ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
உமாமகேஸ்வரன்
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் 2019, 5 கட்டங்களாக நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டடுள்ளன.
இந்தத் தேர்தலில் பாஜக படுதோல்வியைத் தழுவியுள்ளது. ரகுபர்தாஸ் தலைமையிலான பாஜக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளதுடன் முதலமைச்சர் தாசும் சட்டமன்ற தேர்தலில் தோற்றுப் போனார்.
ஆறு மாதங்களுக்கு முன் நடந்த மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்களவைத் தொகுதிக ளிலும் பெரும் வெற்றி பெற்ற பாஜக, இப் போது ஆட்சியைப் பறிகொடுத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் 56% வாக்குகள் பெற்ற பாஜகவின் வாக்கு சதவிகிதம் 33% என குறைந்துள்ளது. மக்களவைக்கு ஒரு மாதிரியும் சட்ட மன்ற தேர்தலில் வேறு மாதிரியும் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பது தெரிந்ததுதான் என்றபோதிலும் இந்த பெரும் வாக்குச் சரிவுக்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.
மக்களவைத் தேர்தலில், மோடி - ஷா கூட்டணி நாட்டு மக்களிடையே ஏற்படுத்திய தேசப்பாதுகாப்பு பற்றிய அச்ச உணர்வு, பாகிஸ்தான் எல்லை தாண்டி பாலக்கோட் விமான நிலைய துல்லிய தாக்குதல் நடத்தி மக்களிடையே கிளப்பிய தேசியவெறி, முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதவெறி அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக சரியான மாற்று அரசியலை எடுத்துச் செல்ல தவறிய எதிர்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத மற்றும் திவா லாகிப்போன அரசியல், இன்னபிற காரணங்களால் மக்களவைத் தேர்தலில் பாஜக அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது.
2019 மக்களவை தேர்தலில் 14 மக்களவை தொகுதிகளிலும் வெற்றிபெற்று 56% வாக்குகள் பெற்ற பாஜக எவ்வாறு படுதோல்வியை அடைந்தது, அதன் வாக்கு 33% எப்படி சரிந்தது என காண வேண்டியது அவசியம். ஆறு மாதங் களில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது எப்படி?
ஜார்க்கண்ட் மக்கள் தொகையில் 40% பேர் ஆதிவாசி மக்களும் பட்டியலின மக்களும் ஆவார்கள். பீகாரிலிருந்து பிரித்து தனியாக ஜார்க்கண்ட் மாநிலம் 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதில் இருந்து 2014 வரை அந்த மாநில முதல்வராக ஆதிவாசி மக்களின் பிரதிநிதிகளே இருந்துள்ளனர். பாஜக 2014ல் ஒரு புதிய யுக்தியை கையாண்டது. அரியானா, மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெருவாரியான மக்கள் தொகை உள்ள சமூகத்திலிருந்து மாநில முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக தனது கட்சியில் உள்ள மற்ற சமூகத்திலி ருந்து முதலமைச்சரை தேர்ந்தெடுத்தது. அரியானாவில் கட்டர், மகாராஷ்ட்ராவில் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பட்னாவிஸ் மற்றும் ஜார்க்கண்ட் ரகுபர்தாஸ் ஆகியோர் முதலமைச்சர் களாயினர். 2019 தேர்தலிலும் இதையே பாஜக தனது தேர்தல் யுக்தியாக கையாண்டது. இந்த புதிய நடைமுறை கட்சிக்குள் பெரும் பான்மை சமூகத்தினரிடையே புகைச்சலையும் உட்கட்சி பூசலையும் உண்டாக்கியது. இதன் வெளிப்பாடு இந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் எதிரொலித்தது.
ஜார்க்கண்ட்டில் ரகுபர்தாஸ் அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக வேலையின்மை விவசாய கிராமப்புற நெருக்கடி விலையேற்றம் ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதித்தது.
நிலம் கையகப்படுத்தும் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதற்காக சோட்டா நாக்பூர் குத்தகைதாரர் சட்டம் மற்றும் சந்தால் பர்கானா குத்தகைதாரர் சட்டம் ஆகியவற்றில் ஆதிவாசி மக்களுக்கு எதிராக திருத்தங்கள் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் ஆதிவாசி மக்களிடையே ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பு அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. ஆதிவாசி மக்களின் பேரெழுச்சியால் ஆளுநர் முர்மு ஒப்புதல் வழங்காமல் சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார். பின்னர் இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.
ஆதிவாசி மக்களிடையே கிருத்துவர், கிருத்துவர் அல்லாதவர் என்கிற பிளவை ஏற்படுத்தியதோடு ஆதிவாசி மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே மோதலை உருவாக்குவது, பசுப் பாதுகாப்பு என்கிற பெயரால் கும்பல் படுகொலைகள் திட்டமிட்டு நடத்துவது, பட்டினிச் சாவுகள், மத மோதல்கள் உருவாக்குவது, மதவெறியை துண்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் ரகுபர்தாஸ் அரசு மக்களிடையே முற்றிலுமாக செல்வாக்கு இழந்தது.
ஆதிவாசி மக்கள் இந்த அரசிடமிருந்தும் பாஜகவிலிருந்தும் முற்றிலுமாக தனிமைப்பட்டதன் விளைவாக பாஜக - ஏஜேஎஸ்எம் (அனைத்து ஜார்கண்ட் மாணவர் கழகம்) கூட்டணி முறிந்தது. எந்தவொரு கட்சியும் பாஜக வோடு கூட்டு சேர முன்வராத நிலையில் அது தனித்துவிடப்பட்டது. மறுபக்கம் காங்கிரஸ் ஜேஎம்எம் மற்றும் ஆர்ஜேடியுடன் வலுவான கூட்டணி அமைத்தது.
மோடி - ஷா - யோகி கூட்டணி ஒரு வலுவான பிரச்சார வியூகத்தை அமைத்து ஒரு மாத காலம் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு 11 பேரணிகள் நடத்தியது. இந்த கூட்டங்களில் மோடி அவரது வழக்கமான முஸ்லிம் வெறுப்பு அரசியல், பிளவுவாதம் மற்றும் தேசவெறி ஆகியவற்றையே பிரதானப்படுத்தி பேசினார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்தும் இதை எதிர்ப்பவர்கள் தேசவிரேதிகள் என்றும் அவர்கள் யார் என்பதை அவர்கள் அணியும் ஆடைகளில் இருந்தே (இஸ்லாமியர்) தெரிந்து கொள்ளலாம் என்றும் பேசினார். அமித் ஷா, காஷ்மீர் பிரச்சனை பிரிவு 370 ஆகியவற்றோடு குடியுரிமைச் சட்டத் திருத்தம், தொடர்ந்து தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை வந்தே தீரும் என்றார். மாறாக ரகுபர்தாஸ் அரசின் அலங்கோல ஆட்சி, மக்கள் விரோத கொள்கைகள், வேலையின்மை, விலைவாசி உயர்வு, பட்டினிச் சாவுகள், தொழில் மற்றும் விவசாய நெருக்கடி போன்ற வாழ்வாதார பிரச்சனைகளில் எதிர்க் கட்சிகளின் பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது.
மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, வருடம் இரண்டு கோடி பேருக்கு வேலை என்ற தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக லட்சக்கணக்கானவர்கள் வேலை இழப்பு, தொழில் நெருக்கடி, விவ சாய நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொள்ள திராணியற்ற மத்திய அரசு மக்களின் கவனத்தை திசைதிருப்ப மதவெறி இனவெறி வெறுப்பு அரசியலை கையிலெடுத்தனர். இவற்றை மக்கள் முற்றிலுமாக நிராகரித்ததுடன் பாஜகவை தேர்தலில் படுதோல்வி அடைய செய்தனர்.
இந்தத் தேர்தலில், கடந்த தேர்தலில் தன்வார் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற இகக (மாலெ) விடுதலையின் தோழர் ராம்குமார் தோல்வியுற்றாலும் மறைந்த மக்கள் போராளி தோழர் மகேந்திர சிங் மகன் தோழர் வினோத் சிங் பகோதர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது அனைத்து இடது ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். ஜார்க்கண்ட் மக்களுக்கு அவரது குரல் ஓங்கி ஒலிக்கும் என்பது உறுதி.
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு சட்டமன்ற தேர்தல்களில் அரியானா, மகாராஷ்ட்ரா அடுத்து தொடர்ந்து ஏற்படும் தோல்விகளின் தொடர்ச்சி மட்டுமல்ல, மக்கள் போராட்டங்களை மேலும் தீவிரமாக நடத்து கின்ற இடது முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு உத்வேகமும் நம்பிக்கையும் தரும் வெற் றியுமாகும். 2020 தொடக்கத்தில் நடக்கவிருக்கும் டெல்லி தேர்தலிலும் வருட முடிவில் நடக்கவிருக்கும் பீகார் தேர்தலிலும் பின்னர் நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் தேர்தல்களிலும் இந்த முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பாஜகவிற்கு மரண அடிகொடுத்த ஜார்க் கண்ட் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.