ஜனவரி 8 வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஜம்போ பேக் லிமிடெட் தொழிலாளர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜம்போ பேக் லிமிடெட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஜனவரி 8 வேலை நிறுத்தத்துக்கான அறிவிப்பை 20 நாட்களுக்கு முன்பே நிர்வாகத்திற்கு முன்வைத்தார்கள்.
வேலை நிறுத்த கோரிக்கைகளுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று நிர்வாகம் சொன்னது. தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தைகளில் பொருளாதார நெருக்கடி, மந்தம் என்று பேசும் நிர்வாகத்திடம் இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க, வாங்கும் சக்தியை அதிகரிக்க 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் ஜனவரி 8 அன்று வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக விளக்கப்பட்டது.
வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க தொழிலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்தனர். இந்த தொழிற்சாலையில் இயங்கிவரும் சிஅய்டியு தோழர்களையும் இணைத்துக் கொண்டனர். நிரந்தர பணித் தன்மையுள்ள பணியில் நீண்ட வருடங்களாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றும் சுமார் 600 தொழிலாளர்களையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தனர். ஜனவரி 8 அன்று காலை 5 மணிக்கே ஆலை வாயில் முன்பு 150 தொழிலாளர்களுக்கு மேல் திரண்டனர். 8 மணிக்கு முன்னதாகவே ஒப்பந்த தொழிலாளர்கள் வாகனங்களில் (நிரந்தர தொழிலாளிக்கு வேன் கிடையாது) ஒப்பந்தக்காரர்கள் மூலம், அழைத்து வரப்பட்டனர். ஆலை வாயிலை நிரந்தரத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
நிர்வாக அதிகாரிகள், பொது மேலாளர், மனித வள மேலாளர், இயக்குநர் என அனைவரும் வேலை நிறுத்தத்தை முறியடிக்க முயற்சித்தனர். காவல்துறை வரவழைக்கப்பட்டது. தொழிலாளர்கள் முழக்கம் எழுப்பினார்கள். காவல்துறை கெடுபிடிகள் செய்தது. சங்க நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ரமேஷ், வெங்கடேசன், மஞ்சுளா, இன்னபிற நிர்வாகிகளுடன் சிஅய்டியு சங்கத் தலைவர்கள் தோழர்கள் செல்வம், பழனிவேல் ஆகியோர் காவல்துறையுடன் வாக்குவாதம் செய்தார்கள். காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம், தொழிலாளர்களுக்கு எதிராக, வேலை நிறுத்தத்தை உடைக்கும் விதத்தில் மிரட்டினார்.
நிர்வாக அதிகாரிகள் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம், இன்று வேலைக்கு வராவிட்டால் 8 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று மிரட்டினார்கள். காவல் உதவி ஆய்வாளர், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பார்த்து பாக்ட்ரிக்கு வேலைக்குப் போங்கள், இல்லாவிட்டால் விளைவு வேறுமாதிரி இருக்கும், ரோட்டில் நிற்கக்கூடாது என்று அதிகார தோரணையில் மீண்டும் மிரட்டினார்.
சங்கக் கிளைச் செயலாளர் தோழர் ரமேஷ், காவல் உதவி ஆய்வாளரிடம், நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளியிடம் பேசியதைப் போல் சங்கத்தின் சார்பில் தான் பேச வேண்டும் என்று சொல்லி ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பேசினார். ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சனைகளில் சங்கம் எழுப்பிய கோரிக்கைக் கடிதங்களை முழுமையாக படித்துக்காட்டி, அவர்களை சட்டவிரோதமாக 12 மணிநேர வேலை செய்ய வைத்த நிர்வாகத்தின் செயல் நியாயமா, சங்கம் எடுத்த முயற்சிகள் நியாயமா என்று கேள்வி எழுப்பினார். கேள்வியின் நியாயத்தை உணர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றார்கள்.
இந்த நேரத்தில் புதிய தலைமுறை, பாலிமர், மாலைமலர் செய்தி போன்ற தொலைகாட்சி அலைவரிசைகள் குவிந்தன. தொழிலாளர்கள் கைதாவதற்கும் தயாராக இருந்தார்கள். வேறு வழியில்லாத நிலையில் நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை, தாங்கள் அழைத்து வந்த வாகனங்களில் ஏற்றி திருப்பி அனுப்பினர். அவர்களில் ஒரு பகுதியை மாதவரத்திலும், ஒரு பகுதியை புதுவயல் பகுதியிலும் காத்திருக்க வைத்தார்கள். போராட்டத்தை முன்னெடுத்த தொழிலாளர்கள் கலைந்து சென்று விடுவார்கள், பின்னர் ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கி வேலை நிறுத்தத்தை உடைத்துவிடலாம் என நிர்வாகம் திட்டமிட்டது. 25 ஆண்டுகாலமாக நிர்வாகத்தின் போக்குகளை நன்கறிந்த தொழிலாளர்கள் மாலை 4.30 மணி வரையில் ஆலை வாயிலை விட்டு அகலவில்லை. சாப்பிடாமல் அல்லது ஒரு சிலர் குழுவாகச் சென்று சாப்பிடுவது என்றபடி தொழிலாளர்கள் போராட்டத்தை கொண்டாடினார்கள். கொண்டாட்டமாக போராடினார்கள். ஒன்றுபட்ட போராட்டம் வெல்லும் என்பதை நிரூபித்தார்கள்.
ஜனவரி 8 2020 அன்று நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஜம்போ பேக் தொழிலாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் முன்னுதாரணமானவை. வேலை நிறுத்தப் போராட்டம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அடையாளம் காட்டினார்கள். இந்த நேரத்தில் நிர்வாகத்திற்கு நன்றி சொல்ல வேண்டாமா? மாவோ சொல்வார் நாம் எந்த ஆயுதத்தை, போராட்டத்தை எடுக்க வேண்டுமென்று நமது எதிரியே தீர்மானிக்கிறார். நாமல்ல. அந்த வகையில் வேலை நிறுத்தத்தை முறியடிக்க தனது அதிகார பலத்தை, அரசு அதிகாரத்தை, நிர்வாகம் கையில் எடுத்தபோது, தொழிலாளர்கள் ஒற்றுமை என்ற ஆயுதத்தை, போராட்டத்தை கையில் எடுத்தார்கள்.
க.ராமன்
மாநிலச் செயலாளர்
இடது தொழிற்சங்க மய்யம்