அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக விழுப்புரம் மாவட்ட 3ஆவது மாநாடு 08.11.2013 அன்று நடந்தது. தோழர்கள் சக்தி, வேளாங்கண்ணி, கண்ணம்மாள் தலைமை தாங்கி நடத்தினர். மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் தோழர் சுசீலா உரையாற்றினார். மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் வாழ்த்துரையாற்றினர்.
மாநாட்டில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர் செண்கபவள்ளி மாவட்ட அறிக்கை முன்வைத்தார். அறிக்கை மீது தோழர்கள் விவாதித்தனர். அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கையும், பெண்கள் மீது ஏவப்படும் தாக்குதல்கள், பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தாத ஜெயலலிதா அரசைக் கண்டித்தும், அடிப்படை வசதிகள் கேட்டும், ரேசன் விநியோகத்தை வாரம் முழுவதும் வழங்கக் கோரியும், அடிப்படைக் கோரிக்கைகளுக்காக பெண்கள் கழகம் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் விவாதம் எழுந்தது.
புதிய நிர்வாகிகள் 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக தோழர் சுசீலா, செயலாளராக தோழர் செண்பகவள்ளி, மற்றும் சக்தி, வேளாங்கண்ணி, கண்ணம்மா, சுந்தரி, அம்சா, கலியம்மா, பவுனம்மாள் ஆகியோர் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள்
• சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள எழுத்தர் பணிகளுக்கும் இதர நிர்வாகப் பணிகளுக்கும் 50% பெண்களை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
பெண் உள்ளாட்சித் தலைவர்கள் பணிகளில் குறுக்கிடும் ஆண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் உள்ளாட்சித் தலைவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக செயல்பட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.
• மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பொது விநியோக அங்காடிகள், பொதுக் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும்.
கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், விதவைகள் அனைவருக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கையூட்டின்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• இருளர் பெண்கள் நால்வரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்களை கைது செய்து தண்டனை வழங்கி சிறையில் அடைக்க வேண்டும். கிடப்பிலுள்ள வழக்கை விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
பாலியல் வன்முறை களைத் தடுக்கும் விதிமுறைகள் என 15 கட்டளைகளை அறிவித்த முதலமைச்சர் அவை செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். பெண்கள் கூடும் இடங்களில், பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பை, கவுரவத்தை அச்சமற்ற சுதந்திரத்தை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும்
• மாவட்டம் முழுவதும் உள்ள ஊட்டச்சத்தில்லாத, ரத்தச் சோகையினால் பாதிக்கப் பட்ட ஏழைப் பெண்கள் நம்பியிருக்கும் விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. பால், ரொட்டி, மருந்துகள் கூட வழங்கப்படுவதில்லை.
மாநிலத்திலுள்ள பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் புறக்கணித்ததை மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
உடனடியாக போதிய நிதி ஒதுக்கீடு செய்து ஏழைகளின் மருத்துவ உரிமையை பாதுகாக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் மகப்பேறு வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்திட வேண்டும்.
•திருமாங்கல்யத் திட்டம் என்ற பெயரால் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.