COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 8, 2020



கடவுள்.... சாதி.... நிலம்....


உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்படும் பஞ்சமி, கோவில் நில உரிமைகள்


ஆர்.வித்யாசாகர்

காலமெல்லாம் நிலத்தில் பாடுபடும் கிராமப்புற உழைக்கும் மக்களுக்குää அவர்களுக்கு கவுரவத்தைää சமூக அந்தஸ்தை அளிக்கிற  நிலம் இல்லை.
தொடர்ந்து மற்றவர்களின் நிலத்தில் உழைத்துக் கொடுக்க வேண்டிய நிலையில்தான் பெரும்பாலான கிராமப்புற தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

2011ல் நடத்தப்பட்ட சமூக பொருளாதார சாதிய கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் உள்ள 56% குடும்பங்களுக்கு நிலமில்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை 51%. தமிழ்நாட்டில் 66% கிராமப்புற மக்கள் வெறும் உடல் உழைப்பை மட்டுமே நம்பியுள்ளவர்கள். சமூக பொருளாதார சாதிய கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 20% குடும்பங்கள் மட்டுமே நிலஉடமையாளர்களாக விவசாயத்தைச் சார்ந்துள்ளவர்கள். 73% கிராமப்புற மக்கள் நிலமற்றவர்கள்.  66% உழைக்கும் மக்களுக்கு நிலமும் இல்லை. வேறு நிரந்தர வேலையும் இல்லை. இவர்கள் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். 66ஆவது சுற்று தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தலித் மக்கள் மத்தியில் வெறும் 17% பேருக்கு மட்டுமே நிலம் இருந்தது. மூன்றில் இரண்டு பங்கு தலித் மக்கள் உடலுழைப்பை மட்டுமே நம்பியுள்ளனர். தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 20%க்கும் மேலுள்ள தலித் மக்களிடம் வெறும் 7.8% நிலம் மட்டுமே இருக்கிறது.

2011ல் இந்திய அரசு அமைத்தää திரு.பி.எஸ்.கிருஷ் ணன் தலைமையிலான குழு பூதான் மற்ற நிலங்களையும் சேர்த்துக் கணக்கிட்டு அனைத்து தலித் குடும்பங்களுக்கு மட்டுமல்லää மற்ற சாதிகளைச் சேர்ந்த நிலமற்ற கூலி விவசாயக் குடும்பங்களுக்கும் விநியோகிக்;ப் போதுமான நிலம் அரசிடம் இருக்கிறது என்று அறிக்கை அளித்திருக்கிறது. இந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நிலம் இருக்கிறது. ஆனால் அந்த நிலத்தை நிலமற்ற மக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமில்லை.

இன்று விவசாயத்தால் பயனில்லைää மக்கள் விவசாயத்தை விட்டு மற்ற வேலைகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில்ää நில விநியோகம் பொருளாதார வளர்ச்சி அளிக்குமா என்ற ஒரு வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

பெருமுதலாளிகளுக்கு ஆதரவான அரசின் தவறான கொள்கைகளால் விவசாயம்  தொடர்ந்து சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.  இது அவசர அடிப்படையில் சரி செய்யப்பட வேண்டும். இன்றைய வளர்ச்சிப் பாதைää தொழிலாளர்களை ஒட்ட சுரண்டி ஒரு பெரிய வேலையில்லா பட்டாளத்தை உருவாக்கும்ää வேலை  வாய்ப்பற்ற வளர்ச்சிப் பாதை. இதை மாற்றுவதற்குக் கூட நிலமற்றவர்களிடம் நிலம் போய்ச் சேர்வது அவசியம். ஆகவே ஒரு பெரும் மக்கள் தொகையினருக்கு நிலம் சொந்தமானால் வாழ்வாதாரம் பெருமளவு பெருகும்;. வாங்கும் சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். அனைத்து மக்களுக்கும் நீடித்த நல்ல வளர்ச்சி உருவாகும்.

சுதந்திர போராட்டத்தின்போது உழுபவர்க்கே  நிலம் என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டது.  அதன் பிறகு அரை குறையாக நிலச்சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அரைகுறையாக அமல்படுத்தப்பட்டன. பெரும்பாலான உழைக்கும் கிராமப்புற மக்களுக்கு நில உரிமை எட்டாக் கனியாகவே இருக்கிறது. தலித் மக்களுடைய நிலை மிக மோசமாக இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் குஜராத் ஊனா தலித் எழுச்சியின்போதுää “மாட்டின் வாலை நீங்கள் வைத்துக் கொள்ளுங்களää; எங்களுக்கு நிலத்தைக் கொடுங்கள்” என்று ஜிக்னேஷ்  மேவானி எழுப்பிய முழக்கம் பரவலாக வரவேற்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோயில் நிலம்ää பஞ்சமி நிலத்திற்கான போராட்டம் அவ்வப்பொழுது எழுவது மக்களுக்கு நிலத்தின் மீது உள்ள தாகத்தையே குறிக்கிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு நிலமற்ற குடும்பத்திற்கும் 2 ஏக்கர் நிலம் தருவதாகச் சொன்ன திமுக அரசுää மனமிருக்கிறது நிலமில்லை என்றது. 3 சென்ட் வீட்டடி மனை தருவதாகச் சொன்ன அதிமுக அரசு அதை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் திருபெரும்புதூர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்; பெரும்கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் நீண்ட கால குத்தகைக்கு விடப்படுகிறது. எட்டு வழிச்சாலை மற்றும் பல்வேறு  வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரிப்பதும் புதிய திட்டங்கள் தீட்டுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தற்சமயம் கூட சென்னை - கன்னியாகுமரி தொழில் காரிடோர் என்ற பெயரில் 6 பகுதிகளில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு பகுதிக்கு மட்டுமே 20ää000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்குää சு10ரிய  மின் சக்தி உற்பத்தி என்ற பெயரில் பல் லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என்ற பெயரில் இருக்கக்கூடிய விளை நிலங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் பெருமுதலாளிகள் பெரும்பரப்பிலான நிலங்களை வங்கிக்கடன் உதவியுடன் ஆக்கிரமிக்கிறார்கள். ஆனால் நிலத்தில் உழைக்கும் மக்களுக்கு நிலம் தர அரசு தயாராக இல்லை. தலித் மக்களுக்காக காலனி ஆதிக்கத்தில் தரப்பட்ட பஞ்சமி நிலங்களும் இன்று வரை அவர்களுக்கு போய்ச்சேர அரசு தீவிர முயற்சி ஏதும் எடுக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தங்களிடம் வைத்துள்ள கோயில் மற்றும் மடங்களின் நிலங்களை உழைக்கும் மக்களுக்கு கொடுக்க ஆயிரம் தடைகள்.

இந்தப் பின்னணியிலேயே தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள்ää மடங்கள்ää அறக்கட்டளைகளிடையே குவிந்திருக்கும் நிலம் பற்றியும் பஞ்சமி நிலப்பிரச்சினை பற்றியும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

நிலச்சீர்திருத்தச் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட கோவில்களும் அங்கு குவிந்துள்ள நிலங்களும்

பண்டைய காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஏராளமான நிலங்களை வழங்கினர். இது வரி இல்லாத இனாம் நிலம். பிரிட்டி~; காலத்தில் அவை பெரும்பாலும் ரயத்வாரி நிலங்களாக மாற்றப்பட்டு வரி வசு10ல் செய்யப்பட்டது. ஆனாலும் அந்த நிலங்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் பட்டா செய்து தரப்பட்டு அவை அவற்றின் சொந்த நிலங்களாக மாறின. இப்படித்தான் கடவுள்களும் மடங்களும் தமிழகத்தில் பெரும் நிலப்பிரபுக்களாக மாறினர். பெரும்பாலான நிலங்கள; கோயில் தர்ம கர்த்தாக்கள் என்ற முறையில் தமிழகத்தில் பெரும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்தன. ஆனால் ஆதி காலந்தொட்டே இந்த நிலங்களில் பாடுபட்டு உழைத்தது அடிமைகளாக நடத்தப்பட்ட பண்ணை ஆட்களும்ää குத்தகை விவசாயிகளும்தான். 1961ல் காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து கோயில்களும் மடங்களும் அறக்கட்டளைகளும் விலக்கு பெற்றன. ஆனால் 1969ல் கொண்டு வரப்பட்ட குத்தகைதாரர் பதிவு சட்டம் மேற்கண்ட நிலங் களுக்கு விதிவிலக்களிக்கவில்லை. கோயில் மட நிலங்களில் விவசாயம் செய்த குத்தகைதாரர்களும் பதிவு செய்ய வகை செய்யப்பட்டது. இடதுசாரி விவசாய இயக்கங்கள் வலு வாக இருந்த சில மாவட்டங்களில் குத்தகைதாரர் பதிவு நடந்தது. குத்தகைதாரர்கள் நினைத்தாற்போல் வெளியேற்றப்படுவதில் இருந்து பாதுகாப்பது கிடைத்தது. பல இடங்களில் மக்கள் வாழும் வீட்டடி நிலம் கூட கோயில்களுக்கு சொந்தமானதாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. 1973ல் தமிழக அரசு கொண்டு வந்த “தமிழ்நாடு குத்தகை விவசாயிகள் குத்தகை நிலத்தை விலைக்கு வாங்கும் உரிமை” சட்டம் 12 வருட குத்தகை மதிப்பை 12 தவணைகளாகக் கொடுத்தோ அல்லது 9 மாத குத்தகை மதிப்பை ஒரே தவணையாகக் கொடுத்தோ குத்தகை நிலத்தை அவர்கள் பெயருக்கே கிரயம் செய்யும் உரிமையை வழங்கியது. கோயில்ää மடää அறக்கட்டளை நிலங்களையும் அவ்வாறு வாங்க முடியும். ஆனால் அரசியல்ரீதியான பல எதிர்ப்பின் காரணமாக இந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

பதிவு செய்யப்பட்ட குத்தகை விவசாயிகளுக்கு அந்த நிலத்தில் அவர்கள் வாரிசுகள் பயிர் செய்ய உரிமை இருந்தது. ஆனாலும் விவசாயம் பொய்க்கும் காலங்களிலும் குத்தகை பாக்கி தர முடியாததாலும் பல குத்தகைதாரர் மீது கோயில் நிர்வாகங்கள் வழக்கு தொடுத்தன. அரசாங்கத்தின் தலையீட்டால் இந்த நிலுவைகள் அவ்வப்போது ரத்து செய்யப்பட்டாலும் 1992ல் லால் பகதூர் சாஸ்திரி ஐஏஎஸ் அகாடமி நடத்திய ஆய்வில் 85மூ குத்தகை விவசாயிகள் பரம்பரை பரம்பரையாக அவர்கள் உழைக்கும் நிலம் அவர்களுக்கே தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த ஆய்வு நடத்தப்பட்டபோது தமிழக கோயில்களுக்கு மட்டும் 425000 ஏக்கர் நிலம் இருந்தது. 106807 குத்தகைதாரர்கள் இந்த நிலங்களை பயிர் செய்து கொண்டிருந்தனர். இது தவிர இந்து மடங்களிடம் சுமார் 50000 ஏக்கர் நிலம் இருந்தது. இதுவும் குத்தகை விவசாயிகளால்தான் பயிர் செய்யப்பட்டது.

காலங்காலமாக நிலத்தில் உழைத்தும் அவர்களுக்கு நில உரிமை கனவாகவே இருக்கிறது. 2007ல் திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில் குத்தகை விவசாயிகள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் 65மூ குத்தகை விவசாயிகளுக்கு குத்தகை பதிவில்லை என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான ஏழை குத்தகை விவசாயிகள் கடனில் தத்தளிக்கின்றனர்.

2019ல் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் கொண்டு கோயில் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் ஏழை மக்களுக்குää நிலம் கையகப்படுத்தும் சட்டங்களின் அடிப்படையில் கோயில்களுக்கு நட்ட ஈடு வழங்கிää அந்த நிலங்கள் ஆக்கிமித்திருந்தோருக்கே பட்டா அளிக்கப்படும் என்று அதிமுக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதற்கு காங்கிரஸ் பாஜக மற்றும் பல மதம் சார்ந்த நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆணைக்குத் தடை விதித்தது. இந்த ஆணை நில ஆக்கிரமிப்பு செய்வோர்க்கு ஊக்கமளிக்கும் என்று சொல்லப்பட்டது. காலங்காலமாக கோயில் நிலங்களை பயிர் செய்யும் ஏழை விவசாயிகளும் (பெரும்பாலும் தலித்துகள்)ää கோயில் நிலங்களில் குடியிருப்போரும் ஆக்கிரமிப்பாளர்களா? நகர்ப்புறங்களில் கோயில் நிலங்களை தற்சமயம் அதற்குரிய மதிப்பின் காரணமாக அரசியல்வாதிகளும் ஆதிக்க சக்திகளும் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். ஏழை விவசாயிகளும் குடியிருப்போரும் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல. அந்த நிலம் அவர்களின் வியர்வையும் ரத்தமும் சிந்தி உற்பத்தி செய்த நிலம். சில கிராமங்களில் கடன் மூலம் சிறு குத்தகைதரர்களிடமிருந்து நிலத்தை அபகரித்து வைத்திருக்கும் ஆதிக்க சக்திகளும் உண்டு. அது போன்ற ஆதிக்க சக்திகளையும் உழைக்கும் மக்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது.

கோயில் மட நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலே கிராமப்புறங்களில் நிலமற்ற தன்மையை வெகுவாகக் குறைக்க முடியும். அதிமுக அரசின் உண்மை சாயம் கடந்த ஆண்டு நவம்பர் 22 அன்று வெளுத்துவிட்டது. தமிழக அரசின் வருவாய்த்துறை துணை செயலர் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில்ää தமிழகத்திலுள்ள கோயில்களின் மொத்த நிலமாகிய 4.78 லட்சம் ஏக்கர் நிலத்தில் நாங்கள் விநியோகிக்க விரும்புவது வெறும் 600 ஏக்கர்தான்ää இதுவும் குடியிருக்கும் ஏழை மக்களுக்காகத்தான் என்றார். ஆக காலங்காலமாக பயிர் செய்யும் நிலமற்ற விவசாயிகளை பற்றி அரசுக்கு கவலை இல்லை.

மறுக்கப்படும் பஞ்சமி நலங்கள்

பூமணியின் வெக்கை என்ற நாவலை தழுவி வெளிவந்த அசுரன் திரைப்படம் பஞ்சமி நிலப்பிரச்சனையை மீண்டும் பொது வெளியில் கொண்டு வந்திருக்கிறது.

1844ல் சட்டப்படி அடிமை முறை ஒழிக்கப்பட்டபிறகு பல ஆண்டுகள் கடந்தும் 1892ல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ட்ரமன்ஹியர் எழுதிய “செங்கல்பட்டு பறையர்களின் நிலை” பற்றிய அறிக்கை  தலித்துகளுக்கு நில உரிமை மறுக்கப்பட்டு அவர்கள் சமூகரீதியாகவும்ää பொருளாதாரரீதியாகவும் அடிமைகளை விட கேவலமாக நடத்தப்படுவது பற்றிய விவரங்களை வெளிக்கொணர்ந்;தது. 1918ல் Board of Revenue proceedings no.6 dated 18th March 1918) பிரிட்டிஷ்  அரசாங்கம் அரசு நிலங்களை தலித் மக்களுக்கு வழங்க உத்தரவிட்டது. இதுவே பஞ்சமி நிலங்கள் என்று குறிப்பிடப்பட்டது. 1926 வரை 180000 ஏக்கர் நிலம் அவ்வாறு வழங்கப்பட்டது. 10.12.1931 தேதிய தொழிலாளர் துறை அரசாணை எண் 3218 எல் படி 1927-28 வரை தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலம் 237000 ஏக்கர். 1930-31ல் இது 343000 ஏக்கர்களாக உயர்ந்தது. இதில்; பெரும்பாலான நிலங்கள் வட ஆற்காடு தென் ஆற்காடுää தஞ்சாவூர்ää திருச்சிராப்பள்ளி சென்னை ஆகிய மாவட்டங்களில் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலனி ஆட்சியிலும் அதன் பிறகும் இந்த நிலங்களை தலித் அல்லாதவர்களுக்கு கை மாற்றவோ விற்கவோ கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு நிலத்தை மாற்றலாம். ஆனால் தலித்துக்களுக்கு மட்டுமே மாற்ற முடியும்ää தலித் அல்லாதவர்களுக்கு கை மாற்றியிருந்தால் வாங்கியவர்களுக்கு நில உரிமை இல்லை என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இன்று இந்த நிலத்தில் பெரும் பகுதி மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. மேல்சாதி ஆதிக்கத்தால் நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டிருக்கின்றன. ஆந்திர அரசு நில மாற்ற தடுப்பு சட்டம் 1977 கர்நாடக மாநில ஷெட்யூல் வகுப்பு மலைவாழ் மக்கள் உரிமை மாற்று தடுப்பு சட்டம் 1978 போன்றவை பல ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டுவிட்டன. தமிழகத்தில் இது போன்ற சட்டங்களை இது வரை அரசு சிந்திக்கக்கூட இல்லை.

1994ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு இயக்கம் துடிப்புமிக்க இயக்கமாக உருவெடுத்தது. தமிழ்நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில்  ஜான் தாமஸ்  ஏழுமலை என்ற இரு தலித் இளைஞர்கள் துப்பாக்கிச் சு10ட்டிற்கு பலியானார்கள். தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் WP 798-799/1992ல் நீதிபதி திரு.மணிகுமார் 10.07.2012 அன்று வழங்கிய தீர்ப்பு (திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து ஆலை கட்டிய மனுதாரரின் அனுபவத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு) 05.04.2010 சென்னை உயர்நீதிமன்றத்தில் WP. 1446 முதல் 1448/2008 கோவை  விஜிபி பிரேம் நகர் வழக்கில்ää நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வழங்கிய தீர்ப்பு (பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து வீட்டு மனை உருவாக்கிய வழக்கு) ஆகியவை ட்ரமன்ஹியர் அறிக்கையையும் பஞ்சமி நிலத்துடன் தொடர்புடைய சமூக நீதியின் பின்புலத்தையும் நிபந்தனைகளையும் மேற்கோள் காட்டி பஞ்சமி நிலத்தை தலித்துகளிடமிருந்து பிரிக்க முடியாது என்று சொல்கின்றன.

உயர்நீதிமன்ற தீர்ப்புகள் செயல்படுத்தப்படுகின்றனவாää மாவட்டங்களில் பஞ்சமி நிலம் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பன பற்றி ஆய்வு செய்ய ஒரு ;குழுவை அமைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றில்ää நீதிபதிகள் சஞ்சய் கி~ன்ää சிவஞானம் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வில்ää 12.08.2015ல் தரப்பட்ட தீர்ப்பின்படிää கூடுதல் தலைமை செயலாளர்ää நில மற்றும் நிர்வாக ஆணையர் தலைமையில்ää வருவாய்த்துறை செயலர்ää ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஆகியோர் அடங்கிய பஞ்சமி நில மீட்பு குழு அமைக்கப்பட்டது.  இதுவரை அதன் நடவடிக்கைகள் என்ன என்பது அந்தக் குழுவில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். ஏற்கனவே 2006ல் திமுக அரசு பஞ்சமி நில ஆணையம் ஒன்று அமைத்தது. ஆனால் இது வி~யத்தில் எந்த அரசுக்கும் அக்கறை இல்லை.

நிலம் எங்களது உரிமை. நிலத்திற்கான போராட்டம் தொடரும்.

Search