அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குரலாக...
அருள் கூர்ந்து அருகிலிருக்கும்
பள்ளிக்குப் போய்ப் பாருங்கள்
(பரமேசுவரி முகநூல் பக்கத்தில் இருந்து)
ஆசிரியர்கள் கோப்புகளைப் பார்ப்பவர்களில்லை.
மாணவர்கள் ஒவ்வொருவரும் தனி உயிர். நாளைய தமிழ்த் தலைமுறை ஆசிரியர்களுக்குத் தகுந்த ஓய்வு கொடுத்தால் மட்டுமே அவர்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியும்.
ஆனால் இன்று நடப்பது என்ன? ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக இருப்பதாக கூறி ஒப்படைத்து வருகின்றனர். காலிப் பணியிடங்கள் அகற்றப்படுகின்றன. இரு பாட வேளைக்குப் பிறகு ஆசிரியருக்கு ஒரு பாடவேளை ஓய்வு கொடுக்க வேண்டும். ஆனால் ஒரு நாளில் 6, 7 பாட வேளைகளை எடுக்கின்றனர்.
11, 12 பாடங்களைக் கையாளும் முதுகலை ஆசிரியர்களைக் கீழ் வகுப்புகளுக்கு இறக்க வேண்டுமென்ற கணக்கில் உயர்நிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் அதிகப்படியென கணக்குக் காட்டப்பட்டு நீக்கப்பட்டன. 11, 12 எனப் பொதுத் தேர்வுக்குரிய இரு வகுப்புகளை எடுத்துக் கொண்டு கீழ் வகுப்புகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. மூன்றாம் பருவத்தில், முதுகலை ஆசிரியர்கள் ஜனவரி முதலே செய்முறைத் தேர்வுகள், தேர்வுப் பணியென்று வேறு பள்ளிகளுக்குச் செல்வர். அவ்வப்போது வருகையில் பொதுத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கவே சரியாக இருக்கும். இவ்வாறே இந்த ஆண்டு கீழ் வகுப்புகள் வீணாகிப் போயின. ஆசிரியர்களும் சோர்ந்து போயினர்.
6, 7, 8 செகண்டரி ஆசிரியர்கள் 9, 10 உயர்நிலை ஆசிரியர்கள், 11, 12 மேல்நிலை ஆசிரியர்கள் என பிரித்தவர்கள் முட்டாள்களா?
தனியார் பள்ளியில் ஒவ்வொரு பாடத்துக் கும் 3, 4 ஆசிரியர்கள், திருத்துவதற்கென்றே கரெக்ஷன் ஆசிரியர்கள், அலுவலகமென்றால் கணினி அலுவலர் இருவர், எழுத்தர் இருவர் எனக் கட்டுமானம் சிறப்பாக இருக்கும்.
அரசு பள்ளியில் காலிப் பணியிடமெனில் இருக்கும் ஆசிரியர்களே பகிர்ந்து எடுப்பதும் மாற்றுப் பணியில் இரண்டு பள்ளிகளில் பணி புரிவதும் நடக்கும். நான் பல முறை இரண்டு பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்ததோடு தாள்களையும் குறித்த நேரத்தில் கொடுத்திருக்கிறேன். எத்தனை பெரிய மன உளைச்சல் தெரியுமா அது?
ஆசிரியர்கள் தேவையான எண்ணிக்கையில் இல்லாதபோதும் பணிச்சுமையுடன் எத்தனையோ ஆசிரியர்கள் 100 சதம் கொடுத்திருக்கின்றனர். ஆனால் ஆசிரியர்களின் விடுப்புக் கணக்கை எண்ணுவதும், மே மாத விடுமுறையைச் சுட்டிக்காட்டுவதும் அபத்தமான செயல். அப்படியொரு விடுமுறை என்பது அவர்கள் இழந்த உற்சாகத்தை மீட்டுக் கொள்ள உதவும். இதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்? உள்விஷயங்கள் புரியாது. ஆசிரியரைக் குறை சொல்லிச் செல்வது சுலபம்.
அருள் கூர்ந்து அருகிலிருக்கும் பள்ளிக்குப் போய்ப் பாருங்கள்.