கூடுதல்
ரேசன்
கடை
கோரி
சாலை
மறியல்
போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம்
அருகில் உள்ள நல்லூர் ஊராட்சியில் மக்கள்
தொகைக்கு ஏற்ப ரேசன் கடைகள் இல்லை. 2000 குடும்பங்கள் உள்ள 13 மற்றும் 14 வார்டுகளில் ஒரே ஒரு நியாயவிலைக் கடை மட்டுமே
உள்ளது. இதனால் ரேசன் பொருட்கள் வாங்குவதில் பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு
உள்ளாவதுடன் அவர்களுக்கு தரப்பட வேண்டிய ரேசன் பொருட்களும் முழுமையாக
விநியோகிக்கப்படாத நிலை உள்ளது.
பகுதியில் உள்ள 1100 ரேசன் அட்டைகள்
உள்ளன. ஆனால் 800 அட்டைகளுக்கான
பொருட்கள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக அதிகாரிகள் சொல்கின்றனர். 300 அட்டைகளுக்கான பொருட்கள் வேறு எங்கோ திருப்பிவிடப்படுகின்றன.
இந்த முறைகேடுகளைக் கண்டித்தும்
பகுதியில் கூடுதலாக மற்றுமொரு ரேசன் கடை
அமைக்கப்பட வேண்டும் என்று கோரியும்
பிப்ரவரி 6 அன்று செங்குன்றத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
அம்பேத்கர் நகர், பெருமாள்அடிபாதம், அன்னை இந்திரா நகர் பகுதி மக்களுக்கு
நிலுவையில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்
இந்தப் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
300 பேர் கலந்துகொண்ட ôலை மறியல்
போராட்டத்திற்கு மாலெ கட்சி நல்லூர்
உள்ளூர் கமிட்டிச் செயலாளரும் 14 வார்டு
ஊராட்சி மன்ற உறுப்பினருமான தோழர் வாசு
தலைமை தாங்கினார். முற்போக்கு பெண்கள்
கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் சாந்தி, கட்டுமான தொழிலாளர் சங்க மாநிலச்
செயலாளர் தோழர் ராஜா, அவிதொச நல்லூர்
ஊராட்சிக் கிளைத் தலைவர் தோழர் வேல்பாலா மற்றும் பகுதி முன்னணிகள் சாலை
மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர்
எஸ்.ஜானகிராமன் கண்டன உரையாற்றினார்.
முறையான புயல்
நிவாரணம் கோரி
மாலெ கட்சி, அவிதொச
போராட்டங்கள்
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதில் முறைகேடும் நிவாரண நிதி கேட்ட இளைஞர்கள் மீது
பொய்வழக்கு போட்ட அதிகாரிகளைக் கண்டித்தும் நிவாரண நிதியை அதிகப்படுத்தக்
கோரியும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் ஜனவரி 27 அன்று ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்கள்
தோழர்கள் இளங்கோவன், அம்மையப்பன்
பகுதி தலைவர்கள் புலவேந்திரன் லெனின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். நிவாரண நிதி தற்போது வழங்கப்படுகிறது. மாலெ கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு முன்
இப்பகுதியில் குறைவாக அதாவது ரூ.2000 வழங்கப்பட்டது. இந்த நிதியிலும் கமிஷன்
பெற்ற அதிகாரிகள், ஆளும் கட்சியினர் மாலெ
கட்சியின் போராட்டத்துக்குப் பின் பெற்ற
கமிஷனை திரும்பி மக்களிடமே தந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில்
முறையான புயல் நிவாரணம் வழங்கிட கோரி
அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்
சங்கமும் அகில இந்திய விவசாயிகள் மகாசபாவும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கோபாலகிருஷ்ணன் தலைமை ஏற்றார். கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் கண்டன
உரையாற்றினார்.
பிப்ரவரி 5 அன்று உளுந்தூர்பேட்டை
புயல் நிவாரண உதவிகளை ஏற்றத்தாழ்வாக
வழங்கப்படுவதைக் கண்டித்தும், இதற்குக்
காரணமான அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க கோரி கட்சியும் ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர்
தோழர் கலியமுர்த்தி தலைமை தாங்கினார். மாலெ கட்சி மாவட்ட செயலாளர் தோழர்
வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.
களச் செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர்
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் அரசு தாலுக்கா சுகாதார நிலையம்
ஏற்கனவே நெருக்கடியில் செயல்பட்டு வந்தது. இம்மருத்துவமனையை தரம் குறைத்து
ஆரம்ப சுகாதார மருத்துவமனையாக அரசு அறிவித்ததை கண்டித்து பிப்ரவரி 6 அன்று
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழர் விஜயகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்
மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி பங்கேற்று பேசினார்.
புயல்
நிவாரணப்
பணிகள்
தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி மக்களுக்கு
துயர்துடைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கான நிவாரண நிதி திரட்டும் வேலைகளில்
சென்னை, கோவை, திருநெல்வேலி, நாமக்கல், சேலம் ஏஅய்சிசிடியு தோழர்கள் பல்வேறு
போராட்டங்களோடு ஈடுபட்டார்கள். ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர் தோழர்கள்
நிவாரண நிதியாக வழங்கினர். மாலெ கட்சி
மத்திய கமிட்டி ரூ.1 லட்சம் அளித்தது.
இந்த நிவாரண நிதியை பயன்படுத்தி
புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் பகுதிகளில்
மிகவும் பாதிக்கப்பட்ட கிராமப்புற வறியவர்
களுக்கு உதவி பொருட்கள் வழங்கும் இயக்கம்
பிப்ரவரி 09, 10, 11 தேதிகளில் நடைபெற்றது.
மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர்
பாலசுந்தரம், புதுச்சேரி மாநிலச் செயலாளர்
தோழர் பாலசுப்பிரமணியன், மாநில கமிட்டி
உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் ஆகியோர்
பிப்ரவரி 9 அன்று புதுச்சேரியில் கைத்தறி நெசவாளர்கள் குடியிருக்கும் பகுதியிலும், மிகவும்
பாதிக்கப்பட்ட மற்றொரு பகுதியிலும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 12 பொருட்கள் அடங்கிய பைகளை விநியோகம்
செய்தனர்.
கைத்தறி நெசவாளர்களுடைய கருவிகளும் முழுமையாக புயலால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இந்தச் சமூகம் மீண்டெழுவதற்கு, திரும்ப அவர்களுடைய வேலையை
வருமானத்தை ஈட்டுவதற்கு இன்னும்
எத்தனை காலம் ஆகும் என தெரியாத
நிலையில் உள்ளனர்.
புதுச்சேரி தோழர்கள், இந்த மக்களின்
அடிப்படை வாழ்வாதாரமான தறிப்பட்டறை
நிறுவித் தரக் கோரி அரசாங்கத்தை எதிர்த்து
போராட்டங்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் வாழ்வாதாரத்தை உருவாக்கித்தர வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட நெசவாளர்களின் போராட்டங்களுடன்
மாலெ கட்சி என்றும் நிற்கும் என உறுதியளித்தனர்.
பிப்ரவரி 10 அன்று விழுப்புரம் மாவட்டம்
சேந்தநாடு ஒன்றியத்தில் மட்டிகை, வானம்பட்டு ஊராட்சிகளில் புயலால் பாதிக்கப்பட்ட
2000 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதே நாளில் திருநாவலூரில் 2000 குடும்பங்களுக்கு புயலால் பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பிப்ரவரி 11 அன்று கடலூர் மாவட்டம்
சென்னிக்குப்பம் நகராட்சியில் அங்குள்ள
அரசுப் பள்ளியில் தோழர் ஜகன் ஏற்பாடு
செய்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்
முஸ்தபா மற்றும் தோழர் ஜோசப் உட்பட
பகுதி முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர். சிற்றூர், ஆண்டிப்பள்ளம் பகுதிகளில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 400 மரக்கன்றுகள்
வழங்கப்பட்டன.
காட்டுமன்னார்குடியில் கூட்டம் நடத்த
காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அங்குள்ள கலைமகள் பள்ளியில் நடத்தப்பட்ட
நிகழ்ச்சி ஒன்றில் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டுப்
புத்தகங்கள், பை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாணவர்கள் மற்றும்
பெற்றோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரத்திலும் கடலூரிலும் நடந்த
இந்த நிவாரணப் பணிகளில் மாலெ கட்சி
மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சேகர், வெங்கடேசன், அம்மையப்பன், டிகேஎஸ்
ஜனார்த்தனன், சந்திரமோகன், மாணவர் கழக
மாநிலப் பொதுச் செயலாளர் தோழர்
ராமேஷ்வர் பிரசாத், இளைஞர் கழக மாநிலத்
தலைவர் தோழர் தனவேல் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
விசைத்தறி
தொழிலாளர்
வேலைநிறுத்தப்
போராட்டம்
குமாரபாளையத்தில் நூறு சதம் கூலி
உயர்வு கேட்டு ஜனவரி 20 முதல் விசைத்தறி
தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
அடைந்ததை அடுத்து பேச்சுவார்த்தைக்கு வர
மறுத்த முதலாளிகளை மீண்டும் பேச்சு
வார்த்தைக்கு வரவழைக்க பிப்ரவரி 9 அன்று
ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர்
எ.கோவிந்தராஜ் தலைமையில் மறியல்
போராட்டம் நடத்தப்பட்டது. இது ஒரு வார
காலத்துக்குள் இதே கோரிக்கை மீது நடக்கும்
இரண்டாவது சாலை மறியல் போராட்டம்.
முதல் முறை நடந்த மறியல் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன்
சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பிய காவல்துறை
இரண்டாவது முறை அவர்களை கைது செய்தது. அவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி
அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்களை விடுவிக்கக் கோரி சாலை
மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள்
அனைவரும் பெண்கள். அவர்களையும் கைது
செய்து, குடிநீர் வசதியோ, கழிப்பிட வசதியோ
இல்லாத ஓர் இடத்தில் அவர்களை அடைத்தது. அவர்களுக்கு உணவும் தரவில்லை.
குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தனியாக அடைக்கப்பட்ட பெண்களை
சந்தித்து அவர்களை 15 நாட்கள் சிறையில்
அடைக்கப் போவதாக அச்சுறுத்தி, இனி சாலை மறியலில் ஈடுபடவில்லை என்றால் அவர்களை
விடுதலை செய்வதாகச் சொல்லி பின் விடுவித்துள்ளார்.
அவர்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட
தோழர்களுக்கு அந்தப் பெண் தோழர்கள்
காவல்நிலைய ஆய்வாளரின் துன்புறுத்தலுக்கு
ஆளாகும் செய்தி கிடைத்தவுடன் அடைக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினரின் அத்து
மீறலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். தோழர் வெங்கடாசலம் தலைமையில் அவர்களைப் பார்க்க வந்த தோழர்களும் கண்டன
முழக்கங்கள் எழுப்பினர். மறுநாள் வட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
செய்யப்பட்டது.
இரவு 7.30 மணிக்கு மேல் தனித்தனியாக
கைது செய்யப்பட்டு வேறுவேறு இடங்களில்
அடைத்து வைக்கப்பட்டு இருந்த தோழர்கள்
விடுவிக்கப்பட்டனர்.
வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. 2000 தொழிலாளர்கள் இருக்கிற ஒரு
பகுதியில் உடனடியாக 12 சத உயர்வு அளிப்பதாகவும் அடுத்து பேசிக் கொள்ளலாம் என்றும்
முதலாளிகள் உறுதியளித்ததன் பேரில் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர். இன்னொரு பகுதியில் 25 சத உயர்வு அளிப்பதாக முதலாளிகள் எழுத்துபூர்வமாக ஒப்புக்
கொண்டதால் தொழிலாளர்கள் வேலைக்குத்
திரும்பியுள்ளனர். மற்ற இடங்களில் வேலை
நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.
எ.கோவிந்தராஜ்
ஏனம் தொழிலாளர்
மீதான
காவல்துறையின்
தாக்குதலுக்கு
எதிராக
ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி ஏனாமில் ரிஜென்சி செராமிக் ஆலையில் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக்
கோரி போராடிய தொழிற்சங்கத் தலைவர் தோழர் முரளிமோகன் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்குப் பிறகு 7 தொழிலாளர்களை படுகாயத்துக்குள்ளாக்கிய காவல்துறையினரின்
துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதை கண்டித்தும்
பிப்ரவரி 6 அன்று ஏஅய்சிசிடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்
தோழர் பி.பெருமாள் தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் பழனிவேல் கண்டன
உரையாற்றினார். ஆன் லோடு கியர்ஸ், சாய் மிர்ரா, இன்னோபார்ம்ஸ், ஸ்டாண்டர்டு கெமிக்கல்ஸ், ஜெய்
இன்ஜினியரிங் கிளைகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.