நாங்கள் இந்த நாட்டு குடிமக்கள்தானா
என்று கேட்கவோ முடிவு செய்யவோ நீ யார்?
குடியுரிமை திருத்தச் சட்டம், டிசம்பர் 9 அன்று மக்களவையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 12 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுவிட்டது. நாடு பற்றி எரிகிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 31.12.2014 வரை இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர், ஜெயின், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள் அய்ந்தாண்டு காலம் இந்தியாவில் வசித்திருந்தால் அவர்களுக்கு சட்டம் குடியுரிமை வழங்குகிறது.
மோடி அரசாங்கம், நாளும் தீவிரமடையும் பொருளாதார சரிவு பற்றி நாட்டு மக்கள் எழுப் புகிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது.
வெங்காயத்தின் சாதி பற்றி கவலைப்படாமல் வெங்காயத்தின் விலை பற்றி, தடுமாறும் பொருளாதாரம் பற்றி, பறிபோகும் வேலைகள் பற்றி, அடிமேல் அடி வாங்கும் விவசாயம் பற்றி, குறைந்துவரும் வருமானம் பற்றி, கட்டற்ற கார்ப்பரேட் சூறையாடல் பற்றி, பெரும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள அரசியல் சாசனம், சட்டத்தின் ஆட்சி பற்றி கவலைப்படுகிற, கேள்வி எழுப்புகிற நாட்டு மக்களுக்கு மோடி அரசு சொல்லியுள்ள பதில் குடியுரிமை திருத்தச் சட்டம்.
முத்தலாக் ரத்து, பிரிவு 370 ரத்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஆகியவற்றைய டுத்து இந்து ராஷ்டிரா திட்டத்தை நோக்கிய அடுத்த நடவடிக்கையான குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல்சாசனத்தின் நெஞ்சுக் குழியில் ஈட்டி பாய்ச்சியிருக்கிறது. மாணவர்கள் துவக்கிய எதிர்ப்பு நாடெங்கும் பரவியுள்ளது.
சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் அழுத்தி வைக்கப்பட்டிருந்த சீற்றமும் வெளிப்பட்டது. மோடி அரசு நாசமாக்கியுள்ள பொருளாதாரம் பற்றியும் போராட்டக்காரர்கள் கேள்விகள் எழுப்பினார்கள். ராமச்சந்திர குஹா பெங்களூருவில் கைது செய்யப்பட்டபோது, அங்கிருந்த பெண் ஒருவர் கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார். மக்கள் விரோத கொள்கைகள் பற்றிய கேள்விகளை எழுப்பக் கூடாது என்பதற்காகத்தான் இந்தச் சட்டம் என்றார். நீங்கள் எங்களை பிளவுபடுத்தப் பார்க்கிறீர்கள், இல்லை, உங்களால் முடியாது, நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்றார்.
ஜாமியா மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கிவிட்டால் அடுத்தடுத்த போராட்டங்களை எழ விடாமல் செய்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கலாம். சக மாணவர் ஒருவரை காவல்துறையுடன் கலந்திருந்த எபிவிபி குண்டர் தாக்குதலில் இருந்து பாதுகாக்க ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரித்த அந்த பெண்ணின் பிம்பமே அடுத்தடுத்த போராட்ட நெருப்பை பற்ற வைத்தது.
அரசியல்சாசனத்துக்கு விரோதமான சட்டம்
இந்திய மக்களாகிய நாம் நமக்கு அளித்துக் கொண்ட அரசியல்சாசனம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த சமத்துவ கோட்பாட்டில் இருந்து இசுலாமியரை விலக்கி வைக்கிறது.
சட்டம் சொல்கிற மூன்று நாடுகளும் இசுலாமிய நாடுகள், அங்கு இசுலாமியர்களுக்கு இனரீதியான துன்புறுத்தல் இல்லை, அதனால் அவர்களைச் சேர்க்கவில்லை என்று பொய்யர் கூட்டம் சொல்கிறது. அவர்கள் வாதப்படியே இனரீதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு குடியுரிமை என்றால், பக்கத்தில் சீனத்தில் இனரீதியாக ஒடுக்கப்படும் உய்கூர் இசுலாமியர்க்கு ஏன் சட்டத்தில் இடம் இல்லை? இனரீதியான துன்புறுத்தலைச் சந்திக்கும் இந்துக்களுக்கு குடி உரிமை உண்டென்றால், இலங்கை தமிழர்கள் ஏன் அதில் சேர்க்கப்படவில்லை? அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பச் செல்வதுதான் அவர்கள் உரிமையை நிலை நாட்டுவதாகும் என்றால் அங்கு அவர்கள் திரும்பிச் சென்று பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்ய என்ன நடவடிக்கை இன்று வரை ஆறு ஆண்டுகளில் எடுத்தார்கள்?
சர்வதேச நீதிமன்றத்தில் டிசம்பர் 11, 2019 அன்று, ஆங் சூ கி பதில் சொல்ல நேர்ந்த போது, ரோஹிங்கியாக்கள் ராணுவத்துக்கும் புத்த மதத்தினருக்கும் இடையில் சிக்கிக் கொண்டதாகச் சொன்னார். சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்குப் புறம்பாக ராணுவம் தனது ஆற்றலை பயன்படுத்தியது என்றும் போராளிகளையும் சாமான்ய குடிமக்களையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்றும் ஒப்புக் கொண்டார். இந்தியாவில் டிசம்பர் 12 அன்று நிறைவேற்றப்படுகிற சட்டம் அந்த ரோஹிங்கியாக்களை ஏன் விலக்கி வைக்கிறது?
சட்டம் சொல்கிற மூன்று நாடுகளிலும் கூட ஷியா பிரிவினர், அகமதியாக்கள், பலுச்சிக்கள் இனரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். இனரீதியான துன்புறுத்தல்தான் அளவுகோல் என்றால், இவர்கள் ஏன் சட்டத்துக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ளார்கள்? தஸ்லிமா நஸ்ரீனுக்கு குடியுரிமை தருவீர்களா?
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த மூன்று நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலைச் சந்திக்க முடியாமல் வெளியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது, யாருடைய குடியுரிமையும் இதனால் பாதிக்கப்படாது என்கிறார்கள். டிசம்பர் 31, 2014க்கு முன்பு வந்தவர்களுக்கு குடியுரிமை என்று சட்டம் சொல்கிறது. அவர்கள் எந்த ஆவணமும் காட்ட வேண்டாம் என்றும் விண்ணப்பம் தந்தால் போதும் என்றும் அமித் ஷா சொல்கிறார். இந்த வரையறைக்குள் வரும் இசுலாமியர் என்ன ஆவார்கள்? நாடு கடத்தப்படுவார்களா?
குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை தருகிறோம், பறிக்கவில்லை என்று பாஜக தலைவர் நட்டா சொல்கிறார். நல்லது. முதலில் ரோஹிங்கியாக்களுக்கு கொடுங்கள். அதில் ஏன் இசுலாமியரை விலக்கி வைக்கிறீர்கள்? இந்தியா சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டு களாக இல்லாத குடியுரிமை பிரச்சனையை நீங்கள் என்ன பார்த்துவிட்டீர்கள்? நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு இப்படி ஒரு கொந்தளிப்பை நாடு இது வரை இந்தப் பிரச்சனையில் சந்திக்கவில்லையே. இந்திய குடியுரிமை வேண்டும் என விரும்புவோர் விண்ணப்பித்து பெறப் போகிறார்கள். இதில், இசுலாமியரை ஒதுக்கி வைத்து ஒரு சட்டம் இந்து ராஷ்டிராவை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அது இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இந்திய நாடு ஒருநாளும் இஸ்ரேலாக மாற முடியாது.
நாட்டுப் பிரிவினையை முழுமையாக்கும் பணியின் ஒரு பகுதிதான் இது என்று சட்டம் மசோதா நிலையில் இருந்தபோது அமித் ஷா நாடாளுமன்றத்தில் சொன்னார். இதற்கு என்ன பொருள்? இந்தியாவில் இருக்கிற 130 கோடி பேரும் இந்துக்கள் என்று மோகன் பகவத் சொல்வதுடன் சேர்த்துப் பார்த்தால் இந்தியாவில் தங்கிவிட்ட இசுலாமியர்களை விரட்டிவிடுவோம் என்றுதானே சொல்கிறார்? அது முடியாது ராசா... பாகிஸ்தானும் பங்களாதேஷும் இசுலாமிய நாடுகள். இந்தியா மதச்சார்பற்ற குடியரசு. நாங்கள் மதச்சார்பற்ற நாட்டில் இருக்கிறோம் என்று அன்று சொல்லிவிட்ட இசுலாமியர்கள் உட்பட இங்கு எல்லா மதத்தினரும் இருப்பார்கள். தமிழ்நாட்டு போராட்டங்களில் ஒரு முழக்கம் கேட்டது: இந்தியா எங்கள் தாய்நாடு, பாசிசமே வெளியேறு!
குடியுரிமை திருத்தச் சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு என்ற திரிசூலாயுதம்
லட்சக்கணக்கானவர்கள், கோடிக்கணக்கானவர்கள் சட்டத்தால் பயனடைவார்கள் என்று மாநிலங்களவை விவாதத்தில் அமித் ஷா சொன்னார். 25,447 இந்துக்கள், 5,807 சீக்கியர்கள், 55 கிறித்துவர்கள், புத்தமதத்தினர் 2 பேர், பார்சி இனத்தவர் 2 பேர் என 31,313 பேர் மொத்தத்தில் குடியுரிமை பெறுவார்கள் என்று 2016ல் நுண்ணறிவு பிரிவு நாடாளுமன்றக் குழுவுக்கு தந்துள்ள அறிக்கையில் சொல்லப்படுகிறது. (
https://www.firstpost.com/india/how-many-immigrants-will-benefit-from-citizenship-act-25447-hindus-5807-sikhs-55-christians-two-buddhists-and-two-parsis-says-intelligence-bureau-7784581.html). இந்த 30,000 பேருக்கு குடியுரிமை வழங்க இசுலாமியரை விலக்கி வைத்து ஒரு சட்டம் ஏன் கொண்டு வர வேண்டும்? இசுலாமியரை விலக்கி வைப்பதுதான் நோக்கமே தவிர குடியுரிமை தருவது அமித் ஷாவின் நோக்கமல்ல.
தேசிய குடிமக்கள் பதிவேடும் தேசிய மக்கள் தொகை பதிவேடும் சேர்த்துப் பார்த்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கொடூரம் தெளிவாகத் தெரிகிறது. இந்த மூன்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மூன்றும் வேறு வேறு என்று அமித் ஷா சொன்னார். அமித் ஷா இதற்கு முன்பு பல்வேறு தருணங்களில், நாடாளுமன்றத்துக்குள், நாடாளுமன்றத்துக்கு வெளியில் குடியுரிமை திருத்தச் சட்டம் வரும், பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு வரும் என்று சொன்னதும், தேசிய குடிமக்கள் பதிவேடு பணியை நாடெங்கும் நடத்தி முடித்துவிட்டுத்தான் உங்களிடம் 2024ல் வாக்கு கேட்டு வருவோம் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா சொன்னதும் ஊடுருபவர்களை தடுப்பது என்ற தலைப்பில் 2019 தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடத்தப்படும் என்று சொன்னதும் இணையமெங்கும் காணக் கிடைக்கிறது. ராமனுக்கு கோயில் கட்டுவதாகச் சொன்னார்கள். 370 நீக்கப்படும் என்றார்கள். இரண்டும் நடந்துவிட்டது. இப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு பணி நடக்காது என்று எப்படி மோடி சொல்கிறார்?
ஜனவரி 3 அன்று பாபுலால் கோச் என்பவர் இறந்துவிட்டார். கோச் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் பங்களாதேஷில் இருந்து (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) அசாமுக்கு 1964ல் வந்தவர். அசாமில் நடந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டு சரிபார்ப்பின் போது அரசு ஏற்றுக்கொள்ளும்படி தர அவரிடம் ஆவணம் ஏதுமில்லை. சந்தேகத்துக்குரிய வாக்காளர் என்று அவர் அடையாளப்படுத்தப்பட்டார். அவரை கோல்பராவில் உள்ள தடுப்பு காவல் முகாமுக்கு அனுப்பிவிட்டார்கள். அவரது மகன் பெயர் பதிவேட்டில் இடம் பெற்றுவிட்டது. அவரது மகன் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்ட கடன் கூட வாங்கியுள்ளார். அசாமில் உள்ள தடுப்பு காவல் முகாமில் 29ஆவது நபராக பாபுலால் கோச் இறந்த தற்கு சில நாட்கள் முன்புதான், டிசம்பர் 22 அன்று, இந்தியாவில் தடுப்பு காவல் முகாம்கள் கட்டுவது பற்றி எங்கள் அரசு 2014ல் இருந்து விவாதிக்கவே இல்லை என்று பொய்யர் மோடி..... மன்னிக்கவும்... பிரதமர் மோடி சொன்னார்.
தடுப்பு காவல் முகாம்கள் உயிரிழப்புகளுடன், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற பதத்தை பயன்படுத்துவதைக் கூட தவிர்த்து ஊடுருவுபவர்கள் என்று மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லும் அமித் ஷா, அப்படி இருப்பவர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம் என்று சொல்வதைச் சேர்த்துப் பார்த்தால், காத்திருக்கும் கொடூரம் கண்ணில் தெரிகிறது.
அசாமில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப் பட்டபோதே முதலில் 40 லட்சம், பிறகு 20 லட்சம் பேர் நாடற்றவர்களாகிவிட்டார்கள். (இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள், அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டு விடுவார்கள், பின்னர் அதனால் விளையும் பிரச்சனைகள் தனி கதை). ஒரு சிறிய மாநிலத்தில் 20 லட்சம் பேர் என்றால், நாடெங்கும் இது அமல்படுத்தப்பட்டால் நாட்டை பெருங்குழப்பமும் கேடும் சூழும்.
குடியுரிமை திருத்தச் சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும் வேண்டாம் என்று மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தபோது, தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளுக்காக டிசம்பர் 24 அன்று ரூ.3941.35 கோடி ஒதுக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இசுலாமியர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ராஜீவ் தவான், தி வயர் இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து இந்த மூன்று பூதங்களின் தோற்றம் துவக்கம் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும்.
குடியுரிமைச் சட்டம், 1955ன்படி, ஜனவரி 26, 1950ல் இருந்து 01.07.1987க்கு முன் பிறந்தவர்களுக்கு, 01.07.1987 முதல் 2003 திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த 07.01.2004 வரை பிறந்தவர்களுக்கு அவர்களது பெற்றோர் யாராவது ஒருவர் இந்திய குடியுரிமை பெற்றவரானால், அதற்குப் பிறந்தவர்களுக்கு அவர்களது பெற்றோர் இரண்டு பேரும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்லது பெற்றோரில் ஒருவர் சட்ட விரோதமாக குடியேறியவராக இல்லாமல் இருந்தால் அவர் குடியுரிமை பெற்ற இந்தியராவார்.
இவை தவிர இந்திய வம்சாவழியினராக இருந்தால், இந்திய குடியுரிமை உள்ளவரை திருமணம் செய்து கொண்டால் இந்தியராவது என இன்னும் சில வரையறைகள் உள்ளன.
2003 திருத்தத்தில் சட்டவிரோதமாக குடி யேறியவர் என்ற கருத்து சேர்க்கப்படுகிறது. 2003 திருத்தச் சட்டத்துக்குப் பிறகு டிசம்பர் 10, 2003 அன்று அறிவிக்கப்பட்ட விதிகள் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என்று சொல்கிறது. மொத்த மக்கள் தொகைக்கும் அடையாள அட்டை தரப்படும் என்கிறது. இந்த அடையாள அட்டை தருவதற்காக தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்படுகிறது. இந்த இரண்டு பதிவேடுகளும் தேசிய பதிவாளர் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இதன் விதி 4.4 சந்தேகத்துக்குரிய தகவல்கள் பற்றி குறிப்பிடுகிறது. அப்படி எதுவும் இருந்தால் அவர்களுக்கு தகவல் தந்து பிறகு அவர் கள் முறையிட்டு பிறகு அதில் முடிவு வந்து அவரது குடியுரிமை தீர்மானிக்கப்படுகிறது. இது விதிகளின்படியான உள்ளூர் பதிவாளர் அதிகாரத்துக்கு உட்பட்டது. மேல்முறையீடு சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அதிகாரத்துக்கு உட்பட்டது.
ஆக, தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்படும்போது, சந்தேகத்துக்குரிய தகவல்கள் ஒருவர் தந்ததாக இருந்தால், அந்த விவரம் அந்த பதிவேட்டில் இடம் பெறும். அசாமில் நடந்ததுபோல் நாடெங்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால், ஏற்கனவே இருக்கிற தேசிய மக்கள் தொகை பதிவேட்டு விவரங்கள் அரசு எதிர்பார்ப்பது போல் இல்லை என்றால், குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பும். பிறகு அவர்கள் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். இவர்கள் விசயத்தில் குடியுரிமை திருத்தச் சட்டமும் சேர்ந்து கொண்டால், ஒரேயடியாக அவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டு, இன்றைய ரோஹிங்கியாக்கள் போல், இலங்கை தமிழர்கள் போல் நாடற்றவர்கள் ஆவார்கள்.
பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், பெற்றோர் பிறந்த இடம், அதற்கான ஆதாரம் ஆகிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. இந்த விவரங்கள் பெரும்பாலான இந்திய குடிமக்களிடம் இருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த விவரங்களைத் தருவதில் சிரமம் இருந்தால், குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த இயற்கை பேரிடர், போர் ஆகிய நிகழ்வுகள் அடிப்படையிலோ, அக்கம்பக்கத்தில் அவரது வயதினர் இருந்தால் அந்த விவரங்கள் அடிப்படையிலோ, இது போன்ற விவரங்களும் கிடைக்கவில்லை என்றால், விவரங்களை சேகரிப்பவரின் மதிப்பீட்டிலோ விவரங்கள் எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அயற்சி தரும் இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி விசாரித்து விசாரித்து விவரங்களை பெறுவது சாத்தியமா என்ற கேள்வியும் உள்ளது. தவறுதலாக விவரங்கள் எழுதப்பட்டு விட்டால் என்ன ஆகும் என்பதும் கவலை தரும் கேள்வியே.
ஆக, குடியுரிமை திருத்தச் சட்டம், அதன் பிறகு தேசிய மக்கள் தொகை பதிவேடு, அதன் பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கம் என்ற சங் பரிவார் திட்டம் குடியுரிமை தொடர் பானது அல்ல. இந்து ராஷ்ட்ரம் உருவாக்குவது தொடர்பானது. இசுலாமியரை, தலித்துகளை, பெண்களை துன்புறுத்துவது தொடர்பானது.
நாட்டு மக்கள் மீது மோடி அரசு நடத்துகிற துல்லிய தாக்குதல்
இன்றைய நிலைமைகளில் பொய்களைச் சொல்லிச் சொல்லி முன்னேறிச் செல்பவர்கள் பொய்கள்தான் உண்மை என்று நம்மையும் சொல்ல வைப்பார்கள். அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது. காவல்துறை, ராணுவம் எல்லாம் இருக்கிறது. ராணுவத்தை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டும் என்று சொல்கிற ஒருவரை முப்படை தளபதியாகவும் நியமனம் செய்தாகிவிட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தில் ராணுவ விவகாரங்கள் துறை ஒன்று உருவாக்கப்பட்டு பிபின் ராவத் அதன் தலைவராகவும் ஆகி விட்டார். இனி வேட்டை துவங்க வேண்டும்.
ஹிட்லருக்குப் பிறகு வதை முகாம்கள் யாரும் அமைக்கவில்லை. மோடியும் அமித் ஷா வும் வதை முகாம்களை ஒத்த தடுப்பு காவல் முகாம்கள் அமைக்கிறார்கள். தடுப்பு காவல் முகாம்களில் என்ன நடக்கும் என்பதை ஆதித்யநாத்தின் உத்தரபிரதேசத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. மோடியும் அமித் ஷாவும் இந்தியாவை காஷ்மீராக்க முயற்சி செய்தபோது, ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தை குஜராத்தாக மாற்றிக் கொண்டிருந்தார். 20 பேருக்கும் மேல் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியிருக்கிறார்கள். பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இன்னும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
உத்தரபிரதேசம் முசாபர்நகரில் இசுலாமியர்கள் மீண்டும் ஒரு சுற்று சூறையாடலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். காவி காலிகள் காவல்துறையினருடன் சேர்ந்து கொள்கின்றனர். காவல்துறையினர் வேடிக்கை பார்க்க காவி காலிகள் வேட்டையாடுகின்றனர். பதிலடி கொடுப்போம் என்கிறார் ஆதித்யநாத். எதற்கு பதிலடி? நீங்கள் மன்னிப்பு கடிதங்கள் தந்து கொண்டிருந்தபோது, நாட்டு விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு உடல், பொருள், உயிர் அனைத்தும் தந்ததற்கா? இப்போது வரை உழைத்துக் கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொண்டிருப்பதற்கா?
வசதி படைத்த இசுலாமியர்களிடம் கொள்ளையடிப்பது, வறிய நிலையில் இருக்கும் இசுலாமியர்களை கொன்றுவிடுவது என்பது ஆதித்யநாத் நடத்தும் பாசிச ஆட்சியின் தனித்த நடைமுறையாக இருக்கிறது.
புலந்த்சர் மக்கள், சேதம் விளைவித்ததாக சொல்லப்பட்டு ரூ.6.27 லட்சம் அபராதம் செலுத் தியுள்ளனர். மனம் வருந்தியதன் தன்னார்வ வெளிப்பாட்டு நடவடிக்கை என்று மூத்த அதிகாரிகள் சொன்னார்களாம். இங்கு ஆட்சியர் இன்னும் அறிவிப்பாணை கூட அனுப்பவில்லையாம். மற்ற மாவட்டங்களில் அபராதம் செலுத்தச் சொல்லி அறிவிப்பாணை அனுப்பப்படுகிற பின்னணியில் மக்கள் தாங்களாக இப்படிச் செய்துள்ளார்கள் என்று நிர்வாகம் சொல்கிறது. காவல்துறையினர் சூறையாடிய வீடுகள், சேதப்படுத்தப்பட்ட பொருட்கள், திருடிச் சென்ற நகைகள் போன்றவற்றை ஈடு செய்ய ஆதித்யநாத் அரசாங்கம் பொறுப்பு ஏற்குமா?
கலவரக்காரர்களை உடையைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் மோடி. டிஜிட்டல் இந்தியா என்று கூச்சல் போடுபவர்கள் நினைத்தால் இணையத்தை முடக்குகிறார்கள். தகவல் தொடர்பை துண்டிக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு போடுகிறார்கள். ஜாமியா மிலியா பல்கலை கழகத்திலும் ஜேஎன்யுவிலும் நடந்த தாக்குதல்கள் மாதிரிகள்தான் என்று நாட்டு மக்களுக்கு செய்தி சொல்கிறார்கள். மங்களூருவில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுவிட்டனர். காயமுற்றவர்கள் சிகிச்சை பெறச் சென்ற மருத்துவமனைகளுக்குள் புகுந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இவ்வளவும் நடத்திவிட்டு, பாகிஸ்தானை எதிர்த்துப் போராடுங்கள் என்கிறார் மோடி. எங்களை தாக்கியது, எங்கள் நிகழ்காலத்தை பதட்டமாக்குவது, எங்கள் எதிர்காலத்தை இருட்டில் தள்ளுவது நீங்கள்தான் பிரதமரே. உங்களுக்கு எதிராக எங்கள் போராட்டம், ஜனநாயகத்தை, சட்டத்தின் ஆட்சியை மீட்கும் வரை தொடரும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இசுலாமியர் இந்துக்கள் அனைவருக்கும் எதிரானது
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடியதைப் போல இன்று இந்திய மக்கள் போராட வேண்டியிருக்கிறது. நாட்டு விடுதலை போராட்டத்தை நேரில் பார்த்திராத ஒரு தலைமுறை அதுபோன்ற ஒரு போராட்டத்தை சொந்த நாட்டு அரசுக்கு எதிராக நடத்துகிறது.
சட்டம் இசுலாமியர்களுக்கு எதிரானது என்று சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. இசுலாமிய சகோதரர்களுடன் நாங்கள் நிற்கிறோம் என்று போராட்டக்காரர்கள் சிலர் சொல்லக் கேட்கிறோம். போராட்டத்தில் இருக்கும் இசுலாமியர்களும் நாடு எங்களுடன் நிற்கிறது என்கிறார்கள். இசுலாமியர்களை தனிமைப்படுத்தி துன்புறுத்தும் நோக்கம் கொண்டது இந்தச் சட்டம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, பெரும்பான்மை இந்துக்களுக்கும் சட்டம் எதிரானது என்பதும் உண்மையே. திரிசூலாயுதம் சேர்ந்துத் தாக்கி இந்துக்கள் பலரை நாடற்றவர்களாக்கிவிடும் ஆபத்து சட்டத்தில் இருக்கிறது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு இதைத்தான் செய்துள்ளது.
இப்படி நடந்து விடுவது கடைசி தாக்குதலாகக் கூட இருக்கலாம். நடக்காமலும் போகலாம். ஆனால், இதைச் சொல்லிச் சொல்லியே எல்லா விதமான ஜனநாயக உரிமைகளையும் எப்போதும் உறைந்து போகச் செய்ய முடியும். இன்னும் கொடிய பாதிப்புகள் உருவாக்குகிற சட்டங்கள், திருத்தங்கள், அரசாணைகள் என்று மக்கள் வாழ்க்கையை மேலும் சிதைக்க காவிப்படை முயற்சி செய்யும். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை, யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்பதெல்லாம் ஒரு பதிலே அல்ல. இந்த திருத்தமே பாதிப்புதான். இது நாட்டின் அரசியல்சாசனத்துக்கு விரோதமானது. நாட்டுக்கே ஆபத்தானது. நாட்டு மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருக்கும் ஒரு திறன்மிக்க விசையாக இவை இருக்கும்.
நந்தன் நீல்கேணியின், அவரைப் போன்ற தகவல் தொடர்பு தொழில் நடத்துபவர்களின் வளர்ச்சிதான் நடந்ததே தவிர அலைந்து திரிந்து ஆதார் வாங்கிய சாமான்ய மக்கள் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் வரவில்லை. இடையில் எங்கும் திருடு போகாமல் ஆதார் திட்டத்தால் அரசுக்கு மிச்சமான மான்யத் தொகை என்று சொல்லப்பட்ட தொகையாலும் சாமான்ய மக்களுக்கு நன்மை எதுவும் நடக்கவில்லை. ஆதார் அட்டையால் நலத்திட்டங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுதான் திறம்பட நடந்தது. அது பட்டினிச் சாவுகளுக்கும் இட்டுச் சென்றது. செத்தால் எரிக்க, புதைக்கக் கூட ஆதார் அட்டை வேண்டும் என்றவர்கள் அந்த ஆதார் அட்டை குடியுரிமைக்குச் செல்லாது என்கிறார்கள்.
2015 முதல் ஆதார் அட்டைக்காகவும் அது கிடைத்த பிறகு அதை கையில் வைத்துக் கொண்டும் அலைந்து திரிந்த மக்களை, கருப்புப் பணத்தை பிடிக்கிறேன் என்று 2016ல் வரிசையில் நிற்க வைத்தார்கள். உங்கள் பணம் உங்கள் பணம் இல்லை, வங்கியில் போடுங்கள் என்றார்கள். இப்போது ஊடுருவுபவர்களை கண்டுபிடிக்கிறேன் 130 கோடி பேரும் வரிசையில் நில்லுங்கள் என்கிறார்கள். ஆவணங்களை சேகரிப்பதிலும் அவற்றை சமர்ப்பிப்பதிலுமே நாட்டு மக்கள் தங்கள் நேரத்தை செலவிட நேரும்.
சட்டங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கும்போது ஏன் கண்டுபிடிக்க முடியாது? கடைசி தெரு வரை வலைப்பின்னல் கொண்ட காவல்துறையும் வருவாய் துறையும் போதாதா? இந்தத் துறைகளுக்கு மக்கள் பணத்தில் இருந்து பெரும்பகுதி செலவழிக்கிறோம். இவற்றை வைத்துக் கொண்டு யார் சட்டவிரோதமாக குடியேறிய வர்கள் என்று கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீங்கள் ஏன் ஆட்சி நடத்துகிறீர்கள்?
அகதிகளது கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்ய என்ன செய்யலாம் என்ற கேள்விகள் எழுந்து அதன் விளைவாக சட்டம் போட வேண்டியிருந்தால் அது நல்லரசுக்கு அடையாளம். இருக்கிற குடிமக்களை நிரந்தரமாக பதட்டத்தில் வைப்பது பாசிசம்.
மோடியும் ஷாவும் எதிர்ப்பார்க்காத
மக்கள் போராட்டங்கள்
நாட்டு மக்களை பிளவுபடுத்த மோடியும் ஷாவும் கொண்டு வந்த சட்டம், எதிர்ப்புப் போராட்டங்களில் மக்களை ஒன்றுபடுத்தியுள்ளது. கர்நாடகா இப்போது கோ பேக் மோடி சொல்கிறது. அரியானா பெரியார் படம் தாங்கிய போராட்டங்களை காண்கிறது. மோடியா நானிருந்தா தூக்குலதான் தொங்கியிருப்பேன் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டம் ஒன்றில் பாட்டு பாடுகிறார்கள். ஸ்டாலின் தனது பள்ளிக்கூட நண்பர்களைச் சந்தித்த ஒளிப்படம் வெளியாகியுள்ள நிலையில் மோடி தனது கல்லூரி நண்பர்களுடன் அப்படி ஒரு ஒளிப்படம் வெளியிட வேண்டும் என்று மோடிக்கு கோரிக்கை வைக்கிறார்கள். கோலம் போடுவது கூட போராட்ட வடிவாகிவிட்டது.
சட்டத்தை ஆதரித்து வாக்களித்த நிதிஷ், ஜெகன்மோகன், நவீன் பட்நாயக் எல்லாம் என்ஆர்சியை அமல்படுத்தப் போவதில்லை என்கிறார்கள். அதிமுகவினர் மத்தியில் இருந்து எங்களுக்கு நிர்ப்பந்தம் தரப்பட்டது என்று குரல் வந்தது. கேரள சட்டமன்றம் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. வங்கத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், மலேசியா அரசாங்கங்கள் நேரடியாகவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளன. அய்க்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுரைகள் முன்வைத்துள்ளன.
இது போன்ற மக்களை வாட்டி வருத்தும் நடைமுறைகள் இல்லாத காலத்தில் நாட்டில் பெரிய வன்முறைச் சம்பவங்கள் இல்லை. ஓரளவு வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் இருந்தது. முதலாளித்துவ சமூகத்தின் துன்பங்கள் இருந்தாலும் மக்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ முடிந்தது. இந்த ஆறு ஆண்டு கால துன்புறுத்தல்கள் இல்லாத காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் மேல் மேலும் வளர்ச்சியைக் கட்டி எழுப்புவதில் இந்த அரசாங்கம் உண்மையில் சிறிதளவு கவனம் செலுத்தியிருந்தால் கூட நாட்டில் உள்ள மனித வளத்துக்கு எல்லா தளங்களிலும் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்க முடியும்.
தடுப்பு முகாம்களை கட்டி அவற்றை பராமரிக்கும் செலவில் அகதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டால் சர்வதேச அரங்கில் இந்தியா ஓங்கி உயர்ந்து நிற்கும்.
ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையிலும் நம்பிக்கையில்லாத கும்பலின் கையில் இந்திய அரசியல்சாசனமும் ஜனநாயகமும் சிக்கியுள்ளது. இந்த பாசிச கும்பலின் பிடியில் இருந்து அரசியல் சாசனத்தையும் ஜனநாயக சூழலையும் மீட்பது இன்று மிக முக்கியமான கடமையாக முன்வந்துள்ளது. மக்கள் அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் சிறப்பான பாத்திரமாற்றி வருகின்றனர். எங்கள் குடியுரிமை பற்றி கேள்வி கேட்க நீ யார் என்ற கேள்வி சத்தமாக ஒலிக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம். தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம். தேசிய இந்திய மக்கள் தொகை பதிவேடு வேண்டாம்.
அரசியல்சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயகம் வேண்டும். சட்டத்தின் ஆட்சி வேண்டும்.
என்று கேட்கவோ முடிவு செய்யவோ நீ யார்?
REJECT CAA -
NRC – NPR