திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி
அமைப்பாக்கப்பட்ட, அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமைப் போராட்டக் குரலாய் இகக(மாலெ) விடுதலை வேட்பாளர் தோழர் கே.பழனிவேல்
முருகப்பா குழும நிறுவனமான டிஅய் டைமண்ட் செயின் நிறுவனத்தின் தொழிலாளியான தோழர் கே.பழனிவேல்
திருபெரும்புதூர் பொது நாடாளுமன்றத் தொகுதியில் இகக (மாலெ) சார்பில் போட்டியிடும் தலித் வேட்பாளர். இகக (மாலெ) (விடுதலை)யின் மாநிலக் குழு உறுப்பினர். ஏஅய்சிசிடியுவின் மாநிலச் செயலாளர்.
1990களில் தொழிற்சங்க இயக்கத்துக்கு வந்த தோழர் பழனிவேல் 1996ல் ஏஅய்சிசிடியு பகுதி கமிட்டி உறுப்பினர். டிஅய் டைமண்ட் செயின் ஆலையில் 2000ம் ஆண்டில் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றார். அந்த ஆண்டே இகக (மாலெ)யின் உறுப்பினராகவும் செயல்படத் துவங்கினார். 2004ல் போனஸ் பிரச்சனையில் உடன்பாடு எட்டாதபோது ஆலைக்குள்ளேயே 3 நாட்கள் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டார். அந்த ஆலையில் தொழிலாளர் விரோத சங்கமாக, நிர்வாகத்தின் தயவில் செயல்பட்ட அய்என்டியுசி சங்கத்தை மீண்டும் தலைதூக்க விடாமல் செய்ததில் தோழர் பழனிவேலுக்கு முக்கியப் பங்கு உண்டு. அவர் பொதுச் செயலாளராகவும், தோழர் குமாரசாமி தலைவராகவும் இருந்து மூன்று நீண்டகால ஒப்பந்தங்கள் போட்டனர்.
ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும் செயல்பட்ட அவர் இண்டோ டெக் கம்பெனியில் 2 ஒப்பந்தங்களும், ஸ்டாண்டர்ட் கெமிக்கல்ஸ் கம்பெனியில் 4 ஒப்பந்தங்களும், மெர்குரி பிட்டிங்ஸ் கம்பெனியில் 3 ஒப்பந்தங்களும், ஜே என்ஜினியரிங் கம்பெனியில் 3 ஒப்பந்தங்களும் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.
நூறுக்கும் குறைவான நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு, ஒப்பந்த, பயிற்சி தொழிலாளர்கள் என்ற பெயர்களில் பாரபட்சமாக போனஸ் வழங்கி வந்த ஆன்லோடு கியர்ஸ் கம்பெனியில் தொழிற்சங்க தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் முதலில் அனைவருக்கும் சமமான போனஸ் கிடைக்கச் செய்தார். பல போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இன்று 220 பேர் நிரந்தரத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். அந்த ஆலையில் 3 ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 2016ல் தொழிலாளர்கள் பெற்ற ஊதிய உயர்வில் ரூ.8,000 வரை அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் மட்டுமே பெறப்பட்டது என்பது முக்கியமான செய்தியாகும். இதனால் தொழிலாளர்களின் வேறு வேறு பணப்பயன்களும் அதிகரித்தன.
வெல்மேக் ஆலையில் அண்ணா தொழிற்சங்கமே நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. தொழிலாளர்கள், தோழர் பழனிவேலை தலைமைக்கு கொண்டு வந்ததை நிர்வாகம் பிடிவாதமாய் ஏற்க மறுத்தது. தொழிலாளர்கள் 9 மாத காலமாக கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு செல்வது துவங்கி, ஆலை வாயிலில் முழக்கம், உற்பத்தி முடக்கம் என பலகட்டப் போராட்டம் நடத்தி பின்னர், நிர்வாக இயக்குனர் சங்க அலுவலகம் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். இப்போது ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.10,000 சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
தெருப் பிரச்சனை முதல் தேசப் பிரச்சனை வரை போராட்டக் களத்தில் நிற்பவர் தோழர் பழனிவேல்
அம்பத்தூர் பகுதி மக்களுக்கு இடையூறாக இருந்த சாராயக் கடையை அகற்றக் கோரி நடத்தப்பட்ட காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் 5 நாட்களும் கலந்து கொண்டார்.
கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் துவக்கி வைத்த காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் 5 நாட்களும் கலந்து கொண்டார்.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் மறியல் போராட்டம் நடத்தியதில் அவர் மீது வழக்கு உள்ளது.
8 வழிச்சாலைக்கு எதிராக புத்தகம் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டபோது தடையை மீறி வீதியில் வெளியிட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், அதிலும் கைது செய்யப்பட்டார். வழக்கு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடியபோது அவர்கள் கோரிக்கைக்கு ஆதரவாக அனைத்து சங்க பட்டினிப் போராட்டத்தில் ஏஅய்சிசிடியு சார்பாக பங்கேற்றார்.
அம்பத்தூரில் உள்ளூர் இளைஞர்கள் விளையாட்டுக்கு பயன்படுத்தி வந்த டன்லப் திடலை தனியார் ஆக்கிரமிக்க முயன்றபோது அதற்கு எதிராக போராட்டம், பட்டினிப் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார்.
அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனை, சுகாதாரம் உள்ளிட்ட பகுதியின் வளர்ச்சி முன்னேற்றம் கோரிக்கை மீது இகக மாலெ நடத்தும் இடைவிடாத போராட்டங்களில் தோழர் பழனி வேல் முன்னணி பங்காற்றி வருகிறார்.
தான் பணியாற்றும் ஆலையில் இகக (மாலெ)யின் அரசியல் கருத்தியல் ஆயுதமான தீப்பொறிக்கு 100 சந்தாக்களை உத்தரவாதப்படுத்தியுள்ளார். ஆலையில் 8 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைமையில் இல்லாதபோதும் இன்று வரை 100 சந்தாக்களை உத்தரவாதம் செய்யும் வல்லமையை வேட்பாளரின் தொடர்ச்சியான போராட்ட செயல்பாடு வழங்கியிருக்கிறது.
வாடகை வீட்டில் குடியிருக்கும் வேட்பாளரின் மனைவி அங்கன்வாடி ஊழியர். இவருக்கு இரண்டு மகள்கள். இவரது போராட்ட வாழ்க்கைக்கு உறுதுணையாய் தொழிலாளர்களும் நண்பர்களும் இன்றளவும் இருக்கிறார்கள் என்றால் இவரது தன்னலமற்ற, சுவீகரித்துக் கொண்ட, கொள்கையின்பால் கொண்ட பற்றுறுதியே காரணம். இப்படிப்பட்ட மக்கள் போராளிகளின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
தொகுப்பு: தேசிகன்