2015, தீப்பொறி சந்தா சேர்ப்பு
இயக்கம் நடத்தும் காலம் வந்துவிட்டது. அக்டோபர், நவம்பர் மாதங்களிலும்
டிசம்பர் 17 வரையிலும் இதற்கான பணிகளில் நாம் ஈடுபடவுள்ளோம். டிசம்பர் 18,
தோழர் வினோத் மிஸ்ரா நினைவு தினத்தன்று நம்மிடம் 5,000 சந்தாக்கள் இருக்க
வேண்டும்.
2013, 2014 ஆண்டுகளில் தீப்பொறி சந்தா சேர்ப்பு இயக்கத்தை முன்னகர்த்த, அதற்கான பிரத்தியேக ஊழியர் கூட்டங்கள் நடத்தினோம். 2015ல், தீப்பொறி சந்தா சேர்ப்பு அமைப்பில் உள்வயமாகி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. சில விதிவிலக்குகள் தவிர, மாவட்டப் பொறுப்பாளர்கள், தங்கள் வேலைகளின் ஓர் அம்சமாக, தீப்பொறி சந்தா சேர்ப்பையும் இயல்பாகத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதே காலகட்டத்தில், வாக்குச் சாவடிகளை மய்யமாகக் கொண்டு, கட்சி விரிவாக்கத்துக்கான இயக்கத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறோம். உணர்வுபூர்வமாக திட்டமிட்டு செயல்பட்டால், இது, தீப்பொறி சந்தா சேர்ப்பு வேலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் வாய்ப்பையும் கொண்டுள்ளது.
2015க்கு புதிதாக சந்தா இலக்கு நாம் நிர்ணயிக்கவில்லை. 2014ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எண்ணிக்கை இப்போதும் தொடர்கிறது. சென்னையில் தற்போதுள்ள 1,506 சந்தாக்களை இன்னும் சில நூறுகள் உயர்த்தவும், கோவையில் தற்போதுள்ள 952 சந்தாக்களை 1,500 என உயர்த்தவும் தோழர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக தீப்பொறி வெளியிடுவதில் நிதிச் சிக்கல் இருந்ததில்லை. 2014ல் சந்தா இலக்கை நிறைவு செய்யத் தவறியதால் நிதிச்சிக்கலை எதிர்கொண்டோம். அடுத்த அடுத்த ஆண்டுகளில் இந்த நிலையை தவிர்க்க வேண்டுமானால், சந்தா இலக்கை நிறைவேற்றுவது அவசியம். சந்தா எண்ணிக்கையை உயர்த்துவது, பத்திரிகை விலையை உயர்த்தாமல் இதே குறைவான விலையில் வாசகர்களுக்குத் தரவும் உதவும்.
12 ஆண்டுகளுக்கும் மேல் தீப்பொறி தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது. 2012 முதல் இருவார இதழாகவும் வெளியிடுகிறோம். தமிழ்நாட்டின் மக்கள் தொகை, வேறு வேறு பத்திரிகைகளின் ஊடுருவல் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது நாம் நிர்ணயித்துக் கொண்டுள்ள சந்தா இலக்கு எண்ணிக்கை குறைவே என்றாலும், நமது பத்திரிகை இன்றைய இடதுசாரி அரசியல் விவாதப்போக்கில் தாக்கம் செலுத்துகிறது. கட்சி அணிகளுக்கு அப்பால், இடதுசாரி வட்டங்களில் இதழுக்கு வரவேற்பு உள்ளது.
கட்சிக்குள்ளும் தீப்பொறி, ஒருமைப்பாடு வாசிப்பு, வேலைகளின் ஒரு பகுதியாக திட்டமிடப்படுகிற மாவட்டங்களில், ஒப்பீட்டுரீதியில் புதிய ஊழியர்கள் வருவதும், சந்தா அதிகரிப்பும் நடந்துள்ளது.
நமது அரசியல் தலையீடுகளில், போராட்டங்களில் நம்மை நோக்கி வருகிற புதிய சக்திகளை அமைப்புக்குள் கொண்டு வர, புரட்சிகர கடமைகளில் ஈடுபடுத்த, கருத்தால் ஈர்த்தல், தக்க வைத்தல் தவிர, நமக்கு வேறு குறுக்கு வழியில்லை.
போராட்டங்கள், கிளர்ச்சிகளுக்கு அப்பால், கட்சி ஊழியர்களுடனான, உறுப்பினர்களுடனான தொடர்ச்சியான அரசியல் ஊடாடலை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை மத்திய கமிட்டி மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளது. இந்த ஊடாடலை உறுதி செய்வதில் பத்திரிகை முக்கிய பங்காற்றுகிறது. புரட்சிகர கருத்துகளை எடுத்துச் செல்வதில், நாம் வலிமைமிக்க முதலாளித்துவ ஊடகங்களை, அவற்றின் மெருகூட்டப்பட்ட, பாட்டாளி வர்க்க விரோதக் கருத்துக்களை, எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல்ரீதியாக புத்துயிர் பெற்றுள்ள வலதுசாரி பிற்போக்கு இருண்மைவாதக் கருத்துக்களை முறியடிக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய, எதிர்பாராத அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ள கால கட்டத்தில் நாம் தீப்பொறி சந்தா சேர்ப்பு கடமையில் ஈடுபட வேண்டியுள்ளது. எப்போதும் போல், இது வாய்ப்புக்களுக்கான காலம் கூட.