COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 1, 2012

தீப்பொறி பிப்ரவரி 2012, 01-15


கண்டனம்

ஜார்க்கண்ட்


நவம்பர் 16 2011 முதல், ஜனவரி 16 2012 வரை மாலெ கட்சி ஜார்க்கண்ட் மாநிலம் நெடுக, பெருமுதலாளித்துவச் சூறையாடலுக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக, மக்கள் உரிமைகளுக்காக, ஒரு மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறது

šššššššššššššššš
தலையங்கம்

அதிமுக தலைவரும் முதலமைச்சருமான ஜெயலலிதா கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, ‘அடுத்த பிரதமரை தீர்மானிக்கிற தருணம் கனிந்து கொண்டிருக்கிறதுஎன்று கூறியிருக்கிறார். அடுத்த பிரதமர் நான்தான் என்று சொல்லாததற்காக இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்! எப்படியும் மத்திய ஆட்சியில் பங்குபெற்றே தீருவது என்ற அவரது தீர்மானம் அவரது பேச்சில் பளிச்சிடுகிறது. அனைத்திந்தியஎன்றே துவங்கும் நம் பெயருக்கேற்ப தேசிய அரசியலிலும் ஒரு பொற்காலத்தை 1998லேயே உருவாக்கினோம். வாஜ்பாயை பிரதமராக்கி பாரதிய ஜனதா கட்சிக்கு முதன் முதலாக இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றதுஎன்று வரலாற்றை நினைவுபடுத்தியுள்ள அம்மா, இப்போதும் அதனை மேலும் பலப்படுத்திஇந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறதுஎன அவரது அரசியல் வியூகத்தை தொண்டர்களுக்கு காட்டியிருக்கிறார். இதற்குரிய காரணத்தையும் சொல்லியிருக்கிறார்

šššššššššššššššš
அம்பலம்

பாலசுந்தரம்

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கூடிய அதிமுக முதல் செயற்குழு பொதுக்குழுவில் 25 ‘வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பிப்ரவரி 24 அன்று வரவிருக்கும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை (முதல் தீர்மானம்) வாழ்த்தி, அவர் எடுக்கிற அனைத்து முடிவுகளுக்கும் உறுதுணையாக இருக்க சூளுரைத்தது; ஏழு மாதகால ஆட்சியின் சாதனைகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து 18 தீர்மானங்கள், மத்திய அரசைக் கண்டித்தும், சில கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரே ஒரு தீர்மானம் (தீர்மானம்3) அதிமுகவை ஆட்சிக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறது. ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் மகத்தான ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது முதலாவது தீர்மானமாக இருந்திருக்க வேண்டும் ஆனால் அதிமுகவுக்கு ஜெயலலிதாதான் முதல், இரண்டாவது. மக்கள் மூன்றாவது நான்காவதுதான்

šššššššššššššššš
நாட்டுநடப்பு


n உத்தரபிரதேசம், உத்தர்கண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்கள் சட்டமன்ற தேர்தல்களை சந்திக்கின்றன. தேர்தல் ஆணையம் கடும் குளிரால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை கவனத்தில் கொள்ளாமல் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. ஜனவரி26 குடியரசு தினம் என்றால் ஜனவரி 25 வாக்காளர் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு, மூலதன கூட்டத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கும் நம்பகமான மாற்றுக்கள் இல்லை

šššššššššššššššš
அறைகூவல்

கே.ஜி.தேசிகன்

விஷம் போல் ஏறும் விலைவாசி, தாழ்ந்த மட்டத்தில் கூலி, பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், பாதாளத்திற்கு செல்லும் வாழ்க்கை, சமூக பாதுகாப்பு பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்ற, போராட்டங்களை ஒடுக்குகின்ற மத்திய மாநில அரசுகள்

šššššššššššššššš
மாநாடு


08 - 09 பிப்ரவரி 2012, விஜயவாடா, ஆந்திரா

சகோதரிகளே,

நாம் 21ம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டில் இருக்கிற இந்த நேரத்தில், பெண்கள்அதிகாரமடைந்து விட்டார்கள்’. அவர்களுக்கு முன்னெப்போதையும்விட பெரிய வாய்ப்புகள் இப்போது இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொடூரமான எதார்த்தத்தை சொல்கிறது. இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற ஆண் பெண் விகிதாச்சாரம், சுதந்திரத்திற்கு பிந்தையகால கட்டத்தில் மிகவும் குறைந்ததாகும்

šššššššššššššššš
மாநாடு


சேலம் மாவட்ட கட்சியின் இரண்டாவது மாநாடு ஜனவரி 1 அன்று நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ச்நதிரமோகன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். தோழர்கள் புஷ்பா, கோபி, செல்வராஜ், வந்தேமாதரம், முருகேசன் ஆகியோர் கொண்டு தலைமைக் குழு மாநாட்டை வழிநடத்தியது. 38 பிரதிநிதிகளும் 8 பார்வையாளர்களும் கலந்துகொண்டனர்

šššššššššššššššš
கல்வி

லெனின்

பல அம்சங்களில் நாம் -ஸ் யுடன் உடன்படவில்லை. குறிப்பாக நாம் வலியுறுத்தியுள்ளவையுடன் உடன்படவில்லை. இவை தெளிவாகக் காட்டுவதாவது: நமது தேர்ச்சிநயமின்மை குறித்து (சிந்திக்கும் ஒவ்வொருவரையும் போலவே) -ஸ் அலுத்துக் கொண்டாலும் இந்த சகிக்கவொண்ணாத நிலைமையிலிருந்து மீளும் வழியை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை; காரணம்பொருளாதாரவாதம்அவரை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது

šššššššššššššššš
மேற்கு வங்கம்


மம்தாவை ஜனநாயக மாற்று என நம்பிய மாவோயிஸ்டுகள் மற்றும் சில இடதுசாரி அறிவாளிகள் இப்போது கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கிஷன்ஜியை மோதல் படுகொலைக்கு உள்ளாக்கியதோடு, 500 அரசியல் கைதிகளுக்கு சிறைக்கதவுகளைத் திறக்கவும் மம்தா அரசு மறுக்கிறது

šššššššššššššššš
சிறப்புக் கட்டுரை


ஜி.ரமேஷ்

ஒழுங்கா சிகிச்சை தரமாட்டாங்க. பணத்தை மட்டும் நல்லா கறந்துடுவாங்க. போட்டது சரிதான். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா? அரசாங்க டாக்டரை தனியாக மருவத்துவமனை நடத்த அனுமதிக்கக் கூடாது. டாக்டர் என்ன செய்ய முடியும். மருத்துவர்களும் மனிதர்கள்தானே

šššššššššššššššš
நாட்டுநடப்பு


தாராளவாத கொள்கைகளை பின்பற்றியது, சர்வதேச வல்லரசாக மாறுவதை நோக்கிய துரித ஓடுகளத்தில் இந்தியாவை நிறுத்தியுள்ளது என்று பிரதமர் மன்மோகன் நம்மை நம்பச் சொல்கிறார். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அவர் சொல்வது பொய் என்று சொல்கின்றன; பசி, அடிப்படைக் கல்வி ஆகிய விசயங்களில் இந்தியாவின் நிலை உலகிலேயே மிகவும் மோசமானதாக உள்ளதாகச் சொல்கின்றன

šššššššššššššššš
நாட்டுநடப்பு

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்கள்


ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கின்றன. எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் சந்தர்ப்பவாத, வெளிவேட முகத்தை அப்பட்டமாக வெளியே காட்டுவதில் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளுகிற கட்சிகள், தேர்தல்களில் ஒருதூய்மையான’முகத்தை காட்டும்பொருட்டு, கறைபடிந்த தலைவர்கள் என்கிற சங்கடம் தரக்கூடிய தங்கள் சுமைகளை கழற்றிவிட முயற்சி செய்கிறபோது, போட்டி கட்சிகள் அதே கறைபடிந்த தலைவர்களை இணைத்துக்கொள்ள போட்டியிடுகின்றன

šššššššššššššššš
களம்


சென்னையில் ஜனவரி 11 மற்றும் 12 தேதிகளில் ஏஅய்சிசிடியு மாநில மாநாட்டு பிரச்சாரத்தினூடே நிவாரண நிதி மற்றும் பொருட்கள் திரட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. ஏஅய்சிசிடியு விடுத்த இந்த அழைப்பு, பிரிக்கால் தொழிலாளர் ஆலைவாயில் கூட்ட செய்தி, புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் சென்று வந்த குழுவினரின் சார்பில் கட்சி மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம் வெளியிட்ட அறிக்கை ஆகியவை அனைத்து சங்கங்களின் கிளைகள் மற்றும் கட்சி முன்னணிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டன. 2 மணி நேரத்தில் 5000 துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன

šššššššššššššššš
களம்



šššššššššššššššš

Search