குடியரசை குடிமக்களே காக்க வேண்டும்
எஸ்.குமாரசாமி
குடி அரசு என்பதே குடிமக்களுடையதுதானே? அப்படியானால், குடி அரசைக் குடி மக்களே காக்க வேண்டும் என்று சொல்லும்போது, குடி அரசை நாடாளும் சட்டமியற்றும் துறை அரசதிகாரம் செலுத்தும் துறை நீதித் துறை ஆகியவை காக்காது என்று சொல்கிறோமா?
ஆம். அவை நிச்சயம் காக்கவில்லை.
மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிற சட்டங்களை, மாநிலங்களின் அதிகாரங்களை மீறுகிற சட்டங்களை, சமூகரீதியாக கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற அரசியலமைப்புச் சட்ட அடிப்படைகளை மீறுகிற சட்டங்களை நாடாளுமன்றம் தொடர்ந்து எந்த கவலையும் இல்லாமல் இயற்றுகிறது. நாடாளுமன்றம், நாடாளுமன்ற குடியரசை ஏறி மிதிக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் என்ற அரசதிகாரம் செலுத்தும் துறை என்ன செய்கிறது? உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன், சபரிமலைக்கு எல்லா வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் சீராய்வு மனு மீதான தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டபடி நடக்க உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆட்சியாளர்கள், கும்பல் நடவடிக்கைகளிலும் வாக்குகள் பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு ஏற்பவுமே செயல்படுவார்கள் என்றால், அதுவே அரசியலமைப்புச் சட்ட அறம் பிழைக்காது என்கிறார். ஆட்சி நடத்தும் மோடியும் ஷாவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறார்கள். தேசம், தேசப்பாதுகாப்பு என்று பேசிக் கொண்டு நகர்புற நக்சல்கள், டுட்கே டுட்கே கும்பல்கள் என அச்சுறுத்தி, இந்துத்துவத்தை, இசுலாமிய வெறுப்பை முன்னிறுத்தி, சீருடைப் படையினர் கொண்டும் கும்பல்கள் கொண்டும் மக்களை வேட்டையாடுகிறார்கள். உரிமைகளை பறிக்கிறார்கள். ஆக இந்த இரண்டு நிறுவனங்களும் குடியரசைக் காக்காது. இவற்றால்தான் குடியரசுக்கே ஆபத்து.
நீதித்துறை காக்காதா? பாப்ரி மசூதி தீர்ப்புக்கு பிறகு, குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீர் ஆட்கொணர்வு மனுக்கள் விசயத்தில் உச்சநீதிமன்றம் என்ன செய்தது? குற்றம் செய்தவருக்கு வெகுமதி வழங்கியது. பற்றி எரிகிறது, உயிர்போகிறது என்று முறையிடும் போது உரிமைகளை காப்பதற்குப் பதில், சகஜ நிலை திரும்பட்டும், பிறகு பார்க்கலாம் என்றது. நீதித்துறை குடியரசைக் காக்காது.
இந்திய குடியரசை மக்கள்தான் காக்க வேண்டும். இந்திய குடியரசு, சுதந்திரமான இறையாளுமை கொண்ட அரசு என்று மட்டுமே, அரசியல்சாசன அவையில், டிசம்பர் 13, 1946 அன்று நேரு சொன்னார். நவம்பர் 4, 1948ல் மக்களாகிய நாங்கள் என்ற கருத்தாக்கத்தையும் ஜனநாயக குடியரசு என்ற கருத்தாக்கத்தையும் அம்பேத்கர் முன்வைத்தார்.
ஜனநாயக குடியரசு, மக்களின் செயலூக்கமான துடிப்பான பங்களிப்பைக் கோருகிறது. இன்றும் அது வேண்டும். அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகம், சமூக பொருளாதார ஜனநாயகத்திற்கு வழி தராவிட்டால் அரசியல்ரீதியில் ஜனநாயகம் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று நவம்பர் 25, 1949 அன்று அம்பேத்கர் சொன்னார். அதுதான் இன்று நடக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் வேர் அதிஇறையாளுமை எல்லாமே மக்களிடம்தான் பொதிந்துள்ளது என்று, இப்போது நாடெங்கும் மக்கள் கற்பனை வளத்துடன் படைப்பாற்றலு டன் சொல்லத் துவங்கிவிட்டனர். இசுலாமியர்கள், பொது வாழ்வில் அரசியலில் தங்கள் இடத்தை இந்திய கொடியுடன், காந்தி, அம்பேத்கர் படங்களுடன் நிரப்புகிறார்கள். தங்களது, தங்கள் குழந்தைகளது எதிர்காலம் பற்றிய கவலையுடன், இசுலாமிய பெண்கள் வீதிகளுக்கு வருகிறார்கள்.
மோடி - ஷா - யோகி மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் மக்களை வேட்டையாடும் போது, மக்கள் அஞ்சிடாமல் எழுகிறார்கள்.
ஜெர்மனியில் இறுதி தீர்வு என்று சொல்லி அய்ரோப்பாவில் இருந்த மூன்றில் இருபகுதி யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்ததை, 60 லட்சம் பேர் வரை மடிந்ததை வரலாறு பதிவு செய்து கொண்டது. யூதர்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். புறக்கணிக்கப்பட்டார்கள். இறுதியில் ஒழிக்கப்பட்டார்கள். அறிவாளிகளும் கம்யூனிஸ்ட்களும் வேட்டையாடப்பட்டார்கள். அலைஅலையாய் அநியாங்கள் நிகழ்ந்தபோது மக்கள் சமூகம் கைகட்டி நின்றது. அச்சத்தின் ராஜ்ஜியம் வெற்றி பெற்றது.
இன்று இந்தியா எங்கும் மக்கள் ஆசாதி என்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் பேர் மேல் வழக்குகள். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை. கும்பல் படுகொலைகள். தேச விரோத வழக்குகள். எல்லாவற்றிக்கும் பிறகு மக்கள் எழுகிறார்கள்.
குடியரசை குடிமக்கள்தான் காக்க வேண்டும். குடிமக்கள் எழுச்சிக்கு நாமும் பங்களிப்போம். குடிமக்கள் எழுச்சியில் நாமும் பங்கேற்போம்.