை, வறுமைமயமாதல், ஏதுமற்றவர்களாக தூக்கியெறியப்படுதல் என்ற இயக்கப்போக்கிற்கு துணை புரியும் தமிழக அரசின் கொள்கைகள், சட்டங்கள், திட்டங்கள் பற்றி கேள்வி எழுப்பத் தவறுகின்றன.

தொலை நோக்குத் திட்டம் 2023, தமிழ்நாடு தொழிற்துறை கொள்கை 2014, ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பொருட்கள் கொள்கை 2014, உயிரி தொழில் நுட்ப கொள்கை 2014, தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின், தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,83,819 கோடி போன்ற கொள்கை அறிவிப்புகள், திட்டங்களை முதல மைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வெளியிடுகிறார். திட்டங்கள் நிறைவேறுகின் றனவா? வளர்ச்சி ஏற்படுத்துகின்றனவா?

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில், 2,600 ஏக்கர் நிலங்களில் இருந்த குத்தகை விவசாயிகளை கெடுபிடியாக வெளியேற்றி 13 ஆண்டு களுக்கு முன், அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பல்பொருள் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 2 தனியார் நிறுவனங்கள் மட்டுமே வந்துள்ளன. இதுவரை ரூ.400 கோடி வரை செலவிடப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்களில் சேலம் மற்றும் திருநெல்வேலி பொருத் தமற்ற நிலத்தேர்வு எனவும், மதுரையில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு மண்டலங் கள் தவறானது எனவும் மத்திய தணிக்கை அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 2011ல், ஆந்திர முதலாளியான மதுசூதன ரெட்டியின் லான்கோ இன்ஃப்ராடெக் கம்பெனியுடன் 630 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டது. மத்திய அரசாங்கம் காரே-பெல்மா 2 திட்டத்தின் கீழ், தமிழக அரசாங்கத்திற்கு சத்தீஸ்கர் மாநில நிலக்கரிச் சுரங்கங்களில் 59.20 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி வெட்ட உரிமை தந்தது. மொத்த சுரங்க உரிமையையும் அக்கம்பெனிக்கு இலவசமாக தந்து, உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட் டிற்கு ரூ.1.99 தந்து வாங்கி கொள்ள ஜெயலலிதா ஒப்பந்தம் போட்டார். சத்திஸ்கர் நிலக்கரி சுரங்கங்களை கொள்ளையடிக்கும் லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனம் இதுவரை தமிழகத்திற்கு மின்சாரம் தரவில்லை. இந்நிறுவனம் ரூ.36,000 கோடி கடன் சுமையில் உள்ளது.

கடன்களை சீரமைத்துக் கொள்ள (குறைத்துக்கொள்ள) வங்கிகளிடம் பேரம் பேசி வருகிறது. தனக்குச் சொந்த மான மிகப் பெரிய 1200 மெகாவாட் திறனுள்ள உடுப்பி மின் நிலையத்தை ரூ.6000 கோடிக்கு (ரூ.2000 கோடி ரொக்கமாக, ரூ.4000 கோடி தவணைகளில் பெற்றுக் கொள்ள) அதானி பவர் நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. திவாலாகிக் கொண்டிருக்கிற கார்ப்பரேட்டுகளுடன் போடப்படும் ஒப்பந்தத்தால் நட்டமும், தீராத கடன் சுமையும்தான் வந்து சேர்கிறது.

தமிழ்நாட்டில் 19 சாராய ஆலைகள் (17 தனியார், 2 கூட்டுறவுத்துறை) 6,800 டாஸ்மாக் கடைகள், 4,271 பார்கள், அஇஅதிமுக ஆட்சியில் 2011-12ல் ரூ.18,081.16 கோடி, 2012-13ல் 21,680.67 கோடி, 2013-14ல் ரூ.22,000 கோடிக்கும் கூடுதல் வருமானம் என வளர்ச்சி பெற்றுள் ளது.  ஆகஸ்ட் 8 சட்டமன்ற கூட்டத்தில், மதுவிலக்கு (!) அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ரூ.8 கோடி செலவில் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் புதிய சாராய குடோன்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

சாராய சாம்ராஜ்யத்தை பாதுகாக்க விரும்பும் ஜெயா அரசாங்கம், விவசாயிகளை, விவசாய விளைபொருட் களை பாதுகாக்க என்ன செய்தது? 2014 மத்திய பட்ஜெட், விவசாய விளைபொருட்கள் அழுகாமல் பாதுகாக்கப் படும் திட்டத்திற்கு, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை கள், 22 உணவு பூங்காக்கள் என ரூ.2,000 கோடி ஒதுக்கி யது. குறைந்த வட்டி, சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுத்தது. ஜெயா அர சாங்கம் 75% தனியார் முதலீடு + 25% விவசாயிகள் முதலீடு அடிப்படையில், புதுக்கோட்டையில் பயிறு, தருமபுரியில் தக்காளி, தேனியில் வாழை, கோவையில் கொப்பரை, விழுப்புரத்தில் நிலக்கடலை பதப்படுத்தும் மய்யங்கள் என்று அறிவித்தது. ஆனால், மத்திய அரசின் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. சாராயத்தை பாதுகாப் பது அரசாங்கம், விவசாயத்தை பாதுகாக்கும் பதப்படுத் தும் தொழிலை நடத்த வேண்டியது தனியார் என்ற கொள்கையையே ஜெயா அரசாங்கம் கடைபிடிக்கிறது.

தொழிற்துறை வளாகங்கள்/திட்டங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றின் மூலம் பெரு முதலாளிகளுக்கு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங் களை அரசாங்கம் வாங்கித்தர தமிழ்நாட்டில் பயன்படுத் தப்படும் அடிப்படையான சட்டம், தமிழ்நாடு தொழிற்துறை தேவைகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும் சட்டம் 1997. இச்சட்டத்தின்படி விவசாயி பெற வேண்டிய இழப் பீட்டைத் தீர்மானிக்க சகல அதிகாரம் படைத்தவர் மாவட்ட ஆட்சியரே! எவ்வளவு தொகை தரவேண்டும் என்பதை அவர் முடிவு செய்ய, பிரிட்டிஷ் கால 1894 நிலம் கையகப் படுத்தும் சட்டம் பிரிவுகள் 23, 24ன்படி அவர் செயல்பட வேண்டுமாம்! பல்வேறு புதியபுதிய தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்காக நிலங்களை இழக்கவுள்ள விவசாயி கள், கூடுதலான பயன்களை, மறுவாழ்வை பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே, ஜெயா அரசாங்கம், தமிழ்நாடு திருத்த மசோதா 2014அய் அறிமுகப்படுத்தியுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய சட்டம் நியாயமான இழப்பீட்டிற்கான உரிமை, நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை, புனர்வாழ்வு மற்றும் மறுகுடி யேற்ற சட்டம் 2013. இச்சட்டம் அடிப்படையில் கார்ப்ப ரேட் நலனுக்கானது. ஆயினும், கடந்த கால கையகப்படுத் துதல் சட்டங்களை ஒப்பிடும்போது கூடுதல் இழப்பீட்டுத் தொகை, புனர்வாழ்வு, மறுகுடியேற்றத்திற்கான வழிவகை களை முன்வைக்கிறது. மத்திய சட்டங்களை அடிப்படை யாகக் கொண்டு, மாநில சட்டங்களை உருவாக்கலாம் என்றடிப்படையில், ஜெயா அரசாங்கம் திருத்த மசோதா 2014அய் இந்திய சனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களை, 1978, ஆதி திராவிடர் நலத் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம், 1997, தொழிற்துறை தேவைகளுக்காக நிலம் கையகப்படுத் துதல் சட்டம், 2001, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் எதுவொன்றிலும் புனர்வாழ்வு, மறு குடியேற்றத்திற்கான வழிவகைகள் பற்றி இல்லை. 2013 நிலம் கையகப்படுத் துதல் மத்திய சட்டத்தின் மீதான தமிழ்நாடு திருத்த மசோதா 2014ல் இழப்பீட்டு பணத் தொகைகளை வழங் குவதை மட்டும் ஏற்பதாகவும், புனர்வாழ்வு மறுகுடியேற்ற வழிவகைகளை ஏற்க மாட்டோம் என தெரிவித்து நயவஞ் சகமாக விவசாயிகளை ஒழித்துக் கட்ட திட்டமிடுகிறது. தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் பல்வேறு தொழில் திட்டங்களுக்காக அறிவித்துள்ள கையகப்படுத்தப்படு கின்ற நிலம் 53,000 ஏக்கர். தொலை நோக்குத் திட்டம் 2023ல் சொல்லப்படும் விரைவு நெடுஞ்சாலைகளுக்காக எடுக்கப்பட உள்ள நிலம் 10,000 ஹெக்டேருக்கும் கூடுதல். இந்தப் பின்னணியில் ஜெயா அரசாங்கத்தின் நிலம் கையகப் படுத்தும் சட்டங்கள் ஏழை சிறு குறு விவசாயிகள் துன்பத்தை அதிகரிக்கத்தான் செய்கிறது. 

ஜெயா ஆட்சியில், விவசாய நெருக்கடி காவிரி டெல்டா விவசாயிகளை பிடித்தாட்டுகிறது. 2012ல் 13 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர். 2013 - 14ல் விளை நிலங்கள் விற்பனை அதிகரிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நில விற்பனை பத்திரப் பதிவு 1.38%ஆக இருக்க, தஞ்சாவூர் பிராந்தியத்தில் (நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள்) 6.07% என உயர்ந்தது. கடலோர நிலங்களை தனியார் அனல்மின் நிலையங்களுக்கும், சாலையோர நிலங்களை ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கும் விற்றுவிட்டு டெல்டா விவசாயிகள் ஏதுமற்றவர்களாக மாறி வருகின்றனர். மேற்கு மாவட்ட நூற்பாலைகளில் பணிபுரியும் சுமங்கலித் திட்ட கொத்தடிமைகளில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 53,000 இளம் பெண்களாவர்.

தமிழ்நாட்டிலுள்ள அமைப்பாக்கப்படாத தொழிலா ளர்கள் எண்ணிக்கை மற்றும் வாழ்நிலைமைகளைப் பற்றிய கணக்கெடுப்பு முறையாக செய்யப்படவில்லை. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், நல வாரியங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் கணக்கு களின் அடிப்படையில் மதிப்பிட்டால், 2 கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். விவசாயத் தொழிலாளர்கள் 1.5 கோடி பேர், கட்டுமானம் 52 லட்சம், செங்கல்சூளை மற்றும் குவாரிகள் 5 லட்சம், பீடி 10 லட்சம், விசைத்தறி, கைத்தறி 12 லட்சம், நூற்பாலை சுமங்கலித் திட்டம் 3 லட்சம், வீடுகள் கடைகளில் பணிபுரிவோர் 10 லட்சம், தினக்கூலி/ஒப்பந்த/தற்காலிக பணியாளர்கள் 10 லட்சம் என பட்டியல் விரிவடைகிறது. பலருக்கும் குறைந்த பட்ச கூலியோ, வேலை நேரமோ இல்லை. 12 மணி நேர வேலைக்கு அற்ப, சொற்ப கூலி பெற்றுக்கொண்டும், கொத்தடிமை முறைக்குள்ளும் சிக்கிக் கொண்டுள்ளனர். விவசாயம், செங்கல் சூளை, பீடி தீப்பெட்டி, உப்பளங் கள், விசைத்தறி, கைத்தறி, நூற்பாலைகள், சாயப்பட்ட றைகள், வைரம், வெள்ளிப்பட்டறைகள் என பல்வேறு தொழில்களில் புதிய கொத்தடிமை முறை அதிகரித்துச் செல்கிறது. கணவன்-மனைவி குடும்பமாக வேலைக்கு அமர்த்துதல், முன் பணம் வழங்கி பீஸ் ரேட் முறையில் குறைந்த கூலிக்கு சுரண்டுதல், ஓராண்டு கூலியை முன் பணமாக வழங்கி கூலியில் கழித்தல், விடுமுறை வழங்கா மல் வேலை வாங்குதல், பணிபுரியும் இடத்தில் அடைத்து வைத்து வேலை வாங்குதல் என புதிய கொத்தடிமை முறை பல பரிமாணங்களை கொண்டுள்ளது.

கூலி உயர்ந்தது போல ஒரு தோற்ற மாயை நிலவினாலும், மத்திய, மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்படும் கடுமை யான விலைவாசி உயர்வும், தமிழக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு (குறிப்பாக விவசாயம் மற்றும் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு) காரணமாக வேலை இழப்புகளாலும், படுமோசமான வாழ்க்கைத் தரமே நிலவுகிறது. தமிழகத்தின் தனி நபர் சராசரி வருமா னம் பற்றிய புள்ளிவிபரங்களுக்கும், கோடிக்கணக்கான அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களுக்கும் சம்பந்தமே இல்லை. 1.50 கோடிக்கும் மேற்பட்ட தமிழக விவசாயத் தொழிலாளர்களில் 100 நாள் வேலைத் திட்டத்தை மட் டுமே நம்பி வாழ்க்கையை ஓட்டுபவர்கள் 30 லட்சத்திற் கும் மேற்பட்டவராவர். ஜெயா ஆட்சியில் 2013-14ல் சராசரி 59 நாட்கள் மட்டுமே வேலை தரப்பட்டது.

சராசரியாக கூலி ரூ.100க்கும் குறைவாகவே தரப்பட்டது. ஓராண்டிற்கு பெறப்படும் வெறும் ரூ.5,000 கூலியோடு, இலவச அரிசி, வேட்டி, சேலை திட்டங்களோடு பசியும், பட்டினியாக, லட்சக் கணக்கானோர் வாழ்கின்றனர். 100 நாள் வேலையை மட்டும் சார்ந்திராமல் வேறு விவசாய வேலைகளுக்குச் செல்லும் விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ஆண் ரூ.175, பெண் ரூ.125 வரை தினக் கூலி என 100 நாள் வரை வேலை பெறுகின்றனர். 1 கோடிக்கும் மேற் பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆண்டிற்கு ரூ.20,000 கூலி கூட கிடைக்காத பின்னணியில், குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு, வீட்டில் ஒரு நேர ரேசன் அரிசி சமையல், கடன்கள், வறுமை என வாழ்கின்றனர். அல்லது புதிய கொத்தடிமைகளாக, நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர். செங்கல் சூளைகளுக்கு கொத்தடி மைகளாக இடம்பெயரும் தொழிலாளர்கள், 6 மாத வேலைக்கு, கணவன் - மனைவி இருவர் பெறும் அதிக பட்ச கூலி ரூ.40,000. தலைநகருக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான செங்கல் சூளைக ளில் தொழிலாளியின் தினக் கூலி சுமார் ரூ.110 மட்டுமே.

லட்சக்கணக்கான பீடி சுற்றும் பெண் தொழிலாளர் கள் பெறும் வாரக் கூலி 3,000 பீடி சுற்றினால் ரூ.320; 5,000 பீடி சுற்றினால் ரூ.600 மட்டுமே. அமைப்பாக்கப் படாத தொழிலாளியாக கணவர் இருக்க பீடி சுற்றும் பெண் தொழிலாளியின் குடும்ப வருமானம் ரூ.4,000 என்றள விலேயே பரவலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பீடித் தொழிலாளர் குடும்பங்கள் பட்டினி, கடன்களோடு, அடிப்படை வசதிகளற்ற சூழலில், கல்வியறிவுக்கான வாய்ப்புகளும் இல்லாமலிருக்கிறது. விசைத்தறி தொழி லாளர்களைப் பொறுத்தவரை, பாக்கி எனப்படுகிற முன் தொகை ரூ.1.50 இலட்சம் என அதிகரித்துள்ளது. பெண் கள் மத்தியில் கருமுட்டை விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. 12 மணி நேர வேலை, வாரக் கூலி ரூ.1,500, கந்து வட்டிச் சுரண்டல் நீடிக்கிறது.

ஒப்பீட்டுரீதியாக கூடுதல் தினக் கூலி தருகிற (பெண்களுக்கு சராசரி ரூ.200, ஆண்களுக்கு ரூ.400) கட்டுமானத் தொழில் நெருக்கடியை சந்திக்கிறது. கட்டுமான வேலைகள் கடும் தேக்கத்தைச் சந்திக்கின்றன. 2013ல் வாரத்திற்கு குறைந்தபட்சம் 4 வேலை நாட்கள் கிடைத்தது; 2014ல் வாரத்திற்கு 2 வேலை நாட்கள் கூட இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வேலை குறைவது, கூலி குறைவது, விலைஉயர்வு ஒருபுறம் இருக்க, கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் சுமையாக மாறி அமைப்புசாரா தொழிலாளர் வாழ்க்கைத் தரத்தை அடித்து நொறுக்கியுள்ளது.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழகம் செல்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. விதி 110ன் கீழ் விவாதமே இல்லாமல், சட்டமன்றத்தில் 110 அறிவிப்புகள் செய்தார். புதிய தலைமைச் செயலகத்தை சிறப்பு பல்நோக்கு மருத்துவ மருத்துவமனை ஆக்கினார். சாலை உள்கட்டமைப்பிற்கு ரூ.1,831 கோடி ஒதுக்கினார். தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையை அமைத்தார். தொழில் கொள்கைகள் அறிவிக்கிறார். ஆனால் நொறுங்கிப் போயுள்ள தமிழக உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற எதையும் அறிவிக்க வில்லை, செய்யவும் இல்லை. தமிழக பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர் சமூகப்பாதுகாப்பு திட்டங்களுக்கு 1% நிதி கூட ஒதுக்கவில்லை. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள ரூ.687 கோடியில் இருந்து நலப் பயன்களை வழங்கவும் தயாராக இல்லை.

(2008 - 2013ல் இவ்வாரியம் செலவு செய்தது ரூ.147 கோடி மட்டுமே!) ஆட்சியதிகாரத்திலும், அரசியலிலும் ஜெயலலிதா எதேச்சாதிகாரமாக செயல்படுகிறார் தமிழகம் வளமாக இருப்பதாக, பொருளாதாரம் வளர்வதாக மாயை ஏற்படுத்துகிறார். மூன்றாண்டு கால ஜெயா ஆட்சியில், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், விவசாயிகள் சராசரி வாழ்க்கையை தொலைத்து, வாழ்க்கைத் தரத்தை இழந்துள்ளனர்; வறுமைக்கு, கடன் தொல்லைக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொள்கின்றனர்; விலை உயர்வும், வேலை இழப்பும், சரியும் கூலி/சம்பளம் அவர் களை வீதிக்கு துரத்துகிறது. இடதுசாரிகளுக்கு விரிவான போராட்ட களம் காத்திருக்கிறது.


Search