ஊழல் செய்வதில் தான் தனி ஒருவன் என மெய்ப்பித்துவிட்டார் மோடி
ரபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை,
காங்கிரஸ் பொய் சொல்கிறது, இந்து பத்திரிகை பொய் சொல்கிறது என்று மோடி அரசின் அமைச்சர்கள், ஆதரவாளர்கள், கருத்தியலாளர்கள், வழக்கறிஞர்கள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரபேல் ஊழல் பிரச்சனை பெரிதாகி மோடி பதில் சொல்ல நிர்ப்பந்தம் வந்தபோது புல்வாமாவில் 44 ராணுவ வீரர்கள் பலியானார்கள். மோடி அரசாங்கம் எத்தனை உயிர்களை பலி கொடுத்தாலும் ரபேல் பிரச்சனை ஓய மறுக்கிறது.
பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்று, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரித் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வரித் தள்ளுபடி மோடி அரசாங்கத்தால் செய்யப்பட்டிருந்தால் நமக்கு பழகிய பிரச்சனையாக இருந்திருக்கும். இந்த வரித் தள்ளுபடி பிரான்ஸ் அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் செயல்படும் ரிலையன்ஸ் ப்ளாக் அட்லாண்டிக் பிரான்ஸ் என்ற தொலை தொடர்பு சேவை நிறுவனம் மோடியின் நெருங் கிய நண்பரான அனில் அம்பானிக்குச் சொந்தமானது. வரி ஏய்ப்பு செய்ய ஏதுவான கணக்குகளை பிரான்சிலும் நிறுவனம் தந்திருக்கிறது. பிரான்சின் வருமான வரித் துறை அதைக் கண்டுபிடித்து 60 மில்லியன் யூரோ வரி கட்ட வேண்டும் என சொல்லியிருக்கிறது. 7.6 மில்லியன் யூரோ கட்டி விடுவதாக அனில் அம்பானி சொன்னபோது, அதை பிரான்ஸ் நாட்டு வருமான வரித் துறை நிராகரித்துவிட்டது.
இதற்கெதிராக அனில் அம்பானியின் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியபோது, பிரான்சின் வருமான வரித் துறை மீண்டும் ஒரு சோதனை நடத்தி, மீண்டும் மதிப்பீடுகள் செய்து, வரி, வட்டி, அபராதம் என மொத்தம் 91 மில்லியன் யூரோ கட்ட வேண்டும் எனச் சொல்லிவிட்டது. இந்த வரி பாக்கிகள் 2007 - 2012 காலத்தியவை. 2015 ஜனவரியில் வரி பாக்கி எல்லாம் 151 மில்லியன் யூரோவாக சேர்ந்து நின்றது.
காட்சி இந்தியாவுக்கு நகர்கிறது. இந்தியாவில் 2015 மார்ச்சில் அனில் அம்பானி ராணுவ அமைச்சகத்தை அணுகுகிறார். 2015 ஏப்ரலில் ரபேல் வாங்கப் போவதாக மோடி அறிவிக்கிறார். அதே மாதத்தில் அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் நிறுவனத்தை பதிவு செய்து பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் கூட்டு உருவாக்குகிறார்.
காட்சி பிரான்சுக்கு நகர்கிறது. வரி பாக்கி வழக்கில் நியமிக்கப்படும் புதிய கணக்கு அதிகாரி, 2015 செப்டம்பரில் தந்த அறிக்கையில் அனில் அம்பானியின் நிறுவனம் 7.5 மில்லியன் யூரோ முதல் 8 மில்லியன் யூரோ வரை வரி பாக்கி செலுத்தும் என்று சொல்கிறார். 2015 அக்டோபர் மாதமே இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி அனில் அம்பானிக்கு 143 மில் லியன் யூரோ மிச்சமாகிறது. இந்திய மதிப்பில் ரூ.1,124 கோடி! தனி ஒருவன் படக் காட்சி போலவே நிஜத்தில் நடந்திருக்கிறது.
பிரான்ஸ் நாட்டில் நடந்ததற்கும் தங்களது அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மோடி ஆட்சியாளர்களும் ஆதரவாளர்களும் சொல்கிறார்கள். வேறு என்ன சொல்ல முடியும்? நாட்டு மக்களுக்கு பார்த்த மாத்திரத்லேயே, அனில் அம்பானிக்கு உதவுவதற்காக மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது தெரிகிறது. இதற்காகத்தான் மோடி நமது வரிப் பணத்தை செலவு செய்து பிரான்சுக்கே சென்றிருக்கிறார், ராணுவ அமைச்சருடன் கூட கலந்தாலோசிக்காமல், அனில் அம்பானியுடன் பிரான்ஸ் சென்று ரபேல் ஒப்பந்தத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறார் என்பதெல்லாம் முழுப்பூசணிக்காயாக தெரிகின்றன. அனில் அம்பானி மிச்சம் பிடித்த ரூ.1,124 கோடியில் எத்தனை கோடிகள் பாஜகவுக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் வந்து சேர்ந்தது என நாட்டு மக்களுக்கு கேள்வி எழும்போது, அதைக் கேட்கக் கூடாது என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஊழல் செய்வதில் தான் தனி ஒருவன் என மெய்ப்பித்துவிட்டார் மோடி.