தலையங்கம்
கம்யூனிஸ்ட்
2019 அக்டோபரில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி, ரஷ்யப் புரட்சி நாளை ஒட்டி நவம்பரில்
சிறப்பு வெளியீடும் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாளை ஒட்டி டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி வெளியீடும் கொண்டு வந்தது. 2020 ஜனவரி முதல் கட்சியின் மாத இதழாக ‘கம்யூனிஸ்ட்’ பத்திரிகையை வெளியிடுகிறது. இதற்கிடையில் இடது தொழிற்சங்க மய்யத்துடன் இணைந்து ஜனவரி 8 பொது வேலை நிறுத்தத்தை ஒட்டி ஒரு பிரசுரமும் மதர்சன் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்ட சிறப்பு வெளியீடும் நடூரில் நடந்த தீண்டாமை படுகொலையை ஒட்டி ஒரு வெளியீடும் கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்சி துவங்கிய சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்கிறது. மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரமே சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் உள்ளாட்சித் தேர்தல் காலத்தில் மட்டும் கடைசி கிராமத்தின் கடைசி தெரு வரை வழக்கம்போல் பணப்புழக்கம் இருந்தது. பதவிகளுக்கு ஏலம் நடத்தும் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகம் கொடி கட்டிப் பறந்தது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் இரண்டு மனைவிகளை போட்டி போட வைத்து வெற்றி பெற வைத்த மகான்கள் இருப்பது தெரிய வந்தது.
எந்த காரணத்துக்காக, எந்த அச்சத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் அடிமை ஊழல் பழனிச்சாமி அரசு காலம் தாழ்த்தி வந்ததோ, அது நடந்தது. மேற்கு மாவட்டங்கள் கைகொடுத்தாலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அஇஅதிமுக கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தமிழ்நாட்டுக்குள் என்னதான் நடந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் என்றால் கூட பாஜகவை உள்ளே நுழைய விடுவதில்லை என்பதில் தமிழக மக்கள் தெளிவு காட்டுகிறார்கள்.
இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் ஒப்பீட்டுரீதியில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ள இந்தத் தேர்தலை 2021 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னோட்டம் என்று விவரிக்கப் பார்க்கிறார்கள். அப்படியானால், அஇஅதிமுகவுக்கு மேற்கு மாவட்டங்கள் இனியும் கைகொடுக்கும் என்றாகிறது. அஇஅதிமுக இன்று வெறும் அஇஅதிமுக அல்ல. அது மிகப்பெரிய தாமரையை தாங்கியிருக்கும் இரட்டை இலை. தாமரையின் பாரத்தை மக்கள் தலை மீது ஏற்றிவிட்டு தப்பிக்கப் பார்க்கும் அஇஅதிமுகவை, மாநில உரிமைகளை, மக்களின் உரிமைகளை பதவிக்காக, கொள்ளைக்காக அடகு வைத்துவிட்ட அதிமுகவை தர்ம யுத்தம் நடத்தும் அரங்கில் நிரந்தரமாக நிறுத்த வேண்டிய கடமை மக்கள் முன் உள்ளது.