தோழர் ராணிக்கு சிவப்பு வணக்கம்
கட்சியின் நீண்ட கால உறுப்பினரான தோழர் ராணி 11.04.2019 அன்று நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
அவருக்கு வயது 70 இருக்கும். அவர் சத்துணவு ஊழியராகப் பணியாற்றியவர். கட்சியின் எல்லா கூட்டங்களிலும் பிரச்சார இயக்கங்களிலும் நிதி வசூல் இயக்கங்களிலும் தோழர் ராணி கலந்து கொண்டார். அந்த எளிய தோழரின் கட்சி உணர்வை கட்சி போற்றி மதிக்கிறது. இது போன்ற எளிய தோழர்களின் பங்களிப்பே கட்சி நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகும்.
தோழர் ராணியின் கடைசி காலம் இந்தியாவில் முதியோர் நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அவர் கணவர் வழியிலான மற்றும் அவரது ஓய்வூதியத்தை கந்துவட்டிக்காரர்கள் கைப்பற்றியதால் அவர் நிராதரவான நிலைக்கு ஆளானார். தோழர்கள் கடுமையாகப் பாடுபட்டு அவரது ஓய்வூதியம் அவருக்குக் கிடைக்க வழி செய்தனர். மறதி நோய்க்கு ஆளான அவர், முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு கட்சி தோழர்களால் பராமரிக்கப்பட்டார்.
தேர்தல் நேரத்தில் கோமா நிலைக்குச் சென்ற அவர், ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் தரவில்லை. பின்னர் இல்லத்திற்குத் திரும்பச் சென்ற அவர், 11.04.2019 அன்று காலை இறந்தார். அவரது இறுதிச் சடங்கு அன்று மாலையே நடந்தது. அன்று தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த அனைத்து முன்னணி தோழர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தோழர் குமாரசாமி அஞ்சலி உரையாற்றினார்.
தோழர் ராணி, உங்களைப் போன்ற எளிய அடிப்படையிலான தோழர்களுக்குக் கட்சி எப்போதும் கடமைப்பட்டுள்ளது.
- எஸ்.குமாரசாமி, 11.04.2019