இந்து ராஷ்டிரா வேண்டாம்! கார்ப்பரேட் ராஜ்ஜியம் வேண்டாம்!
ஜனநாயகம் வேண்டும்! சட்டத்தின் ஆட்சி வேண்டும்!
ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்!
எஸ்.குமாரசாமி
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு இரண்டு பெரிய உரிமைகளை வழங்கியுள்ளது. குடிமக்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு வாக்கு என்றது. சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் என்றது.
2019ல் வெற்றி பெற்றவர்கள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை, சட்டத்தின் பாதுகாப்பு அனை வருக்கும் சமமாகக் கிடைக்காது, அம்பானி அதானி கார்ப்பரேட் ராஜ்ஜியமே நடைபெறும், இந்து ராஷ்டிரா அமைந்தே தீரும் என மூர்க்கமாக செயல்படுகிறார்கள்.
உன்னைப் பழிவாங்குவேன், நீ கதறி அழுவாய் என உத்தரபிரதேச முதல்வர் யோகி இஸ்லாமியரை மிரட்டுகிறார். மீரட் காவல் கண்காணிப்பாளர் பாகிஸ்தானுக்கு போ என வெறுப்பை உமிழ்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் எல்லா இந்தியர்களும் இந்துக்களே எனச் சொல்வதன் மூலம், இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியர்கள் இல்லை என்கிறார்.
மோடியும் அமித் ஷாவும் எதிர்பார்த்திராத விதத்தில் இந்தியா எழுந்துள்ளது. இசுலாமிய ரும் இந்துக்களும் சேர்ந்து, ஒரு குறியீடாக இந்தியாவின் தேசிய கொடியை இணைந்து பிடித்தார்கள். இந்தியாவின் ஆன்மா, இந்தியாவின் மனசாட்சி விழித்துக் கொண்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் வேண்டும், சட்டத்தின் ஆட்சி வேண்டும், குடியுரிமை திருத்த சட்டம் (இஅஅ) வேண்டாம், தேசிய குடிமக்கள் பதிவேடு (சதஇ) வேண்டாம், தேசிய மக்கள் தொகை பதிவேடு (சடத) வேண்டாம் என நாடு ஒருமித்து முழங்குகிறது.
ஜார்கண்ட் மக்கள், மோடி ஷா யோகி வெறுப்பரசியலை நிராகரித்துள்ளனர். இந்தியா எங்கும் உள்ள உழைக்கும் மக்கள் ஜனவரி 8 2020 அன்று நடத்தவுள்ள பொது வேலை நிறுத்தமும் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைக் காக்க உதவட்டும்.
வெளிநாட்டவர் பற்றிய கூக்குரல்
இசுலாமியர், மியான்மரில் இருந்து நுழைந் துவிட்டனர், வங்க தேசத்திலிருந்து ஊடுருவி விட்டனர், அவர்களால் பேராபத்து என்று கூக்குரல் எழுப்பப்படுகிறது. குடியேறுகிற இசுலாமியர்களுக்கு எதிரான இந்துத்துவாவின் குரல், உலகளாவிய வலதுசாரி பிற்போக்காளர்களின் குரல்களுடன் கலக்கிறது.
நாம் ஓர் உண்மையை மனதில் நிறுத்துவது நல்லது. உலகிலேயே வெளிநாட்டில் உழைத்து பிழைப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். சர்வதேச குடியேறுதல் அறிக்கைப்படி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் 1.75 கோடி பேர். அவர்கள் மூலம் இநதியாவுக்கு வரும் பணம் 78.6 பில்லியன் டாலர். ரூ.5,58,060 கோடி. மெக்சிகர்கள் 1.18 கோடி பேர். அவர்கள் தம் நாட்டுக்கு 35.7 பில்லியன் டாலர் அனுப்புகின்றனர். சீனர்கள் 1 கோடியே ஏழு லட்சம் பேர். அவர்கள் 67.4 பில்லியன் டாலர் அனுப்புகின்றனர்.
உலகமயக் காலங்களில் மூலதனமும் கூலி உழைப்பும் நாடு விட்டு நாடு செல்கின்றது. கூலியுழைப்புக்குச் சொந்தக்காரர்கள் மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் குடி பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
உலகெங்கும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான ஆபத்தான நிலைமைகளில் குடிபெயர்பவர்கள்தான், கடைநிலை குறைகூலி, கடும் உழைப்பு வேலை பார்க்கிறார்கள்.
அறையில் அமர்ந்துள்ள யானை
இந்திய பொருளாதார நெருக்கடியை மறைக்க முடியாது. மறுக்க முடியாது. அது அறையில் அமர்ந்துள்ள யானை போல் மிகவும் பெரியது. 2010 தொடங்கி 2019 முடிந்த பத்தாண்டுகளில் இந்திய மக்களின் சேமிப்பு முந்தைய பத்தாண்டை விடக் குறைந்துவிட்டது. இந்த பத்தாண்டுகளில் 6 ஆண்டுகள் மோடிதான் ஆட்சி செய்துள்ளார். பொய்களின் உற்பத்தியும் மறுஉற்பத்தியும் மட்டுமே மோடி ஆட்சியில் பிரம்மாண்டமாய் வளர்ந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் நகர்கிறது பாய்ந்து முன்னேறுகிறது என்பதை காட்ட முன்நிறுத்தப்பட்ட துறை ஆட்டோமோபைல் துறையாகும். அந்த துறை தள்ளாடித் தடுமாறுகிறது. பொருளாதாரத்தின் துடிப்பை, நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியை, வீடு மனை வணிகத் தொழில் காட்டும் என்று சொல்லப்படுகிறது. புதுடில்லியை ஒட்டிய தலைநகர் மணடலத்தில் இந்தத் தொழிலில் 23 பில்லியன் டாலர் பணம் குவிக்கப்பட்டது. இதில் 4.3 பில்லியன் டாலர் மூழ்கிவிடும் ஆபத்து உள்ளது. வர்த்தக தலைநகரமான மும்பை மண்டலத்தில் 35 பில்லியன் டாலர் குவிக்கப்பட்டுள்ளது. அதில் 8.7 பில்லியன் டாலர் மூழ்கிவிடும் ஆபத்துள்ளது. இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் 13 பில்லியன் டாலர், அதாவது, ரூ.92,300 கோடி மூழ்கியுள்ளது. வீடுமனை வணிகம், எரிசக்தி, குறு சிறு நடுத்தரத் துறையில் இருந்து ரூ.3.38 லட்சம் கோடி வாராக்கடனாக மாறவுள்ளது பற்றி நிதியமைச்சரும் ரிசர்வ் வங்கியும் பேச உள்ளனர்.
கார்ப்பரேட்டுகள் என்ன சொல்கிறார்கள்?
மாருதி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பார்கவா: ஆழமாகவும் நீண்ட கால அடிப்படையிலும் சிந்திக்க, இந்த பொருளாதார சரிவு நமக்கு வாய்ப்பு தந்துள்ளது. உற்பத்தித் துறையில் வளர்ச்சியை உருவாக்க தனியார் துறை வேகமாக வளர வேண்டும் என அனைவரும் ஒப்புக்கொள்கிறோமா இல்லையா? இது நடந்தால் மற்றவை எல்லாம் தொடர்ந்து நடக்கும். உற்பத்தி துறை விரைந்து வளர தனியார் துறைக்கு ஆக கூடுதல் உந்துதல் தரப்பட வேண்டும். தற்போது இருக்கிற உற்பத்தி ஆற்றல் போதாது என்றால்தானே தனியார் துறை கூடுதல் முதலீடு செய்யும்? வளர்ச்சி விகிதம் அதிகரிக்காவிட்டால் கூடுதல் முதலீடு சாத்தியம் இல்லை.
அவர் சொல்ல வருவது என்னவென்றால், தனியார் துறைக்கு வாரித் தர வேண்டும். எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் ஆதாயம்.
பொருளாதாரம் வளரும் போது மட்டுமே தேவை அதிகரிக்கும்போது மட்டுமே தனியார் துறை முதலீடு போடும், தனியார் துறை முதலீடு போட்டு பொருளாதாரம் வளரும், தேவை உயரும் என்ற கற்பனைகள், வெறும் கட்டுக்கதைகளே என, மாருதியின் ஆர்.சி.பார் கவா போட்டு உடைக்கிறார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII ) தலைவரான விக்ரம் கிர்லோஸ்கர், தேவை அதிகரிக்கும்போது மட்டுமே கார்ப்பரேட் கம்பனிகள் முதலீடு செய்வார்கள் என்றும் இந்த கட்டத்தில் அரசாங்கம் உள்கட்டுமான திட்டங்களிலும் கிராமப்புற திட்டங்களிலும் செலவழித்து வேலையை உருவாக்க வேண்டும் என்றும் சொல்கிறார். கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ், நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது பார்த்த மாத்திரத்தில் தெரியும் என்கிறார். தற்போதைய வளர்ச்சி விகிதம் போதாது என்றால் நிதி பற்றாக்குறை வந்தாலும் சரி என முடிவு செய்து பொருளாதாரத் திற்கு புத்துயிர் தரவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் அரசாங்கம் திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்கிறார்.
ஆக நுகர்வை அதிகமாக்க, தேவையை அதிகரிக்க, வேறு வேறு பிரிவினர் கையில் காசு இருக்க, அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்போது தனியாரிடம் இருந்து முதலீடுகள் எதிர்பார்க்காதே என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்கின்றன.
நிதி அமைச்சர் நிர்மலா என்ன செல்கிறார்?
ஆண்டின் இறுதி நாளான 31.12.2019 அன்று நிர்மலா ஊடகங்களை சந்தித்தார். 2025 வரை ரூ.100 லட்சம் கோடி முதலீடு போட்டு 2025ல் இந்திய பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதாரமாக மாற்றுவோம் என, மோடி ஆகஸ்ட் 15 அன்று வழக்கம்போல் வாய்ச் சவடால் அடித்தார். டிசம்பரில் நிர்மலா ரூ.108 லட்சம் கோடி உள்கட்டுமானத்தில் முதலீடு என்கிறார்.
100% முதலீடும் மத்திய அரசு போடாது மத்திய அரசு 39%, மாநில அரசு 39%, தனியார் துறை 22% போட வேண்டும் என்று நிர்மலா சொல்கிறார். வருவாய் பற்றாகுறையும் கூடுதல் செலவுகளும் உள்ள மாநில அரசுகள் ரூ.42.12 லட்சம் கோடி முதலீடு செய்வது சாத்தியமே இல்லை. தனியார் துறை ரூ.23.76 லட்சம் கோடி போடுவதற்கு வாய்ப்பே இல்லை.
வீட்டுக்கு ரூ.15 லட்சம் வாக்குறுதி பற்றி கேள்விகள் எழுந்தபோது, அது வெறும் தேர்தல் ஜ÷ம்லா என்று அமித் ஷா சொன்னார். அதாவது தேர்தல் நேரத்து காற்றில் பறக்கும் வாக்குறுதி என்றார். மோடி கும்பல் பொய்யைக் கூட மிகப் பிரமாண்டமான பொய்யாகவே சொல்லும். அது போன்ற ஒரு பொய்தான் ரூ.108 லட்சம் கோடி முதலீடு.
நிர்மலாவின் கணக்குப்படி வெறும் 1% விவசாயத்திற்கும் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கும் போடப்படும். 8% நீர் பாசனத்திற்கும் 8% கிராமப்புற வளர்ச்சிக்கும் போடப்படும். கல்வி சுகாதாரம் உள்ளிட்ட சமூக வளர்ச்சிக்கு 3% போடப்படும். 19% சாலைகளுக்கு, 13% ரயில்வேக்கு, 19% எரிசக்தி துறைக்கு, நகர்ப்புற உள்கட்டுமான வளர்ச்சிக்கு 14%, தொலை தொடர்பு துறைக்கு 3% ஒதுக்கப்படும் என்றார். கிராமப்புற மற்றும் சமூக உள்கட்டுமான துறைகளுக்கு 20% தாண்டாது.
இதிலும், மத்திய அரசு முதலீட்டில் 42% திட்டங்கள் அமலாக்க நிலையில், 19% வளர்ச்சி நிலையில் உள்ளதாகவும் 32% கருத்தாக்க நிலையில் உள்ளதாகவும் நிர்மலாவே சொல்கிறார். மீதம் 7% என்ன வகை என்று யாரும் சொல்லவில்லை.
மோடி ஆட்சிக்கு, சங்பரிவார் கும்பலுக்கு, நிலவுகிற பொருளாதார நெருக்கடியை தீர்க்க வழி தெரியவில்லை. அவர்கள் தீர்க்க வாய்ப்பும் இல்லை.
தொழிலாளர் வர்க்கம் முன் உள்ள சவால்
முதலாளித்துவ நெருக்கடியை தீர்க்க வக்கில்லாத மோடி அரசு, மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்க வக்கில்லாத மோடி அரசு, இசுலாமிய வெறுப்பு அரசியலை, இந்து பெருமித அரசியலை ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது. அம்பானி, அதானி, கார்ப்பரேட் ராஜ்ஜியமும் இந்து ராஷ்டிராவும் அழுத்தும் சுமைகளாக மாறியுள்ளன.
44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பு விதிகளாகச் சுருக்கும், போராட்ட உரிமைகளை பறிக்கும், சமூகப் பாதுகாப்பை மறுக்கும், மோடி அரசின் முயற்சிகளை தொழிலாளர் வர்க்கம் முறியடிக்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டும், 500 பயணிகள் ரயில்களை, 225 ரயில் நிலையங்களை, 30% விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளை, முறியடித்தாக வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினர்க்கு 10% இடஒதுக்கீடு வழங்கி யபோது ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை, மாத வருமானம் ரூ.66,000 வரை இருந்தால் நலிந்தவர்கள் என்று சொன்ன அரசு, தேசிய தரை மட்ட கூலி மாதம் ரூ.4,628 (ஆண்டுக்கு ரூ.6,0000 தாண்டாது) என அறிவித்துள்ள அநீதிக்கு எதிராக போராட வேண்டும்.
மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச சம்பளம், 8 மணி நேர வேலை, வாரத்தில் 5 நாட்கள் வேலை, குடியிருப்பு வசதி, பல லட்சக்கணக்கான நிரந்தரமான, கவுரவமான, பாதுகாப்பான வேலைகள், சம வேலைக்கு சம ஊதியம், பொருத்தமான ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு, வேலை நிறுத்த உரிமை ஆகிய கோரிக்கைகளுக்காக, ஜனவரி 8 அன்றும் அதற்கு பிறகும் நாடெங்கிலும் போராட்ட இயக்கங்களை தொடர்ந்து கட்டமைப்பதை, தொழிலாளர் வர்க்கம் அழுத்தமாக அறுதியிட்டு உறுதி செய்ய வேண்டும்
எல்லாவற்றிக்கும் மேலாக, இந்த நாட்டின் மக்களின் எதிர்காலத்தை, கார்ப்பரேட்டுகளும் அவர்களது இந்துத்துவ எடுபிடிகளும் எடுபிடிகளின் மாநில மட்ட எடுபிடிகளும் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.
தொழிலாளர் வர்க்கத்தை தேசத்தின் தலைமை வர்க்கமாக்கும் முயற்சியில் ஜனவரி 8 பொது வேலை நிறுத்தமும் அடுத்தடுத்து வரும் தொழிலாளர் வர்க்க நடவடிக்கைகளும் வலு சேர்க்க வேண்டும்.