மேற்கு வங்கத்தில் போராட்டச் செங்கொடி
மம்தாவை ஜனநாயக மாற்று என நம்பிய
மாவோயிஸ்டுகள் மற்றும் சில இடதுசாரி
அறிவாளிகள் இப்போது கடும் அதிர்ச்சிக்கு
ஆளாகியுள்ளனர். கிஷன்ஜியை மோதல் படுகொலைக்கு உள்ளாக்கியதோடு, 500 அரசியல்
கைதிகளுக்கு சிறைக்கதவுகளைத் திறக்கவும்
மம்தா அரசு மறுக்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சி பாடம் கற்க மறுக்கிறது. டாடாவுக்கு சிங்கூர் நிலம் தந்த விசயத்தில் தோழர் பிரகாஷ் காரத், அரசியல்ரீதியான
தவறு, தவறான இடத்தை நிலம் கையகப்படுத்த தேர்வு செய்ததில்தான் ஏற்பட்டது
என்கிறார். அதாவது, திரிணாமூல் செல்வாக்கில் இருந்த, சிங்கூரில் நிலம் கையகப்படுத்தியதுதான் அரசியல் தவறாம். வங்கத்தை
தொழில்மயமாக்க முதலீடுகள் கொண்டுவர, மம்தாவால் முடியாது, மார்க்சிஸ்டுகளால்தான்
முடியும் என மார்க்சிஸ்ட் கட்சி சொல்கிறது. சபாஷ், சரியான போட்டி! ஆக, ஒரு விசயம்
தெளிவு. மார்க்சிஸ்ட் கட்சியின் தோல்வி நிச்சயமாய் இடதுசாரி அரசியலின் தோல்வி அல்ல. தனியாரின் எஎம்ஆர்அய் மருத்துவமனை
சாவுகள், சாராயச் சாவுகள், விவசாயிகள் தற்கொலை, மகராஹாட்டில் பெண்கள் மீது
துப்பாக்கிச் சூடு என மம்தா அரசின் மக்கள்
விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்தப் பின்னணியில் கொல்கத்தாவின்
ராணி ராஷோமணி அவென்யூவில், ‘நிலம்
வாழ்வாதாரம், ஜனநாயகம்’ என்ற முழக்கங்களோடு மாலெ கட்சி பல்லாயிரக்கணக்கானவர்களைத் திரட்டி ஓர் எழுச்சிமிக்க
இடதுசாரி பேரணியை நடத்தியது. மம்தா
கூட்டாளி காங்கிரஸ், மாநிலத்தில் மம்தாவை
எதிர்ப்பதாகவும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமூல், மத்திய அரசை எதிர்ப்பதாகவும் நாடகமாடுகின்றனர். மாலெ கட்சிப்
பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் காங்கிரஸ் மாநில அரசில் இருந்தும், திரிணாமூல் மத்திய அரசில் இருந்தும் விலக வேண்டியதுதானே
எனக் கேள்வி எழுப்பினார். வங்கத்தில் மீண்டும்
போராட்டச் செங்கொடிகள் உயர்கின்றன.