அமெரிக்காவில் உள்ள லிபர்டி சிலையின் உயரம், அது நிறுத்தப்பட்டுள்ள தூணையும் சேர்த்து 93 மீட்டர். அதைப் போல் இரண்டு மடங்கு உயரமுள்ள, உலகிலேயே மிக உயரமான சிலை ஒன்று இந்தியாவில் நர்மதை நதிக்கரையில் வரப் போகிறது.
வரப்போகிற வல்லபபாய் படேல் சிலையின் உயரம் 182 மீட்டர். இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்படவிருக்கும் இந்த சிலைக்காக ரூ.2074 கோடி செலவிடப்படும். இதற்கான நிதி மக்களிடம் திரட்டப்படும். மீதியை குஜராத் அரசாங்கம் ஏற்கும். உணவுக்குப் பஞ்சம் என்றாலும் உயரமான சிலை கிடைக்கப் போகிறதே, இந்தியர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.
காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் ஒன்றை ஒன்று கொள்கைரீதியாக எதிர்க்க ஏதுமில்லை என்பதால், புதிய விவாதங்கள் தேடுகிறார்கள். நவதாராளவாதக் கொள்கைகளை விட்டுக்கொ டுக்காமல் அமலாக்குவதில் பளிச்சென வெளிப்படும் கருத்தொற்றுமை போல், அந்தக் கொள் கைகள் தொடர்பான பிரச்சனைகள் மேலெழுந்து விடாமல் திசைதிருப்பும் முயற்சியிலும் இரண்டு கட்சிகளும் ஒத்திசைந்து செயல்படுகின்றன. மோடிக்கு தனது ரத்தக்கறை படிந்த கரங்களை மறைக்க வேண்டியிருக்கிறது; காங்கிரசுக்கு தான் மக்களுக்கு இழைத்துக் கொண்டி ருக்கிற துரோகங்களுக்கு திரை போட வேண்டியிருக்கிறது.
இரண்டு கட்சிகளுமாகச் சேர்ந்து நாட்டுப்பற்று நாடகம் ஒன்று நடத்திக் கொண்டிருக்கி றார்கள். நாடகத்தின் நாயகனையும் மிகச் சரியாகவே தேர்ந்தெடுத்துள்ளார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான, இரும்பு மனிதர் என்று போற்றப்படுகிற வல்லபபாய் படேல் தான் தற்போதைய நாடகத்தின் நாயகன்.
காங்கிரஸ் படேலை புறக்கணித்துவிட்ட தாகவும், மோடி வடிவில் படேல் மரபை மீட்டெடுக்கப் போவதாகவும் பாஜக சொல்கிறது. துவக்கமாக, படேலுக்கு அவர் சொந்த மாநிலமான குஜராத்தில், ஒரு சிலை வரப்போகிறது. அன்று கோயில். அதைக் கட்ட கரசேவை. நாளை சிலை. சிலை எழுப்ப மக்கள் மத்தியில் நிதி கேட்டுச் செல்லப் போகிறார்கள். பாஜகவின் வரலாறு இந்திய மக்களை எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறது.
படேலுக்கு சிலை அமைக்கும் வேலையை படேலின் 138ஆவது பிறந்த நாளன்று மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மன்மோகனும் கலந்துகொண்டார். நாட்டை ஒன்றுபடுத்திய படேல் இருந்த கட்சியில் தானும் இருப்பதற்கு பெருமைப்பட்டுக் கொண்டார்.
மோடி இந்தியாவை பிளவுபடுத்துகிறார், காங்கிரஸ் நாட்டை ஒன்றுபடுத்துகிறது என்ற காங்கிரஸ்காரர்கள் கூற்றுக்கு மோடி படேல் சிலையில் பதில் தேடுகிறார். படேல் நாட்டை ஒன்றுபடுத்தினார், நாம் நாட்டை புகழுறச் செய்வோம் என்பது படேல் தொடர்பான மோடி யின் முழக்கம். இந்தச் சிலை எழுந்து நிற்கும் போது மொத்த உலகமும் இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும் என்கிறார் மோடி. படேல் எங்களுக்குச் சொந்தம் என்று காங்கிரஸ்காரர்கள் குரல் எழுப்புகிறார்கள்.
நாட்டை ஒன்றுபடுத்தியதுதான் படேலின் பெருமை என்று காங்கிரசும் பாஜகவும் சொல் கின்றன என்றால், அந்த ஒன்றுபடுத்துதல் நடந்த முறை பற்றி வரலாறு எழுப்பிக் கொண்டிருக் கும் கேள்விகளை புறந்தள்ளிவிட முடியாது.
சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவுடன் சேராமல் சுயாட்சி விரும்பிய சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க வல்லபபாய் படேல் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டார். காங் கிரசுக்கும் மன்னராட்சி முறைக்கும் உள்ளார்ந்த பிணக்கு ஏதும் இல்லை என்று தெளிவுபடுத்தி னார். சமஸ்தானங்களுடன் பேச்சுவார்த்தைகளில் துவங்கி, அது வெற்றி பெறாதபோது, இந்திய ராணுவத்தின் வல்லமையை பயன்படுத்தித்தான், படேல் அந்த ஒற்றுமையை கொண்டு வந்தார்.
இன்றைய ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகர் படேல் முயற்சியில் ராணுவத்தின் மூலம் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
அய்தராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விரும்பியபோது, ராணுவம் கொண்டு ரசாக்கர் களை ஒடுக்கி, அய்தராபாதை இந்தியாவுடன் இணைத்தபோது, தோல்வியுற்ற நிஜாமை சிறையில் அடைக்காமல் அவருக்கு தக்க சன்மானம் கொடுத்து தக்கவைத்துக் கொண்டார் படேல்.
அய்தராபாதில் இன்னும் பெரிய பிரச்சனை ஒன்றை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தெலுங்கானாவில் நில உடைமையாளர்களுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் தலைமையில் வெற்றி கரமான போராட்டம் மக்கள் அதிகாரப் பகுதிகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. ரசாக்கர்களை ஒடுக்கிய இந்திய ராணுவம், நில உடைமையாளர்கள் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டும் என்று எதிர்பார்த்த தெலுங்கானா மக்களை முழுமையான ஏமாற்றத்தில் தள்ளி, நிஜாமை வென்றகையுடன், நில உடைமையாளர்கள் பக்கம் உறுதியாக நின்று கம்யூனிஸ்டுகள் தலைமையிலான இந்திய சாமான்ய மக்கள் போராட்டத்தை சுதந்திர இந்தியாவின் ராணுவ வல்லமை கொண்டு ஒடுக்கியதும் படேல்தான்.
தனிச்சொத்தைப் பாதுகாக்கும் முதலாளித்துவ அரசின் கொள்கைகளை அமலாக்கும் அதி காரிகள் தேவையை நிறைவு செய்ய இந்திய ஆட்சிப் பணியை உருவாக்கியது படேல்தான்.
பிரிட்டிஷ் அரசு முன்வைத்த நாட்டுப் பிரிவினையில் படேல் அணுகுமுறை பற்றி இன்னும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இரும்பு மனிதர் என்ற பட்டப்பெயருக்குள் அனைத்தும் தழுவிய ஒடுக்குமுறையாளர் என்ற பொருள் பொதிந்திருக்கிறது. எழுந்துவந்த முதலாளிகளுக்கு தொழில் நடத்தத் தேவையான கட்டுப்பாடான களத்தை உருவாக்கியவர் என்ற உட்பொருள் இருக்கிறது.
இன்று கார்ப்பரேட் கொள்ளைக்கு களம் அமைத்துக் கொடுப்பதில் போட்டிபோடுகிற பாஜகவும் காங்கிரசும் நிச்சயமாக படேலின் உண்மையான வாரிசுகள்தான். மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவி, ஆளும் வர்க்கங்களின் நலன் காப்பதில் படேல் வழியை இன்று வரை இரண்டு கட்சிகளுமே பின்பற்றி வருகின்றன.மீட்டெடுக்கப்பட வேண்டியது, முதலாளிகள் நிலப்பிரபுக்கள் நலன் காக்க நாட்டை ஒன்றுபடுத்திய படேல் மரபு அல்ல; உண்மையான சுதந்திரம் மக்கள் அதிகாரமே என்று சொன்ன பகத்சிங் மரபு.