இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)ன் அய்ம்பதாவது நிறுவன தினம்
பாசிசத்தை முறியடிப்போம்!
ஜனநாயகத்துக்கான போரை வென்றெடுப்போம்!
2019, ஏப்ரல் 22 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) துவங்கப்பட்டு அய்ம்பது ஆண்டுகள் நிறைவுறுகின்றன.
அரசியல் சாசனத்தை, நாடாளுமன்ற ஜனநாயக முறையை கடைபிடிக்கத் துவங்கியதில் இருந்து இந்தியா எதிர்கொள்ளும் மிகவும் தீர்மானகரமான தேர்தல் போராட்டமான 17ஆவது பொதுத் தேர்தல்களுக்கு நடுவே நாம் அந்த நாளை அனுசரிக்கிறோம். இந்திய பாசிசத்தின் மோடி மாதிரி, தனது ஆட்சியை தொடர, தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, அரசின் மீதான தனது பிடியை இன்னும் இறுக்கமானதாக ஆக்க முனையும்போது, அரசியல் சாசன குடியரசின், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வரையறைகளே இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இனிமேல் 2024க்குப் பிறகு தேர்தல்களே இருக்காது, 2019தான் இறுதியான தேர்தலாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். எனவே, மோடி அரசாங்கத்தை வெளியேற்றும், பாசிச ஆபத்தை முறியடிக்கும் அவசரக் கடமையை இந்தத் தேர்தலில் இந்தியா நிறைவேற்ற வேண்டியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன், மதவெறி பாசிச சக்திகள் கவலை தரும் விதத்தில் எழுச்சி பெற்றதில் இருந்து, இந்த பாசிச ஆபத்தை இகக மாலெ துணிச்சலுடன் எதிர்த்து வந்துள்ளது. இன்று பாசிச ஆட்சிக்கு கடுமையான தோல்வியை தரும்விதம், இந்தத் தேர்தல் போராட்டத்தில் தீவிரமாக தலையிட வேண்டியுள்ளது.
கடந்த அய்ம்பதாண்டு கால பயணம், இகக (மாலெ)யின் புரட்சிகர உறுதியை மேலும் உறுதி யானதாக்கியுள்ளது; கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புகளின் வலைப்பின்னலும் வழி நடத்திய போராட்டங்களின், முன்முயற்சிகளின் தளம் விரிவடைந்துள்ளது; சுதந்திரத்துக்காக, ஜனநாயத்துக்காக தங்களுடைய அனைத்தையும் தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகள் கனவு கண்ட மக்கள் இந்தியாவின் லட்சிய பார்வையை செழுமைப்படுத்தியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நக்சல்பாரி விவசாய எழுச்சியின் நெருப்பில் உருவான இகக (மாலெ), அது உருவானதில் இருந்தே, கிராமப்புற இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் புரட்சிகர போராட்டங்களின் அலை வீசியபோது, ஒரு புகழ்மிக்க தடம் பதித்துள்ளது. ஒடுக்குமுறை அரசின் கொடூரமான ராணுவ தாக்குதலை எதிர்கொண்ட இகக (மாலெ), சமூக ஒடுக்குமுறையின் எல்லா தளைகளில் இருந்தும் மக்களை விடுவிக்கும் விடுதலைக் கனவை பற்ற வைத்தது; ஒடுக்கப்பட்ட கிராமப்புற வறிய மக்களின், புரட்சிகர இளைஞர்களின் தொழிலாளர்களின், இது வரை காணாத ஆற்றலை, முன்முயற்சியை கட்டவிழ்த்துவிட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் வீரமிக்க வரலாற்றை எழுதியது. கட்சி உருவாக்கப்பட்டவுடனேயே, கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொண்டு, முதல் இரண்டு பொதுச் செயலாளர்களையும் இன்னும் சில முக்கிய தலைவர்களையும் ஆயிரக்கணக்கான செயல்வீரர்களையும் இழந்து, இகக (மாலெ) மீண்டும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்ததைப் போல, சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில், காலனிய எதிர்ப்பு போராட்ட வரலாற்றில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் மிகச் சில நிகழ்வுகளே உள்ளன.
இந்த அய்ம்பதாண்டுகால புரட்சிகர பயணத்தில் இகக (மாலெ) சில அடிப்படை படிப்பினைகளை பெற்றுள்ளது. அவற்றின் மூலம், கடுமையான சவால்களினூடே கட்சியை தக்க வைத்துக் கொண்டு, பாசிச தாக்குதலுக்கு எதிராக போராடுகிற இன்றைய முக்கியமான கட்டத்துக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது. சோசலிசம் நோக்கிய இந்தியாவின் பயணம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஊடே முன்செல்லும் என்று நாம் சொல்லும்போது, அது, மார்க்சிய தத்துவத்தில் இருந்து சர்வதேச வரலாற்றில் இருந்து கற்ற கோட்பாடு மட்டும் அல்ல. ஜனநாயகம் இருக்கத்தானே செய்கிறது என்று கருதும் சொகுசு நமக்கு எப்போதும் இருந்ததில்லை. அரசியல்சாசனமும் தேர்தல் ஜனநாயகமும், ஒட்டுமொத்த நாடும் இன்று சந்திக்கிற பாசிச தாக்குதல் போன்ற ஒன்றை சந்தித்திராதபோது, ஒவ்வோர் அடியிலும் நாம் ஜனநாயகத்துக்காக போராட நேர்ந்தது. நாட்டின் பல பகுதிகளிலும், தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பின்னணியைச் சேர்ந்த நமது தோழர்கள், வாக்களிக்கும் உரிமையைக் கூட, மேலாதிக்க சக்திகளுக்கு, அரசுக்கு எதிரான, கடுமையான போராட்டங்கள் மூலம்தான் வென்றெடுக்க முடிந்தது. நமது தோழர்கள் பொய் வழக்குகள், அநீதியான தீர்ப்புகள், நீதிபரிபாலனத்துக்கு அப்பாற்பட்ட படுகொலைகள், பாசிச பாஜக அதிகாரத்தில் இல்லாத காலங்களில் கூட ஆளும்கட்சிகளின், அரசின் ஆதரவு பெற்ற நிலப்பிரபுத்துவ சக்திகளும் குற்றகும்பல்களும் நடத்திய படுகொலைகள் ஆகியவற்றை, தொடர்ந்து சந்திக்க நேர்ந்தது. எனவே, அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள பரிசு ஜனநாயகம், அது இருக்கவே செய்கிறது என்று கருத முடியாது என்று, மக்களை விடாப்பிடியாக அணிதிரட்டுவதன் மூலம், அவர்களது அறுதியிடலின் மூலம்தான் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும், ஆழப்படுத்த முடியும் என்று நமது அன்றாட அனுபவங்களில் இருந்து நமக்குத் தெரியும். ஆக, ஜனநாயகத்துக்கான போராட்டம், இகக (மாலெ)யின் உயிரோட்டமாக இருந்துள்ளது. அது பாசிசத்துக்கு எதிரான இன்றைய தீர்மானகரமான போராட்டத்தில் நம்மை முன்செலுத்துகிறது.
இகக (மாலெ) உருவானதில் இருந்தே, அது, இந்திய சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட பிரிவினர் மத்தியில் வேர் கொண்டுள்ளது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின், வறிய விவசாயிகளின் தலைமையிலான விவசாயப் புரட்சிதான், இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணி என்ற தெளிவான புரிதலுடன் கட்சி உருவாகியுள்ளது. தலித்துகளுடனும் பழங்குடியினருடனும் சமூக ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை என்ற அவர்களது வேட்கையுடனும் கட்சி கொண்டுள்ள நெருக்கமான ஊடாடல், கட்சியின் பிறவி இயல்பு. எந்த பாதகமான சூழலையும் எதிர்கொள்ள, இதுதான், ஆகச் சிறந்த வலிமையையும் உறுதியையும் தருகிறது. சாதி, வர்க்கம், பாலினம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் அவற்றின் அனைத்து உள்ளார்ந்த தொடர்புகளையும், எந்திரத்தனமாக அல்லாமல், தனித்தனியான பிரச்சனைகளாக அல்லாமல் புரிந்து கொண்ட, அனைத்தும் தழுவிய சமூக மாற்றத்துக்கான, மானுட விடுதலைக்கான வேட்கை பற்றி எப்போதும் உணர்வு கொண்ட, வர்க்கப் போராட்டத்துக்கான வரையறையை உருவாக்குவதிலும் எங்களுக்கு ஆற்றல் தந்துள்ளது. சாதி ஒழிப்பு மற்றும் ஆணாதிக்க ஒழிப்பு என்ற இரட்டை லட்சியங்கள், புரட்சிகர சமூக விழிப்புக்கான இகக (மாலெ)யின் சிவப்புப் பதாகையில் தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளன.
1969ல் இகக (மாலெ) உருவானபோது, திட்டம் மற்றும் செயல்தந்திரங்கள் தொடர்பான விவாதங்களின் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம், இகக மற்றும் இககமா என இரண்டு கட்சிகளாக கிளை விட்டிருந்தது. இந்த விவாதத்தை மேலும் கூர்மைப்படுத்திய இகக (மாலெ), கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க மரபின் வாரிசாக, நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பொருளாதார மாற்றங்கள், சமூக, அரசியல், கலாச்சார முகிழ்வுகளின் பின்புலத்தில், புரட்சிகர உணர்வின், புரட்சிகர லட்சியத்தின் துணிச்சல்மிக்க முன்னோடியாக, தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டது.
உடனடி முழக்கங்களும் போராட்ட வடிவங்களும் அந்தந்த நேரத்தில் உருவாயின; இன்று பீகார், ஜார்க்கண்ட் சட்டமன்றங்கள் உட்பட, பரந்த வெளியில் கட்சி தனது பாத்திரத்தை நிறைவேற்றுகிறது; கம்யூனிஸ்ட் நோக்கு நிலையை துணிச்சலுடன் முன்னிறுத்துகிறது; ஆளும் வர்க்கங்களுடனான விடாப்பிடியான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வர்க்க சுதந்திரத்தை அறுதியிடுகிறது. கம்யூனிஸ்ட் கோட்பாடுகளை உறுதியாக கடைபிடிப்பதும் கம்யூனிஸ்ட் நிலைப்பாடுகளின் சுதந்திரமான அறுதியிடலும்தான், இகக (மாலெ)யை பிற இடதுசாரி கட்சிகள் மத்தியில் தனித்துவம் கொண்டதாக நிறுத்துகிறது. ஆயுதப் போராட்டங்களை மட்டும் நம்பியிருப்பது, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு பிரிவினரை அராஜகவாத நிலைப்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் தள்ளிவிட்டது; இந்த குறுங்குழுவாத தனிமைப்படுதலில் இருந்தும் இகக (மாலெ) தன்னை பிரித்து நிறுத்தியுள்ளது.
தோழர் சாரு மஜ÷ம்தாருக்கு அடுத்து பொதுச் செயலாளர்களாக இருந்த தோழர் ஜாஹர், தோழர் வினோத் மிஸ்ரா ஆகியோரின் உத்வேகமூட்டும் தலைமையில், 1970களின் துவக்கத்தில் கட்சி சந்தித்த பின்னடைவில் இருந்து மீண்டு, இயக்கத்தை மீட்டெடுக்கவும் புனரமைப்பு செய்யவும் தோழர் சாரு மஜ÷ம்தாரின் கடைசி கட்டுரையின் இரண்டு வரிகள் உதவியாக அமைந்தன. மக்கள் நலனே, கட்சியின் நலன். தோழர் சாரு மஜ÷ம்தாரின் கடைசி கட்டுரையில் அவர் எழுதிய ரத்தினச் சுருக்கமான இந்த வரிகள், இகக (மாலெ)யின் அரசியல் பகுப்பாய்விலும் நடவடிக்கைகளிலும் வழிகாட்டியாக அமைந்தன. நாடாளுமன்ற முடக்குவாத ஆபத்துகளுக்கு எதிராகப் போராடவும் இது உதவியது. அத்துடன், எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு, துணிச்சலுடன், மக்கள் நலன்களை உயர்த்திப் பிடிக்கவும் அவற்றுக்காக போராடவும் உத்வேகம் தந்தது. இடதுசாரிகள் மற்றும் பிற போராடும் சக்திகளுடன் பரந்த ஒற்றுமை உருவாக்குவதன் மூலம் அரசின் ஒடுக்குமுறையை எதிர்கொள்வதிலும், மக்கள் போராட்டத்தின் அடுத்த எழுச்சிக்கு எல்லா விதத்திலும் தயாராவதிலும் தோழர் சாரு மஜ÷ம்தார் தனது தோழர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒரு பெரிய பின்னடைவு ஏற்படும்போது, சாதகமான அறிகுறிகளை அடையாளம் கண்டு பற்றிக் கொள்ளும், மக்களின் வெல்லப்பட முடியாத துணிச்சலை, வலிமையை சார்ந்திருந்து முன்னேறிச் செல்லும், இந்த குறிப்பிடத்தக்க ஆற்றல், கட்சியின் இருத்தலுக்கும், அவசரநிலை காலத்திலும் அதற்குப் பின் நமது பல போராட்டப் பகுதிகளில் தனியார் படைகளும் குற்ற கும்பல்களும் தாக்குதல்கள் நடத்தியபோதும் விரிவாக்கம் மேற்கொள்ளவும், திறவுகோலாக அமைந்தது. சோவியத் யூனியன் வீழ்ச்சி, சங் பரிவாரின் மதவெறி பாசிச சக்திகளின் மூர்க்கத்தனமான எழுச்சி என்ற பின்னணியில், 1998 டிசம்பரில் நம்மை விட்டு பிரிந்தது வரை, தோழர் வினோத் மிஸ்ரா, கட்சி வளர்ச்சியின், விரிவாக்கத்தின் இந்த இயக்கப்போக்கை வழிநடத்தினார்.
2019ல் இகக (மாலெ) உருவாகி அய்ம்பது ஆண்டுகள் நிறைவுறுகின்றன.இந்த ஆண்டு தோழர் சாரு மஜ÷ம்தாரின் பிறந்த தின நூற்றாண்டும் ஆகும். புரட்சிகர லட்சியத்துக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமும் பாசிசத்துக்கு எதிராக, ஜனநாயகத்தின் வெற்றிக்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை நமது எல்லா வலிமையையும் கொண்டு நடத்துவதன் மூலமும்தான், தோழர் சாரு மஜ÷ம்தாருக்கும் கட்சி உருவான காலத்தின் எண்ணற்ற தியாகிகளுக்கும் அதன் பிறகு உயிர்நீத்த நமது அனைத்து தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் நாம் உண்மையில் மரியாதை செலுத்துவதாக அமையும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) நீடூழி வாழ்க!
புரட்சி நீடூழி வாழ்க!
வெற்றி மக்களுக்கே!
மத்திய கமிட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)