COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 1, 2013

மதவெறி அரசியலுக்கு எதிராக

மன்னர் ஆட்சி முடிவிற்கு வந்த பின்பு பத்மநாபபுரம் அரண்மனையில் ராஜாவின் உடைவாள் (வெள்ளைக்காரன் டிலனாய்யின் உடைவாள்) எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர், கலாச்சாரத் துறை அமைச்சர், இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் குமரி மாவட்ட கலெக்டர், எஸ்.பி, மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வது வழக்கம்.

04.10.2013 அன்று, மக்கள் பிரதிநிதியும் இல்லாத, அழைப்பும் இல்லாத பிஜேபி தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் தலைமையில் பிஜேபி, இமமு, விஎச்பி அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர், கிறிஸ்தவர் உடைவாள் கொடுக்கக்கூடாது இந்துதான் கொடுக்க வேண்டும் என்று பிரச்சனை செய்தனர்.

பொது அமைதியை சீர்குலைத்து, பெரும்ரகளையில் ஈடுபட்டு, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சிவகுமாரை கொடுக்கவைத்தனர். பத்மநாபபுரம் உடைவாள் விவகாரத்தில் பாஜக தலைவர் ராதாகிருஷ்ணனும் அவரது ஆட்களும் நடந்து கொண்ட விதம், மதவெறி அரசியலால் மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்துவதாகவே உள்ளது.

இது சம்பந்தமாக 05.10.2013 அன்று காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் ஜேக்கப், சிபிஎம் மாவட்ட செயலர் முருகேசன் இந்து இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்டனம் தெரிவித்தனர். சிபிஅய்எம்எல் மாவட்டத் தலைமைக்குழு, பொன்.இராதாகிருஷ்ணன் மீதும் மதவெறியைத் தூண்டும், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க தொடர்ந்து செயல்படும் உளவுத்துறை அதிகாரி உன்னிகிருஷ்ணன் மீதும் நடவடிக்கை எடுத்திடக் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு 11.10.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாலெ கட்சி தோழர்களும், யுசிசி மாவட்டத் தலைவர் பாஸ்டர் ஞானதேசிகன், கிறிஸ்தவ நீதிப் பேரவை மாநில பொதுச் செலாளர் வழக்கறிஞர் ஜான் பிரான்சிஸ் சேவியர் மற்றும் ராஜ் எட்வர்ட் புரூஸ், டாக்டர் டி.சி. ஜோசப்மற்றும் திரளான போதகர்கள், பாதிரியார்கள் திரண்டனர். 15.10.2013 அன்று ஆட்சியர் மற்றும் எஸ்.பியை சந்தித்து மனு தரப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநிலச் செயலாளர் பாலசுந்தரம், மாவட்டச் செயலாளர் அந்தோணிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் இ.சந்திரமோகன், கிறிஸ்தவ சமூக நீதிப்பேரவை மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜான்பிரான்சிஸ்சேவியர், தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா, குமரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க சமூக நீதிப் பேரவை அமைப்பாளர் பாதிரியார் டாக்டர் எம்.சி. ராஜன், மதச்சார்பற்ற ஜனதா தளம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அருள்ராஜ், குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ, குமரி மாவட்ட தியாகிகள் சங்கத் தலைவர் குமாரதாஸ் அல்பா, அவைத் தலைவர் சக்கரியாஸ், குமரி மாவட்ட மலைவாழ் மக்கள் தலைவர் டாக்டர் சுரேஷ் சாமியார் காணி, ஒளி வெள்ளம் பத்திரிக்கை ஆசிரியர் பிதலீஸ், காவடியூர் திரு சிவநாராயணபெருமாள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், இடது முற்போக்கு ஜனநாயக அறிவாளிகள், மதச்சார்பற்ற அரசியல் செயல்வீரர்கள் கலந்து கொண்ட அக்டோபர் 20 அன்று நடந்த குமரி வீரவரலாற்று நாள் கருத்தரங்கில் நவம்பர் 1 அன்று புதுக்கடை தியாகிகள் நினைவிடத்தில் வீர வரலாற்று உறுதி ஏற்பு நாள் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

Search