1967ல் பதிவு செய்யப்பட்டு, 1968ல் துவங்கப்பட்ட டி - 1684
சொக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், இன்றைக்கு 3,343 சங்க
உறுப்பினர்களைக் கொண்டு, சுமார் ரூ.5 கோடி வரவு செலவு நடைபெறும் அளவிற்கு
மிகப் பெரிய சங்கமாக வளர்ந்துள்ளது.
நீண்ட காலமாக சங்கம், கந்தர்வக்கோட்டை அதிமுக ஒன்றியச் செயலாளர் சொக்கம்பேட்டை ஆர்.ரெங்கராஜன் என்பவரின் குடும்பச் சொத்தாக செயல்பட்டு வந்தது.
சங்கம்விடுதி, கல்லாக்கோட்டை, புதுப்பட்டி மற்றும் பெரியகோட்டை ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் சங்கத்தை ஜனநாயகபூர்வமாக நடத்த 2013ல் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் 100க்கும் மேல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
11 வேட்பாளர்களைக் கூட நிறுத்த முடியாத அதிமுக மிகுந்த சிரமப்பட்டு பெரும்பான்மை மனுக்களை முறைகேடாக தள்ளுபடி செய்தது. தேர்தல் நடத்தாமல் இருக்க சீட்டும்/ரேட்டும் தருவதாகப் பேசியும், முடியாததால் தேர்தலை சந்திக்க துணிவில்லாமல் திட்டமிட்டு போலி கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தியது. மக்கள் மத்தியில் அதிமுகவின் மானம் பறிபோனது.
திடீரென இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஆகஸ்ட் 22ல் மீண்டும் மக்கள் திரண்டு மனு தாக்கல் செய்தனர். மிரண்டு போன அதிமுக எவ்வளவு முயன்று தள்ளுபடி செய்தும் 25 மனுக்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை. தேர்தல் நடந்தால் மீண்டும் மானம் போய்விடுமோ என்று பயந்தது அதிமுக. மானம் காக்க வந்தார் மாண்புமிகு மந்திரி சுப்பிரமணியன். 11 பேர் கொண்ட பெயர் பட்டியலை ஒட்டிவிட்டு, தேர்தல் முடிந்தது என்றார்.
ஒரு கூட்டுறவு சங்கத் தேர்தலைக் கூட நடத்த முடியாத அதிமுகவின் ஜனநாயக படுகொலையை கண்டிக்க, டி - 1684 சொக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலை முறையாக நடத்து, தொடர்ந்து தேர்தல் முறைகேடு செய்துவரும் மாண்புமிகு மந்திரி சுப்ரமணியன் மீதும், அவருக்கு உடந்தையாக செயல்படும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடு என்ற முழக்கங்களுடன், செப்டம்பர் 9, 2014 அன்று கந்தர்வக்கோட்டையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஆர்ப்பாட்டத்திற்கு அயாலா மாநிலச் செயலாளர் தோழர் அ.இராசாங்கம் தலைமை வகித்தார். சிபிஅய்எம்எல் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சாமி.கோவிந்தராஜ் தொடக்க உரையாற்றினார். சிபிஅய்எம்எல் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி சிறப்புரையாற்றினார். அயாலா மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் வீ.மூ.வளத்தான், அயாலா மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கா.சோதிவேல், சிபிஅய்எம்எல் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் க.சக்திவேல், வெ.தங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர்.