மக்கள் சார்பு அரசியலை முன்நிறுத்திய
ஜெரிமி கோர்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி
பிரிட்டனில் ஏன் வெற்றி பெற முடியவில்லை?
எஸ்.குமாரசாமி
பிரிட்டனில் டிசம்பர் 12, 2019 அன்று தேர்தல் நடந்தது. பிரிட்டன் மக்கள் தொகை 6.6 கோடி. 4.75 கோடி பேர் தகுதி வாய்ந்த வாக்காளர்கள்.
அவர்களில் 3.2 கோடி பேர், அதாவது 67.3% பேர் வாக்களித்தனர். பழமைவாத கட்சியின் போரிஸ் ஜான்சன் 43.6% வாக்குகள், ஒரு கோடியே நாற்பது லட்சம் வாக்குகள் பெற்றார். 365 இடங்களில் வெற்றி பெற்றார். கோர்பினின் தொழிலாளர் கட்சி 33.2% வாக்குகளை ஒரு கோடிக்கும் சற்று கூடு தலான வாக்குகளை பெற்றது. ஸ்காட்லாண்ட் தேசியத்தை, அய்ரிஷ் தேசியத்தை முன்நிறுத்திய கட்சிகள் கணிசமான வாக்குகள் பெற்றன.
கடைசியாக நடந்த தேர்தலில், 30.4% வாக்குகள் என்பதிலிருந்து 2017ல் 40% என கூடுதல் வாக்குகள் பெற்ற தொழிலாளர் கட்சி, பழமைவாத கட்சியை விட 2.6% வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றது. 2019ல் கோர்பின் கிட்டதட்ட 7% குறைவாக பெற்று, 203 இடங்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.
கோர்பின் தோற்றது ஏன் வியப்பு தருகிறது?
கோர்பின், பலருக்காக சிலருக்காக அல்ல என தேர்தல் அறிக்கை தந்தார்.
கோர்பின் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்றார்.
கோர்பின் 15 லட்சம் மூத்த குடிமக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றார்.
கோர்பின் வாழ்நாள் முழுவதும் கட்டணமில்லாத கல்வி தரப்படும் என்றார்.
கோர்பின் ஒரு மணி நேரத்திற்கு பத்து பவுண்ட் சம்பளம் நோக்கிச் செல்வோம் என்றார்.
கோர்பின் கட்டணமில்லாத இழை பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என்றார்.
கோர்பின் கட்டணமில்லாத மருத்துவம், பல் மருத்துவம் வழங்கப்படும் என்றார்.
கோர்பின் வரம்பு இல்லாத வேலை நேரத்திற்கு முடிவு கட்டப்படும் என்றார்.
கோர்பின் செல்வ வருமான ஏற்றதாழ்வுகள் களையப்படும் என்றார்.
கோர்பின் பிரிட்டனில் செல்வமும் அதிகாரமும் பகிர்ந்து கொள்ளப்படும் என்றார்.
கோர்பின் தொழிலாளர்களின் உரிமை இது வரை இல்லாத அளவுக்கு விரிவாகும் என்றார்.
கோர்பின் சுற்றுச்சூழல் அவசரநிலை உணர்ந்து செயல்படுவோம் என்றார்.
கோர்பின் போர்கள் வேண்டாம், சமாதானம் வேணடும் என்றார்.
கோர்பின் ரயில் மெயில் தண்ணீர் எரிசக்தி நாட்டுடைமையாகும் என்றார்.
கோர்பின் செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட சிலர் பிரிட்டனின் பொருளாதாரத்தை சூறையாடுவது நிறுத்தப்படும் என்றார்.
கணக்கில் சரியான விடை தந்தால் மட்டும் போதாது. வழியும் போட்டுத் காட்டப்பட வேணடும். கோர்பின் தான் சொன்ன மக்கள் சார்பு மாற்றங்களைச் சாதிக்க, நலத் திட்டங்களை நிறைவேற்ற, 107 பில்லியன் டாலர் அதாவது ரூ.7,89,700 கோடி வரி விதித்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்றார்.
மக்களுக்கானவரை
மக்கள் தோற்கடித்துவிட்டனரா?
தேர்தல் முடிவுளை மட்டும் கொண்டு பதில் சொன்னால் மக்களுக்கானவரை மக்கள் தோற்கடித்து விட்டனர் என்று சொல்ல முடியும். விஷயம் அவ்வளவு எளிமையானதல்ல. மக்கள் சார்பு வளர்ச்சியை முன்வைத்த கோர்பினை பணபலமும் அதிகாரமும் கொண்ட கூட்டம் சுலபமாக வெற்றி பெற விட்டுவிடுமா? ஏகாதிபத்தியப் போர்களை, ஏகாதிபத்திய தலையீடுகளை, மக்கள் விரோத சிக்கன நடவடிக்கை களை 1983லிருந்து எதிர்த்து வந்த கோர்பினை, உளவாளி, பயங்கரவாதி, யூத வெறுப்பாளர், வீட்டிற்கு, நாட்டிற்கு, பொருளாதாரத்திற்கு ஆபத்து உருவாக்குபவர் என பிரிட்டிஷ் ஊடகங்கள் சித்தரித்தன. கோர்பின் மக்களுக்காக சொன்னவற்றை மறைத்தன. அவர் சொன்னதை திரித்து மாற்றி முன்வைத்தன. அவர் சொல்லாதவற்றை அவர் சென்னதாக குறிப்பிட்டன. அப்படியானால், மக்கள் விரோதிகளால் கோர்பின் தோற்கடிக்கப்பட்டார் என்று முடித்து விடலாமா?
போரிஸ் ஜான்சனின் தேசியவாத அரசியல் முன் கோர்பினின் மக்கள் சார்பு அரசியல் எடுபடவில்லை. கேட்கவே கசக்கிறது. ஆனால் அதுதான் உண்மை.
பிரிட்டன் அய்ரோப்பாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற பிரெக்சிட் விசயத்தில் கோர்பின் தெளிவான முடிவு எடுக்கவில்லை என கணிசமான மக்கள் பிரிவினர் கருதினர். பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற வேண்டுமா நீடிக்க வேண்டுமா என ஆறு மாதங்களில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கோர்பின் சொன்னதை கணிசமானவர்கள் ஏற்கவில்லை. அய்ரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னவர்களையும் வெளியேற வேண்டும் என்று சொன்னவர்களையும் அவர் திருப்திபடுத்தவில்லை. அவரிடம் தெளிவான நிலை இல்லை என்ற பிரச்சாரம் எடுபட்டது.
போரிஸ் ஜான்சன் தெளிவாக பளிச்சென்று Get Brexit Done, அய்ரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியே வரும் வேலையை உடனே முடிப்போம் என்றார். அய்ரோப்பிய ஒன்றியம் என்பது அய்ரோப்பிய மேட்டுக்குடியினர் என்றும் அவர்கள் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரத்தைப் பறித்துவிட்டார்கள் என்றும் பறிக்கப்பட்ட அதிகாரத்தை தாம் பிரிட்டனுக்காக திரும்பப் பறித்தெடுப்பேன், அதற்காக அய்ரோப்பிய ஒன்றியத்தைவிட்டு உடனே வெளியேறுவேன் என்றும் அவர் சொன்னது எடுபட்டது. உலகின் மிகப்பெரிய காலனி நாடான பிரிட்டன், மகத்தான பிரிட்டன் (Great Britain) என்றே அழைக்கப்பட்டது. அந்த மகத்துவம் பற்றிய நினைவேக்கத்தின் அடிப்படையிலும், கிழக்கு அய்ரோப்பாவிலிருந்து குடியேறியவர்களுக்கு எதிரான வெறுப்பரசியல் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்ட தேசியம், போதையை தலைக்கேற வைத்து மதி மயங்க வைக்கும் ஆற்றல் பெற்றிருந்தது. பண்பாடு இல்லாத, போலித்தனம் நிறைந்த, நேர்மையற்ற, தயங்காமல் பொய் பேசும் போரிஸ் ஜான்சனின் தேசியம், நேர்மையான, வரலாற்றுரீதியாக நியாயமானவை, சரியானவை பக்கம் எப்போதும் எதிர்நீச்சல் போட்ட கோர்பினின் மக்கள் சார்பு அரசியலை பின்னுக்குத் தள்ளிவிட்டது.
மேற்கு இந்திய தீவுகளில் இருந்து வந்த கருப்பின மக்கள், இந்தியா, பாகிஸ்தானில் இருந்து வந்த ஆசிய வம்சாவழி மக்கள் என்ற இரண்டு அலைகள் தாண்டி, சோஷலிச முகாமின் சரிவுக்கு பிறகு உடைந்து நொறுங்கிய கிழக்கு அய்ரோப்பிய நாடுகளின் மக்கள் 2000ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பிரிட்டனுக்குள் வந்தனர். அவர்களால்தான் எல்லாம் கெட்டது என்று வலதுசாரிகள் சொன்னார்கள். வெற்றி பெற்றார்கள்.
உலகின் அய்ந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிற பிரிட்டனை, போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது கூட்டாளிகள், அய்க்கிய அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்ற வாய்ப்பு கிடைத்தால் அதற்கும் தயங்கமாட்டார்கள்.
கோர்பினிடம் திட்டம் இருந்தது. பிரச்சாரம் செய்ய ஆள் பலம் இருந்தது. 33% ஒன்றும் குறைவான வாக்குகள் அல்ல. ஆனால் அங்கே தொழிலாளர் போராட்டங்களின், இயக்கங்களின் அறுதியிடல், அரசியல் மீது செல்வாக்கு செலுத்தி, சமூக மாற்றம் நோக்கிய பயணத்திற்கு உந்துவிசை தர போதுமானதாக இல்லை.
பிரெக்ஸிட் போன்ற தேசிய அடையாள கேள்விகளை நேருக்கு நேர் சந்திக்காமல், மக்கள் சார்பு அரசியல் வெல்ல முடியாது.