காஷ்மீரில் இணைய சேவை முடக்கம் மற்றும் 144 தடை உத்தரவு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு
மிகவும் தாமதமானது. உடனடி பலன் தராதது
(Too Little.Too Late)
எஸ்.குமாரசாமி
இந்தியா ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரிந்து போகும் உரிமை தந்து ஜம்மு காஷ்மீரை தன்னோடு இணைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
தன்னோடு இருக்கும்போதான காலத்துக்காக சிறப்பு அதிகாரங்களை அரசியல்சாசன 370 பிரிவின் கீழ் வழங்கியது. காஷ்மீரின் அதிகாரங்களை விழுங்கிக்கொண்டே வந்த இந்திய ஒன்றியம், மோடி மீண்டும் வெற்றி பெற்ற பிறகு, இனி காஷ்மீர் தனியாக ஒரு மாநிலமாகக் கூட இருக்காது என்று ஆகஸ்ட் 5, 2019 அன்று முடிவு எடுத்தது. இசுலாமிய பெரும்பான்மை உள்ள ஒரே மாநிலமான ஜம்மு காஷ்மீர் துண்டாடப்பட்டது. அதன் மீது ஒரு படை யெடுப்பு நடந்தது. அது திறந்தவெளி சிறைச் சாலையானது. வெளி உலகத்தோடு உள்ள காஷ்மீரின் அனைத்து தொடர்புகளும் ஆகஸ்ட் 4 முதல் முடக்கப்பட்டன. தொலைபேசி, இணைய சேவை நின்றது. 144 தடை உத்தரவு அடிப்படை உரிமைகளை பறித்தது.
பத்திரிகை வெளியிட தடை, இணைய சேவை முடக்கம், 144 உத்தரவின் மூலம் அடிப்படை உரிமைகள் மறுப்பு என்பவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்ற கதவுகள் தட்டப்பட்டன. உரிமை இருந்தால் நிவாரணம் உண்டு. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அரசியல் சாசன 32ஆவது பிரிவின் கீழ், குடிமக்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி நீதி கோர முடியும். அப்படிப் போடப்பட்ட ஒரு வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர் கவாய் ஆகியோர் கொண்ட அமர்வம் ஜனவரி 20 அன்று தீர்ப்பு சொன்னது.
அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாக வருவதற்கான வரிசையில் உள்ள நீதிபதி ரமணா அளித்த தீர்ப்பு, சார்லஸ் டிக்கன்சின் இரண்டு நகரங்களின் ஒரு கதை என்று புதினத்தின் வரிகளில் இருந்து துவங்குகிறது.
அது ஆகச் சிறந்த காலம். அது ஆக மோசமான காலம். அது பேரறிவின் காலம். அது முட்டாள்தனத்தின் காலம். அது ஒளியின் காலம். அது இருட்டின் காலம்.
அது நம்பிக்கையின் வசந்தம். அது அவநம்பிக்கையின் வாடைக் காலம்.
உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை, பிரிவு 377 நீக்க தீர்ப்பு, அந்தரங்க உரிமை தீர்ப்பு, பிறர்மனை உறவை குற்றமயப்படுத்தும் பிரிவை ரத்து செய்த தீர்ப்பு, சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு ஆகியவற்றை, பெரும்போக்கான தாராள மனம் கொண்ட தீர்ப்புகள் என்று சொல்ல முடியும். மற்றபடி, சபரிமலை தீர்ப்பை மறுபரிசீலனைக்கு அனுப்பிய தீர்ப்பு, பாப்ரி மசூதி தீர்ப்பு, ரஃபேல் விமான பேர தீர்ப்பு, காஷ்மீர் ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்க மறுக்கும் முடிவு என, ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளும், இப்போது போப்டே தலைமை நீதிபதியாக உள்ளபோது, அடிப்படை உரிமைகளை காக்க முன்வராததும் நாம் வாழும் காலம் ஆக மோசமான காலம், இருட்டின் காலம், அவநம்பிக்கையின் வாடைக் காலம் என்ற எண்ணத்தையே தந்துள்ளன.
நீதிபதி ரமணாவின் ஜனவரி தீர்ப்பு மிகவும் தாமதமாக வந்துள்ளது. உடனடியாய் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. உச்சநீதிமன்றம் அரசு முன்வைக்கும் தேசப்பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றை ஒரு கையிலும் அடிப்படை உரிமைகளை மறு கையிலும் வைத்து இரண்டும் கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும் சாகச விளையாட்டில் ஈடுபட முயற்சி செய்தது.
அரசு பயங்கரவாதம் நிலவும் காலங்களில் ஒரே நேரம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும்போது, அவர்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்கவும் வேண்டியுள்ளது என்று தீர்ப்பு பேசியது.
தீர்ப்பு இணைய சேவை உரிமைக்கு அரசியல் அமைப்புச்சட்ட பாதுகாப்பு உண்டு என்றும் கருத்துரிமையில் தகவல் அறியும் உரிமையும் உண்டு என்றும் இணைய உரிமை தொழில் வர்த்தகம் நடத்தும் உரிமையின் ஒரு பகுதி என்றும் அறிவிக்கிறது. ஆனால், அரசு மாதக்கணக்கில் இணைய சேவையை முடக்கி காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியது என்று தீர்ப்பு திட்டவட்டமாகச் சொல்லவில்லை. திருடுபவர் கையில் சாவியைத் தரும் அணுகுமுறையுடன் இணைய சேவையை முடக்கிய அதிகாரிகளே அதற்கான உத்தரவை மறுபரிசீலனை செய்வார்கள் என்கிறது.
தீர்ப்புக்குப் பிறகு இணைய சேவை முடக்க உத்தரவு மறுபரிசீலனை செய்யப்பட் டது. நன்கு கட்டுப்படுத்தப்பட்ட சுமார் 550 வலைத்தளங்களை மட்டுமே காஷ்மீர் மக்கள் 2 ஜி வேகத்தில் போஸ்ட் பெயிட் முறையில் பயன்படுத்த முடியும். இணைய உரிமை கொஞ்சம்தான் உண்டு. நிறைய நிறைய இல்லை. இங்கேயும் ஜியோவுக்கு இடம் உண்டு.
இன்றைய அரசியல் சூழலில் இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர், தடை உத்தரவுகளை அரசு தாக்கல் செய்யாமல் இருக்க முடியும் என்ற வாதத்தை முன்வைக்க முடிந்தது. நல்ல வேளையாக உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை. ஆனபோதும், அரசு எல்லா 144 தடை உத்தரவுகளையும் தாக்கல் செய்யவில்லை. சில மாதிரி உத்தரவுகளையே தாக்கல் செய்தது. காஷ்மீரில் அரசு மனம்போன போக்கில் ரகசியமாக 144 தடை போட்டு அடிப்படை உரிமைகளை மீறியது தவறு என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. அப்படிச் சொல்லாமல் விட்டுவிடுவது சரி என்ற அதன் முடிவு, தேசப் பாதுகாப்பு என்ற அரசின் வாதமே முன்னுரிமை பெற்றதைக் காட்டும். ஆனால், நீதிபதி என்.வி.ரமணா உத்தரவை நிச்சயமாக வேறு வேறு மாநிலங்களில் பயன்படுத்த முடியும்.
இந்தத் தீர்ப்பு இணைய சேவை முடக்கம் 144 தடை உத்தரவுகள் ரகசியமாக இருக்கக் கூடாது, அவை பொது வெளியில் பிரசுரமாக வேண்டும், அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் வழக்காட முடியும் என்கிறது. இணைய சேவை முடக்கம் தற்காலிகமாக மட்டுமே இருக்க முடியும் என்கிறது. கருத்து சுதந்திரம், குறைகளை முன்வைப்பது, அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவது ஆகியவற்றை தடுக்க 144 தடை உத்தரவை பயன்படுத்த முடியாது என்கிறது. உத்தரவுகள் நீதித்துறை பரிசீலனை செய்யும்விதம் காரணங்கள் சொல்ல வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப 144 தடை போடுவது அதிகார மீறல் என்றும் சொல்கிறது. உத்தரவுகள் சூழலின் இயல்புக்கு பொருத்தமானவையா, இவைதான் குறைந்த பட்ச முடக்கமா என்பதை அரசு ஆராய வேண்டும் என்று வரையறுக்கிறது. இந்த அம்சங்களை நிச்சயம் மக்கள் போராட்டங்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்தியாக வேண்டும்.
ஆனால், தீர்ப்பு, அடிப்படை உரிமைகளை, தண்டனை மற்றும் கண்டனம் பற்றிய எந்த அச்சமும் இல்லாமல் மீறிய அரசின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த போதுமானதல்ல. நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆறு மாதங்களுக்கு ஒன்றும் நடக்காது, பிறகு, சில பொதுவான உபதேசங்கள் வரும், சரி சரி என்று சொல்லிவிட்டு அரசு நகர்ந்துவிட முடியும் என்ற விளைவு உடனடியாகவே இணைய முடக்க நீக்க உத்தரவில் வெளிப்பட்டது.
நீதிபதி ரமணா குறிப்பிடுவதுபோல், நாம் வாழும் காலம் ஆக மோசமான காலம். அது இருட்டின் காலம். அது அவநம்பிக்கையின் வாடைக் காலம்.