தமிழ்நாட்டு விவசாயத்தை நாசமாக்கும்
மோடி - பழனிச்சாமி அரசுகள்
திருவாரூர் அருகில், கீழ எருக்காட்டூர் என்ற பகுதியில், செல்வராஜ் என்ற விவசாயிக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், ஏப்ரல் 6 அன்று,
விவசாய நிலத்துக்கடியில் பதிக்கப்பட்ட ஓஎன்ஜிசி குழாய் உடைந்துபோய் எண்ணெய் கொப்புளித்து குபுகுபுவென நிலத்துக்கு மேலே வந்ததை, தீவிரமான தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த நாட்களில் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ஒளிபரப்பினார்கள். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கச்சா எண்ணெய் பரவி அதில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி வீணாகப் போனது. 2 ஏக்கர் நிலம் வீணாகப் போனது என்று ஒரு நாளேட்டிலும், அரை ஏக்கர் நிலம் வீணானது என்று இன்னொரு நாளேட்டிலும் செய்திகள் வந்தன. விவசாயி செல்வராஜ் அய்ந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி பயிரிட்டிருக்கிறார். மீதமுள்ள நிலத்தில் உள்ள பருத்தி பயிர் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற கவலையில் இருக்கிறார்.
விவசாயிகள் நலன் காப்போம், நானும் விவசாயிதான் என்று முதலமைச்சர் கட்டிப் போன தொண்டையுடன் கத்திக் கொண்டிருந்த காட்சிகளும் இந்தச் செய்திக்கு அக்கம்பக்கமாக வெளியாயின. பாதிக்கப்பட்ட விவசாயி செல்வராஜ் ஆறுதல் அடையும்படி முதலமைச்சர் எதுவும் சொல்லவில்லை.
நிலத்துக்கு அடியில் மிக ஆழத்தில்தான் குழாய்கள் அமைக்கப்படுகின்றன, பயிருக்கோ, நிலத்தடி நீருக்கோ எந்த பாதிப்பும் இருக்காது என்று வாய்வழி உறுதி தந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிலம் எடுக்கிறது. விவசாயிகள் பலரும் அவர்கள் சொன்னதை நம்பி நிலத்தைக் கொடுத்தார்கள். இப்போது நிலத்தடி நீரும் வீணாகிப் போய்விட்டது. நிலமும் அதில் வைத்த பயிரும் பாழாகிறது.
விவசாய நிலத்துக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்களில் இருந்து கசியும் எண்ணெய் நிலப்பரப்புக்கு மேலே வருவது இது முதல் முறையல்ல. 2017 ஜ÷ன் மாதத்தில், 2018 பிப்ரவரியில் திருவாரூரிலும் 2018 ஏப்ரலில் தஞ்சாவூரிலும் நிலத்தடியில் ஓஎன்ஜிசி குழாய்களில் இருந்து எண்ணெய் கசிந்து விவசாய நிலம் பாதிக்கப்பட்டது. இந்தக் கசிவு தொடர்பாக தமிழக அரசும் ஓஎன்ஜிசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலத்தடி நீர், நிலம் எல்லாம் வீணாகி, நிலத்தில் பயிர் செய்யும் விவசாயி வாழ்வு நாசமானது.
இந்தப் பின்னணியில்தான், தமிழ்நாட்டின் விவசாயத்தின், விவசாய சமூகத்தின் நலன் பற்றி சற்றும் அக்கறையின்றி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் 2018 அக்டோபர் 1 அன்று, வெளியிட்ட அறிவிப்பாணை, நாடெங்கும் 59,282 சதுர கி.மீ நிலப்பரப்பு கொண்ட 55 பகுதிகள் ஹைட்ரோகார்பன் எடுக்க ஏலம் விடப்பட்டன என்றும் அவற்றில் 41 வேதாந்தாவுக்கு தரப்பட்டதாகவும் சொன்னது. அவற்றில் மூன்று மண்டலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. (தலையங்கம், மாலெ தீப்பொறி, 2018 அக்டோபர் 16 - 31). ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஏற்பட்ட கசிவுகளால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமே 20 ஏக்கர் நிலம் வீணாகிப் போய் விவசாயிகள் வாழ்க்கை நாசமாகிவிட்டிருந்த பின்னணியில், வேதாந்தாவும் ஓஎன்ஜிசியும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் எடுக்கும் இந்தத் திட்டத்தால் பிரச்சனை வராது என இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டபோது பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னார்.
அந்த மண்டலங்களில் பணிகளை துவங்க வேதாந்தாவின் கேய்ர்ன் ஆயில் அன்டு கேஸ் நிறுவனம், சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஏப்ரல் 12 அன்று செய்தி வெளியிடுகிறது. திட்டத்தை செயல்படுத்த, மக்கள் மத்தியில் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்துவதில் விலக்கு வேண்டும் என இந்த விண்ணப்பங்களில் வேதாந்தாவின் கேய்ர்ன் ஆயில் நிறுவனம் கேட்டுள்ளதாகவும் இந்தச் செய்தி சொல்கிறது. இந்தத் திட்டத்தில் ஆழமற்ற கடல் பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகள் நடக்கவிருப்பதால் மீன் வளமும் மீனவர் வாழ்வும் பாதிக்கப்படும் என்றும் அந்தச் செய்தி சொல்கிறது.
மார்ச் 18 அன்று, ஒடிஷாவின் காளஹந்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தாவுக்கு நிலம் கொடுத்த உள்ளூர் மக்கள், வேலை கேட்டு ஆலை வாயிலில் திரண்டபோது, ‘கலவரம்’ ஏற்பட்டு இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள். 45 பேர் படுகாயமுற்றார்கள். இங்கு ஒடிஷா தொழில்துறை பாதுகாப்புப் படை, போராட்டக்காரர்கள் மீது தடியடி மட்டும் நடத்தியதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்கள், ஒடிஷாவில் அடித்தே படுகொலை செய்திருக்கிறார்கள். (கொல்லப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்). எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கொலை செய்து விடுவது வேதாந்தாவின் எழுதப்படாத கொள்கையாக இருக்கிறது. இந்த கொலைகார நிறுவனம் காவிரிப் படுகை நிலங்களை நாசமாக்க வெறி கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்குகிறது. தமிழ்நாட்டின் பெருமளவிலான விவசாய நிலங்களை ஏற்கனவே நாசப்படுத்திவிட்ட ஓஎன்ஜிசியும் இந்தப் பேரழிவு திட்டத்தில் வேதாந்தாவுடன் சேர்ந்து கொள்ளும். சேர்ந்து கொல்லும்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொறுப்பில் உள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் 2017லேயே கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் 22,938 ஹெக்டேர் நிலப்பரப்பை பெட்ரோலியம், கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல் மண்டலமாக அறிவித்துவிட்டது. வேதாந்தாவை காவிரிப் படுகையில் வரவேற்க அடிமைகள் முன்தயாரிப்பு எல்லாம் செய்துவிட்டார்கள்.
திருவாரூரிலும் தஞ்சாவூரிலும் எண்ணெய் குழாய் உடைந்து விளைநிலத்தில் எண்ணெய் கசிந்துவிடுவதுதானே பிரச்சனை, கடலூரிலும் நாகப்பட்டினத்திலும் மொத்த விவசாய நிலத்தையும் கடலோரப் பகுதியையும் வேதாந்தாவுக்கே, ஓஎன்ஜிசிக்கே தந்துவிடுகிறோம் என்கிறார்கள் அடிமைகள்.
ஏப்ரல் 11 அன்று நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் பழனிச்சாமி, காவிரியில் வரும் உபரி நீரை நாமக்கல் மாவட்டத்துக்குக் கொண்டு வந்து, இங்குள்ள குளம் குட்டைகளில் நிரப்புவோம் என்றார். காவிரியில் உபரி நீரா? கர்நாடகத்தில் பெருமழை பெய்தால் வரும் நீரை கடலுக்குள் விடுவார்கள். மாநிலத்துக்குள் மழை பெய்தால் கடலுக்குள் விடுவார்கள். இவை தவிர காவிரி... உபரி...? இதோ ஜ÷ன் மாதம் நெருங்குகிறது. டெல்டா விவசாயிகள் குறுவைக்கு நீர் கேட் பார்கள். அடுத்தச் சுற்று நெருக்கடி வரக் காத்திருக்கும்போது, இருக்கிற பிரச்சனைகளுக்கும் தீர்வு காணாமல், புதிதாக அழிவுத் திட்டங்களையும் அனுமதித்து விவசாயத்தை அழிக்கும் ஆட்சியாளர்களுக்கு இந்தத் தேர்தலில் விவசாயிகள் பதிலடி தராமலா இருப்பார்கள்?