தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
உமாமகேஸ்வரன்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் எட்டு வருடங்களுக்குப் பிறகு 2019 டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற் றது.
மொத்தமுள்ள 36 மாவட்டங்களில், 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மட்டுமே தேர்தல்கள் நடத்தப்பட்டன. 9 மாவட்டங்களிலும் அடுத்த கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இது தவிர, தமிழகம் முழுவதுமுள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கும் இனிமேல்தான் தேர்தல்கள் நடக்க வேண்டும்.
எடப்பாடி அரசு, தோல்வி பயத்தால் முடிந்தவரை இந்த தேர்தல்களை தள்ளி வைக்கத் தன்னால் முடிந்த அனைத்து தந்திரங்களையும் கையாண்டது. கடைசியாக உச்சநீதிமன்ற ஆணைப்படி தேர்தல் நடத்தியாக வேண்டிய நிலையில் மாநில தேர்தல் ஆணையம் முதல்கட்ட தேர்தலை நடத்தியுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களில் தொகுதி வரையறை, இடஒதுக்கீடு, ஆகியவை நடத்தி தேர்தலை முடிக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, ஜனவரி 3 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுக மற்றும் அதிமுக அணிகளிடையே கடும் போட்டி நிலவினாலும், மொத்தத்தில் திமுக அதிமுகவை விட பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது.
கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளான மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் மொத்தமுள்ள 514ல் திமுக அணி 268 உறுப்பினர் பதவிகளைப் பிடித்தது. அதிமுக அணி 221, மற்றவை 25. அதேபோல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் மொத்தமுள்ள 5090ல் திமுக அணி 2325 பதவிகளைப் பிடித்தது. அதிமுக அணி 1970, மற்றவை 795.
கட்சி அடிப்படையில் அல்லாத கிராம ஊராட்சித் தலைவர் பதவி 9,611, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி 76,730. திமுக அணி சார்பாக போட்டியிட்டவர்கள் அதிக இடங்களை கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 ஆண்டுகளுக்குப் பிறகு (2011க்கு பிறகு) நடைபெற்ற இந்தத் தேர்தலை முந்தைய தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. ஆனால், அதிமுக, ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது. அப்படியானால் கருணாநிதியும் இல்லைதானே.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் 38 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்ற திமுக அணி, அந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தல்களில் உள்ளூர்மட்ட செல்வாக்கு மற்றும் அரசியல் பெருமளவு வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை புரிந்து கொண்டிருந்தாலும், ஆளும்கட்சிகளே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது கடந்த கால வரலாறு என்பது ஓரளவு உண்மைதான் என்றாலும், அதிமுக கடும் தோல்வியிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வந்துவிட்டது என்று கொள்ளலாமா? வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி ஏதோ தலை தப்பியது என்பதாகத்தானே இருந்தது? பின்னர் நடந்த நாங்குநேரி மற்றும் விக்கிர வாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக, திமுகவை பெரும் தோல்வியில் தள்ளியது. தினகரனின் அமுமுகவின் எதிர்ப்பு முடிந்து போனாலும், அதிமுக மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது என்றும் இந்த வெற்றியை எடுத்துக் கொள்ள முடியுமா?
திமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் வடமாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் நல்ல வெற்றி பெற்றிருந்த போதிலும், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்களில் சில இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. அதிமுக தனது செல்வாக்குமிக்க மேற்கு மாவட்டங்களை தக்க வைத்துக் கொண்டாலும், நீலகிரி, மற்றும் கிருஷ்ணகிரியை இழந்துவிட்டது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கப் பட வேண்டிய மற்றொரு நல்ல அம்சம், பல இடங்களில் வயது முதிர்ந்த சாதாரண பெண்கள், திருநங்கைகள், மாணவர்கள், மற்றும் அடித்தட்டு மக்களான துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோரின் வெற்றி நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.
தமிழ்நாட்டு அரசியலில் இந்தத் தேர்தல் வெற்றிகள் என்ன மாற்றங்களை கொண்டு வரும், குறிப்பாக, 2021 சட்டமன்ற தேர்தல்களில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பார்க்க வேண்டியுள்ளது. சிலர் ஒரு பகுதிதான் முடிந்துள்ளது, இதை வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது என்கின்றனர். ஆனால் இது இடைத்தேர்தல் போன்றதல்ல. சுமார் 2.33 கோடி வாக்காளர்கள், தமிழ்நாட்டின் எல்லா மண்டலங்களிலிருந்தும் வாக்களித்திருக்கின்றனர். எனவே இந்தத் தேர்தல் நிச்சயமாக சில சமிக்ஞைகளை சொல்கின்றன.
கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் நிச்சயமாக ஆளும்கட்சியான எடப்பாடி அரசு மீது அதிருப்தியும், கோபமும் இருப்பது வெளிப்பட்டிருக்கிறது. அதே சமயம் திமுக, மக்களின் அடிப்படையான கிராமப்புற நெருக்கடி, விவசாய நெருக்கடி, விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளின் மீது வலுவான எந்த எதிர்ப்பையும் காட்டாததும் வெளிப்பட்டுள்ளது. தேசிய குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் அதிமுகவின் உதவியுடன் நிறைவேறியது. போராட்டம் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோதும், தேர்தல்களில் அதுவும் எதிரொலித்திருக்கும் என்று எடுத்துக்கொள்ள பொதுவான சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன.
இறுதியாக, திமுக முன்னிலை பெற்று இருந்தாலும், அதன் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் வெற்றி அவ்வளவு எளிதல்ல. அதே போல் அதிமுக பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்துவிட்டது என்ற போதும், சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் விரோத மதவெறி பாஜகவுக்கு அது அடிமைச் சேவகம் செய்வதை ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
அடுத்தக்கட்ட தேர்தல்கள் 9 மாவட்டங்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நிச்சயம் ஓர் அரசியல் மாற்றத்திற்கான ஒரு தெளிவை கொண்டு வரும் என்று நம்பலாம். பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.