பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி ஜேசுதாஸ் சொன்ன கருத்து பற்றி, இரண்டு மகள்கள் கொண்ட தந்தையர் சிலரிடம் கருத்து கேட்டபோது
ஏசுதாஸ், பெண்கள் ஆடை கட்டுப்பாடு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே என பாடினாரே? அவர்தான். அவருக்குப் போய் எதற்கு இந்த வேலை என திருப்பூரில் பேசும்போது ஒரு தோழர் சொன்னார்.
நான் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பா. ஜேசுதாஸ் கருத்து பற்றி கருத்து சொல்ல என்னைக் கேட்டனர். இந்த விசயத்தில் நான் என்ன கருத்து சொல்வது? அவர வர்க்கு வேண்டிய உடைகள், அவரவர் வயது தோற்றம் சூழல் போன்ற இயற்கை, சமூக தேவைகளிலிருந்து, விரும்பியதை சாத்தியமானதை தேர்வு செய்து உடுத்த வேண்டும். இதற்கு மேல் என்ன சொல்வது?
ஆடைகள் தேர்வு விசயத்தில், எங்கள் பிள்ளைகள் சிறுமிகளாக இருந்தாலும் ஆடைகள் வண்ணம் வடிவமைப்பு அவர்கள் தேர்வு தான். படிப்பு, பள்ளி, பொழுதுபோக்கு எல்லாம் அவர்கள் தேர்வுதான். அவர்கள் தேர்வை அங்கீகரிக்கும் ஜனநாயகச் சூழல் உள்ளது. இந்த அணுகுமுறை இன்னும் பல ஆண்டுகள் கழித்து அவர்கள் வளர்ந்து இளம்பெண்களாக மாறும் போதும் தொடரும்.
ஆடை விசயத்துக்கு திரும்ப வருவோம். புராதன பொது உடமை சமூகத்தில் இலைகளே (ஆண், பெண்) மனிதர்களுக்கு உடைகளாக இருந்தன. சமூக மாற்ற இயக்கப் போக்கில் நாகரிக சமூகத்தில் ஆண்களும் பெண்களும் தங்கள் உடலை காக்க, தோற்றத்தை வெளிப் படுத்திக் கொள்ள பல்வேறு உடைகளை மாற்றிக்கொண்டுதான் வருகிறார்கள். ஆண்கள் இலை, கோவணம், வேட்டி, அன்டர்வேர், இன்று ஜீன்ஸ் பேண்ட், இன்னர்வேர், என மாறி வந்துள்ளனர். இது பற்றி எந்தப் பெண்ணும் கட்டுப்பாடு போடவில்லை.
அது மாதிரிதானே பெண்களும்? தங்கள் உடல் அமைப்பு இயற்கை சூழலுக்குக்கேற்ப தங்களுக்கு ஏற்ற உடைகளை வடிவமைப்பை தேர்வு செய்கின்றனர். இந்த விசயத்தில் ராமதாஸ், ஏசுதாஸ் போன்றவர்கள் ஏன் எப்படி பெண்கள் மட்டுமே எட்டுகஜ சேலையிலேயே இருக்க வேண்டும் என கட்டுப்பாடு போடுகிறார்கள்? ஆடைக் கட்டுப்பாடு இல்லாததால் தான் பாலியல் வன்முறை நடக்கிறது என்று சொல்வது மோசடி.அநியாயம். விழுப்புரத்தில் இருளர் சமூக பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாயினர். அவர்கள் யாரும் ஜீன்ஸ் பேன்ட் டைட் டாப் எதுவும் உடுத்தியிருக்கவில்லை.
திரைப்படங்களின் பாடல் காட்சிகளில், கார்ப்பரேட் ஊடகங்களின் பரப்புரை பாடல்களில் பெண்களை சித்தரிக்கப் பயன்படுத்தப் படும் ஆடைகளை, தங்கள் உடைகளாக பெண்கள் தேர்வு செய்து உடுத்துவதும் இல்லை. அவரவர் வசதிக்கேற்பவே உடையணிகிறார்கள்.
அரசியல் சமூக வெளியில் பாட்டாளி வர்க்க முன்னோடியாகச் செயல்படுவதும், வீட்டுக்கு போனதும், மிகவும் பொறுப்பான மனிதன் நான் குடும்ப விசயங்களில் தலையிட மாட்டேன், ஒதுங்கி இருக்கிறேன் என்று சொல்லி தற்காப்பு அணுகுமுறையோடு, கண்டு கொள்ளாமல் இருப்பதும், அல்லது பின்தங்கிய குடும்ப சென்டிமென்ட் அணுகுமுறையுடன் நடந்து கொள்வதும் மோசடியாகும்.
தனி உடைமை என்று வந்ததோ ஆணாதிக்கமும் பிற்போக்கு கருத்துக்களும் கூடவே வந்தன, தனி உடைமை ஒழிக்கப்படும் போது தான் ஆணாதிக்கக் கருத்தும் பழக்கவழக்கங்களும் ஒழியும் எனச் சொல்லிவிட்டு, அது வரை நாங்கள் பழைய பழக்கத்தையே தொடர்கிறோம் என செயல்படுவதும் மோசடியே.
பார்வைகள், பாலியல் தொந்தரவுகள், சீண்டல்கள், வசவுகள் ஆகியவற்றை எதிர் கொள்வதை கற்றுத்தர கல்வி முறை வேண்டும்.
ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக எந்த வடிவத்தில் எதிர்ப்பு வந்தாலும், அதை ஆதரிக்க வேண்டும்.பெண்களின் ஆடை உள்ளிட்ட தேர்வுகளில் ஜனநாயக அணுகுமுறை தேவை. அதற்கான சூழலை நாம்தான் உருவாக்க வேண்டும். உற்பத்தியில் உழைப்பில் ஈடுபடும் மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு இதைச் செய்கிறோமோ அந்தளவுக்கு ராம தாஸ்களுக்கு ஜேசுதாஸ்களுக்கு வருங்காலங்க ளில் வேலையில்லாமல் போகும்.
-சேகர்
எனக்கு இரண்டு மகள்கள். அவர்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவது இன்னும் அவர்களுக்கு வசதியானது. இருந்த போதும் என் பிள்ளைகள் அணிகிற ஆடையால் தெருவில் மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிவிடக் கூடாதே என்ற பாதுகாப்பு(?) உணர்வு என்னிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
பாடகர் ஜேசுதாஸ் போன்றோர் பொது மேடையில் பேசும் கருத்துக்கள் ஆணாதிக்க மனோபாவத்துக்கு உரமிடுபவை. அவை பெண்கள் மற்றும் முற்போக்கு இயக்கங்களால் எதிர்க்கப்படக் கூடியவை. தொடர் போராட்டங்கள் மட்டுமே ஆணாதிக்க மனோபாவ பொதுபுத்தியில் தீர்மானகரமான மாற்றத்தைக் கொண்டுவரும்.
-தேசிகன்
ஜேசுதாஸ் வெளிப்படுத்தியுள்ள கருத்து பிற்போக்கானது. பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பது. சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் சார்ந்துள்ள சினிமா துறை பெண்களை காட்சிப் பொருட்களாகவே காட்டுகிறது. அவர் முதலில் அங்கு அறிவுரை சொல்லட்டும்.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஆணுக்கு நிகரான பெண்ணாகவே அவர்கள் இருவரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு தந்தை என்ற முறையில் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது, விருப்பங்களை நிறைவேற்றுவது எனது கடமை. ஆனால், அதற்காக அவர்களது உரிமைகளில் நான் ஒரு போதும் தலையிட மாட்டேன். அவர்கள் என்னவிதமான ஆடை அணிவார்கள் என்பது அவர்கள் விருப்பம். அதில் வேறு யாரும் எந்தக் கருத்தும் சொல்வதை நான் ஒரு போதும் ஏற்கமாட்டேன்.
-குருசாமி
பெண்கள் மீதான வன்கொடுமைக்குக் காரணம் அவர்கள் உடுத்தும் உடையே என்ற தவறான பொதுக் கருத்தையே பாடகர் ஜேசுதாஸ் வெளிப்படுத்துகிறார். அவர்கள் உடுத்தும் உடைதான் காரணம் என்றால் பெண் குழந்தை களும் மூதாட்டிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது ஏன்? ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எந்த உடை அணிந்தாலும் அது பற்றி தனது கருத்தைச் சொல்ல எப்போதும் ஓர் ஆணாதிக்கக் கூட்டம் இருக்கத்தான் செய்யும். பெண்களின் வசதிக்கேற்ற உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே ஜேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றிய தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
பெண்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும், பார்க்க வேண்டும் என்ற கலாச்சாரத்தையும் இந்த சமூகத்துக்குச் சொல்ல நம் கலாச்சார காவலர்கள் முன்வருவார்களா?
-இரண்டு பெண் குழந்தைகளின் தகப்பன் ராஜவேலு