COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, February 16, 2012

Feb-2-10

மாநாடு

ஊழலுக்கு எதிராக, கல்வி தனியார்மயத்திற்கு எதிராக

கல்வி வியாபாரமயத்திற்கு எதிராக, கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக

அகில இந்திய மாணவர் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு

ஊழலுக்கு எதிராக, கல்வி தனியார்மயத்திற்கு எதிராக, கல்வி வியாபாரமயத்திற்கு எதிராக, கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக அகில இந்திய மாணவர் கழகத்தின் 2வது மாநில மாநாடு சேலத்தில் பகத்சிங் - சந்திரசேகர் அரங்கத்தில் பிப்ரவரி 4 அன்று நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தோழர்கள் வெங்கடாசலம், ராஜசங்கர், கோமதி ஆகியோர் தலைமை குழுவாகவும் தலைமைக் குழுவுக்கு உதவிக் குழுவாக தோழர்கள் ஷில்பா, மற்றும் கோபால் ஆகியோரும் செயல்பட்டனர்.

மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் துவக்க உரையாற்றினார். மாநாட்டு அறிக்கையை தோழர் கோமதி வாசித்தார். புரட்சிகர இளைஞர்கள் கழக தோழர்கள் தனவேல் (கடலூர்), ராமசந்திரன் (கோவை), கோபால் (கரூர்), இளவரசன் (தஞ்சை) வாழ்த்துரையாற்றினர்.

தோழர்கள் ராஜசங்கர், ரமேஷ்வர் பிரசாத், மலர்விழி, சீதா, மைக்கேல், கோபால் உட்பட 25 பிரதிநிதிகள் அறிக்கை மீது கருத்து தெரிவித்தனர்.

தோழர் வெங்கடாசலம் தொகுப்புரை வழங்கினார். டெல்லி மாநில செயலாளர் தோழர் சன்னிகுமார் சிறப்புரையாற்றினார். மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன் மொழிபெயர்ப்பு செய்தார். அகில இந்திய துணை தலைவர் தோழர் பாரதி நிறைவு உரையாற்றினார்.

மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சந்திரமோகன், கோவிந்தராஜ், வெங்கடேசன், சேலம் மாவட்ட மாலெ கட்சி செயலாளர் தோழர் மோகனசுந்தரம், நுகர்பொருள் வாணிபக் கழக ஜனநாயக கடைகள் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாடு 21 பேர் கொண்ட மாநிலப் பொதுக் குழுவை தேர்வு செய்தது. தோழர்கள் மலர்விழி, ரமேஷ்வர் பிரசாத், சத்தியகிருஷ்ணன், மைக்கேல், சீதா, கோமதி, முகேஷ்குமார், ராஜ், பாபு, பாரதி, வெங்கடாசலம், ராஜசங்கர், கோபால், பாபு, சதீஷ், கவுதம், விவேக், உதயா, ரமேஷ், பிரபாகர், கனகராஜ் ஆகியோர் கொண்ட மாநிலக் குழு, தோழர் மலர்விழியை மாநிலத் தலைவராகவும், தோழர் ரமேஷ்வர் பிரசாத்தை மாநிலப் பொதுச் செயலாளராகவும், தோழர்கள் சத்திய கிருஷ்ணன், மைக்கேல் ஆகியோரை மாநில துணை தலைவர்களாகவும், தோழர் சீதாவை மாநில செயலாளராகவும் தேர்வு செய்தது.

திறன்வாய்ந்த லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், 2ஜி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு மன்மோகன் அரசே உடனடியாக பதவி விலக வேண்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூடப்பட வேண்டும், கல்வி உரிமை மசோதாவை நிறைவேற்றும் அதே நேரம் அனைத்து மாணவர்களுக்கு தரமான இலவசக் கல்வி வழங்க வேண்டும், தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், கல்வி வியாபாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும், கல்விக்கு பட்ஜெட்டில் 10% சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர் பேரவை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், கட்டாய நன்கொடை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும், எஸ்.சி., பி.சி., மாணவர் விடுதிகளை சீர்ப்படுத்தி, சுகாதாரமான அறை, உணவு அளித்து, உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், வேலை உரிமையை அடிப்படை சட்டமாக்க வேண்டும், வேலையற்றோர் உதவித் தொகையை ரூ.5000மாக உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளிட்ட தீர்மானங்களை மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத் முன்வைத்தார்.

Search