தானே புயல் நிவாரண நிதி திரட்டும் இயக்கத்தில் ஏஅய்சிசிடியு
சென்னையில் ஜனவரி 11 மற்றும் 12 தேதிகளில் ஏஅய்சிசிடியு மாநில மாநாட்டு பிரச்சாரத்தினூடே நிவாரண நிதி மற்றும் பொருட்கள் திரட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. ஏஅய்சிசிடியு விடுத்த இந்த அழைப்பு, பிரிக்கால் தொழிலாளர் ஆலைவாயில் கூட்ட
செய்தி, புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
சுற்றுப்பயணம் சென்று வந்த குழுவினரின்
சார்பில் கட்சி மாநில செயலாளர் தோழர்
பாலசுந்தரம் வெளியிட்ட அறிக்கை ஆகியவை
அனைத்து சங்கங்களின் கிளைகள் மற்றும் கட்சி
முன்னணிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டன. 2 மணி நேரத்தில் 5000 துண்டு பிரசுரங்கள்
வெளியிடப்பட்டன.
உழைப்போர் உரிமை இயக்கம், கட்டுமான தொழிலாளர் சங்கத் தோழர்கள்
அம்பத்தூர் மார்க்கட் மற்றும் குடியிருப்புப்
பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்களிடம்
முடிந்ததை, கையில் இருப்பதை, ஆனதை
கொடுங்கள், ஏதேதோ செலவு செய்கிறோம்
ஒரு தேநீர் குடிப்பதை தள்ளி போட்டால்
போதும் அய்ந்தோ பத்தோ தந்து விட முடியும், உடனே புயலால் பாதிக்கப்பட்ட மக்ளுக்கு
நேசக் கரம் கொடுக்க வேண்டும் என்ற
வேண்டுகோளுடன் இரண்டு நாள் தொடர்
பிரச்சாரம் செய்து ரூ.7,000 வரை திரட்டினர்.
டிஅய் டைமன்ட் செயின் ஆலைத்
தோழர்கள், பொங்கலுக்கும் விடுமுறைக்கும்
செலவு செய்கிற தொகையில் சிறு பகுதியை
கடலூர் மக்களுக்காக ஒதுக்கலாம் என பேசினார்கள். 24 மணி நேரத்தில் ரூ.20,000 திரட்டியதுடன் உணவுப் பொருட்கள், துணிகள்
திரட்டினர்.
அகர்வால் பவன் தொழிலாளர்கள் சங்கம்
மற்றும் நிர்வாகத்தினர் ரூ.12,300, ஆன்லோடு
கியர் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்
ரூ.10540
நிதி திரட்டினர். இந்த ஆலைகளில்
தோழர்கள் திரட்டும் போது அங்கே வந்த
அதிகாரிகள் எப்படி அனுப்புவீர்கள் என கேட்டனர். எங்கள் சங்கம் மூலம் துயர் துடைப்புப்
பணிகள் நடக்கும் என்று சொன்னபோது, அப்படியானால் நாங்களும் தருகிறோம் என
நிதி கொடுத்துள்ளனர்.
காஞ்சி காமகோடி மருத்துவமனை சங்க
தோழர்கள் ரூ.4500, ஹøண்டாய் ஆலையின்
ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரூ.5140, ஜிம்கானாகிளப் சங்க தோழர்கள் ரூ.1500, புதியதாக
சங்கம் அமைக்கவே போராடி வரும் வேப்கோ
இந்தியா தொழிலாளர்கள் ரூ.800, பெண்கள்
கழக தோழர்கள் ரூ.500, ஜெய் இஞ்சினியரிங்
ரூ.500,
ஸடான்டர்டு கெமிக்கலஸ் ரூ.400, மெர்குரி பிட்டிங்கஸ் ரு.200, பார்மிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தோழர்கள் ரூ400 திரட்டினார்கள்.
இப்படி அனைத்து சங்கங்களிலும் 300க்கும்
மேற்பட்டவர்கள் ஈடுபட்டு நமது சங்கங்கள்
மூலம் திரட்டிய நிதி ரூ.70,000 ஜனவரி 16 அன்று நடந்த கட்சி மாநில கமிட்டி நிலைக்குழு கூட்டத்தில் சேர்க்கப்பட்டது. நிவாரண
உணவுப் பொருட்கள் புதுவைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சென்னையில் இந்த இயக்கம்
காலம் கடந்து துவங்கினாலும் அமைப்பின், வர்க்கத்தின் உள்ளாற்றலை, தயார்நிலையை, உணர்வுபூர்வமான முயற்சிகளால், குறிப்பிட்ட
கால அளவில், அதாவது 48 மணி நேரங்களில், யதார்த்தமாக்க முடிந்தது.
கோவையில் ஜனவரி 10 அன்று பிரிக்கால்
ஆலைவாயில் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி பங்கேற்று பேசினார். ஜனவரி 11, 12, 13 தேதிகளில் சங்க அலுவலகம் அருகில் நிவாரண
பொருள் திரட்டும் முகாம் அமைக்கப் பட்டது. பிரிக்கால் தோழர்களுடன் சுபா பிளாஸ்டிக்ஸ், கேஎஸ்பி பம்ப்ஸ் உள்ளிட்ட சங்கத் தோழர்கள் ரூ.55,000 திரட்டித் தந்துள்ளனர்.
சேலம் மாவட்ட ஏஅய்சிசிடியு முதல்
மாநாட்டில் புயல் நிவாரண நிதியாக ரூ.2,000 அளிக்கப்பட்டது.
நெல்லையில் ஒரே நாளில் மக்கள்
மத்தியில் புயல் நிவாரண நிதி ரூ.10,000 திரட்டப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலும்
மக்கள் மத்தியில் ரூ.4,000 புயல் நிவாரண நிதி
திரட்டப்பட்டது.