COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 1, 2014

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேஎன்யு நிர்வாகிகள் பற்றி.....

தலைவர், அசுதோஷ் குமார்: 

தற்சமயம் முனைவர் (பி.ஹெச்டி) பட்ட மாணவர். பீகாரின் பார்ஹ் பகுதியைச் சேர்ந்தவர். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலில் (பொலிடிகல் சைன்ஸ்) இளங்கலை படித்துவிட்டு, சர்வதேச படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற 2009ல் ஜேஎன்யு வந்தார். தந்தை இந்திய ரயில்வேயில் நிலைய அதிகாரி. அசுதோஷ் அய்சாவில் இணைந்ததைப் பற்றி குறிப்பிடுகையில், ‘மிக அருகில் பார்த்த, ஆணாதிக்க சமூகத்தில் நிலவும் சாதிய, நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கெதிரான யுத்தத்தை கூட்டாக நடத்துவதற்கான வழியாக, மற்ற அய்சா தலைவர்களைப் போலவே நானும் கண்டுணர்ந்தேன்’ என்றார்.

துணைத் தலைவர், ஆனந்த் பிரகாஷ் நாராயண்:

சந்தௌலியைச் சேர்ந்த ஆனந்த், ஜேஎன்யு வருவதற்கு முன்பு பனாரசில் சட்டம் பயின்று, பயிற்சி பெற்ற வழக்குரைஞர். இப்போது தத்துவத்தில் முதுகலை ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருக்கிறார் (எம்.ஃபில்). பனராஸ் இந்து பல்கலைக் கழகத்திலேயே அய்சாவில் இணைந்தவர். அங்கு அரசியல் நிலைமைகள் கடுமையானதாக இருந்த போதும் அய்சாவோடு இணைந்து அந்தக் காலங்களில் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

பொதுச் செயலாளர், சிந்து:

இகக(மாலெ)யின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்களின் குவிமய்யமாக விளங்கும் போஜ்பூர் பகுதியின் அர்ராவில், இகக(மாலெ) போராட்டங்களின் அங்கமாக இருந்துவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை தோழர் லால்ஜி கட்சியின் முழுநேர செயல்வீரர். தாய் பிழைப்புக்காக வீடு வீடாக வளையல் விற்பவர். அர்ராவில் மாணவராக இருக்கும் இவரது தம்பி சந்தீப் அய்சா செயல்வீரர். படிப்பதற்காக டில்லி வந்தார். இவரது குழந்தைப் பிராயம் கஸ்தூர்பா பாலிக வித்யாலயா விடுதிக்கும் அவரது இரண்டாவது வீடான இகக(மாலெ) டெல்லியின் மத்திய அலுவலகத்துக்குமிடையே கழிந்தது. டெல்லியின் இந்திரபிரஸ்தா கல்லூரியில் இளங்கலைப் பட்ட படிப்பை முடித்த அவர், குடும்பத்திலேயே முதல் ஆளாக முதுகலைப் பட்டப் படிப்புக்காக ஜேஎன்யு வந்தார். இப்போது அரசியல் அறிவியல் பாடத்தில் தத்துவத்தில் முதுகலை ஆராய்ச்சி (எம்.ஃபில்) மாணவராக இருக்கிறார். போஜ்பூரின் புரட்சிகர பாடல்களை அனைவரையும் கவரும் விதம் பாடுபவர்.

இணைச் செயலாளர், சவுகத் ஹூசைன் பட்:

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வர் பகுதியைச் சேர்ந்தவர். அய்சாவில் இணைந்ததற்கான காரணத்தை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை ‘ஜேஎன்யுவில் நிலவும் ஜனநாயக வெளி அங்கு இல்லை, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் காரணமாகவே அய்சாவில் இணைந்தேன் ஏனென்றால் நாங்களும் ஒடுக்கப்பட்டவர்கள்’ என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. சவுகத் பெர்சிய மொழி பற்றிய ஆராய்ச்சி மாணவர்.


Search