காங்கிரசும் அய்முகூவும் அடி மேல் அடி வாங்குகின்றன. மெகா ஊழல்கள், விலை உயர்வு, நீக்கமறப் பரவி உள்ள நெருக்கடி ஆகியவற்றில் சிக்கி உள்ளன.
ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் எதிர் விளைவுகளை உருவாக்குகின்றன. திடீரென அவர் எடுத்த ஊழல் எதிர்ப்பு அவதாரம், தண்டனை பெற்ற எம்பி பதவிகளைக் காப்பாற்றும் அவசரச் சட்டத்தை நான்சென்ஸ்/முட்டாள்தனம் என அவர் சொன்னது, அவசரச் சட்டம் வரும் முன்பு அவர் என்ன செய்தார் என்ற கேள்வியை எழுப்பியது. தந்தையாரின், தந்தையின் தாயாரின் உயிர்த் தியாகம் பற்றிப் பேசி, தானும் தியாகம் செய்யத் தயார் எனச் சொன்ன நேரத்திலும், அவர்களைக் கொன்றவர்கள் மீது தமக்குச் சீற்றம் தணிய பல ஆண்டுகள் ஆனது என்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் சீற்றம் தணிய நாளாகும் என்றார்.
ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்ட சீக்கியர்கள், காஷ்மீர மக்கள், வடகிழக்கு மக்கள், லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்ட சிறீலங்காவின் தமிழ் மக்கள் போன்றோரின் சீற்றத்தை ராகுல் நியாயப்படுத்தி உள்ளார்.
முசாபர்நகரில், இந்துத்துவா மதவெறியால் பாதிக்கப்பட்ட இசுலாமிய இளைஞர்கள் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான அய்எஸ்அய் செல்வாக்கிற்கு ஆளாவதாகப் பேசி, உலகளாவிய இசுலாமிய எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகி நிற்கிறார். காங்கிரஸ் தனக்கு வாக்குகள் என்பதைக் காட்டிலும், மோடி -பாஜக வேண்டாம் என்ற தளத்தில் தப்பிக்க முடியும் என நம்புகிறது. 2009ல் 206 இடங்கள் பெற்ற காங்கிரஸ், அக்டோபர் 2013 கருத்துக் கணிப்புப்படி 100 இடங்கள் கூடப் பெறாது எனச் சொல்லப்படுகிறது.
1999 பாஜக வேறு. 2014 பாஜக வேறு. 1999, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜன நாயக முன்னணி, 24 கூட்டணிக் கட்சிகளைக் கொண்டிருந்தது. பாஜக 182 இடங்களையும் கூட்டாளிகள் 112 இடங்களையும் பெற்றனர். 2014 தேர்தலுக்கு முன்பு, இன்றளவில் பாஜக வுக்கு சிவசேனா அகாலிதளம் தாண்டி கூட்டாளிகள் இல்லை. முக்கியக் கூட்டாளியான அய்க்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகிவிட்டது. டிசம்பர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கேற்ப புதிய கூட்டாளிகள் வரக்கூடும்.
பாஜக, மோடியைப் புதிய அலங்காரங்களுடன் சிங்காரிக்கிறது. ஜனரஞ்சகமான தளத்தில், தேநீர் விற்ற சாதாரண மனிதரான நரேந்திர மோடி, கடுமையாகப் பாடுபட்டு முன்னுக்கு வந்துள்ளார், ஆகவே சாமான்ய மக்கள் ஆட்சி சாத்தியம் என்கிறார்கள். வலுவான பிரதமரிடம், பாகிஸ்தான் சீனா வாலாட்ட அஞ்சும் என்கிறார்கள். நல்லாட்சி, நல்ல நிர்வாகம் என்று குட்டி முதலாளித்துவ கற்பனைகளை, தொழில்குழும ஊடகங்கள் ஊதி விசிறி விடுகின்றன.
பாஜகவும், காங்கிரஸ் எதிர்ப்பு மக்கள் மனோபாவம் தனக்கு ஆதரவாக மாறும் என நம்புகிறது. பாஜகவிடம், மாற்று கொள்கை திசைவழி கிடையாது.
இந்தியாவினுடைய உண்மையான பிரச்சனைகள் கண்மூடித்தனமான தனியார்மயம், கட்டற்ற முறையில் இயற்கை வளங்களைச் சூறையாடல், ஜனநாயகத்தை அதிகரித்த அளவில் தொழில் குழுமங்கள் சீர்குலைப்பது ஆகியவையே ஆகும். இந்த விசயங்களில் எந்த கொள்கை விவாதத்தையும் பாஜக விரும்பவில்லை. அது, மதவெறி துருவச்சேர்க்கை, பயங்கரம் ஆகியவற்றின் நிழலில், வாக்குகளைக் கைப்பற்றப் பார்க்கிறது.
பிர்லா மீது, நிலக்கரி துறை செயலர் மீது வழக்கு எனும்போது நிலக்கரி துறை அமைச் சரான மன்மோகன் மீது ஏன் வழக்கில்லை, அவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்ற கேள்விக்கு காங்கிரஸ் 2014 தேர்தல்களில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
மோடிக்கு என்ன வேடம் போட்டாலும் என்ன அலங்காரம் செய்தாலும் அவர் கைகளில் படிந்துள்ள இசுலாமியர் இரத்தக் கறையை மறைக்க முடியாது. மோடியையும் மதவெறியையும் பிரித்துக் காட்ட முடியாது. அதே போல், இன்றைய பெரும்தொழில்குழுமத் துறை, தேர்தல் ஓட்டப் போட்டியில் மோடியையே ஆதரிக்கின்றனர் என்ற உண்மையையும் மறைக்க முடியாது.
காங்கிரசும் பாஜகவும் அகில இந்தியக் கட்சிகள் என்ற செல்வாக்கை இழந்து வருவது உண்மைதான். இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில், காங்கிரசோ பாஜகவோ முதன்மையான போட்டியாளர் அல்ல என்பதும் உண்மைதான். காங்கிரஸ் - பாஜக அல்லாத கட்சிகள், கணிசமான அல்லது பெரும்பான்மையான இடங்களை 2014 தேர்தல்களில் பெற வாய்ப்பும் உண்டு.
ஆனால் காங்கிரஸ், பாஜக அல்லாத எல்லா கட்சிகளும் மிக இயல்பாக மூன்றாவது அணியில் இல்லை. லாலு, நிதிஷ் இருவரும், மாயாவதியும் முலாயமும், திமுகவும் அஇஅதிமுகவும், திரிணாமுலும் இகக(மா)வும் ஒரே அணியில் நிற்க வாய்ப்பு இல்லை. மூன்றா வது அணிக்கு ஒரு தலைமை மய்யம் கிடையாது. எல்லாவற்றிற்கும் மேல், இவர்கள் எல் லோருமே உலகமய தாராளமய தனியார்மய கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். கடந்த காலத்தில் ஏதோ ஒரு நேரம் பாஜகவுடன் கை குலுக்கியவர்கள். தேர்தலுக்குப் பின் கை கோர்க்கக் கூடியவர்கள்.
இந்தச் சூழலை, குறிப்பாக காங்கிரஸ் செல்வாக்கு இழக்கும்போது, மோடி தரப்பு மூர்க்கமாக மதவெறி பெரும் தொழில் குழும நிகழ்ச்சி நிரலை உந்தித் தள்ளும்போது, இதனை எதிர்கொள்ளும் சரியான இடதுசாரி அணுகுமுறை எப்படி அமைய வேண்டும்?
அக்டோபர் 30, 2013 இககமா டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. அதே நாளில், இகக (மாலெ) பாட்னாவில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. இந்தி இதய பூமியை, உத்தரபிரதேசத்தை பீகாரை பாஜக குறிவைக்கிறது. நிலப்பிரபுத்துவ சக்திகள், மேல்சாதி சக்திகள், சாமான்ய மக்க ளுக்கெதிராக, சிறுபான்மையினருக்கெதிராக ஆங்காரத்துடன் அக்டோபர் 27 அன்று பாட் னாவில் ‘ஹுங்கார் பேரணி’ நடத்துகின்றன. மோடி களம் இறக்கப்படுகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) அக்டோபர் 30 அன்று பாட்னாவில் ‘கபர்தார் பேரணி’ நடத்துகிறது. எச்சரிக்கைப் பேரணி, மக்களிடம் பாஜக பற்றி மதவெறி பெரும்தொழில்குழும பாசிசம் பற்றி இந்தப் பேரணி எச்சரிக்கும். அதே நேரம், ஆதிக்க சக்திகளுக்கும், உங்கள் கொட்டத்தை மக்கள் அடக்குவார்கள் என எச்சரிக்கும். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ குலக் கட்சிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு அல்லாமல், சுதந்திரமான உழைக்கும் மக்கள் அறுதியிடல் அடிப்படையில் இருக்கும்.
ஆனால், இகக(மா), தட்டையான சோதிக்கப்பட்டு தோற்றுப்போன, மதவெறி ஷ் மதச் சார்பின்மை என்ற சமன்பாட்டுக்குள் அரசியல் காய் நகர்த்துகிறது. இகக(மா), மதவெறி எதிர்ப்பு கருத்தரங்குக்கு, நேற்றுவரை பாஜகவுடன் கூடிக் குலாவிய நிதிஷ் அழைக்கப்பட்டுள்ளார். பாப்ரி மசூதி இடிப்பு கரசேவைக்கு கை கொடுத்த ஜெயலலிதாவிற்கு அழைப்பு தரப்பட்டுள்ளது.
இகக(மா) அக்டோபர் 30 அன்று டெல்லியில் நடத்தும் மதவெறி எதிர்ப்பு கருத்தரங்கிற்கு அழைக்கப்படுபவர்களில் பலர் தேர்தலுக்குப்பின் பாஜகவுடன் கை கோர்க்க எல்லா வாய்ப்பும் உண்டு. மட்டுமின்றி, அவர்கள் அனைவரும் தேச விரோத நவதாராளவாத நிகழ்ச்சிநிரலுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
நாடு சந்திக்கும் இந்த நெருக்கடியான தருணத்தில், போராடும் இடதுசாரி நிகழ்ச்சிநிரல், தேச வளங்களை தொழில் குழுமங்கள் சூறையாடுவதைத் தடுப்பது, பரந்த இந்திய மக்கள் நலனில் வளர்ச்சி முன்னுரிமைகளை மறு வரிசைப்படுத்துவது, உலக மூலதனம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு போர்த்தந்திர அடிப்படையில் சரண் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளை சர்வதேசப் பாத்திரத்தை மீட்பது என்பதாகவே இருக்கும். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இடதுசாரி தேர்தல் பிரச்சாரம் அமைய வேண்டும்.