சேலம் மாவட்ட இரண்டாவது கட்சி மாநாடு
சேலம் மாவட்ட கட்சியின் இரண்டாவது மாநாடு ஜனவரி 1 அன்று நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ச்நதிரமோகன்
மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். தோழர்கள் புஷ்பா, கோபி, செல்வராஜ், வந்தேமாதரம், முருகேசன் ஆகியோர் கொண்டு
தலைமைக் குழு மாநாட்டை வழிநடத்தியது. 38 பிரதிநிதிகளும் 8 பார்வையாளர்களும்
கலந்துகொண்டனர்.
விவாதத்தில் பங்குபெற்ற பிரதிநிதிகள்
கட்சியை உறுதிப்படுத்துவது, வெகுமக்கள்
கம்யூனிஸ்ட் கட்சியாக வளர்த்தெடுப்பது ஆகியவற்றை வலியுறுத்திப் பேசினர். ஏஅய்சிசிடியுவை முதன்மை வெகுமக்கள் அமைப்பாக
வளர்ப்பது, அனைத்து வெகுமக்கள் அமைப்புக்களும் சேர்ந்து 41,500 உறுப்பினர்கள்
சேர்ப்பது என முடிவு செய்யப்ப்பட்டது.
13 பேர் கொண்ட மாவட்ட கமிட்டி
தேர்வு செய்யப்பட்டது. தோழர் மோகனசுந்தரம் மீண்டும் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன், மாநாட்டு
பார்வையாளர் தோழர் எம்.வெங்கடேசன்
வாழ்த்துரையாற்றினர்.