செப்டம்பர் 20 அன்று நாகை மாவட்டம், கொள்ளிடத்தில் அனைத்திந்திய
விவசாயத் தொழிலாளர் சங்கமும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பும் இணைந்து
நடத்திய கருத்தரங்கம் நடத்தின. பல்வேறு கல்லூரிகள் பள்ளிகளின் மாணவர்கள்
150 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தோழர்கள் நேதாஜி, அமிர்தலிங்கம்
தலைமை தாங்கினர். ‘தமிழகத்தில் தொடரும் தலித் மக்கள் மீதான தாக்குதலும்
தீர்வுக்கான வழிமுறைகளும்’ என்ற
தலைப்பில், ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் அ.சந்திரமோகன்,
‘இந்தியாவில் வலதுசாரி எழுச்சியும் இடதுசாரிகள் கடமைகளும்’ என்ற தலைப்பில்
மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் பேசினர். சுனாமியால்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாநிலத் தலைவர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்தனன்
ரூ.25,000 மதிப்பில் கல்வி உதவி முடிப்புகள் வழங்கினார். காவல் துறையின்
தடைகளைத் தாண்டி நிகழ்ச்சி நடக்க பகுதியின் தலித் இளைஞர்கள் முன்னணி
பங்காற்றினர்.
