பெரிய சலசலப்புக்கள் பரபரப்பு விறுவிறுப்பு இல்லாமல் ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4 அன்று நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி முகாமில் பெரிய அணி சேர்க்கை மாற்றம் எதுவும் நடைபெறாத பின்னணியில், அஇஅதிமுக புதுக்கோட்டை இடைத்தேர்தல் அளவுக்கு ஆர்ப்பாட்டம் காட்டவில்லை.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் ஏற்காடு தொகுதி பழங்குடியினர்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. தொகுதியில், சுமாராக வன்னியர்கள் 35%, தலித் மக்கள் 20%, பழங்குடியினர் 20% உள்ளனர். பாமக போட்டியிடவில்லை. விஜயகாந்த் டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் மும்முரமாக இருப்பதால், ஏற்காடு விசயத்தில் அவசரம் காட்டவில்லை. கருணாநிதி சகட்டுமேனிக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவைக் கேட்டு, பலரும் மறுத்து விட்டனர். கருணாநிதி, (இல்லாத) மூன்றாவது அணிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் தயார் என்கிறார்.
2010ல் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தல் போல், ஏற்காட்டில் நடைபெற சாத்தியமில்லை. அப்போது திமுக 77,669 வாக்குகள் பெற்றது. பாமக 41285 வாக்குகளும் அஇஅதிமுக 26,787 வாக்குகளும் தேமுதிக 11406 வாக்குகளும் பெற்றன. அஇஅதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி அளவில் பாமக 21 ஆயிரம் வாக்குகளும் தேமுதிக 17000 வாக்குகளும் பெற்றன. 2011 சட்மன்றத் தேர்தலுக்குப் பிறகு பாமக திமுக அணியைவிட்டும், தேமுதிக அஇஅதிமுக அணியிலிருந்தும் வெளியேறிவிட்டன. பாமக போல் தேமுதிகவும் புறக்கணிக்குமா அல்லது தன்னை ஆதரிக்குமா என்ற நப்பாசையில் திமுக காத்திருக்கிறது.
ஜெயலலிதா அரசுக்கெதிரான அதிருப்தி அதிகமாகி உள்ளபோதும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் முடங்கிப் போயுள்ள நிலையில், ஜெயலலிதா பெரிய சவாலைச் சந்திப்பதாக, அவரே கருதவில்லை. மிகவும் துரதிஷ்டமானது, இககவும் இககமாவும், அஇஅதிமுகவை ஆதரிப்பதாகும்.
தோழர் பாண்டியனும் இககவும் தாமாக முன்வந்து முதலில் ஆதரவு தெரிவித்தனர். ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு சிபிஎம் ஆதரவு என்ற தலைப்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தீக்கதிரில் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு சொல்கிறது: “மத்திய அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அஇஅதிமுகவும் உறுதியாக எதிர்த்து வருகிறது. தேசிய மாநில அரசியல் சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டும், அஇஅதிமுகவின் வேண்டுகோளை ஏற்றும் ஏற்காடு இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளரை ஆதரிப்பது என்று இககமா மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.
” எத்தகைய தேசிய மாநில சூழ்நிலைமைகளை, எப்படி கவனத்தில் கொண்டார்கள் என, சிபிஎம் எந்த விளக்கமும் தரவில்லை. விளக்கம் தந்து சிக்கிக்கொள்ள வேண்டாம் எனக் கருதுகிறார்கள் போலும். அஇஅதிமுகவும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை உறுதியாக எதிர்த்து வருகிறது என சிபிஎம் சொல்கிறது. வெறுமனே அஇஅதிமுக எதிர்க்கிறது எனச் சொல்லாமல், அஇஅதிமுகவும் எதிர்க்கிறது என சிபிஎம் சொல்லும்போது, அங்கே எந்த எழுத்துப் பிழையும் இல்லை. காம்ரேட்கள் போல் ஜெயலலிதாவும் காம்ரேட் என்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு, மதச்சார்பற்றவர் பட்டம் சூட்டவும், மத்திய அரசின் புதிய நவதாராளவாதத்தை எதிர்ப்பவர் என்ற பட்டம் சூட்டவும் சிபிஎம் ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும்? தமிழகத் தில் ஜெயலலிதா நவதாராளவாதப் பொருளாதார நிகழ்ச்சி நிரலைத் தீவிரமாக அமல்படுத்துகிறாரா அல்லது மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதையை அமல்படுத்துகிறாரா என சிபிஎம் பரந்த இடதுசாரி அணிகளுக்கும் தமிழக மக்களுக்கும் தெளிவுபடுத்த முடியுமா?
கிராமப்புற வறியவர்களும் சிறுகுறு விவசாயிகளும் பழங்குடியினரும் நிறைந்த ஏற்காடு தொகுதியில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.148 கூலி தரப்படுவதில்லை, ஆண்டுக்கு 150 நாட்கள் வேலையும் தரப்படுவதில்லை. வறுமைக் கோட்டுப் பட்டியலுக்குள் வசதி படைத்தவர்கள் நுழைந்துள்ளனர். பழங்குடியினர் அல்லாதவர், பழங்குடியினர் அந்தஸ்து பெற்று, பழங்குடியினர் வாழ்வுக்கு உலை வைக்கின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறை கொத்தடிமை முறை நீடிக்கின்றன. அடித்தட்டுப் பிரிவு இளம்பெண்கள் திருமாங்கல்யத் திட்ட சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். வன உரிமைச் சட்டம் 2006 பழங்குடியினருக்கு சாதகமாக அமலாவதில்லை. ஆக, இந்தத் தொகுதி மக்களின் விரோதி, அஇஅதிமுக ஆட்சி. அதை இடதுசாரிகள் ஆதரிக்கலாமா?
இகக இககமா நாடு தழுவிய இருப்புடைய இடதுசாரிக் கட்சிகள். பெண்கள், தலித்துகள் சிறுபான்மையினருக்கு எதிராகப் பாயும் இந்துத்துவா அரசியலை, மக்கள் விரோத வன்மையான அரசை, எதிர்க்கக் கடமைப்பட்டவர்கள்.
ஜெயலலிதா அரசின் கைகளிலிருந்து பரமக்குடி தலித்துகளின் ரத்தக்கறை நீங்கவில்லை. சாதி ஆதிக்கத்தின் பக்கமே அரசு இருந்ததற்கு தர்ம புரியும் மரக்காணமும் சான்று கூறின. உலகெங்கும் நாடெங்கும் நடைபெறும் இஸ்லாமியருக் கெதிரான வேட்டையை ஜெயலலிதா தீவிரப்படுத்தியுள்ளார். புத்தூர் சம்பவங்கள் போலி மோதல்களையும் ஜோடிக்கப்பட்ட வழக்குகளையும் திரும்பவும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.
காவல்துறையினரை கொண்டாடி பரிசும் பதவி உயர்வும் தருகிறார் ஜெயலலிதா. இடிந்த கரை மக்களுக்குப் பதில் சொல்ல, பார்வை இல்லாத மாணவர்களை நேரில் பார்க்க தயாராக இல்லாத ஜெயலலிதா, மருத்துவமனைக்குச் சென்று காவல் அதிகாரி லட்சுமணனைச் சந்தித்து மெச்சிப் புகழ்ந்த தோடு நில்லாமல், ஊரையே புகழுமாறு அழைப்பு விடுக்கிறார்.
குற்றம் சுமத்தப்பட்ட எவரும் எந்த நீதிமன்றத்தாலும் குற்றவாளி என தண்டனை வழங்கப்படாத நிலையிலேயே இவ்வளவு கூத்தும் அரங்கேறியுள்ளது. கருணாநிதியோ இன்னும் பல போலீஸ்காரர்களுக்கு பரிசு தந்திருக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, இந்திய பாணி மதச்சார்பின்மையின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வாய்ப்புக்களும் ஏராளமாய் உள்ளன. வால்பிடிக்கும் சந்தர்ப்பவாத நாடாளுமன்ற முடக்குவாத அரசியலுக்கு எதிராக, சுதந்திரமான போராடும் இடதுசாரி அரசியலை உயர்த்திப் பிடிப்போம்.