திருபெரும்புதூர் ஒரகடத்தில்
இயங்குகிற ரெனால்ட் நிசான் ஆலை பயிற்சி தொழிலாளர்கள் வேலை நீக்கம்
செய்யப்பட்டதை கண்டித்து, செப்டம்பர் 20 அன்று, ஒரகடத்தில் ஏஅய்சிசிடியு
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாநிலச் செயலாளர் தோழர் சொ.இரணியப்பன்,
ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் ராஜேஷ், நிப்பான்
எக்ஸ்பிரஸ் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் கனகராஜ் ஆகியோர் கண்டன
உரையாற்றினர்.

