புத்தக அறிமுகம்
அராஜகம்
கிழக்கிந்திய கம்பெனி
கார்ப்பரேட் வன்முறை மற்றும் ஒரு பேரரசின் பெருங்கொள்ளை
உமாமகேஸ்வரன்
நமது நாடு வெள்ளையரால் அடிமைப்படுத்தப்பட்டது என்றும் வியாபாரம் செய்ய வந்தவர்கள் - கிழக்கிந்திய கம்பெனி - நமது நாட்டைப் பிடித்து விட்டார்கள் என்றும் இந்தியர் அனைவருக்கும் வரலாற்றுப் பாடத்தில் சொல்லித் தந்திருக்கிறார்கள்
.
ஆனால் இது எப்படி சாத்தியமானதுää ஒரு கம்பெனி எப்படி நாட்டைப் பிடிக்க முடியும்ää அவர்களிடம் எப்படி படைபலம் இருந்ததுää ஒரு நாடு என்றால் அந்த நாட்டின் அரசனின் கட்டுப்பாட்டில்தான் இராணுவப்படை மற்றும் அரசு இயந்திரங்கள் இருக்கும்ää இது எப்படி சாத்தியம் போன்ற கேள்விகள் மனதில் எழுவது இயல்பே. ஆனால் இதற்கான விடைகள் எப்போதும் நமக்கு கிட்டியதில்லை. ஆசிரியர்களிடம் கேட்டால் புத்தகத்தை ஒழுங்காகப் படித்து பரீட்சையில் நல்ல மார்க் வாங்கி தேறுகிற வழியைப்பார் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணாதே என்பார்கள்.
இதற்கு முன் நாம் பிரிட்டிஷ் ஆட்சி பற்றியும் அதன் கொடூரமான அடக்குமுறை மற்றும் இந்திய வளங்கள் சு10றையாடப்பட்டது பற்றியும் நிறைய படித்திருப்போம். ஆனால் வில்லியம் டேல்ரிம்பில் “கிழக்கு இந்தியக் கம்பெனி” (ECI ) வரலாற்றை குறிப்பாக 1599லிருந்து 1803 வரையிலான அதன் தொய் வில்லாத வளர்ச்சியை ஏராளமான தரவுகளுடன் பதிவு செய்துள்ளார்.
லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட ஒரு நிறுவனத்தின் கீழ்ää தனது முதலீட்டாளர்களின் செல்வத்தை பெருக்குவதற்கான ஒரே நோக்கத்தோடு இயங்கும் நிறுவனத்தின் கீழ் இந்தியா எவ்வாறு காலனியாதிக்கத்திற்கு மாறிச் செல்வது நிகழ்ந்தது என விவரிக்கிறார்.
ஒரு கம்பெனியின் ஆட்சி எவ்வாறு தவிர்க்க முடியாமல் பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது என்பதை மிக அழகாக அவருடைய நோக்குநிலையிலிருந்து ஆசிரியர் தன் முதல் வரியிலேயே சொல்கிறார்.
“முதன் முதலில் ஆங்கில மொழியில் புகுந்த ஒரு சில இந்திய வார்த்தைகளில் ஆங்கிலத்திற்கு இணையான இந்திய வார்த்தை வட்டார மொழியிலுள்ள (LOOT ) லூட் என்பதாகும். Plunder என்னும் ஆங்கில வார்த்தையின் இந்திய வார்த்தைதான் அது. 18ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவைத் தாண்டி ஒலிக்காத இந்த வார்த்தை பிரிட்டன் முழுவதும் சர்வ சாதாரணமாக ஒலித்தது. இதை புரிந்துகொள்ள வேண்டுமானால் நீங்கள் போவிஸ் BOVIS CASTLE ) கேசில் எனும் தனியார் கோட்டைக்குச் செல்ல வேண்டும். அங்குதான் கிழக்கிந்திய கம்பெனியால் லூட் அடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத செல்வங்கள் பல அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.”
இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்கள் மிளகு கிராம்பு இலவங்கப்பட்டை ஏலக்காய் மற்றும் பட்டுத் துணிகளை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்ய வந்த ஒரு சாதாரண கிழக்கிந்திய கம்பெனி 1765 வாக்கில் அதை விட்டுவிட்டு சில மாதங்களிலேயே 250 குமாஸ்தாக்கள் இந்தியாவிலேயே தேர்வு செய்யப்பட்ட 20000 படைவீரர்கள் ஆகியோருடன் வளங் கொழிக்கும் முகலாய பிரதேசத்தை ஆளுபவர்களாக மாறி விட்டார்கள். ஒரு சர்வதேச நிறுவனம் தன்னை ஒரு காலனியாதிக்க ஆட்சியாளராக மாற்றிக் கொண்ட தருணம் அது.
பாபரில் தொடங்கி அவுரங்கசீப் வரை முகலாய பேரரசு இந்தியாவில் வளங்கொழித்தது. ஆனால்ää அதிகாரத்தில் ஏற்பட்ட உள்பிளவு ஒழுங்கற்ற தன்மை ஊழல் ஆகியவையும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களும் கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாகிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. இந்த அராஜகமான சு10ழலைத் தொடர்ந்து - சுமார் 1739 - 1803க்கு இடையில் பிரிட்டி~;காரர்கள் இந்திய அரசியலிலும் இந்திய சமூக பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்விலும் நன்கு கால் பதித்துவிட்டார்கள். இந்த நேரத்தில்தான் அவர்கள் இந்திய வர்த்தகர்கள்ää வங்கியாளர்கள் தங்களுடைய இயல்பான கூட்டாளிகள் என்பதை உணர்ந்;து கொண்டார்கள். குறிப்பாக ஜகதி சேட் எனும் பெரும்பணம் படைத்த ஜைன மத மார்வாரி வங்கியாளர் பிரிட்டிஷாருக்கு கடன் தந்து உதவியது அவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இந்த நிகழ்வுதான் வரலாற்றின் போக்கையே முற்றிலுமாக மாற்றிவிட்டது என்று டேல்ரிம்பில் குறிப்பிடுகிறார். அவரங்க சீப்பின் மரணம் ரோகில்லாக்கள் மற்றும் அகமது துரானி ஆகியோரின் படையெடுப்புகள் முகலாய பேரரசின் பேரழிவுக்கான தொடக்கமாகி பின்னர் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கும் காரணமாகிவிட்டன. இந்த அராஜகமான காலகட்டத்தில் பாட்னா மற்றும் வாரணாசியை தலைமையிடமாகக் கொண்ட லாலா காஷ்மீரிமால் ராம்சந்த் கோபால் சந்த் சாகு மற்றும் கோபால்தாஸ் - மனோகர்தாஸ் போன்ற பெரிய நிதி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தவர்கள் தங்களுடைய “உண்டி முறை” மூலமாக ஏராளமான பணத்தை பிரிட்டிஷாருக்குத் திரட்டித் தந்துள்ளார்கள். இந்த நடவடிக்கை பிரிட்டிஷாருக்கு தங்களின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பயிற்சி பெற்ற இராணுவத்தைப் பராமரிக்க உதவியது. அத்துடன் அவர்களின் எதிரிகளான வங்கம் மற்றும் அவாத் (தற்போதைய உத்தரபிரதேசம்) நவாப்கள் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் மராட்டிய கூட்டுப்படைகளை தோற்கடிக்கவும் உதவியது என்று ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி நடத்தும் கிழக்கிந்திய கம்பெனி பற்றி அன்றைய முகலாய பேரரசின் அதிகாரி ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார் “நாம் தங்கள் லங்கோடைக் கூட சரியாக சுத்தம் செய்யக் கற்றுக்கொள்ளாத விரல் விட்டு எண்ணக்கூடிய வர்த்தகர்கள் லண்டன் மாநகரிலிருந்து பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு கீழ்படிய வேண்டிய நிலையில் இன்னும் ஏதேனும் கௌரவம் மிச்சமிருக்கிறதா?”
இன்னும் நாம் வெள்ளையர்கள் இந்தியாவை வெற்றி கொண்டுவிட்டதாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தைகளுக்குள் மறைந்து கிடக்கும் ஒரு துரோகத்தனமான யதாரத்தத்தை உணரந்திருக்கிறோமா? 18ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் பெரும்பகுதியை பிடிக்கவில்லை. மாறாகää லண்டன் மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு அய்ந்தே ஜன்னல்கள் கொண்ட ஒரு சிறிய அறையில் இயங்கும் எந்த ஒழுங்குக்கும் கட்டுப்படாத ஒரு தனியார் நிறுவனத்தை இந்தியாவில் நிர்வகித்து ஒரு வன்முறைமிக்க குரூரமான மற்றும் அவ்வப்போது நிலையற்ற மனநிலைமை உடைய கார்ப்பரேட் கொள்ளையன் கிளைவு (Clive )ஆல் ஆளப்பட்டு வந்திருக்கிறோம். கிழக்கிந்திய கம்பெனி பற்றி அதன் இயக்குநர்களில் ஒருவர் “பேரரசிக்குள் இருக்கும் பேரரசு” என்று ஒப்புக்கொண்டார்.
தற்போதுள்ள மிகப்பெரும் பன்னாட்டு கார்ப்பரே~னைப் போல்ää கிழக்கு இந்திய கம்பெனியும் சர்வவல்லமை பெற்றிருந்த போதிலும்ää பொருளாதார நிச்சயமற்ற நிலையில் சேதப்படும் என்று நிரூபணம் ஆனதுää அதாவது வங்கத்தின் கருவூலங்களில் உள்ள செல்வங்களை பெற்றுக்கொண்டுää அதன் பங்குகள் விலையை இரு மடங்காக உயர்த்த ஏழு ஆண்டுகளில் அந்த நீர்க்குமிழி உடைந்து போனது. வங்கத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சம்ää அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகப் பெரிய வருவாய் இழப்புää அதன் காரணமாக கிழக்கு இந்திய கம்பெனிக்கு ஏற்பட்ட கடன் மட்டும் அன்றைய மதிப்பில் 1.5 மில்லியன் பவுண்டு;. பிரிட்டிஷ் மகாராணிக்கு செலுத்த வேண்டிய வரி 1 மில்லியன் பவுண்ட் ஆகும். இந்த வி~யம் மக்களுக்கு தெரிய வந்தவுடன் அய்ரோப்பா முழுவதும் 30 வங்கிகள் அழிந்து வர்த்தகம் முழுவதுமாக முடங்கிவிட்டது. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமேää (அதாவது வங்கிக் கடன்களை கட்ட முடியாமல் இருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு அரசு தன் வங்கிகள் மூலம் கடன் வழங்குகிறது) அதே போல் கிழக்கு இந்திய கம்பெனிக்கு பிரிட்டி~; மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி 1 மில்லியன் பவுண்ட் கடன் வழங்கி அதை அழிவிலிருந்து மீட்டது.
ஏராளமான மற்றும் துல்லியமான விவரங்கள் தரவுகளின் (எண்ணிலடங்காத) மூலம் வில்லியம் டேரிம்பில் விவரித்திருக்கிறார். அதை முற்றிலும் முழுமையாக ஒரு கட்டுரை யில் அடக்குவது சாத்தியமில்லை.
இறுதியாக இந்தப் புத்தகத்தின் வரலாற்றுப் பதிவுகளுக்கு நிகழ்காலப் பொருத்தப்பாடு ஏதேனும் உண்டா? அறிய முயற்சிப்போம். 21ஆம் நூற்றாண்டில் இன்று உலகத்தை ஆள்வது இறையாளுமை மிக்க அரசுகள் என்றாலும்ää அதன் உள்ளிருந்து (அந்தப் போர் வைக்குள்) உண்மையில் ஆள்வது பன்னாட்டுää உள்நாட்டுää பகாசுர கம்பனிகள்தானே. அதையும் வில்லியம் டேரிம்பில்; மிக நேர்த்தியாக முடிவுரையில் அவரே விவரிக்கிறார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமக்கு விட்டுச் சென்ற சொத்தாக பலர் குறிப்பிடுவது ஜனநாயகம்ää சட்டத்தின் ஆட்சி புகை வண்டிகள் தேநீர் மற்றும் கிரிக்கெட். ஆனால் உண்மை யில் அவர்கள் விட்டுச் சென்றிருக்கின்ற சிந்தனைää பங்கு நிறுவனங்கள்தான் (Joint Stock Company). கம்பெனிகளும் (பங்கு நிறு வனங்கள்) கார்ப்பரேஷன்களும்தான் இந்தியர்களின் மிக அதிகமான நேரத்தையும்ää சக்தி யையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. கம்பெனிகள்தான் இன்று மனிதகுலத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அளவு மக்களின் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. 300 வருட கேள்வியான “எவ்வாறு சக்தி வாய்ந்த மற்றும் துன்பம் தருகின்ற மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒத்திசைத்து செல்வது’ என்பது இன்று வரை தெளிவான விடைகாண முடியாமலே இருக்கிறது. இறையாளுமைமிக்க ஒரு நாடும் அதன் மக்களும் எவ்வாறு தம்மை தேவையான அளவுக்கு கார்ப்பரேட்டுகளின் வரம்பு மீறிய செயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பதும் தெரியவில்லை. எந்தவொரு கார்ப்பரேஷனும் கிழக்கிந்திய கம்பெனியைப் போல்ää இராணுவமயப்படுத்தி ஆள முடியாது என்பது உண்மை என்றாலும்ää அரசு அதிகாரத்தைத் தன் சுய லாபத்திற்காக வெற்றிகரமாக பயன்படுத்திக்கொள்ள முடிகிறதுதானே.
அமெரிக்காவில் 2007-2009ல் வங்கிகள் திவாலாயின. கார்ப்பரேஷன்கள் தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொள்கிற போக்கில் எப்படி நாட்டின் பொருளாதாரங்களை அழிக்கிறது என்பதை அது தெளிவாக காட்டியது. மொத்தத்தில் அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் இழந்தது மட்டும் 1 டிரில்லியனுக்கும் (ஒரு லட்சம் கோடி டாலர்) மேலாகும். 1772ல் கிழக்கிந்திய கம்பெனி இங்கிலாந்துக்கு செய்யும் என பயந்த (அதாவது எந்த வித பாதுகாப்பும் இன்றி நாடு அழிந்து விடும்) விஷயம் உண்மையிலேயே நடந்துவிட்டது. அய்ஸ்லாந்தின் மூன்று வங்கிகளும் திவாலாகி நாடே முற்றிலுமாக திவாலாகும் எல்லைக்குச் சென்றுவிட்டது.
நல்ல வேளையாக கிழக்கிந்திய கம்பெனியைபோல அதற்கு இணையான கம்பெனிகள் ஏதும் இல்லை. வருமான அளவில் உலகின் பெரிய கார்ப்பரேஷனான வால்மார்ட்; சொத்துப் பட்டியலில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் இல்லை. அதே போல் முகநூல் அல்லது ஷெ ல் கம்பெனிகளிடம் காலாட்படை அணிகள் இல்லை. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த அவற்றுக்குத் தனியாக சொந்தமாக இராணுவம் எதுவும் தேவையில்லை. அவர்களின் நலன்களை காக்கவும்ää சிக்கல்களிலிருந்து மீட்டெடுக்கவும் அவர்கள் அரசாங்கங்களை முற்றிலுமாக நம்பலாம்.