அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக ஆறாவது தேசிய மாநாடு நோக்கி
08 - 09 பிப்ரவரி 2012, விஜயவாடா, ஆந்திரா
சகோதரிகளே,
நாம் 21ம் நூற்றாண்டின் இரண்டாவது
பத்தாண்டில் இருக்கிற இந்த நேரத்தில், பெண்கள் ‘அதிகாரமடைந்து விட்டார்கள்’. அவர்களுக்கு முன்னெப்போதையும்விட
பெரிய வாய்ப்புகள் இப்போது இருக்கின்றன
என்று சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில்தான்
மக்கள் தொகை கணக்கெடுப்பு கொடூரமான
எதார்த்தத்தை சொல்கிறது. இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற ஆண்
பெண் விகிதாச்சாரம், சுதந்திரத்திற்கு பிந்தையகால கட்டத்தில் மிகவும் குறைந்ததாகும்.
ஒரு சமூகத்தில் பெண்ணாகப் பிறப்பது
தடுக்கப்படுகிறது என்று சொன்னால், பெண்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது. பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. பத்தாயிரக்கணக்ககான பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்படுகிறார்கள் என்பதை காவல்துறை பதிவேடுகள்
காண்பிக்கின்றன. 25,000க்கும்
மேற்பட்டவர்கள்
வன்புணர்ச்சிக்கு
ஆளாக்கப்படுகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். திராவகத்தை வீசுவது, பாலியல்
தொழிலுக்காக பெண்களை கடத்திச்செல்வது, தேசிய தலைநகர் டெல்லியில் பெண்களை
வன்புணர்ச்சி செய்து கொலை செய்வது, அய்தராபாத், சென்னை, பெங்களூரு போன்ற
இடங்களில் துன்புறுத்தல்கள், இவையெல்லாம்
பத்திரிகைகளில் கூட வராமல் சாதாரணமாக
நடைபெற்று வரும் சம்பவங்களாகும்.
உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் ஆட்சி
அதிகாரத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் வன்புணர்ச்சி செய்வது தங்கள்
அதிகாரத்தின் சிறப்புரிமைகளில் ஒன்று என்று
நினைப்பதாக தெரிகிறது. பஞ்சாபில் ஒரு
பஞ்சாயத்து தலைவர் பொது இடத்தில் ஒரு
ஆசிரியையை அடிக்கிறார். அதற்கு எதிராக
முதலமைச்சர் முன் எதிர்ப்பை தெரிவித்த
பெண் ஆசிரியர்கள் மீது காவல்துறை தடியடி
நடத்துகிறது. காஷ்மீரில் இருந்து மணிப்பூர் வரை ஆயுதப்படைகளால் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அய்ரம் சர்மிளா கடந்த 11 ஆண்டுகளாக பட்டினிப்போர் நடத்தி வரும்போதும், ஆயுதப் படை
சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்துசெய்ய
மத்திய அரசு மறுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் தனிப்பட்ட வன்முறை
பொறுத்தவரை, அதிகாரத்தில் இருப்பவர்கள்
பெண்கள் மீதான வன்முறையை தங்களுக்கான ‘சிறப்பு அதிகாரமாக’ கருதுகிறார்கள்.
பெண்கள் ஆணையம் போன்ற நிறுவனங்களுக்கு சொற்ப அதிகாரமே உள்ளது. உயர்
பதவிகளில் சில பெண்கள் இருப்பது உண்மைதான், ஆனால் பெண்களுக்கான இட
ஒதுக்கீடு நிறைவேறாமல் இருக்கும்போது, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும்
பெண்கள் மிக்சிறிய சிறுபான்மையாக இருக்கும்போது, இந்த சில பெண்கள், பெண்கள்
விரோத அதிகார இயந்திரத்தின் அங்கமாகவே
இருக்க முடியும்.
உலகமயமாக்கக் கொள்கைகள், கட்டுக்கடங்காத விலை உயர்வு மற்றும் எல்லா மட்டங்களிலும் நடைபெறுகிற மிகப்பெரிய
ஊழல் என்பதில்தான் முடிந்திருக்கிறது. விலை உயர்வு மற்றும் வீட்டுவசதி, பொதுவிநியோகம்
ஊரக வேலை போன்ற நலத்திட்டங்களில்
ஊழலால் பெண்களே மிகக் கொடிய
பாதிப்பை சந்திக்கிறார்கள்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி
முதலீடு, சிறு வியாபாரிகளை அச்சுறுத்துகிறது. சிறு கடைகள் நடத்தும் பெண்களும், தங்கள்
பிழைப்புக்காக சாலை ஓர கடைகளில் வியாபாரம் செய்யும் பெண்களும் இதில் குறிப்பிடத்தக்க பிரிவினராக இருப்பர். பெண்களின் வாழ்வதாரமாக முன்னிறுத்தப்பட்ட சுய
உதவிக் குழுக்ககள் சுரண்டல் கூடங்களாக
மாறி விட்டன. ஆந்திராவில் சுய உதவிக்குழு
பெண்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையில் பெண்கள்
தொழிலாளர்களாக வேலையில் சேர்கிறார்கள். ஆனால் தினக்கூலியாக ஒப்பந்தத்தில், பாதுகாப்பில்லாத, குறைந்த கூலி பெறும், அதாவது குறைந்த சம்பளத்தில் அதிகம்
வேலை வாங்கி சுரண்டலுக்கு ஆளாக்கப்படும். அத்தகைய வேலையாக அவை இருக்கின்றன. பாதுகாப்பில்லாத வேலை பெண்களை
அதிகரித்த அளவில் பணியிடத்தில் பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய சூழலை
உருவாக்குகிறது,
பெண்கள் அவர்களாகவே பொது வெளிகளிலும், போராட்டங்களிலும் அறுதியிட்டு
எழும்போது அவர்களுடைய சுதந்திரம் நேரடி
தாக்குதலுக்குள் ஆளாகிறது. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ்க்கை துணையை
தேடிக் கொள்ளும்போது கட்டப் பஞ்சாயத்துக்கள் அவர்களுக்கு மரண தண்டனை
வழங்குகின்றன. படிக்கப் போகும் பெண்களையும், தங்கள் விருப்பப்படி ஆடை அணியும்
பெண்களையும் தாக்கிவிட்டு ராம்சேனா
போன்ற அமைப்புகள் தண்டனை எதுவும்
இன்றி தப்பி விடுகின்றனர். பெண்கள் தவறான
ஆடை அணிவதால்தான் பிரச்சனை என்று
பழிசுமத்தி பெண்கள் மீதான வன்முறையை
காவல்துறையினர் நியாயப்படுத்துவது சர்வசாதாரணமாகிவிட்டது. பெண்கள் மீதான
வன்முறையை நியாயப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக ‘நடத்தைகெட்ட நடை’ என்ற
எதிர்ப்பு நிகழ்ச்சிக்காக பெண்கள் முயற்சித்தபோது, காவல்துறை அதை நடக்க விடாமல்
தடுத்தது.
வன்புணர்ச்சியாளர்களுக்கு தண்டனை கேட்டு, சீருடை அணிந்த ஆண்களின் வன்முறையை எதிர்த்து, நிலம் மற்றும் வளங்களை
பெருநிறுவனங்கள் அபகரிப்பதற்கு எதிராக, காப் பஞ்சாயத்துக்கள், ஸ்ரீராம்சேனே மற்றும்
பஞ்ரங்தள் அமைப்புகளை மீறி, கடுமையான
விலை உயர்வு மற்றும் நுண்நிதி நிறுவனங்களின்
சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் மூலம், பெண்கள் தங்களது துணிச்சலான போராட்டத்தை, இப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டு தொடர்கிறார்கள்.
பெண்கள் எல்லா முனைகளிலும் போராடுகிறார்கள். தங்களது உரிமைகளை பாதுகாக்க
மட்டுமின்றி எல்லா மக்கள் இயக்கங்களிலும்
முன்னணியில் இருக்கிறார்கள்.
பெண்கள் கழகம் தனது 6வதுதேசிய
மாநாட்டை 2012 பிப்ரவரி 08 - 09 தேதிகளில்
விஜயவாடாவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
வன்முறையையும் வன்புணர்ச்சியையும்
நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம். கவுரவம், வேலை, சுதந்திரம் ஆகியவற்றை நாம் போராடி வெற்றி கொள்வோம்
என்பதே நமது முழக்கம்.
முற்போக்கு பெண்கள் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்து பெண்கள் இயக்கத்தை பலப்படுத்த உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். பெண்கள் தங்கள் சுதந்திரத்திற்காகவும், உரிமைக்காகவும் இணைந்து போராடிக்
கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் நீங்களும்
இணையுங்கள்.
தமிழில்: தேசிகன்