COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 15, 2013

மோடியின் கர்ஜனை, சதித்தன்மை கொண்ட குண்டு வெடிப்புகள் ஆகியவற்றை மீறி இகக மாலெயின் எச்சரிக்கைப் பேரணி


பீகாரின் போராட்ட உறுதியை மறுஅறுதியிட்டது

அக்டோபரின் கடைசி வாரம் பாட்னாவைப் பொறுத்தவரை பேரணிகளின் வாரமாக இருந்தது. அக்டோபர் 25 அன்று இகக ‘மக்கள் சீற்றப் பேரணி’ நடத்தியது. கடந்த பத்து ஆண்டுகளில் அந்தக் கட்சியின் மிகப் பெரிய பேரணியாக அது இருந்தது. அந்தப் பேரணி, அதிகரித்து வரும் பாசிச அச்சுறுத்தலை எதிர்க்கும் உறுதி மற்றும் பீகாரின் செயலற்ற, மக்கள் விரோத நிதிஷ் குமார் ஆட்சி மீதான சீற்றம் என்ற, பீகாரின் இடது அணிகள் மற்றும் சாமான்ய மக்களின் மனப்போக்கை தெளிவாகப் பிரதிபலித்தது.    
இரண்டு நாட்கள் கழித்து பாஜக அதன் ‘கர்ஜனைப்’ பேரணியை நடத்தியது.

பீகாரில் பாஜக நடத்திய பேரணிகளில் இதுவே மிகப் பெரியது; டில்லி, உத்தரபிரதேசம் அல்லது மத்தியபிரதேசத்தில் நடந்த மோடியின் சமீபத்திய பேரணிகளை விடவும் இது நிச்சயம் பெரியது. அந்தப் பேரணி துவங்கியபோது, பேரணி நடந்த இடத்தைச் சுற்றி தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. அதன் பிறகு பாஜக பேசும் அனைத்தும், அந்த குண்டு வெடிப்புகளைப் பற்றித்தான் இருந்திருக்கும்.

ஆனால், வியப்பேற்படுத்தும்விதம், பேரணி சாதாரணமாக நடந்தது; மோடி பீகாரின் புனைவு செய்யப்பட்ட வரலாற்றைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்; மாநிலத்தின் செழிப்பான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை அறிந்த யாருக்கும் அவர் பேசியது அபத்தங்கள் நிறைந்ததாக இருந்திருக்கும்.
மோடியின் ‘வரலாற்று அபத்தங்கள்’ விசயத்தில், ராஜ்கிரில் நடந்த அய்க்கிய ஜனதா தளத்தின் சிந்தனை அமர்வில் நிதிஷ் குமார் விரைவாகவே மோடியை எதிர்கொண்டார். ஆனால், அவரது அரசாங்கம், குண்டு வெடிப்புகளுக்குப் பிந்தைய பீதி மற்றும் நிச்சயமின்மை யில் பாட்னாவை தள்ளிவிட்டது.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து 50 மணி நேரத்துக்கும் பிறகும், பாட்னாவில் பெரிய பேரணிகள் நடக்கும் இடமான, இகக மாலெயின் அக்டோபர் பேரணி நடக்கும் இடமான காந்தி மைதானத்தை மாநில அரசாங்கம் அச்சுறுத்தலற்ற இடமாக ஆக்க முடியவில்லை. மொத்த ஊடகங்களும் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூழ்கிப் போயின. பீகார் அச்சுறுத்தலிலும் பீதியிலும் ஆழ்ந்து விட்டதாகத் தெரிந்தது. இகக மாலெ பேரணி தள்ளிப்போடப்படும் என்பது கிட்டத்தட்ட ஒரு முடிந்துபோன முடிவாகக் கருதப்பட்டது.

ஆனால், பீகாரின் கிராமப்புற வறியவர்களும், மாநிலம் முழுவதும் பரந்துள்ள இகக மாலெயின் வலைப்பின்னலும் நேரத்துக்கேற்ப செயலாற்றின; பேரணியை பெருவெற்றியாக்க, மிகப்பெரிய உறுதியை, அச்சமற்ற உறுதியை வெளிப்படுத்தின.

சில விவரங்கள் இதை விளக்கும். அக்டோபர் 29 அன்று காலை 7 மணிக்கு பாட்னா மாவட்ட நிர்வாகம், காந்தி மைதானம் பாதுகாப்பானது அல்ல என்றும் எனவே அந்த இடத்துக்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தது. அது வரை, மேடை அமைப்பது மற்றும் பிற அலங்கார வேலைகள் காந்தி மைதானத்தில் நடந்து கொண்டிருந்தன. அன்று இரவே, ஆர் பிளாக் சாலைக் குறுக்கில் தரப்பட்ட மாற்று இடத்தில் மேடை அமைக்கப்பட்டது. பேரணியில் கலந்து கொள்ள, அக்டோபர் 29 அன்று, நாள் முழுவதும் வந்துகொண்டிருந்த தோழர்கள், அந்த இரவை, வெட்ட வெளியில் சாலையில் கழித்தார்கள். நம்பிக்கை மற்றும் உறுதி உணர்வு மேலெழுந்து விட்டபோது, பீதி மற்றும் அச்சத்தின் திரை அகன்றது.

வரலாற்றின் பல்வேறு திருப்புமுனைகளில் பல பெரிய பேரணிகளைக் கண்ட பாட்னா வுக்கு, எச்சரிக்கைப் பேரணி, இதுவரை கண்டிராத ஒரு காட்சியை முன் நிறுத்தியது; நகரத்தின் சாலைகள் சிவப்பு அலைகளால் தகதகத்தன. ஆர் பிளாக் சாலைக் குறுக்கில், 1857 வீரத் திருவுருவான வீர் குன்வர் சிங் சிலையில் இருந்து, 1974ன் மகத்தான தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணன் சிலை இருக்கும் இன்கம்டாக்ஸ் திருப்பம் வரை, ஒரு மனிதக் கடல் காணப் பட்டது. 1974 நவம்பர் 4 அன்று, ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் நடந்த பேரணியில், அவர் உட்பட பேரணியில் கலந்துகொண்ட பலரும் காவல்துறை தடியடியால் படுகாயமுற்ற நிகழ்வை மூத்தவர்கள் சிலர் எண்ணிப் பார்த்துக் கொண்டனர். அதற்குப் பிறகு, இப்போதுதான் அவ்வளவு பெரிய கூட்டத்தை அந்த இடம் பார்க்கிறது.

பீகாரில் ஒரு மூர்க்கத்தனமான காவிமயத்தின் இறுதி முழக்கம் மோடியின் ‘கர்ஜனை தான்’ என்று கருதியவர்களுக்கு, எச்சரிக்கைப் பேரணி ஓர் உறுதியான எதிர்ப்பு பற்றிய வலுவான செய்தி சொன்னது. பீகாரில் மதவெறியை தூண்டிவிடும் காவிச் சதியை முறியடிப்பதில் எச்சரிக்கையாக இருக்கும் அதேநேரம், பதானி, பாதே மற்றும் மியான்பூர் படுகொலைகளில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு நீதி கேட்க, பீகாரின் நீதி விரும்பும் மக்கள் பெரும் அளவில் அணிதிரள வேண்டும் என்று பேரணி அறை கூவல் விடுத்தது. மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான கையெழுத்துக்கள் பெறப்பட்டு, தோழர் வினோத் மிஸ்ராவின் 15ஆவது நினைவு நாளான டிசம்பர் 18 அன்று, டில்லியில் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.

தற்செயலாக, அதே நாளில், டில்லியில் மதவாத எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இகக மாவும் அதன் இடது முன்னணி கூட்டாளிகளும் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத பத்து பிராந்திய கட்சிகளுடன் அன்று ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர். கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களும் அதில் கலந்துகொண்டவர்களும், அந்தக் கூட்டம் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி என்ற தோற்றத்தை மறுக்க முனைந்தனர்; மதவெறிக்கு எதிராக ஒரு பரந்துபட்ட அணிதிரட்டலை முன்னகர்த்துவதே நோக்கம் என்றனர். ஆனால், கருத்தரங்கின் எல்லையில் இருந்து, திட்டமிட்டே விலக்கி வைக்கப்பட்ட சக்திகளைப் பார்த்தால், அந்த மாபெரும் மதவெறி எதிர்ப்புக் கூற்றின் உள்ளீடற்ற தன்மை வெளிப்பட்டுவிடும்.

மதச்சார்பின்மையின் மிகவும் கடப்பாடுமிக்க, போர்க்குணமிக்க பாதுகாவலாளியான இகக மாலெ தவிர, வெறும் அதிகாரப் பகிர்வு மட்டுமின்றி, நிலப்பிரபுத்துவ மதவெறி சக்திகள் தாக்குதல் நிலை எடுப்பதை அனுமதித்து, பீகாரில் பாஜக வலுப்பெற நேரடி பொறுப்பாக்கப்பட வேண்டிய அய்க்கிய ஜனதா தளத்தை விட, வலுவான மதவெறி எதிர்ப்பு தகுதிகள் கொண்ட ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவையும் விலக்கி வைக்கப்பட்டிருந்தன.

தேர்தல்கள் நெருங்க நெருங்க, பாஜக மதவெறியைத் தூண்டிவிட கடுமையாக முயற்சிக்கிறது; நாட்டின் ஜனநாயக இயக்கத்தின் கடமை தெளிவாக முன்னிற்கிறது. நமது கடுமையான உடனடி பிரச்சனைகளுக்கு ‘மந்திரத் தீர்வு’ தேடும் மாயையான தேடலில் பாசிசம் செழிக்கிறது. ஆனால், பாசிச அச்சுறுத்தலை எதிர்க்கும், முறியடிக்கும் சவாலை, தேர்தல் ரீதியாகவோ, பிற வழியிலோ, எந்த ‘எதிர் மந்திரத்தாலும்’ நிறைவு செய்ய முடியாது. அதற்கு, ஒரு ஜனநாயக ரீதியான தீர்வுக்கான, மக்களின் துணிச்சலான, கட்டமைக்கப்பட்ட நீடித்த அணிதிரட்டல் மற்றும் அறுதியிடல் தேவை.

ஒடுக்கப்பட்ட வறிய மக்கள், புரட்சிகர கம்யூனிஸ்டுகள் தலைமையில், வலிமை, உறுதி, துணிச்சலுடன் இந்தப் போராட்டத்திற்கு பங்களிக்க முடியும் என்பதை எச்சரிக்கைப் பேரணி காட்டியுள்ளது.

Search