லெனின்
பொருளாதாரவாதிகளின்
பக்குவமின்மையும்
புரட்சியாளர்களின்
அமைப்பும்
பொருளாதாரப்
போராட்டமே அரசியல்
கிளர்ச்சிக்கு
மிக விரிவாகச்
செயல்படுத்தத்தக்க
சாதனம், பொருளாதாரப்
போராட்டத்துக்கே
அரசியல்தன்மை
கொடுப்பது முதலியவைதான்
இன்று நம் பணி,
என்றெல்லாம் ரபோச்சியே
தேலோ அறைந்து கூறும்
கூற்றுக்களை நாம்
பகுத்தாய்ந்தோம்
அல்லவா? அவை நம்
அரசியல் பணிகளைப்
பற்றி மட்டுமல்லாமல்
அமைப்புத் துறைப்
பணிகளைப் பற்றியும்
ஒரு குறுகிய கருத்து
வெளியிடுகின்றன…
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
தலையங்கம்
40 கேட்கும்
ஜெயாவுக்கு 2004அய்
பரிசாகத் தருவோம்!
ஜெயலலிதா
தன் ரத்தத்தின்
ரத்தங்களிடம்
பிறந்தநாள் பரிசாக
நாற்பதுக்கு நாற்பது
கேட்கிறார்.
தமிழ்நாட்டில்
பல பிரிவு மக்களும்
ஜெயலலிதாவிடம்
பல விசயங்கள் கேட்கிறார்கள்.
(இந்தப் பதவி இன்னும்
எத்தனை நாட்களுக்குத்
தொடரும் என்று
தமிழக அமைச்சர்களும்
அதிகாரிகளும்
மனதுக்குள் கேட்கிறார்கள்).
விழுப்புரம்,
கடலூர் மாவட்டங்களில்
தானே புயலால் தாக்கப்பட்டு
வாழ்விழந்த மக்கள்
ரூ.2,500 வைத்து என்ன
செய்ய, எங்களுக்கு
கவுரவமான மறுவாழ்வு
நடவடிக்கைகள்
வேண்டும் எனக்
கேட்கிறார்கள்.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
சிறப்புக்
கட்டுரை
காம்ரேட்
காங்கிரஸ்
தலைமையிலான அய்முகூ
அரசு, அடி மேல்
அடி வாங்குகிறது.
உச்ச நீதிமன்றம்
2ஜி அலைக்கற்றை
ஊழல் வழக்கில்
மிகவும் கவனமாக,
பிரதமர் அலுவலகத்தை
மட்டும் குற்றம்
சொல்லி, பிரதமரைப்
போன்றவர் அப்படி
தவறு செய்திருக்க
மாட்டார் என, வினோதமாக
வாதிட்டு, வக்காலத்து
வாங்கி உள்ளது.
சிதம்பரம், இந்தச்
சுற்றில், குற்றவியல்
வழக்கிலிருந்து,
மயிரிழையில் தப்பிவிட்டார்.
அவரது கொள்கை முடிவுக்கும்,
ஏதோ ஓரிரு குற்றச்செயல்களுக்கும்
தொடர்பு இருப்பதாலேயே,
அவர் குற்றச் சதியில்
ஈடுபட்டதாகச்
சொல்ல முடியாது
என சிபிஅய் நீதிமன்றம்,
அவரை விட்டுவிட்டது.
இந்த வில்லங்கங்கள்
தாண்டி, தேசத்தின்
செல்வங்களைப்
பெரு முதலாளித்துவச்
சூறையாடலுக்கு
உட்படுத்தும்
அரசுக் கொள்கைகளை
உச்சநீதிமன்றம்
சாடியுள்ளது.
122 அலைக்கற்றை உரிமங்கள்
ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொலைத் தொடர்பு
சேவை நிறுவனங்கள்
ஊழல் மற்றும் மோசடியில்
ஈடுபட்டுள்ளதாகச்
சொன்ன உச்சநீதிமன்றம்,
அவர்களில்‘ஆதாயம்
பெற்ற சிலர், பங்குகளில்
மாற்றம் அல்லது
அந்நிய நிறுவனங்களில்
புது முதலீடு நுழைவு
என்ற பெயரால்,
தமது பங்குகளை
விற்று பிரும்மாண்டமான
லாபங்கள் ஈட்டியுள்ளனர்’
எனச் சாடியுள்ளது.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
கட்டுரை
எளிது எளிது,
பெரியதொரு முறைகேட்டை
சிறிதாக்குவது
எளிது!
மஞ்சுளா
அவ்வையும்
வள்ளுவனும் சேர்ந்து
அய்முகூ அரசாங்கம்
பற்றி எழுதினால்
வரும் குறளாத்திச்சூடி:எளிது
எளிது, பெரியதொரு
முறைகேட்டை சிறிதாக்குவது
எளிது; அதனி னும்
பெரிய முறைகேடு
செய்யப் பெறின்.
பெரியதொரு
முறைகேடு
பெரியதொரு
முறைகேட்டில்
அரசாங்கத்துக்கு
ரூ.1,76,000 கோடி இழப்பு.இந்தப்
பெரியதொரு முறைகேடு
‘முறைப்படுத்தப்பட’சில
முயற்சிகள் நடக்கின்றன.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
கவிதை
முழு விடுதலையின்
செங்கொடித் துடிப்பில்
தோழன் அப்பு ஜீவனாய்த்
துடிப்பான்!
இன்குலாப்
ஏதோ ஒரு நாள்
அக்டோபர் மாசத்தில்
ஏதோ ஒரு நாள்!
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
நாட்டுநடப்பு
ஜி.ரமேஷ்,
மஞ்சுளா
“ஒரு
ரூபாயில் ஒரு பைசா
மட்டுமே ஏழைகளுக்குச்
செல்கிறது. அரசு
திட்டங்களின்
பணம் ஏழைகளைச்
சென்றடைய வேண்டுமேயொழிய
இடைத்தரகர்களுக்கும்
அரசு அதிகாரிகளுக்கும்
போகக் கூடாது”.
“சுறா மீன்களைப்
பற்றி நமக்குத்
தெரியும். இந்த
அமைப்பு முறைக்குள்
மாமிசம் தின்னும்
மீன்களும் உள்ளன
என்பதை மக்கள்
மறந்து விட்டார்கள்”.
இப்படி சொன்னது
இந்திய உச்சநீதிமன்றம்தான்.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
அம்பலம்
மக்களை
வஞ்சிப்பதில்
அமெரிக்காவை முந்துகிறது
இந்தியா
இந்தியாவில்,
எங்கும் எதிலும்
அரசுக் கட்டுப்பாடு,
அரசு உயர்அதிகாரிகள்
ஆதிக்கம், செயலின்மை,
அதனால் முதலீடு
வருவதில்லை, தொழில்
முன்னேறவில்லை,
அதனால் நாடு பின்
செல்கிறது, அமெரிக்காவைப்
பார், வளமை, காரணம்
தனியார்மயம், வர்த்தக
சுதந்திரம், அரசுக்
கட்டுப்பாட்டில்
தளர்வு என்று அமெரிக்க
பெருமை பேசுபவர்களுக்கு,
டில்லியில் உள்ள
இன்ஸ்டிடியுட்
ஆஃப் கான்ஃப்ளிக்ட்
மேனேஜ்மென்ட்
(மோதல் கட்டுப்பாட்டு
கழகம் என்று சொல்லலாம்)
ஓராண்டு கால ஆய்வுக்குப்
பிறகு வெளியிட்டுள்ள
விவரங்கள் சற்று
ஏமாற்றம் தரலாம்.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
மாநிலம்
மேற்கு
வங்கத்தில் மம்தாவின்
தீய நடவடிக்கைகளும்
மரணத்தின் நடனமும்
பர்தமான்
மாவட்டத்தின்
கல்டிகுரி கிராமத்தைச்
சேர்ந்த கடுமையான
உழைப்பாளியான
சஃபர் மல்லா என்கிற
விவசாயி தனது சிறுவயதிலேயே
தந்தையை இழந்த
பிறகு கடுமையான
துன்பங்களுக்கு
இடையில் தனது குடும்பத்தை
பராமரித்து வருகிறார்.
நீர்ப்பாசனம்
உட்பட, இடுபொருட்கள்
விலை அனைத்தும்
உயர்ந்துவிட்டதால்,
அவர் கடன் வாங்க
நேர்ந்தது. வேறு
சில கட்டணங்களை
அவர் செலுத்தவில்லை.
நல்ல விளைச்சல்
வந்தவுடன் அனைத்தையும்
திருப்பிச் செலுத்திவிடலாம்
என நம்பியிருந்தார்.
உண்மையில் நல்ல
விளைச்சல்தான்
கிடைத்தது. ஆனால்
அவரால் மகிழ்ச்சி
அடைய முடியவில்லை.
அவர் சாகுபடி செய்த
பயிருக்கான செலவைவிட
மிகக்குறைவாக
சந்தை விலை இருந்தது.
அரசாங்கத்திடம்
இருந்தும் எந்த
உதவியும் இல்லாததால்,
கடன் எதையும் திருப்பிச்
செலுத்த முடியாததால்,
தன் குடும்ப மானத்தைக்
காப்பாற்ற அவருக்கு
வேறு வழி தெரியவில்லை.
தான் மிகவும் அக்கறையுடன்
கவனித்துக் கொண்ட
பயிருக்காக அவர்
வாங்கி வந்த பூச்சிக்கொல்லி
மருந்தை நவம்பர்
18 அன்று குடித்துவிட்டார்.
அவருக்கு வயது
17 மட்டுமே. அவருக்கு
முன்பும் அவருக்குப்
பிறகும் சாகுபடியாளர்கள்
உட்பட கிட்டத்தட்ட
30 விவசாயிகள் இதே
போன்ற நிலைமைகளால்,
கடந்த ஆண்டு அக்டோபர்
முதல் தற்கொலை
செய்து கொண்டனர்.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
களம்
கூடுதல் ரேசன்
கடை
கோரி
சாலை
மறியல்
போராட்டம்
முறையான புயல்நிவாரணம்
கோரி
மாலெ கட்சி,
அவிதொச
போராட்டங்கள்
விசைத்தறி
தொழிலாளர்
வேலைநிறுத்தப்
போராட்டம்
ஏனம் தொழிலாளர்
மீதான
காவல்துறையின்
தாக்குதலுக்கு
எதிராக
ஆர்ப்பாட்டம்
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
மாநாடு
ஊழலுக்குஎதிராக,கல்விதனியார்மயத்திற்குஎதிராக
கல்விவியாபாரமயத்திற்குஎதிராக,கல்விகட்டணஉயர்வுக்குஎதிராக
அகில இந்திய
மாணவர் கழகத்தின்
2ஆவது மாநில மாநாடு
ஊழலுக்கு
எதிராக, கல்வி
தனியார்மயத்திற்கு
எதிராக, கல்வி
வியாபாரமயத்திற்கு
எதிராக, கல்வி
கட்டண உயர்வுக்கு
எதிராக அகில இந்திய
மாணவர் கழகத்தின்
2வது மாநில மாநாடு
சேலத்தில் பகத்சிங்-
சந்திரசேகர் அரங்கத்தில்
பிப்ரவரி 4 அன்று
நடைபெற்றது.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO