ஆஸ்திரேலியாவில் உள்ள வாக் ஃப்ரீ பவுண்டேஷன் என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில் சர்வதேச அடிமை குறியீட்டெண் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. கடன் கொத்தடிமை முறை, கட்டாயத் திருமணம், மனிதர்கள் கடத்தப்படுவது, கட்டாய உழைப்பு ஆகியவற்றை நவீன அடிமை முறை என்று வரையறுக்கிறது.
அதன் படி, உலகம் முழுவதும் 3 கோடி பேர் நவீன அடிமைகளாக உள்ளனர். இந்த நவீன அடிமைகள் உருவாக்கும் சொத்து மதிப்பு ஆண்டொன்றுக்கு 32 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது. நாகரிகம் மிதமிஞ்சிவிட்ட இங்கிலாந்தில் கூட 4,200 முதல் 4,600 பேர் இந்த வரையறைக்குள் வருகிறார்கள்.
162 நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அடிமை குறியீட்டெண் 2013ன் படி, இந்தியா 1 கோடியே 47 லட்சம் நவீன அடிமைகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில், நாட்டுக்குள்ளேயே அவர்கள் அடிமைப்படுத்தப்படுவதால் நவீன அடிமைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஆய்வு வியாக்கியானப்படுத்துகிறது. இந்த அடிமை முறையும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது என்றும் இந்த மறைக்கப்பட்டுள்ள குற்றத்தைத் தடுக்க அரசாங்கங்களுக்கு தங்கள் ஆய்வு உதவும் என்றும் வாக் ஃப்ரீ பவுண்டேஷன் சொல்கிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பும் உலகம் முழுவதும் கட்டாய உழைப்பில் ஈடுப டுத்தப்படுபவர் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம் என்று ஏற்கனவே மதிப்பிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான தனஞ்சய் சிங்கும் பல்மருத்துவரான அவரது மனைவி ஜாக் ருதியும் தங்கள் வீட்டில் வேலை செய்தவரை கொலை செய்த தற்காகவும், வேலை செய்த இன்னொருவரை கொலை செய்ய முயற்சித்ததற்காகவும் அவர்கள் இருவரையும் அறைக்குள் பூட்டி வைத்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக் ஃப்ரீ பவுண்டேஷனும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் சொல்வதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி செய்துள்ளார். அந்த இல்லப் பணியாளர் கீழே விழுந்து அடிபட்டதில் இறந்து விட்டார் என்று தனஞ்சய் சிங் ஊடகக் கேமரா முன் சொன்னார். ஜாக்ருதி தனது வீட்டில் வேலை செய்பவர்களை துன்புறுத்துவதும் தாக்குவதும் அன்றாட நடப்பு, அனைவரும் அறிந்தது என்று காவல்துறையினர் சொல்கின்றனர்.
2011 பிப்ரவரியில், கேரளாவில் வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி என்ற சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டு, பின் மருத்துவமனையில் இறந்த செய்தி அதிர்ச்சி ஏற்படுத்தியது.
அதிகாரிகள், அரசியல்வாதிகள், இன்னும் பெரும்பணக்காரர்கள் வீடுகளில்தான் பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் நிரந்தரமாக வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் பற்றிய விவரங்கள், உண்மைகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை.
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் 2007 - 2008 விவரப்படி இந்தியாவில் இடம்பெயரும் தொழிலாளர்களில் 80% பேர் பெண்கள். ஒன்றரை கோடி பேர் குழந்தைகள். 15 வயது முதல் 29 வயதுக்குள்ளானோர் 30%. நாட்டின் 10 கோடி பேர் வேலை நிமித்தமாக இடம் பெயர் கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இல்லப் பணியாளர்களாக முடிகின்றனர்.
டில்லியில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் வீடுகளில் வேலை செய்யும் பெண்கள் அல்லது சிறுமிகள் பெரும்பாலும் சட்டிஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வரு கின்றனர். ஏஜென்சிக்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்களை வேலைக்கு அனுப்பும் சில ஏஜென்சிக்கள் தங்களுக்கு கமிசன் கிடைத்த பிறகு அனுப்பப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று கவனிக்கத் தவறி விடுகின்றன.
இதற்கு முன்பு டில்லியிலேயே, 2013 அக்டோபரிலேயே இல்லப் பணியாளர்கள் கொடுமை செய்யப்பட்ட அடுத்தடுத்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இதில், ஒரு சம்பவத்தில், அந்தச் சிறுமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வெளிநாட்டுக்கே சென்று திரும்பினர். அந்தச் சிறுமி வெளியே தப்பிச் செல்லக் கூடும் என்று ஆடைகளைப் பறித்துக் கொண்டனர். அந்தச் சிறுமிக்கு ஓராண்டு காலமாக சம்பளம் தரப்படவில்லை.
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பவர் வீட்டில் வேலை செய்த அந்தச் சிறுமி, சிறுநீரைக் குடிக்க நிர்ப்பந்தப்படுத்தப் பட்டார். சூடான கடாய் கொண்டு தாக்கப் பட்டார். அந்தச் சிறுமியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தார் காவல்துறையில் புகார் செய்ததன் பேரில் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார். அந்த அதிகாரியின் வழக்கறிஞர் அந்தச் சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகச் சொல்கிறார். அந்த வீட்டில் அந்தச் சிறுமிக்கு முன்பு வேலை செய்துகொண்டிருந்த பெண் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டார். ஏன் போனார் என்று காவல்துறை விசாரிக்க முயற்சி செய்கிறது.
இன்னொரு சம்பவத்திலும் 13 வயதுச் சிறுமி கடுமையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, எப்படியோ தப்பினார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஹாஜி பாபுவின் நெருங்கிய உறவினர் வீட்டில் வேலை செய்த தாயும் மகளும் கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. அவர்கள் இருவரும் நவம்பர் 4 அன்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மெழுகுவர்த்திகளால் சுட்டிருக்கிறார்கள்.
இவர்கள் மீது வேறுவேறு சட்டங்களில் வழக்கு பதிவு செய்ய முடியும். இந்த வழக்குகளில் குற்றவாளிகள் பெரும்பாலும் பெரிய இடம் என்று அறியப்படுபவர்கள். செல்வாக்கு உள்ளவர்கள். பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்படும் வழக்கு, அது வரை பிணை என்று எப்படியும் தப்பித்துவிடுவார்கள்.
முதலாளித்துவ ஜனநாயகத்தில் இது சகஜம். முதலாளித்துவத்தில் புதிய வகை தொழிலாளர்கள் உருவாகிக் கொண்டிருப்பதும் சகஜம். வீட்டு வேலைகள் பெண்களுடையவை என்ற ஆணாதிக்க இறுக்கம் இன்னும் தளராத நிலையில், பெண்கள் வேலைக்குச் செல்வதால், வீட்டு வேலைகளுக்கு பெருமளவில் இல்லப் பணியாளர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.
எனவே இல்லப் பணியாளர்கள் என்ற பிரிவு ஆகப்பெரியதாக வளர்ந்து நிற்கிறது. இன்னும் வளரும். இவர்கள் எண்ணிக்கை பற்றி அரசிடம் எந்த விவரமும் இல்லை. தொண்டு நிறுவனங்கள் சில விவரங்கள் முன்வைக்கின்றன. அதன்படி, 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை அவர்கள் எண்ணிக்கை உள்ளது.
இந்தப் பிரிவினர் நலன் காக்க, அவர்கள் மீதான கொடுமை, கொத்தடிமை முறை ஆகிய வற்றில் இருந்து பாதுகாக்க, குறைந்தபட்ச சம்பளம், விடுப்புகள், தொழிலாளர் அந்தஸ்து, இன்ன பிற சட்ட உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த, இல்லப் பணியாளர்களுக்கென தனிச்சட்டம் மிகமிக அவசியம் என்பதை டில்லி சம்பவங்கள் அழுத்தமாகச் சொல்கின்றன.
கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் இல்லப் பணியாளர்களுக்கென குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2011ல் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிறைவேற்றிய இல்லப் பணியாளர் கன்வென்சனை இந்தியா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டாலோ, இல்லப் பணியாளர்களுக்கென தனிச்சட்டம் இயற்றப்பட்டாலோ, அவர்களை பணிக்கமர்த்தும் ‘பெரிய மனிதர்கள்’ சங்கடத்துக்குள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம். இல்லப் பணியாளர்களுக்கு தனிச் சட்டம் இயற்றுவதில் காட்டப்படும் அலட்சியத் துக்கு இது கூட காரணமாக இருக்கலாம்.
நிலப்பிரபுத்துவ தொழில் உறவுகளிலிருந்து இன்னும் விடுபடாத இல்லப்பணியாளர்களுக்கு ஏற்படுகிற, பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத மெய்க்காயங்கள் பேசத் துவங்கியிருக்கின்றன. இந்தக் குரல் இந்தத் தொழிலில் உள்ள நிலப்பிரபுத்துவ முறைக்கு முடிவு கட்டுவதாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.