திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலன் காக்க
சாதியாதிக்க எதிர்ப்பு அரசியலின் பிரதிநிதியாக
இகக(மாலெ) விடுதலை வேட்பாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி
தோழர் பழ.ஆசைத்தம்பி இகக (மாலெ) (விடுதலை)யின் மாநிலக் குழு உறுப்பினர். கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கம்விடுதியில் வசிக்கிறார்.
பி.ஏ., பி.எட்., பட்டதாரி.
புதுக்கோட்டையில் கல்லூரியில் படிக்கும்போதே முற்போக்கு இயக்கங்களோடு தொடர்புக்கு வந்தவர். மாணவர்கள் பிரச்சனைக்காகவும், சாதியாதிக்க உணர்வுகளுக்கு எதிராகவும் களத்திலும், கருத்தியல் தளத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
இகக(மாலெ)யுடன் தன்னை இணைத்துக் கொண்ட பிறகு இன்னும் தீவிரமாக மக்கள் இயக்கங்களில் முன்நிற்பவர். கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர். கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குன்றாண் டார்கோவில், புதுக்கோட்டை, திருவெறும்பூர் பகுதிகளில் மக்கள் பிரச்சனைகள் மீதான போராட்டங்களில் விடாப்பிடியாக ஈடுபட்டு வருபவர்.
பெரும்பாலும் மானாவாரி விவசாயப் பூமியான இந்தப் பகுதி விவசாய நெருக்கடியின் கொடூரத்தை சந்தித்து வரும் பகுதி. விவசாயம் கட்டுபடியாகாததால் பெரும்பான்மை இளைஞர்கள் ஊரை விட்டு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வெளியேறிவிட்டனர். உள்ளூரிலேயே விவசாயிகள் துன்ப துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும்போது, இடம்பெயர்ந்த இளைஞர்கள் வாழ்க்கையின் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுகுறு விவசாயிகளின் துண்டு துக்காணி நிலமும், விவசாயத் தொழிலாளர்களின் குடிசைக்கான மனையுமே இன்றளவும் அவர்களை கிராமத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. கிராமங்கள் ஊரும் சேரியுமாக (காலனி) பிரிந்தே கிடக்கின்றன. டீக்கடைகளில் இரட்டை குவளை முறைக்கு எதிராக வேட்பாளர் தோழர் ஆசைத்தம்பி தலைமையில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. சாதியாதிக்கம் இன்றும் நவீன வடிவங்களில் தொடர்கிறது. தலித்துகளின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படும் இடங்களிலெல்லாம் அதை நிலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர். சாவுக்கு பறையடிக்க வராவிட்டால் ஆதிக்க சாதிகளின் அடி உதைக்கு தப்ப முடியாது என்ற நிலைக்கு எதிரான போராட்டங்களையும் இகக(மாலெ) கட்சியே கட்டமைத்தது. கந்தர்வகோட்டையை சாதியாதிக்க கோட்டையாக மாற்ற பிற்போக்கு சக்திகள் முயற்சித்தபோது அதைக் கம்யூனிஸ்ட் கோட்டையாக மாற்றுவோம் என சூளுரைத்தவர் தோழர் பழ.ஆசைத்தம்பி.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சட்டக்கூலி வழங்கக் கோரியும், நூறு நாட்கள் வேலை வழங்கக் கோரியும் அனைத்து சமூக மக்களையும் திரட்டி போராடிய அனுபவம் இகக(மாலெ)வுக்கும் வேட்பாளருக்கும் உண்டு.
கல்லாக்கோட்டையில் தனியார் சாராய ஆலை ராட்சச மோட்டார் கொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடியதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் தோழர் பழ.ஆசைத்தம்பி. அதனாலேயே அவர் மீது பல பிரிவுகளில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சாதி கடந்து அனைத்து சமூக மக்களும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கந்தர்வகோட்டைப் பகுதியின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான சமூக ஆய்வை இகக(மாலெ) மேற்கொண்டபோது அதில் ஊக்கமுடன் ஈடுபட்டவர் தோழர் பழ.ஆசைத்தம்பி. இந்தப் பகுதி விவசாயத் தொழிலாளர்களின் வீடு, வீட்டுமனை கோரிக்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையாகும். இந்தச் கோரிக்கை மீது போராட்டங்கள் நடத்தி சில இடங்களில் வீட்டுமனை பெற்ற அனுபவமும் உண்டு.
திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களிலும் தோழர் பழ.ஆசைத்தம்பி தன்னை இணைத்துக் கொண்டவர். மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்க ளுக்கு எதிராக, குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசலில் கிணறு அமைத்தபோது உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று போராடும் மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தார். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கக்கோரி தொடர்ந்து போராட்டக் களத்தில் நிற்பவர். காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடைபெற்ற போராட்டங்களில் பலமுறை கைது செய்யப்பட்டவர்.
கிராமப்புற, வறிய மாணவர்களுக்கு உயர்கல்வியை மறுக்கும் நீட் தேர்வுக்கு எதிராக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போôôட்டத்தில் ஈடுபட்டதால் வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஜனநாயக கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டங்களில் பங்கெடுத்து வருபவர்.
சமீபத்தில் கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளானபோது, வேட்பாளரின் வீடும் சேதமடைந்தது இருந்தபோதிலும் கட்சிப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் முன்னின்றவர் தோழர் பழ.ஆசைத்தம்பி. கட்சியின் பல மாவட்டங்களிலிருந்து வந்த நிவாரணப் பொருட்களை உரிய மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியவர். நிவாரணம் கோரிய அரசுக்கெதிரான போராட்டங்களையும் ஒருங்கிணைத்தவர்.
ஆசிரியர் பணிக்கான இளங்கலைப் படிப்பை முடித்த தோழர் பழ.ஆசைத்தம்பி கட்சியின் முழுநேர ஊழியராகவே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் மனைவி தோழர் ரேவதி கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார். இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களும் இயக்க நடவடிக்கைகளில் கலந்து கொள்கின்றனர். தனக்கென சொத்துபத்து எதுவுமில்லாத எளிமையான வேட்பாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி.