புதிய தேசிய சூழலில் அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்
n உத்தரபிரதேசம், உத்தர்கண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்கள் சட்டமன்ற தேர்தல்களை சந்திக்கின்றன. தேர்தல்
ஆணையம் கடும் குளிரால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை கவனத்தில் கொள்ளாமல்
தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. ஜனவரி
26 குடியரசு தினம் என்றால் ஜனவரி 25 வாக்காளர் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு, மூலதன கூட்டத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கும் நம்பகமான
மாற்றுக்கள் இல்லை.
n சட்டமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ், தான் ஊழல் எதிர்ப்பு சட்டம் கொண்டு
வரத் தயார் எனக் காட்டிக் கொள்ள லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தது. காங்கிரஸ், பாஜக கூட்டணிக் கட்சிகள் நிழல்
சண்டை போட்டு நாடகம் ஆடி லோக்பால்
மசோதாவைக் கொன்றுவிட்டன. காத்திருப்போர் பட்டியலில் பெண்கள் இட ஒதுக்கீடு
மசோதாவுக்கு அடுத்து, பரிதாபமாக லோக்பால்
மசோதா நிற்கும். லோக் ஆயுக்தா நிறுவனம்
மாநில அளவிலான ஊழல் எதிர்ப்பு நிறுவனம்
கொண்டுவருவது, மத்திய அரசின் உரிமை என்றும் நாடாளுமன்றம் சட்டம் கொண்டு வருவது
மாநில உரிமைகளில் கைவைப்பது என்று
சமாஜ்வாதி கட்சி, பகுசன் சமாஜ் கட்சிகள், கழகங்கள், இடதுசாரிகள் கூப்பாடு போட்டனர். இவர்களில் எவரும் தமது ஆட்சிக்காலத்தில் திறன்வாய்ந்த எந்த மாநில
அளவிலான லோக் ஆயுக்தா (ஊழல் எதிர்ப்பு) சட்டமும் கொண்டு வரவில்லை.
n 2011ல் உலகம் முழுவதும் பெருமுதலாளித்துவப் பேராசை, சூறையாடல், ஒடுக்குமுறை, விலைஉயர்வு, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள்
நடந்தன. இந்தியா, வரலாறு காணாத ஊழல்களைக் கண்டது. முதலாளித்துவக் கட்சிகள்
அனைத்துமே ஊழலில் திளைத்தன. சீற்றம்
கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியில்
ஏறத்தாழ ஓர் ஊழல் எதிர்ப்பு திருவுரு(அய்கான்) போல் அண்ணா ஹசாரே எழுந்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முதன்மைப் பற்றிப் பேசி, ஊழல் எதிர்ப்பு
போராட்டங்களைப் புறந்தள்ள எடுக்கப்பட்ட
முயற்சிகள் தோல்வியடைந்தன. நாடாளுமன்றத்தின் விருப்ப உறுதி என, ஊழல் எதிர்ப்பு
கோரிக்கைகளை ஏற்கும் நிர்ப்பந்தம், அய்முகூ
அரசுக்கும் முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கும் ஏற்பட்டது. ஆனால் இம்முறை லோக்பால்
மசோதா நாடாளுமன்றத்தில் படுகொலை
செய்யப்பட்டபோது, அண்ணா ஹசாரே
குழுவினர் எந்த திறன்வாய்ந்த எதிர்ப்பும்
இல்லாமல் முடங்கிப் போயினர்.
n அரபு வசந்தத்தை ஏகாதிபத்தியம் தன்
தேவைகளுக்கேற்ப பயன்படுத்தப் பார்க்கிறது. லிபியாவில் ஏகாதிபத்தியம் நுழைந்துவிட்டது. சிரியாவை அச்சுறுத்துகிறது. ஈரான் மிரட்டப்படுகிறது. அதேநேரம் வால் ஸ்ட்ரீட்டைக்
கைப்பற்றுவோம் இயக்கம், ஏகாதிபத்தியக்
கோட்டைகளுக்குள் கொண்டு வந்துள்ள
எதிர்ப்புக்கள் தொடர எல்லா வாய்ப்புக்களும்
உள்ளன.
n வோடாஃபோன் வழக்கில் தனிச்சொத்தின் புனிதத்தை, உயர் அந்தஸ்தை, மீண்டும்
ஒரு முறை உச்சநீதிமன்றம் மறுஉறுதி
செய்துள்ளது. கேமன் தீவுகளில் சொத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்று சொல்லி
இந்தியாவில் செயல்படும், வோடாஃபோன் நிறுவனத்துக்கு மூலதன ஆதாயங்கள் (கேபிட்டல்
கெயின்ஸ்) வரியில் இருந்து ரூ.11,000 கோடி
விலக்கு வழங்கப்பட்டுள்ளது. வட்டியுடன்
ரூ.2,500
கோடியை வோடாஃபோன் திரும்பப்
பெறும். பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் அகமகிழ்ந்துள்ளனர். நாக்கில்
எச்சில் ஊற இந்தியா என்ற வேட்டைக்காட்டை விழுங்க, பாயத் தயாராகிவிட்டனர்.
இந்தப் பின்னணியில்தான் சட்டமன்றத்
தேர்தல்கள் நடைபெறுகின்றன.
n அய்ரம் ஷர்மிளா, கொடூரமான ஆயுதப்
படைகள் சிறப்பு அதிகாரங்கள்சட்டத்தை ரத்து
செய்யக் கோரி, பல ஆண்டுகளாக போராட்டம்
நடத்தும் மணிப்பூரில், இக்கோரிக்கை மய்ய
நிகழ்ச்சிநிரலுக்கு கொண்டு வரப்படாமலே, தேர்தல் நடக்கிறது. மம்தா தேர்தல் ஆதாயம் பெற ஷர்மிளாவை சந்தித்தபோது சிக்கிக்
கொண்டார். எங்கள் கோரிக்கை பற்றி என்ன
சொல்கிறீர்கள் என ஷர்மிளா நேருக்குநேர்
கேட்க மம்தா சமாளித்துக் கொண்டு மணிப்பூரில் திரிணாமூல் ஆட்சிக்கு வந்தால்
கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்! கோவா, சுரங்க ஊழல்களாலும் அரசியல்
பச்சோந்திகளாலும் அவப்புகழ் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலிலும் அதே நிலைதான்
தொடர்கிறது.
n உத்தரபிரதேசத்தில் முதன்மையான
போட்டி மாயாவதிக்கும் முலாயமுக்கும்
இடையில்தான் நடக்கிறது. மூன்றாவது, நான்காவது இடங்களுக்காக காங்கிரசும்
பாஜகவும் போட்டியிடுகின்றன. மாயாவதி
அரசு மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு
ஆளாகி உள்ளது. கடைசி நேரக் களையெடுப்பில் பல அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். இந்த
வெளியேற்றம், புகார்களுக்கு வலு சேர்த்துள்ளது. பாஜக, முலாயம், காங்கிரஸ் கூட்டாளி
அஜித் சிங், குப்பைக் கூடையில் வீசியெறியப்
பட்டவர்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டனர். மாயாவதி, மக்கள் போராட்டங்கள்
வலுவாக கோரிக்கை எழுப்பாத நிலையில், மாநிலத்தை பல மாநிலங்களாகப் பிரிப்பதாகச்
சொல்லி, விசயத்தைத் திசைத்திருப்பப் பார்க்கிறார். மாலெ கட்சி, மக்கள் சார்பு வளர்ச்சிப்
பாதை என்ற மாற்றுத் திசைவழியுடன், தொடர்ந்து போராடும் இடதுசாரி அமைப்பு
என்ற அந்தஸ்துடன் 44 தொகுதிகளில்
போட்டியிடுகிறது.
உத்தர்கண்ட் மாநிலத்தில் இககமாலெ, இககமா, இகக தலா 5 இடங்கள் என 15 இடங்களில் தேர்தலை கூட்டாகச் சந்திக்கின்றன. மாலெ கட்சி, கார்ன் பிரயாக், சால்ட், தார்சூலா, லாங்குவா, ருத்ரபூர் தொகுதிகளில்
போராட்டக்காரர்கள் என அறிமுமானவர்களைத் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது. உத்தர்கண்டில் காங்கிரஸ் பாஜக, இரண்டுமே
நவதாராளவாத நிகழ்ச்சிநிரலை பின்பற்றும்
நிலையில், ஓர் இடதுசாரி போராடும் மாற்றை
வளர்த்தெடுக்க, கட்சி களம் காண்கிறது.
பஞ்சாபில் இகக மாலெயும் பஞ்சாப்
சிபிஎம்மும் 13 தொகுதிகளில் களம் காண்கின்றன. மாலெ கட்சி 7 இடங்களிலும் அகில
இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பில் அங்கம்
வகிக்கும் பஞ்சாப் சிபிஎம் 6 இடங்களிலும்
போட்டியிடுகின்றன. கூட்டாக தேர்தல்
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு
அமைப்புக்களுமே விவசாயத் தொழிலாளர்கள், உழைக்கும் விவசாயிகள் மத்தியில் தாம்
நடத்தும் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே தேர்தல்களைச் சந்திக்கின்றன.
இகக, இககமா, இந்த முறை, அகாலிதள
- பாஜக கூட்டணி அரசில் நிதியமைச்சராக
இருந்து, பின் விலகி புதுக்கட்சி துவங்கியுள்ள
முன்னாள் நிதியமைச்சர் மன்ப்ரீத் பாதல்
தலைமையில் தேர்தலைச் சந்திக்கின்றன. மன்ப்ரீத் முதல்வர் பாதலின் நெருக்கமான
உறவினர். மன்ப்ரீத் முதல்வராக வேண்டும், அவர் தலைப்பாகை நுனியை பிடித்துக்
கொண்டு கூடுதல் இடம் பெற வேண்டும் என
முயற்சிக்கின்றன. மன்ப்ரீத், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை வரவேற்றவர். நவதாராளவாத நிகழ்ச்சிநிரலை தீவிரப்படுத்துவதில், மன்மோகனுக்கும் மான்டெக்
சிங் அலுவாலியாவுக்கும் நெருக்கமானவர். ஆனால், இகக, இககமா அவரை, மதச்சார்பற்ற
அணியின் தளபதியாக்கிவிட்டனர். அவர்
அகாலி தளம், பாஜக கூட்டணியில் இருந்து
வெளியேறிய உடன் புனிதமானவராகி
விட்டார்.
5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் போக்கிலேயே, பிப்ரவரி 28 அகில
இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த முறை, இககமாலெ, ஏஅய்சிசிடியு, அவிதொச, இந்த நாடு பெருமுதலாளிகளுக்ககும், பணமூட்டைகளுக்கும், ஊழல்
அரசியல்வாதிகளுக்கும் சொந்தமானதல்ல, இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கே சொந்தமானது என முழங்கி, மக்கள் கோரிக்கைகளுடன் வேலை நிறுத்தத்தை வெற்றி பெறவைக்க தமது எல்லா வேலைப் பகுதிகளிலும்
அவற்றையும் தாண்டி கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.