சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்
இருபதாம் நூற்றாண்டின் 1930களின் துவக்க காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, செம்படையையும் அடித்தளங்களையும் நொறுக்க, அடுத்தடுத்து அய்ந்து சுற்றி வளைப்பது மற்றும் தாக்குவது இயக்கங்களை சியாங்கே ஷெக் நடத்தினார்.
முதல் இயக்கத்தில், செம்படையின் தளப்பிரதேசத்துக்கு எதிராக, கியான் - சென்னிங் வழியில் இருந்து தெற்கு நோக்கி முன்நகர எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கொண்ட படைகளை எதிரி ஏவினான். ஒடுக்கும் சக்திகள் எவையும் சியாங்கே ஷெக்கின் சொந்தத் துருப்புக்கள் அல்ல. ஏ - பி குழு (போல்ஷ்விக் எதிர்ப்புக் குழு), சில பிராந்தியங்களில் மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் இயக்கத்தை ஒருங்கிணைத்தன. கியாங் சி மாகாணத்தில் குவிந்திருந்த செம்படையின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40,000 என இருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்ட எதிர்ப்பியக்கம், சேங் ஹுயி - சேனின் பிரதான படைக்கு எதிராக தனது முதல் போரை நடத்த முடிவு செய்தது. அதன் கோட்டத் தலைமையகம் உட்பட இரண்டு பிரிவுகளை வெற்றிகரமாக தாக்கியது. 9000 பேர் கொண்ட அந்த மொத்த படை பிரிவும் அழிக்கப்பட்டது; அந்தப் பிரிவின் தளபதி பிடிக்கப்பட்டார்; ஒரு படைவீரர், ஒரு குதிரை கூட தப்ப முடியவில்லை.
இந்த வெற்றி, டேன் பிரிவையும் சூ பிரிவுகளையும் ஓடச் செய்தது. டேன் பிரிவை விரட்டிச் சென்ற செம்படை அதில் பாதியை அழித்தது. 1930, டிசம்பர் 27 முதல் 1931, ஜனவரி 1 வரையிலான அய்ந்து நாட்களில் இரண்டு பெரிய போர்கள் நடத்தப்பட்டன; தோற்றுப் போய்விடுவோம் என்று நினைத்த எதிரிப் படைகள் தாறுமாறாக பின்வாங்கின. முதல் இயக்கம் இங்கு முடிந்தது.
இரண்டாவது இயக்கத்தில் சியாங்கே ஷெக் 1 லட்சம் பேர் கொண்ட படைகளை இறக்கினார். எதிர்ப்பியக்கத்தில், கம்யூனிஸ்டுகள் தலைமையிலான செம்படைகள் 15 நாட்களில் (1931, மே 16 முதல் 30 வரை) 700 லிக்கள் முன்னேறியது; 5 போர்கள் நடத்தியது; 20,000க் கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்தது; ஒடுக்குமுறை இயக்கத்தை முழுவதுமாக நொறுக்கியது.
மூன்றாவது இயக்கத்தின் தளபதியாக சியாங்கே ஷெக்கே நேரடியாக தலைமை தாங்கினார். அவருக்கு கீழே ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பாளராக மூன்று படைத் தலைவர்கள் இருந்தனர்; ஒடுக்குமுறை படைகளின் எண்ணிக்கை 3 லட்சமாக இருந்தது. (இதில் 1 லட்சம் பேர் கொண்ட படை சியாங்கே ஷெக்கின் சொந்தப் படை). செம்படையின் எண்ணிக்கை 30,000. அவர்களுக்கு போதுமான ஓய்வும் கிடைக்கவில்லை; மாற்றுப் படைவீரர்களை அமர்த்த வாய்ப்பும் இல்லை. இதனால், எதிர்ப்பியக்கம் மிகவும் கடினமானதாக இருந்தது. மேலும் செம்படையின் முதல் கட்ட திட்டம் வெளிப்பட்டுவிட்டதால், புதிய திட்டத்துக்கு மாற வேண்டியிருந்தது.
உண்மையில், செம்படையின் குவிக்கப்பட்ட சக்திகளின் அடிப்படை திசைவழி, இருளைப் பயன்படுத்தி, இரவில் வேகமாக முன்னேறுவது என்பதன் மூலம் மாற்றப்பட்டது. இறுதியாக, முதல் தாக்குதலாக, அய்ந்து நாட்களுக்குள் செம்படை, மூன்று போர்களில் வெற்றி பெற்றது; 10,000க் கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்தது; அதே நேரம், மலைகளின் ஊடே மறைந்து செல்வதையும் செய்தது. இந்த நேரத்தில் செம்படையை கண்டுபிடித்த எதிரிகள் அதற்கேற்றாற்போல் தங்கள் இயக்கத்தை மாற்றியமைத்தனர்.
இப்போது, செம்படையினருக்கு 15 நாட்கள் ஓய்வு இருந்தது; ஆனால், எதிரிப் படைகள் பசியுற்று, களைப்புற்று, சோர்வுற்று இருந்தன; அவை போருக்கு தயார் நிலையில் இல்லை. எதிரி பின்வாங்கியதை பயன்படுத்தி, செம்படை எதிரியை தீர்மானகரமான விதத்தில் தாக்கியது.
இதேபோல், நான்காவது இயக்கமும் மூன்று பிரிவுகளை முன்னிறுத்தி நடத்தப்பட்டது; கிழக்குப் பிரிவு முக்கியமான பிரிவாக இருந்தது; மேற்குப் பகுதியின் இரண்டு பிரிவுகள் செம்படைகளுக்கு தெரியும்படி இருந்தன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மேற்குப் படைகள் முதலில் தாக்கப்பட்டு, ஒரே தாக்குதலில் இரண்டு பிரிவுகளும் ஒழிக்கப்பட்டன. இதன் பிறகு, கிழக்குப் பிரிவின் இரண்டு பிரிவுகள் அனுப்பப்பட்டபோது, அவையும் செம்படைகளால் நொறுக்கப்பட்டன. இந்த இரண்டு போர்களிலும் 20,000க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன; இறுதியில் இயக்கமே அழிக்கப்பட்டது.
இதே நேரத்தில் லி லி ஷான் பிரதிநிதித் துவப்படுத்திய சந்தர்ப்பவாத இடதுசாரி வழி, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அறுதியிடத் துவங்கி, ‘ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங் களில் வெற்றி பெறுவதற்கான போராட்டத்துக்கான கட்சியின் தீர்மானம்’ பிரசுரிக்கப்பட்ட பிறகு 1932 துவக்கத்தில் உறுதிபட்டது.
சாரத்தில், சந்தர்ப்பவாத இடதுசாரி வழி, கெரில்லாவாதமாக நடந்துகொண்டிருந்த நடைமுறையின் மூலம் பரிசோதிக்கப்பட்ட புரட்சிகரப் போரின் சரியான கோட்பாடுகளை நிராகரித்து, முறையான கோட்பாடுகள் என்று அழைக்கப்பட்டதை முன்வைத்தது.
அவர்கள் வாதம்: எதிரியை ஆழமாகக் கவர்ந்திழுப்பது தவறு, ஏனென்றால் நாம் நமது எல்லையின் பெரும்பகுதியை கைவிட வேண்டியிருந்தது. இந்த முறையில் போர்களில் வெற்றி பெற்றிருந் தாலும், இப்போது நிலைமை மாறியுள்ளதா? சியாங்கே ஷெக்குக்கு எதிரான நமது போர், இரண்டு அரசுகளுக்கு இடையிலான, இரண்டு பெரிய படைகளுக்கு எதிரான போராக மாறியுள்ளது; வரலாறு மீண்டும் நிகழக்கூடாது.
கெரில்லாவாதம் தொடர்பான அனைத்தும் கை விடப்பட வேண்டும். பத்து பேருக்கு எதிராக ஒருவரை நிறுத்துவது, நூறு பேருக்கு எதிராக பத்து பேரை நிறுத்துவது, அனைத்து முனைகளிலும் தாக்குதல் நடத்துவது, முக்கிய நகரங்களை கைப்பற்றுவது, இரண்டு முஷ்டிகளாலும் இரண்டு திசைகளில் தாக்குவது, எதிரியை வாயிற் கதவுக்கு அப்பால் எதிர்கொள்வது என்பவை புதிய கோட்பாடுகளாக இருக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியில் இந்த சந்தர்ப்பவாத இடதுசாரி வழியை சிறிது காலம் பின்பற்றியது, முதல் கட்டத்தில் ராணுவ சாகசவாதமாகவும் இரண்டாவது கட்டத்தில் ராணுவ பழைமை வாதமாகவும் மூன்றாவது அல்லது இறுதிக் கட்டத்தில் விரைந்தோடும் வாதமாகவும் முடிந்தது.
சியாங்கே ஷெக் தொடுத்த அய்ந்தாவது சுற்றி வளைத்து ஒடுக்கும் இயக்கத்துக்கு, லி லி ஷானின் தவறான வழியால் வெற்றி கிட்டியது. இந்த இயக்கத்தில், தடுப்பு வீடுகள் கட்டும் புதிய போர்த்தந்திரத்துடன் முன்னேறிய எதிரிகள் முதலில் லிசுவான் பகுதியை ஆக்கிரமித்தனர்.
லிசுவான் பகுதியை மீட்க, தளப் பிரதேசத்துக்கு வெளியில் எதிரியை எதிர் கொண்டு லிசுவான் மீது தாக்குதல் நடத்தி யதில் செம்படை தோல்வியடைந்தது. பிறகு, வெண்மை பகுதியில் எதிரியின் வலுவான புள்ளி மீது நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதலும் தோல்வியுற்றது. போரை தொடர்ந்ததில் செம்படை எதிரிப்படைகளுக்கும் தடுப்பு வீடுகளுக்கும் இடையில் சிக்கி, முழுமையாக தனது முன்முயற்சியை இழந்தது.
அய்ந்தாவது இயக்கம் ஓராண்டு காலம் நீடித்தபோதும், செம்படையிடம் ஓரளவு முன்முயற்சியோ, உந்துதலோ கூட இல்லாமல் போனது; இறுதியில், ராணுவம், தளப்பிரதேசம் ஆகியவற்றில் மிகப் பெரிய இழப்புடன், கியாங்சி தளப்பிரதேசத்தில் இருந்து அது பின்வாங்க நேரிட்டது.
1935 ஜனவரியில் சுனாயியில் மத்திய கமிட்டி அரசியல் தலைமைக் குழுவின் விரிந்த கூட்டம் நடத்தியது; இந்த தவறான சந்தர்ப்பவாத இடதுசாரி வழி திவாலானது என்று அறிவிக்கப்பட்டது; பழைய வழியின் சரியான தன்மை மறு உறுதி செய்யப்பட்டது.
ஆனால், என்ன விலை தர நேர்ந்தது?
அய்ந்தாவது ஒடுக்குமுறை இயக்கத்தில் தீர்மானகரமான தோல்வி அடைந்த பிறகு, எஞ்சியுள்ள சக்திகளை பாதுகாக்க, நீண்ட பயணத்தின் ஊடே அவற்றை வளர்த்தெடுக்க, திட்டமிட்டவிதத்தில், கட்டமைக்கப்பட்ட விதத்தில் பின்வாங்க நேர்ந்தது.