தமிழக மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக குறைந்திருப்பதை அங்கீகரித்து துவங்கப் பட்ட அம்மா உணவகங்களில் உணவு வழங்கப்படும் நேரங்களில் கடுமையான நெரிசல் காணப்படுகிறது. உழைத்து களைத்து உண்ண வருபவர்களைக் காக்க வைக்காமல், குறித்த நேரத்தில் உணவு தர வேண்டியது அங்கு வேலை செய்கிற பெண்களின் கடமை. செய்கிறார்கள்.
திருப்பூரில் உள்ள ஓர் உணவகத்தில் சாந்தா என்கிற தொழிலாளி சோறு வடித்த போது கொதிக்க கொதிக்க சோறு அவர் மேலேயே கொட்டி விட்டது. அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதல் கட்ட மருத்துவம் மட்டுமே பார்க்கப்பட்டது. அதற்கு மேல் மருத்துவம் பார்த்துக் கொள்ள வசதியில்லாத நிலையில், மாநகராட்சியை அணுகியபோது, அந்தத் தொழிலாளி ஒப்பந்தத் தொழிலாளி என்றும் மாநகராட்சி, மருத்துவத்துக்கு பொறுப்பேற்க முடியாது என்றும் சொல்லிவிட்ட பிறகு அந்தத் தொழிலாளி வீடு திரும்பிவிட்டார். ஓரிரு பத்திரிகைகளில் மட்டும் செய்தி எப்படியோ வெளியாக, இப்போது மாநகராட்சி நிர்வாகம், அவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.
அம்மா உணவகம் ஜெயலலிதா மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் அதிசிறந்த வெளிப்பாடு என்று அதிமுககாரர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அங்கு வேலை செய்த ஒரு பெண் தொழிலாளி விபத்துக்குள்ளாகி மருத்துவத்துக்கு காத்திருந்ததும், அலைகழிக்கப் பட்டதும், திட்டத்தின் பின் உள்ள தேர்தல் நோக்கிய குறுகிய நோக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது.
அம்மா உணவகத்தில் வேலை வேண்டும் என்றால் ரூ.10,000, ரூ.20,000, ரூ.30,000 தர வேண்டும் என்று வதந்திகள் உலவுகின்றன. இந்த வேலைக்கும் மாநகராட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திருப்பூர் விபத்து சம்பவத்தில் மாநகராட்சியே ஒதுங்கி விட்டது.
ஜெயலலிதாவின் இந்தக் கனவுத் திட்டத்திலும் ஒப்பந்தமயம் தொழிலாளர்களை பாதுகாப்பற்றவர்களாக்கி இருக்கிறது. திருப்பூரிலேயே அனுப்பர்பாளையம் என்ற பகுதியில் உள்ள அம்மா உணவகத்திலும் மாவு அரைக்கும் எந்திரத்தால் மின் அதிர்ச்சிக்கு உள்ளாகி ஒரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண் தொழிலாளர்கள் பக்கத் தில் இருந்த உணவு விடுதியின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து கொண்டி ருந்த பெண்களில் 17 பேர் மின்னல் தாக்கி மயங்கி விழுந்தார்கள். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல 108 அவசர வண்டியை அழைத்தும் வராததால், அங்கு வேலை செய்பவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் அந்தப் பெண்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். பணியிடத்து விபத்துக்கள் நடந்தால் அதற்கு அரசோ, வேலை யளிப்பவரோ பொறுப்பில்லை என்பது தமிழ் நாட்டில் எழுதப்படாத சட்டமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் ராமநாதபுரத்தில் கவுரவக் கொலைக்கு ஓர் இளம்பெண் பலியாகி யுள்ளார். ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கவுரவக் கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தருமபுரியும் நீதி கேட்டு காத்துக்கொண்டிருக்கிறது. பொன் னேரியில் சிறுமி பாலியல் வன்முறை, நல்லூரில் சிறுமி பாலியல் வன்முறை என்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன.
தரமணியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்த ரேஷ்மா என்ற பெண் 10ஆவது மாடியில் இருந்து குதித்து செத்துப் போனார். ஏன் அப்படிச் செய்தார் என்ற விவரங்கள் இன்னும் சரியாக மக்களுக்குச் சொல்லப்படவில்லை. அவர் வேலை செய்த நிறுவனம் அவர் மாடியில் இருந்து குதித்தது பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அவர் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர்களும் எந்தத் தகவலும் சொல்லவில்லை.
குடும்ப வன்முறை புகார்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கும் செய்தி சில மாதங்களுக்கு முன் வந்த போது தமிழ்நாட்டில் பெண்கள் துணிச்சலுடன் வந்து புகார் செய்யும் சூழல் இருப்பதாகவும் அதனால் புகார்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அப்படியா னால் ரேஷ்மா எப்படி, ஏன் இறந்தார் என்பது பற்றி ஏன் யாரும் சொல்ல மறுக்கின்றனர்? அது முதலாளிகள் தொடர்பானது என்பதாலா?
தமிழகத்தில் உள்ள 2500 பஞ்சாலைகளில் லட்சக்கணக்கான சிறுமிகள் சுமங்கலித் திட்டத் தின்கீழ் சுரண்டப்படுவது கட்டமைக்கப்பட்ட விதத்தில் தொடரும்போது, தமிழ்நாடு பஞ்சா லைகள் சங்கம் தமிழ்நாட்டில் எந்தப் பஞ்சாலையிலும் அதுபோன்ற ஒரு முறையே இல்லை என்று வாதிடுகிறது. யார் தந்த துணிச்சல்?
பெண்கள் பாதுகாப்பு, பெண் தொழிலாளர் நலன் எல்லாம் காற்றில் பறக்கும்போது, புண்ணுக்கு புனுகு பூசி தனது குற்றமய அலட்சியத்தை மூடிமறைக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா. 1000 பெண் தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட நிதி ஒதுக்கி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் திருபெரும்புதூர் பகுதியில், அம்பத்தூர் மற்றும் மஹிந்திரா சிட்டியின் ஏற்றுமதி ஆடை நிறுவனங்களில், திருப்பூர் மற்றும் கோவையில் லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் பலரும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களே. இப்போதுதான் ஆயிரம் பெண் தொழிலாளர்களுக்கு விடுதி வசதி பற்றி பேசத் துவங்கியிருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு.
மத்திய அரசை விமர்சிப்பதற்கு கொஞ்சமும் தயக்கமின்றி ஜெயலலிதா பயன்படுத்தும் மாற்றாந்தாய் எனும் சொல் பெண்கள் பற்றிய ஜெயலலிதாவின் ஆணாதிக்கப் பார்வையை வெளிப்படுத்துகிறது என்றால், தமிழக பெண்கள் மீது அவர் காட்டுகிற அக்கறைக்கு சிறந்த சான்று ஒன்றை அவரே நிகழ்த்திக் காட்டினார்.
கருணாநிதிக்கு சரி போட்டியாக திரைப்பட நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டிய ஜெயலலிதா நேரம் ஒதுக்கி அனைத்து நிகழ்ச்சிகளையும் அரங்கில் அமர்ந்திருந்து பார்த்தார். அந்த பிரம்மாண்ட மேடையில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன், ஆபாசமான அங்க அசைவுகளுடன் ஆட, அந்த நிகழ்வுகளை முதலமைச்சர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஓர் ஆடல் காட்சியில், கார்த்திகா என்ற நடிகர் தனது கணவரிடம் கடுமையாக நடந்து கொள்வதால் அவர் வேறொரு பெண்ணை தேடிச் செல்கிறார்; அந்த வேறொரு பெண் வேடத்தில் ராதா என்ற நடிகர் நடித்தார். யதார்த்தத்தில் கார்த்திகா, ராதாவின் மகள். இன்றைய தமிழ் திரைப்பட உலகின் அதிஅற்புத கற்பனைகளில் ஒன்றான இதையும் புன்னகையுடன் பார்த்தார் முதலமைச்சர்.
திரைப்பட நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் முன் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிகள் முகம் சுளிக்க வைப்பவை. எந்த நாகரிக வரம்புகளுக்குள்ளும் அவற்றை நிறுத்த முடியாது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு இடையிலும் முன்னும் பின்னும் ஒருவர் ஜெயலலிதாவுக்கு புகழ் பாடுவது மட்டுமே அவருக்கு போதுமானதாக இருந்ததே தவிர, அங்கே பெண்கள் காட்சிப் பொருளாக முன்னிறுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டதைப் பற்றி ஜெயலலிதா சாதாரண கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
மாறாக, அந்த இழிவுபடுத்துதல்களை ஆமோதிப்பதாக அவற்றை பார்த்துக் கொண்டிருந்தார். ஜெயலலிதா கலந்துகொள்ளச் செல்லும் கூட்டங்களில், அவருக்கு வரவேற்பு அளிக்க, அதிமுககாரர்கள் ரிக்கார்டு டான்ஸ் என்ற பெயரில் இளம் பெண்களை ஆட வைக்கிறார்கள். இதற்கும் இதுவரை, ஜெயலலிதா எந்தக் கண்டனமும் தெரிவித்ததில்லை.
நவதாராளவாதக் கொள்கைகளால் உந்திச் செலுத்தப்படுகிற ஜெயலலிதா, படுமோசமான ஆணாதிக்க அணுகுமுறையும் உடன் சேர்ந்து கொள்ள தமிழகப் பெண்கள் பற்றி ஒரு நாளும் உண்மையான அக்கறை காட்டப்போவதோ, அவர்கள் நலன்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்போவதோ இல்லை.
தமிழகப் பெண்களுக்கு கடுமையான போராட்டங்களுக்கான காலம் எதிர்வருகிறது.