COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 31, 2020

கொதிக்கும் எண்ணெய்க்கும் எரியும் நெருப்புக்கும் இடையே
சிக்கித் தவிக்கும் தமிழக கிராமப்புற ஏழை மக்கள்


ஆர்.வித்யாசாகர்

பொதுவாக கிராமப்புற பிரச்சனைகள் என்று பொது வெளியில் விவாதிக்கப்படுவது பெரும்பாலும் விவசாயம்ää விவசாயிகள்ää கட்டுப்படியாகும் விலைää கடன் போன்ற பிரச்சனைகளை மட்டும்தான்.
பெருமுதலாளித்துவ கொள்கைகளை தூக்கிப் பிடித்து விவசாயத் துறையை அரசு முற்றிலுமாக புறக்கணிக்கும் இந்த காலகட்டத்தில்ää தொடர்ந்து விவசாயத் துறை நலிந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில்ää விவசாயிகளை தற்கொலை என்ற பூதம் பிடித்தாட்டுகிற இந்த காலகட்டத்தில் (தமிழ்நாட்டில் 2016லிருந்து இதுவரை 200க்கும் மேற்பட்டää பெரும்பாலும் சிறுகுறு விவசாயிகள்ää தற்கொலை செய்து கொண்டிருக்;கிறார்கள்)ää ஒட்டுமொத்த விவசாயம் சார்ந்த கோரிக்கைகள்ää விவசாயத்தையும்ää விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது மக்கள் அதிகாரம்ää ஜனநாயகம் சார்ந்த கோரிக்கைகளாகும். அதே சமயம்;ää நிலமும் இன்றிää நிலம் இருந்தாலும் விவசாயம் செய்து பிழைக்க போதுமான நிலம் இல்லாமலும்ää தேவையான ஆதரவு கொள்கைகள் இல்லாமலும் கிராமப்புறங்களிலும்ää வெளியிலும் பல்வேறு வித மான சுரண்டல்களுக்கும்ää ஒடுக்குமுறைக்கும் ஆளாகி ஓரஞ்சாரத்திற்கு தள்ளப்பட்டிருக்கும்ää கிராமப்புறங்களில் பெரும்பான்மையாக இருக்கும்ää கிராமப்புற ஏழை மக்களின் நலன்களை விவாதப் பொருளாக்குவது அவசியமானது. அவசரமானது.

பெரும்பாலான மற்ற மாநிலங்களை போலவே தமிழ்நாட்டிலும் விவசாயத்தை விட்டு வெளியேறுகிற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் விவசாயிகளின் எண்ணிக்கை 58 லட்சம். இது 30 ஆண்டுகளில் 2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது 42 லட்சமாக குறைந்துவிட்டது. விவசாயத் தொழிலாளர் எண்ணிக்கை இதே காலத்தில் 68 லட்சத்திலிருந்து 96 லட்சமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் 484 லட்சம் என இருந்த மக்கள் தொகை 721 லட்சம் என அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் விவசாயிகள் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது. அதே நேரம் நிலமின்மை அதிகரித்திருப்பதையும் இது காட்டுகிறது.

மற்ற பல மாநிலங்களைப்  போலவே தமிழ்நாட்டிலும் குறுசிறு விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அரசாங்க புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் மொத்த விவசாயிகளில் 91.7 சதம் குறுசிறு நில விவசாயிகளாகும். 1971ல்ää சராசரி நில வுடமை 1.45 ஹெக்டர் ஆக இருந்தது. 2011ல் இது 0.8 ஹெக்டர் ஆக குறைந்துவிட்டது. குறுசிறு விவசாயிகளுக்கும் நிலம் ஒரே துண்டாக இல்லை. சிறிதளவு நிலம் இருந்தாலும் அது பல்வேறு துண்டுகளாகப்; பிரிந்து இருக்கிறது. இதனால் விவசாயம் கட்டுப்படியாகும் விவசாயமாக இல்லை.

1980 முதல் விவசாய உற்பத்தி வளர்ச்சி யில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறு சிறு விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஓரளவிற்கு நிவாரணமாக இருந்த நூறு நாள் வேலை உறுதித் திட்டமும் பாஜக அரசால் சிறுக சிறுக சீரழிக்கப்பட்டுவிட்டது. நடப்பு நிதி ஆண்டில் வேலை நாட்களின் எண்ணிக்கை மற்றும் வேலையில் பங்கேற்ற குடும்பங்களின் எண்ணிக்கையில் 70 சதவிகித  வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
2011ல் நடத்தப்பட்ட சமூகப் பொருளாதார சாதி கணக்கெடுப்பின்படிää தமிழ்நாட்டில் கிராமப்புறங்களிலுள்ள மொத்த குடும்பங்களில் 18 சதவிகித குடும்பங்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கைக்காக பிரதானமாக விவசாயத்தை நம்பியுள்ளன. 66 சதவிகித கிராமப்புற குடும்பங்கள் உயிர் வாழ கூலி உழைப்பையே நம்பியுள்ளன. பொதுவாக நிலமின்மை அதிகரித்திருக்கும் நேரத்தில்ää மற்றவர்களை விட அதிகமாக தலித்துகள் நிலமற்றவர்களாக இருப்பதாக பொதுவான புள்ளி விவரங்களும் சில கிராமப்புற ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழ்நாட்டில்ää மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் விவசாயத்தின் பங்கு 8 சத விகிதமாக சுருங்கிவிட்டது. (இது இந்தியாவிலேயே இரண்டாவதாக மிகக் குறைந்த மாநில மாகும்). தமிழ்நாட்டில்ää மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்ää விவசாயத்தின் உற்பத்தி மதிப்பு 8 சதவிகிதமாக இருப்பது கிராமப்புற மக்களின்ää குறிப்பாக கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.
தமிழகத்தில் 10 ஹெக்டருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் 0.19 சத கிராமப்புற பணக்கார விவசாயிகள் (இவர்களிடம் உள்ளநிலம் மொத்த விவசாய நிலத்தில் 20 சதமாகும்) நவீன கருவிகளுடன் விவசாயம் செய்தாலும்ää நிலத்திலிருந்து உபரி உற்பத்தி ஓரளவுக்கு மேல் சாத்தியமில்லை என்ற நிலையில்ää தமிழ்நாடு கிராமப்புறங்களில் வேறு வகையான ஆதிக்க சக்திகள் உருவாகியிருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில்ää மணல் மற்றும் க்ரானைட் தோண்டி எடுத்தல்ää கல்வி நிறுவனங்கள்ää பொது வேலைகளுக்கான ஒப்பந்தங்கள்ää அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி லஞ்ச ஊழல்கள் போன்றவற்றின் மூலம் கிராமப்புறங்களிலும்ää சிறு நகரங்களிலும் ஒரு புதியவகை ஆதிக்க வர்க்கம் கடந்த 20 -30 ஆண்டுகளில் உருவாகி இருக்கிறது. இவர்கள் நிலத்தையும் அபகரிக்கிறார்கள். இவர்கள் அரசியலை தங்கள் தொழிலாக்கிக் கொள்ள தங்களிடமுள்ள நிதி ஆதாரங்களை அதற்காகவே செலவிடுகிறார்களே தவிர பொருள்  உற்பத்தி செய்வதில்  முதலீடு செய்வதில்லை. இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாவதில்லை.

தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு மிகக் குறைந்த மூலதனமே ஒதுக்கியதாலும்ää விவசாயத்தில் தொடர்ந்து வருமானமற்ற நிலை ஏற்பட்டதாலும்ää நிலம் விவசாயம் அல்லாத விசயங்களுக்கு பெருமளவில் கைமாற்றப்பட்டிருக்கிறது. 1970-71ல் மொத்தம் பயிர் செய்யப்பட்ட நிலம் 73.8 லட்சம் ஹெக்டரிலிருந்து 2008-09 ஆண்டில் 58.24 ஹெக்டர்களாக குறைந்துவிட்டது. அதே கால கட்டத்தில் விவசாயத்திற்கு அல்லாத பயன்பாட்டுக்கான நிலத்தின் அளவு 11லிருந்து 17 சதமாக அதிகரித்திருந்தது. ரியல் எஸ்டேட் தொழில் பெருமளவில் பல மாவட்டங்களில் விவசாய நிலங்களை வாங்கியது விற்றது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏரி பாசனத்தின்கீழ் 1950-51ல் 545ää400 ஹெக்டர் நிலம்; இருந்தது. 2016-17ல் அது 302ää200 ஹெக்டர்களாக குறைந்துவிட்டது. இது குறித்து முழுமையான புள்ளி விவரங்கள் எதையும் அரசு வெளியிடவில்லை. ஆனால் 2012-13 வேலை செய்வோர் எண்ணிக்கை தொடர்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி தமிழ்நாட்டில் 4 சதம் பேர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். (அகில இந்திய அளவில் இது 2 சதம்தான்). இது ரியல் எஸ்டேட் தொழில் தீவிரமாக நடப்பதை குறிக்கிறது.  கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில்ää கேரளாவில் நிலம் இல்லாததால் பெரும் பரப்புகளை பண்ணை வீடுகள் என்ற வகையில் வாங்கி குவித்திருக்கிறார்கள். இது எல்லா மாவட்டங்களிலும் நடக்கிறது.
கார்ப்பரேட் துறைக்கு வழங்கப்பட்டுள்ள நிலங்கள் ஏராளம். ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு காவிரி டெல்டா நிலங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. (ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மாசு கட்டுப்பாடு வாரிய சான்றிதழோ பொது மக்களிடம் கருத்து கேட்பதோ தேவை இல்லை என்று பாஜக அரசாங்கம் தற்போது அறிவித்து பெருமுதலாளிகளுக்கு நல்ல விளை நிலங்களை தாரை வார்க்க தயாராக இருக்கிறது). இவை அனைத்தும் ஏற்கனவே பெரும் சிக்கலில் உள்ள விவசாயத்தையும் கிராமப்புற ஏழை மக்களையும் மேலும் நெருக்கடியில் தள்ளும்.

சில சமூக ஆய்வாளர்கள் தமிழகத்தின் பல கிராமங்களில் நடத்திய ஆய்வுகளின் தரவுகள் மூலம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை மக்களின் பின்னணியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவதாக விவசாயத்தை நம்பி வாழவே வழி இல்லாமல் தொடர்ந்து செங்கல் சூளைகள்ää கட்டிட வேலைகள்;ää கரும்பு வெட்டää பிற வேலைகள் என பெரும்பாலும் கிராமத்திற்கு வெளியே வேலை செய்யும் புலம் பெயர் கிராமப்புற தொழிலாளர்களை அதிகம் கொண்ட கிராமங்கள்ää குறிப்பாக புஞ்சை கிராமங்கள். இரண்டாவதாக பகுதி விவசாயம் சார்ந்த நல்ல நீர்ப்பாசன வசதி உள்ள (மேற்கு தஞ்சைää திருச்சிää நல்ல ஏறிபாசனம் உள்ள ஊர்கள் -  இவை கூட பகுதி விவசாயம் சார்ந்த கிராமங்கள்தான்ää வறட்சிää நீர்பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் விவசாய வருமானம் நிச்சயமற்றது என்பதாலும்ää தொடர்ந்து விவசாயம் முழுமையாக நடப்பதில்லை). இங்குள்ள கிராமப்புற ஏழைகள் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

மூன்றாவதாக பெரும் நகரங்கள்ää தொழில் நகரங்களை அடுத்து உள்ள கிராமங்கள் (திருவள்ளூர்ää காஞ்சிபுரம்ää கோவைää திருப்பூர்ää விருதுநகர் போன்ற மாவட்டங்கள்). இங்குள்ள ஏழை மக்கள் பெரும்பாலும் அருகிலுள்ள நகர்ப்புறங்களையும்ää தொழில்களையும்ääசேவை தொழில்களையும்ää நம்பியுள்ளனர்.

கிராமப்புற ஏழை மக்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்கும்ää தங்களை மறு உற்பத்தி செய்து கொள்வதற்கும்ää ஒவ்வொரு நாளும் எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கும் பாதுகாப்பற்றää சுரண்டல் மிகுந்த கூலி வேலை வாய்ப்புகளை நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் எந்தவித உத்தரவாதமுமில்லாதää சிறுää குறு விவசாயம்ää பலவிதமான அமைப்புசாரா சிறு வீத தொழில்கள் போன்றவற்றில் தள்ளப்பட் டுள்ளார்கள். தாங்களும் தங்கள் குடும்பமும் உயிர்வாழ வௌ;வேறு விதமான சுய தொழில் மற்றும் கூலி வேலை போன்றவற்றை பல்வேறு விதமான கலவைகளில் செய்கிறார்கள்.

இந்த நிகழ்வுப்போக்கில் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டுமின்றி தொலைதூர இடங்களுக்கும் ஆண்களும் பெண்களும் இடம் பெயர்ந்து வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது.; எங்குமே தொடர்ந்து வேலை வாய்ப்புகளோ கவுரவமான வேலை நிலைமைகளோ இல்லை.
விவசாயம் நலிந்து போய் விவசாயத்தை சார்ந்திருப்பவர்கள் கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி செல்வதை வைத்து தமிழ்நாடு ஒரு விவசாயத்திற்கு பிந்தைய (pழளவ யபசயசயைn) பகுதியாகிவிட்டது என்று சில ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். உண்மை என்னவெனில்ää பெரும்பாலான கிராமப்புற ஏழை மக்கள் கிராமத்திலேயே இருக்கவும் முடியாமல்ää கிராமங்களை விட்டு முழுதும் வெளியேறவும் முடியாத இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எப்போதும் இல்லாத அளவில்ää பாஜக பாசிச அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளால்ää வேலை வாய்ப்புகள் சுருங்கி நிற்பது நாம் அனைவரையும் அறிந்ததே. இந்தச் சூழலில் விவசாயம் சார்ந்த ஏழை மக்கள் முழுமையாக கிராமங்களை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மொத்தத்தில் தமிழகத்தில்ää இன்றைய நிலைமைகளில்ää கிராமப்புற ஏழை மக்கள்ää கிராமப்புற வர்க்க உறவுகள் மற்றும் நகர்ப்புற வர்க்க உறவுகள் ஆகியவற்றால் பின்னி பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்

சமூக நல அரசு என்பதை பொறுத்தவரைää அனைவருக்குமான உணவுப் பொருள் பொது விநியோகத் திட்டம்ää சத்துணவுத் திட்டம்ää மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை இலக்காக வைத்து பல திட்டங்கள் போன்றவை தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைபடுத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள்; போட்டி போட்டுக்கொண்டு பல ஜனரஞ்சக திட்டங்களை அறிவித்து தேர்தல்களை சந்தித்தன.  இவை பொதுவாக ஒரு காலகட்டம் வரை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை ஓரளவு மேலே உயர்த்த உதவியது. சந்தை பொருளாதாரத்தின் தாக்குதலிலிருந்து மக்களை ஓரளவிற்கு காப்பாற்ற உதவியது.

ஆனால் இன்று நாடு சந்திக்கிற கார்ப்பரேட் கொள்ளைää வேலை வாய்ப்பில்லா வளர்ச்சி போன்றவற்றை மக்கள் நல திட்டங்களால் இனிமேலும் ஈடு கட்ட முடியாது. கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் சமூக நலத்திட்டங்கள் நுகர்வு தன்மை கொண்டதாகவே இருந்தனவே ஒழிய அவர்களின் பொருளாதார நிலையை மாற்ற வழி செய்யவில்லை. அது போன்ற சில முன்னேற்றங்கள் இருந்தாலும் விவசாயம் அல்லாத துறைகளுக்கு நகர்ந்தாலும்ää அவர்களது பொருளாதார முன்னேற்ற த்தில் நகர்வுகள் இல்லை. கிராமப்புற உழைக்கும் ஏழை மக்களின் இன்றைய சிக்கலான பிரச்சனைகளை இதனால் தீர்க்க முடியாது என்பது நிரூபணமாகிவிட்டது. மக்கள் நல திட்டங்களின் ஆவி அடங்கிவிட்டது.

சமூகநல அரசு திட்டங்கள்ää சந்தையால் வழி நடத்தப்படும் பொருளாதாரத்தில் மக்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரி கட்ட அவர்களை பாதுகாக்க தேவை என்பது உண்மைதான். ஆனால் வேலை வாய்ப்பற்ற வளர்ச்சிää படித்தவர்களுக்கு வேலை இல்லைää  திரிசங்கு சொர்க்கமாக இருக்கிற கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை போன்ற சூழலில்ää விவசாயத்தில் தொடர்ந்து நீடித்து வரும் சிக்கலை தீர்க்க முடியாதää அனைத்து கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கையை கவுரவமானதாக மாற்ற இயலாத அரசுää சமூக நல திட்டங்களை எவ்வளவு நாட்களுக்கு பறை சாற்றிக்கொள்ள முடியும்? விவசாய நெருக்கடியை அதனால் ஒருபோதும் தீர்க்க முடியாது.

நிலத்தில் உழைப்பவர் அனைவருக்கும் இடுபொருள்ää மானியம்ää மலிவான நிபந்தனையற்ற கடன் போன்ற ஆதரவுகளுடன்ää நல்ல வருமானம் ஈட்டும் வகையில் நிலம் அளிப்பதுää விவசாயம் தொடர்பான மற்ற உற்பத்தி - பால்ää ஆடு கோழி வளர்ப்புää மீன் பிடித்தல்ää இன்ன பிற - நடவடிக்கைகளுக்கான உதவிகளுடன் கூடிய சூழலை உருவாக்குவதன் மூலம்தான் இன்றைய விவசாய சிக்க லுக்கு தீர்வு காண முடியும். மக்களின் வருமானமும்ää நுகர்தலும் அதிகரிக்கும்போதுää வேலை இல்லா வளர்ச்சி என்பது காணாமல் போகும். கிராமப்புறத் தொழிலாளர்களின் விவசாய நெருக்கடியை தீர்க்க இது ஒன்றே வழி.

Search