குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள்
கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தில் 2015க்கு பிறகு இப்போதுதான் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டம் நடக்கிறது. அதுவும் தேர்தல் நேரத்தில்.
பள்ளிபாளையம் கூலி உயர்வு போராட்டம் முடிந்த பிறகு, தேர்தல் முடிந்த பிறகு குமாரபாளையம் கூலி உயர்வு போராட்டம் நடத்தலாம் என்று ஏஅய்சிசிடியு கருதியது. ஆனால் குமாரபாளையத்தில் கொடூரமான அடக்குமுறை நிலவுகிற கிராமப்புற பகுதியான கல்லாங்காட்டு வலசு பகுதியில் கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக வேலை நிறுத்தம் செய்தார்கள். முதலில் இந்த தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு தோழர்களை தொடர்பு கொண்டபோது, தேர்தலுக்குப் பிறகு போராட்டம் நடத்தலாம் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அதனால் அவர்கள் சிஅய்டியுவை அணுகினார்கள்.
அதன் பிறகு கொளத்துக்காடு, ஓளப்பாளையம், காந்திநகர், சடையம்பாளையம் பகுதிகளில் தன்னெழுச்சியான போராட்டம் வெடித்தது. கொளத்துக்காடு பகுதியில் உள்ள 24 தறிக் கூடங்களின் தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியுவை அணுகினார்கள். மற்றவர்கள் சிஅய்டியுவை அணுகினார்கள்.
இந்தப் பின்னணியில், தேர்தல் முடிந்த பிறகு போராட்டம் நடத்தலாம் என்ற முடிவை மாற்றிக் கொண்டு குமாரபாளையம் முழுவதும் திட்டமிட்ட வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராக வேண்டியிருந்தது. 8 மணி நேர வேலைக்கு ஒரு தறிக்கு ரூ.150 சம்பளமும், தார் ஓட்டும் பெண்களுக்கு ஒரு தறிக்கு ரூ.100 உயர்வும், பாவோட்டிகளுக்கு ஒரு பாவுக்கு ரூ.200 உயர்வும், மலுக்கு அச்சு பிணைப்பவர்களுக்கு ஒரு பாவுக்கு ரூ.200 கூலி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் 01.04.2019 முதல் ஏஅய்சிசிடியு தலைமையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20,000 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 5,000 தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் 30 பேர் மீதும், அடப்பு தறியாளர்கள் 24 பேர் மீதும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வழக்கு போடப்பட்டது. 03.04.2019 முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நிர்வாகம் பேச்சுவார்த்தைகளுக்கு வரவில்லை. மீண்டும் 14.04.2019 அன்று பேச்சுவார்த்தைகள் நடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. தேர்தல் அதிகாரிகள் கெடுபிடிகளால், கூலி உயர்வுப் போராட்டத்தை அடுத்தடுத்து தீவிரப்படுத்த, பேரணி, ஆர்ப்பாட்டம், பட்டினிப் போராட்டம் போன்ற போராட்டங்களை உடனடியாக நடத்த முடியவில்லை. வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் பகுதிகளில் அதிமுகவினர் வாக்கு சேகரிக்க வந்தபோது எங்கள் கூலி பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கேட்டனர். தொழிற்சங்கத் தலைவர் ஏ.கோவிந்தராஜ் மீது புகார் கொடுத்து சிறையில் வைத்து விட்டால் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து விடும் என்று இது பற்றி அதிமுக கட்சி வட்டாரங்களில் பேசியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
விசைத்தறித் தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை மீது அரசு தலையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஏஅய்சிசிடியு சார்பில் பெரிய தட்டி ஒன்று வைத்ததற்காக ஏஅய்சிசிடியு தோழர்கள் இரண்டு பேர் மீது தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரிடம் தொழிலாளர்கள் தனித்தனியாக மனு தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜவுளி உற்பத்தியாளர்களை பேச்சு வார்த்தைக்கு வரவழைக்க ஜவுளி உற்பத்தியாளர்களின் நிறுவனங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் அலுவலகங்களில் சட்டப்படி நடத்தப்படும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு வர மறுக்கும் நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க, தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்பும் நிலை அதிமுக ஆட்சி காலத்தில் அடிமை ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டுவிட்டது.
வேலை நிறுத்தப் போராட்டத்தை விரிவாக்க, தொழிலாளர்களை ஒவ்வொரு தறிக் கூடமாக சந்தித்து ஆதரவு கேட்க, வேலை நிறுத்தத்தில் உள்ள தொழிலாளர்கள் செல்கின்றனர். வேலை நிறுத்தத்தை உடைக்க ஜவுளி உற்பத்தியாளர்களும் அதிமுகவும் தேமுதிகவைச் சேர்ந்த கொங்கு பவர்லூம் உரிமையாளர் சங்க தலைவரும், ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் ஏ.கோவிந்தராஜ் மீது, வேலை செய்யும் தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் ஆய்வாளர் தோழர் ஏ.கோவிந்தராஜை கைது செய்யத் திட்டமிட்டார். காவல்நிலையம் முன்பு தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியதால் தோழர் கோவிந்தராஜை கைது செய்யவில்லை. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை சீர்குலைக்க ஜவுளி உற்பத்தியாளர்களும் காவல்துறையும் அதிமுகவினரும் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். இந்த பாதகமான சூழலில் விசைத்தறித் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களிடம் நுண்கடன் நிறுவனங்கள் குழு கடனை கேட்டு நிர்ப்பந்தம் செய்ய துவங்கின. வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வேலை நிறுத்தம் முடிந்த பிறகு குழு கடனை வசூலிக்க வேண்டும் என ஏஅய்சிசிடியு இந்த நிறுவனங்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
10.04.2019 அன்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வரவேண்டும் என வலியுறுத்தி 06.04.2019 அன்று 10 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தேர்தல் காலத்திலும், சாமான்ய மக்கள், தொழிலாளர்கள் எழுப்பும் அடிப்படையான, சாதாரணமான கோரிக்கைகளில் கூட முதலாளிகள் பக்கம் திட்டவட்டமாக நிற்கிற, செயல் படுகிற அஇஅதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட்டால்தான் நவதாராளவாதக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்தவாவது ஜனநாயகத்தில் இடம் இருக்கும்.
- ஏ.கோவிந்தராஜ்