பார்க்காதே... கேட்காதே... பேசாதே...
முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு முக்கியத் தூணான உச்ச நீதிமன்றம் 17.10.2013 அன்று போட்ட ஓர் ஆணை கவனிக்கத்தக்கது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர், ராடியா ஒலி நாடா உரையாடல்கள் பற்றிய வருமானவரித் துறை நிபுணர் குழு அறிக்கையைப் பரிசீலித்தனர். அதன்பின், பின்வரும் 8 பிரச்சனைகளை, சிபிஅய் விசாரிக்குமாறு உத்தரவிட்டனர்.
• ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் (ஜேஎன்யுஆர்ஆர்எம்) கீழ் டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுக்கு தாழ்தள பேருந்துகள் வழங்கிய விவகாரம்.
• இந்திய தொலை தொடர்பு நெறிமுறை ஆணைய (டிராய்) தலைவரான பிரதீப் பைஜாலிக்கை பைப் லைன் ஆலோசனைக் குழு தலைவராக நியமனம் செய்த விவகாரம்.
• அனில் அம்பானியின் அடாக் குரூப் நடத்தும் சாசன் அல்ட்ரா மெகா பவர் பிரா ஜெக்டுக்கு நிலக்கரி வயல்கள் ஒதுக்கீடு விவகாரம்.
• ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டம் அங்குலாவில், டாடா ஸ்டீலுக்கு இரும்பு தாது சுரங்கங்கள் ஒதுக்கீடு விவகாரம்.
• ஹைட்ரோ கார்பன் டைரக்டர் ஜெனரலான வி.கே.சிபால் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிசுக்கு வழங்கிய சலுகைகள், அதற்கு கைமாறாகப் பெற்றவை தொடர்பான விவகாரம்.
• கட்ட வேண்டிய பணத்தைக் குறைக்க, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அடாக், டிராய்க்கும் மும்பாய் பங்குச் சந்தைக்கும் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கை/அடித்தளம் தொடர்பான பதிவுகளைத் திருத்தித்தந்த விவகாரம்.
• விமான சேவை துறையில், இடைத் தரகர்கள் கையூட்டுக்கள் என்ற விவகாரம்.
• யூனிடெக் பங்குகள் விவகாரத்தில் நடந்த ஊக வணிக சூதாட்டம்.
இந்த உத்தரவு, டாடா போட்ட வழக்கில் போடப்பட்டது என்பது சுவையான செய்தி.
“நீரா ராடியா மற்றும் அவரது கூட்டாளி களின் உரையாடல்கள், நீதிமன்றத் தீர்ப்புக்கள், இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள், தொலை தொடர்பு துறை தொடர்பான முக்கிய உள் தகவல்கள், இந்திய விமான சேவை நிலைமைகள், நிலக்கரி, இரும்புத் தாது சுரங்க ஒதுக்கீடு, எரிவாயு பெட்ரோலியத் துறைகள் தொடர்பான விவாதங்களைக் காட்டுகின்றன. அவர் இந்தப் பிரச்னைகளில், ஊடகத் துறையினருடன் அரசியல்வாதிகளுடன் தொழில் வர்த்தகத் துறையினருடன், பெரும்தொழில்குழும பிரபலங்களுடன், அதிகார வர்க்கத்தினருடன் விவாதித்துள்ளார்.”
“மேற்கூறிய 8 பிரச்னைகளில் உள்ள விசயங்கள், அமைப்பு முறையில் ஆழமாக வேரூன்றியுள்ள நோயை, பார்த்த மாத்திரத்திலேயே புலப்படுத்துகின்றன. தனியார் துறையினர், அரசாங்க அதிகாரிகளுடன் கூடி, குலாவி, ஆதாயம் அடைந்துள்ளனர். ஒலி நாடா உரையாடல்கள், அரசாங்க அதிகாரிகள், சம்பந்தமில்லாத காரணங்களுக்காக, தனியார் ஆதாயம் அடைய ஊழல் செய்துள்ளதைக் காட்டுகிறது.”
17.10.2013 தேதிய உத்தரவு, அலைக்கற்றை, நிலக்கரி ஊழல்களை மட்டுமல்லாமல், டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஊழல்களையும் விசாரிக்கச் சொல்லியுள்ளது.
பழைய டாடா, புதிய அம்பானிக்கு இடையில், பிர்லா மட்டும் விட்டுப் போனால், அது கவுரவமாக இருக்குமா?
ஒடிசாவின் சம்பல்பூரில் பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு நிலக்கரிச் சுரங் கங்களை தமக்கு ஒதுக்குமாறு பிர்லா மன்மோகனுக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து முறையான அரசாணைகள் ஏதுமின்றி, அதே நிலங்கள் பிர்லாவுக்கு ஒதுக்கப்பட்டன. இப்போது நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குமாரமங்கலம் பிர்லா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சீரியஸ் ஃபிராட்கள் இன்வெஸ்டி கேசன் அலுவலகம் (நஊஐஞ), 28 தொழில் குழுமங்கள் மோசடிகள் செய்துள்ளதாக வழக்கு போட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் இப்போது தனியார் பெரும்தொழில் குழுமங்களான எல்&டி பைனான்ஸ், ஆதித்ய பிர்லா நுவோ, ரிலையன்ஸ் கேப்பிடல், பஜாஜ் ஃபின்செர், டாடா சன்ஸ், இந்தியா புல்ஸ் போன்ற 26 நிறுவனங்கள், வங்கி நடத்த அனுமதி கோரி உள்ளனர். மனித ஆற்றல் சுரண்டல், இயற்கை வளச்சூறையாடல் போதாதென, நிதி ஆதாரங்களை விழுங்க முயற்சிக்கிறார்கள்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி எனக் கவிஞன் காதலில் கசிந்து உருகினான். ஆண்டாளுக்கு ஆண்டவன் மேல் இருந்தது ஆன்மீகக் காதல். நம் முதலாளித்துவ அரசியல், முதலாளித்துவப் பொருளாதாரம் உரசல் இல்லாமல் இயங்க, சூறையாட, கொழுக்க, உருகி உருகிச் சேவை செய்கிறது. உச்சநீதிமன்ற ஆணை, சிபிஅய் விசாரணை, முதல் தகவல் அறிக்கைகள் தாண்டி என்ன செய்வதாக இவர்களுக்கு எண்ணம் உள்ளது என்பதை, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் குரல்கள் சில வெளிப்படுத்துகின்றன.
‘சமீபத்திய சம்பவங்கள் முதலீட்டு நம்பிக்கைகளை நாசமாக்குகின்றன’ என்கிறார் சச்சின் பைலட். ‘லாபம் என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதப்பட்ட முற்காலத்தை நோக்கி நம் கடிகாரங்களை நாம் சாவி கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம்’ என்கிறார் மனீஷ் திவாரி. ‘ஒரு மகத்தான தொழிலதிபர் மீது எப்படி வழக்கு பதிவு செய்யப்படுகிறது என யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.
முதலில் தகவல் தொழில் நுட்பத்துறை, அடுத்து எரிசக்தித் துறை, இப்போது நிலக்கரித் துறை என்று வரிசையாகக் கொலை நடக்கிறது’ என ஆதங்கப்படுகிற ஆனந்த் சர்மா, ‘பெருநிறுவன அதிபர்களை அரசு மதிக்கிறது. அவர்களது நேர்மையை யாரும் கேள்வி கேட்கக்கூடாது’ என ஆலோசனையும் சொல்கிறார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, ‘இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு மோசமான சமிக்ஞையை அனுப்பப்போகிறது. குமார் மங்கலம் பிர்லா ஓர் அனுபவமிக்க தொழிலதிபர். அவர் மீது சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது தவறான சமிக்ஞை.
இதன் ஒட்டு மொத்த விளைவாக, வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து போவதோடு, உள்நாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாடுகளை நோக்கிச் சென்று விடுவார்கள். இது முதலீடுகளுக்கு உகந்த சூழல் அல்ல’. மக்களை விட தொழிலும் லாபமுமே மேலான நிலையில் வைக்கப்படும் என காங்கிரசும் பாஜகவும் போட்டி போட்டுச் சொல்கின்றன. அவர்களை எங்கே வைப்பது என மக்கள் முடிவு செய்வார்கள்.