COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 17, 2019

தூக்கியெறியப்பட வேண்டிய ஆட்சியில்
பிடுங்கி வீசியெறியப்பட்ட கல்


ஜி.ரமேஷ்


தமிழ்நாட்டு மக்களிடம் எட்டு வழி பசுமைச் சாலைக்காகக் கைப்பற்றிய நிலங்களை உடனடியாக அவர்களிடம் திருப்பித் தர வேண்டும்,
பதிவேடுகளில் பெயர் மாற்றம் செய்ததைத் திருத்தி அந்தந்த நிலச் சொந்தக்காரர்கள் பெயரிலேயே மாற்றம் செய்து உத்தரவிட்டு இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும், பசுமை விரைவுச் சாலை தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் 8 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு 08.04.2019 அன்று தீர்ப்பு வழங்கியது. 
சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஏற்கனவே 3 வழிகள் இருக்கும்போது நான்காவதாக பசுமை வழிச் சாலை என்ற பெயரில் 8 வழிச் சாலை அமைக்க மோடி அரசு முடிவு எடுத்தவுடன் எடப்பாடி அரசு அரசாணை வெளியிட்டதோடு நில்லாமல் அடாவடியாக, அராஜகமாக காவல்துறை துணையுடன், விவசாயிகளின் கெஞ்சலை, கண்ணீரை, எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் விவசாய நிலங்களுக்குள் இறங்கி, அளந்து முட்டுக் கற்களை நட்டு, அந்த இடங்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானது என வருவாய் பதிவேடுகளிலும் உடனடியாகத் திருத்தியுள்ளது என்றால், எடப்பாடி அரசு எந்த அளவிற்கு எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு வேகம் காட்டியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
நீதிபதிகள் வழங்கியுள்ள 106 பத்திகள் கொண்ட 115 பக்க தீர்ப்பின் முதல் இரண்டு பத்திகளில், எதற்காக இந்த வழக்கு என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதி சேலம் - சென்னை எட்டு வழி நெடுஞ் ôலை பசுமை நிலத் திட்டம். புதிதாக சாலை அமைத்தால் அதற்குப் பெயர் பசுமை நிலத் திட்டம். இருக்கிற சாலையை அகலப்படுத்தினால் அதற்கு பெயர் பழுப்பு நிலத் திட்டம். பசுமை நிலத் திட்டத்தை அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 பிரிவு 13ஏ(1)ன் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்ட மாவட்ட வரு வாய் அலுவலர்கள், அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவ்வறிவிப்பில், பசுமை நில நெடுஞ்சாலைத் திட்ட வளர்ச்சி என்கிற ஒரு பொது நோக்கத்திற்காக மனுதாரர்களுடைய சொந்த நிலங்கள் தேவைப்படுகிறது என மத்திய அரசு திருப்தி அடைந்துள்ளது, அதன்படி மனுதாரர்கள்/நில உடையாளர்களின் நிலங்களை கையகப்படுத்தவுள்ளதாக  அறிவிக்கப்படுகிறது என்று உள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்துதான் மனுதாரர்களான நில உடமையாளர்களும் சமூக ஆர்வலர்களும் வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை சேலத்தை இணைத்து 276 கி.மீ. நெடுஞ்சாலை அமைக்க 10,000 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் திட்ட இயக்குநர் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், அது தன்னுடைய குறிப்பு விதிமுறைகளை சுற்றுச் சூழல் மற்றும் வனம் மற்றும் தட்பவெப்ப மாற்றம் அமைச்சகத்திற்கு 19.04.2018 அன்று வழங்குகிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனம் மற்றும் தட்பவெப்ப மாற்றம் அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு 07.05.2018 அன்றைய தன்னுடைய 189ஆவது கூட்டத்தில் இத்திட்டக் குறிப்புகள் பற்றி விவாதிக்கிறது. பின்னர் சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டிற்கு அனுப்புகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான அனுமதி நிலுவையில் இருக்கும்போதே மத்திய அரசு மாவட்ட வருவாய் அதிகாரிகளை நெடுஞ்சாலைத் துறை சட்டப் பிரிவு 3ஏ(1)ன் படி அர சிதழிலும் நாளிதழ்களிலும் நிலம் கையகப்படுத்தலுக்கு அறிவிப்பு வெளியிடச் செய்கிறது. 31.05.2018 வெளியிடப்பட்ட நாளிதழ் அறிவிப்புக்கு நில உடமையாளர்கள் 04.06.2018ல் தங்கள் ஆட்சேப மனுவைத் தாக்கல் செய்கிறார்கள். நிலஉடமையாளர்களை தர்மபுரி நகருக்குள்ளேயே காவல்துறை அனுமதிக்கவில்லை, 19.06.2018 அன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படுவது இது போன்ற திட்டத்திற்கு முன்நிபந்தனையாகும். இந்த எட்டு வழிச் சாலைக்குப் பின்னால் மறைக்கப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் உள்ள கல்வராயன் மலை போன்ற மலைகளில் உள்ள இரும்பு, பாக்ûஸட் போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் அபகரிப்பதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.  ஏற்கனவே இருக்கும் 3 சென்னை சேலம் சாலைகளில் உள்ள பயணிகள் வாகனங்கள் பற்றிய விவரங்கள்  குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. முதலில் சென்னை மதுரை சாலை என்பதாகத்தான் இத்திட்டம் முன்வைக்கப்பட்டது. பின்னர் இது சென்னை சேலம் என்பதாக மாற்றப்பட்டுள்ளது. அதிகமான நீர்நிலைகள், காடுகள், வன விலங்குகள், பல்லுயிரிகள் ஆகியன அழிக்கப்படும். இந்திய நெடுஞ்சாலை கொள்திறன் கையேடு வழங்கியுள்ள வழிமுறைகள் செயலாக்க அறிக்கை தயாரிப்பில் பின்பற்றப்படவில்லை. இந்த விசயங்கள் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.
எதிர்மனுதாரர்களான அரசுத் தரப்பில், இந்த வழக்குகள் உரிய காலத்திற்கு முன்னமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன, எனவே இவ் வழக்குகள் செல்லத் தக்கதல்ல என்பதால் ஆரம் பத்திலேயே தள்ளுபடி செய்யப்பட வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை சட்டப் பிரிவு 3ஏ(1)ன் கீழ் முறைப்படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரர்கள் பாதிப்படைந்துள்ளாகக் கூற முடியாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தீர்ப்பில் பின்வருமாறு சொல்கின்றனர்: 2018 ஆகஸ்டில் நாங்கள் இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியபோது எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள வருவாய் அதிகாரிகள், சட்டம் அவர்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தையும் தாண்டி தங்கள் இஷ்டம் போல் நடந்து கொண்டதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் அதிகமான இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க விரும்பவில்லை. ஆனால், வனப்பகுதிக்கு அருகில்  செயல்படுத்தவுள்ள சாலைத் திட்டத்திற்கு அருகில் 30 மீட்டர் தூரத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் எவ்வித அனுமதியுமின்றி  நன்கு வளர்ந்த மரங்கள் 109 வெட்டிச் சாய்க்கப்பட்டன. இது பற்றி மனுதாரர் தரப்பில் தங்கள் அச்சத்தை அப்போது வெளிப்படுத்தியபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் அப்படி எதுவும் நடக்காது என்றார். ஆனால், 109 மரங்களை சட்டவிரோதமாக வெட்டிய கயவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுத்துபூர்வமான ஆட்சேபணை மனுக்களை எழுதித் தர செய்யாறு வந்த 4 பேரை கைது செய்துள்ளார்கள். இவை நீதிமன்றத்தின் கவனத்திற்கு மனுதாரர்களால் கொண்டு வரப்பட்டன. திட்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்கினார்கள் என்பதால் இவ்வழக்கின் மனுதாரர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களைத் தடுக்கக்கூடாது என்றும் அரசும் அதிகாரிகளும் திட்டத்தை அமல்படுத்துவதில் அவசரம் காட்டக் கூடாது என்றும் நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். வெட்டப்பட்ட 109 மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம்.
இதுபோன்ற அரசாங்கத்தின் அவசரச் செயல்களைப் பார்க்கும்போது, இம் மனுக்கள் உரிய காலத்திற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் இந்த நீதிமன்றத்திற்கு விசாரணை வரையறை இல்லை என்று அரசுத் தரப்பில் வாதிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வாதம் புறந்தள்ளப்படவேண்டியது என்று கூறியுள்ள நீதிபதிகள், பாம்பே அரசு எதிர் ஆர்.எஸ்.நான்ஜி ஏ.அய்.ஆர் 1956 எஸ்.சி.294 என்கிற வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு வேண்டுதல் உத்தரவைப் பிறப்பிக்கும் போது, இது பொது நோக்கிற்கானதுதானா என்பதை முடிவு எடுக்கும் நல்ல நீதிபதிதான் அரசாங்கமேயொழிய, அரசாங்கமே மட்டுமே முழுமையானதொரு நீதிபதியாகிவிட முடி யாது என்று கூறியுள்ளது அந்த அடிப்படையில், இந்த நீதிமன்றத்திற்கு பொது நோக்கம் இதில் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கடமை உள்ளது என்றும் நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கை மூடத்தனமாகவும் பொருத்தமற்றதாகவும் மனம்போக்காகவும் இருக்கும் பட்சத்தில் அது பற்றி  விசாரித்து தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம் என்றும் அந்த  அடிப்படையில் இந்த மனுக்கள் செல்லத்தக்கதாகும் அரசுத் தரப்பில் எழுப்பப்பட்டுள்ள பூர்வாங்க எதிர்ப்பு  நிராகரிக்கப்படுகிறது குறிப்பிட்டுள்ளார்கள். பொதுவாக, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கம் உண்மையில் பொது மக்களுக்காகத் தான் செயல்படுகிறதா என்று பார்த்து அதில் தலையிட்டு தடுத்து நிறுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது என்பதை உலகுக்கு காட்டியுள்ளனர்.
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தில் சென்னை சேலம் திட்டம் இல்லை, சென்னை மதுரை திட்டம்தான் உள்ளது என்று மனுதாரர்கள் கூறியதற்கு தரை வழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பதில் எதுவும் கூறியிருக்கவில்லை. பாரத் மாலாவில் ஒரு சாலையை இணைக்க வேண்டும் என்றால், பிரதமர் தலைமையில் உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு ஒப்புதல் பெறப்பட வேண்டியது சட்டப்படியானது. 24.10.2017ல்தான் அமைச்சர் குழு முடிவெடுக்கிறது. நிலம் கையகப் படுத்துதலுக்கான செலவில் 50 சதவீதத்தை ஏற்றுக்கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டிருக்கவில்லை. அப்படியிருக்கும்போது இந்தத் திட்டம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் எப்படி வரும்?
24.10.2017க்குப் பின்னர் இத்திட்டம் பாரத் மாலாவில் இணைக்கப்பட்டுவிட்டதற்கான எந்தவொரு ஆவணமும் காணப்படவில்லை. தினமும் சராசரியாக 43,671 பயணிகள் வாகனங்கள் செல்லக்கூடிய சென்னை திருச்சி மதுரை பொருளாதார தாழ்வாரத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்பது பற்றி ஒன்றுமே இல்லை. நிலம் கையகப்படுத்தும் நடைமுறையில் ஏகப்பட்ட கோளாறுகள் உள்ளன. பிரிவு 3ஏ(12)ன் கீழ் அறிவிப்பு செய்யப்பட்டதற்குப் பின்னரான செயல்பாடுகளிலும் பெரும் ஓட்டைகள் உள்ளன. அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதமான செயலாக்க அறிக்கை சட்டப்படியாக தேவையில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. திட்டத்திற்கான ஆலோசகர் நியமிக்கப்பட்டதிலேயே கோளாறுகள் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
முழுமையான திட்ட அறிக்கை பெறப்பட்டதற்கு பின்னால், முன் மற்றும் இறுதி செயலாக்க அறிக்கை முக்கியத்துவம் இழந்து விடுகிறது என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தால் கூறப்படுகிறது. ஆனால், வரைவு செயலாக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன வரைவு செயலாக்க அறிக்கையிலேயே பல ஓட்டைகள் உள்ளன. ஆரம்பமே கோளாறு என்றாகிவிட்டது. தொடர்ந்து அது சரி செய்யப்படவுமில்லை. சென்னை மதுரை திட்டத்தை மாற்றி சென்னை சேலம் திட்டம் என்றாக்கியது அரசின் கொள்கை திட்டம் என்றும் அதில் நீதிமன்றம் தலைமுடியாது என் றும் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது கொள்கை திட்டம் என்பதற்காக அதை கேள்வி கேட்க முடியாது என்று கூறமுடியாது. முடிவுகளில் தான்தோன்றித்தனம் இருப்பின் அதில் நீதிமன்றம் தலையிட உரிமை உள்ளது. அரசு தனியார் ஆலோசகர்களை நியமிக்கும் பட்சத்தில் அது நீதிமன்ற மறுபரிசோதனைக்குட்பட்டது. ஏற்கனவே சட்ட விரோதமாக ஆலோசகர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அது குதிரைக்கு முன்னே வண்டியைக் கட்டியது போன்று உள்ளது. இப்படியாக ஒவ்வொரு விசயத்திலும் உயர்நீதிமன்றம் எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக சாட்டையடி கொடுத்துள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்கள் உச்சநீதிமன்றம் போவோம் என்றார். முதலமைச்சர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது எங்கள் கடமை என்றார். மத்திய தரைவழி மற்றும் நெடுசாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்நாட்டுக்கே வந்து எட்டு வழிச் சாலைத் திட்டம் எப்படியும் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சரையும் திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்ட ராமதாசையும் வைத்துக் கொண்டு பேசுகிறார். பாமகவின் பாலு அது அவரின்  சொந்தக் கருத்து என்கிறார். எதிர்க்கட்சிகள் எல்லாரும் கேள்வி கேட்டவுடன் மேடையிலேயே பதில் பேசுவது நாக ரிகமா, நாங்கள் எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராகத்தான் இப்பவும் இருக்கிறோம் என்று சப்பை கட்டுகிறார் பேசுகிறார் அன்புமணி. இந்த பாசிச ஆட்சியாளர்களும் அவர்களது அடிமைகளும் தூக்கியெறியப்படவில்லை என்றால் நாளைய இந்தியா நாசக்காடாகிப் போகும்.

Search