சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்
கியாங்சி மாகாணத்தில் இருந்து வடக்கில் இருந்த ஷென்சி மாகாணம் வரை 25,000 லி (12,000 கி.மீ) தூரத்தை செம்படையின் நீண்ட பயணம் கடந்தது. 1934 அக்டோபரில், சீனத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் செம்படையின் முதல், மூன்றாவது மற்றும் அய்ந்தாவது பிரிவு படைகள் (மய்ய செம்படை என்றும் இது அறியப்பட்டது) மேற்கு பூகினின் சேங்டிங் மற்றும் நிங்ஹுவாவில் இருந்தும் தெற்கு கியாங்சியின் ஜியுசின், யாட்டு மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் ஒரு பெரிய போர்த்தந்திர நகர்வை நிகழ்த்தின.
பனிபடர்ந்த செங்குத்தான மலைகள், பாதையில்லா புல்வெளிகள் ஆகியவற்றினூடே, சொல்ல முடியாத துன்பங்களை தாங்கிக்கொண்டு, அதே நேரம் எதிரியின் சுற்றி வளைப்புக்களை, தடைகளை, இடையூறுகளை முறியடித்து, செம்படை, பதினோரு மாகாணங்களை, 25,000 லியைக் கடந்து, 1935 அக்டோபரில் வடக்கு ஷென்சியில் இருந்த புரட்சிகர தளப்பிரதேசத்தை அடைந்தது.
நீண்ட பயணத்தின் முக்கியத்துவம் பற்றி தோழர் மாவோ சொன்னார்:
‘வரலாற்றில் இப்படி நடந்தது இதுவே முதல் முறை. அது ஒரு பிரகடனம். ஒரு பிரச்சார சக்தி. ஒரு விதைப்பு எந்திரம்.... நீண்ட பயணம் நமக்கு வெற்றியாகவும் எதிரிக்கு தோல்வியாகவும் முடிந்துள்ளது என்று சொல்லலாம்.... கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல், இதுபோன்ற ஒரு நீண்ட பயணத்தை சிந்தித்துப் பார்த்திருக்கவே முடியாது.... இது கட்சியின் மத்திய கமிட்டி முன்னெடுத்த கடமையான வடகிழக்கு சீனத்தில் புரட்சியின் தேசியத் தலைமையகத்தை நிறுவுவது என்ற கடமைக்கு அடிக்கல் நிறுவியுள்ளது’.
5. சீனப் புரட்சியின் அடுத்த திருப்புமுனை 1930களின் நடுப்பகுதியில், சீனத்தை காலனி நாடாக மாற்ற எடுக்கப்பட்ட முதல் மூர்க்கத் தனமான முயற்சியான, சீனத்தின் மீது ஜப்பானிய படையெடுப்பு என்ற பின்னணியில் எழுந்தது. முதலாளித்துவ உலகின் ‘மாபெரும் நெருக்கடி’ என்ற வடிவத்திலான கடுமையான பொருளாதார நெருக்கடியின் போர்வையில் இரண்டாவது உலகப் போரை வடிவமைப்பது மற்றும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய சக்திகள் உலகை புதிதாக மறு பங்கீடு செய்ய பாசிசத்தை வடிவமைப்பது நோக்கிய சர்வதேச சூழலுக்கேற்றவாறு இது அமைந்தது.
சீனத்தின் மீதான ஜப்பானிய தாக்குதல் உக்கிரமடைந்த இயக்கப்போக்கை பின்வரும் நிகழ்வுகள் காட்டுகின்றன:
• 1931, ஜனவரி 18க்குள் 21 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜப்பான் ஏகாதிபத்தியம் யுவான் ஷி - காய் அரசுக்கு கெடு விதித்தது. ஜெர்மனிக்கு இருந்த உரிமைகள் ஜப்பானுக்கு மாற்றப்பட வேண்டும் மற்றும் குடியிருப்புக்கள் கட்ட அல்லது தொழில், வர்த்தகம், ரயில்வே ஆகியவற்றில் ஈடுபட தெற்கு மன்சூரியாவில் குத்தகைக்கோ சொந்தமாகவோ நிலம் மற்றும் சுரங்க உரிமைகள், இரும்பு மற்றும் உருக்கு ஆலைகளை சீன - ஜப்பானிய கூட்டு நிறுவனமாக வளர்ப்பது, சீனக் கடலோரப் பகுதியில் துறைமுகங்களையோ, தீவுகளையோ எடுத்துக்கொள்வது அல்லது குத்தகைக்கு எடுப்பது போன்ற கூடுதல் உரிமைகள் வேண்டும் என்பதே இந்த நிபந்தனைகளின் சாரம்.
• சீனத்தின் அரசியல், நிதி, ராணுவம் மற்றும் காவல்துறை விவகாரங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் ஹ÷பே, கியாங்சி, குவாங்துங் மாகாணங்களை இணைக்கும் பெரிய இருப்புப் பாதைகள் போடுவது ஆகியவையும் இந்த நிபந்தனைகளின் மறுபக்கமாக இருந்தன.
• 1931, செப்டம்பர் 18 அன்று, வடகிழக்கு சீனத்தில் இருந்த ‘குவாங்டாங் படை’ என்ற ஜப்பானிய படை ஷென்யாங்கைக் கைப்பற்றியது. முற்றிலும் ‘எதிர்ப்பின்மை’ என்ற ஷியாங் கே ஷெக் ஆணைக்கேற்றபடி, வடகிழக்குப் பகுதியில் இருந்த சீனத் துருப்புக்கள் ஷன்ஹாய் குவானின் தெற்குப் பகுதிக்கு பின்வாங்கின. அதைத் தொடர்ந்து ஜப்பானியப் படைகள் லியோனிங், கிரின், ஹீலோங்கியாங் மாகாணங்களை ஆக்கிரமித்தன.
• ஜப்பானின் தூண்டுதலின் பேரில், 1935, நவம்பர் 21 அன்று, குவாமின்டாங் துரோகி யின் ஜ÷கிங், கிழக்கு ஹோபீயின் 22 கவுன்டி களில் ‘கிழக்கு ஹோபீ கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சுயாட்சி நிர்வாகம்’ என்ற பெயரில் பொம்மை அரசாங்கம் நிறுவினார்.
• ஷியாங் கே ஷெக் அரசாங்கம், ‘ஜப்பான் எதிர்ப்பு இயக்கத்தை நசுக்குவது, ஜப்பான், சீனா, ‘மன்சுகுவோ’ ஆகியவற்றுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, கம்யூனிசத்திற்கு எதிராக சீன மற்றும் ஜப்பானிய கூட்டுப்படை ஆகிய சீனா பற்றிய மூன்று கோட்பாடுகள்’ என்ற ஜப்பான் முன்வைப்பை ஏற்றுக்கொண்டது.
• 1937 ஜூலையில் ஜப்பானிய ஆக்கிரமிப்புப் படைகள் பீஜிங்கின் தென்மேற்கு பகுதியில் 10 கி.மீ தொலைவில் உள்ள லக்கூசியோவில் சீனப் படைத்தளத்தை தாக்கின.
இது, சீனத்தில் ஜப்பான் ஏகாதிபத்தியத்தின் அனைத்தும் தழுவிய விதத்தில் ஆக்கிரமிப்பு என்பதன் துவக்கத்தைக் குறித்தது.
ஜப்பான் ஏகாதிபத்தியத்தால் சீனா காலனி மயமாக்கப்படும் கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீன அரசியல் சூழலின் இந்த முக்கியமான கட்டத்தை ஆய்வு செய்து, புதிய கடமையை தீர்மானிக்க முடிந்தது. உள்நாட்டு வர்க்க மோதல் பின்னுக்குப் போய், ஜப்பான் ஏகாதிபத்தியத்துக்கும் சீன தேசத்துக்கும் இடையிலான மோதல் முன்னிறுத்தப்படுவதை நிர்ப்பந்தப்படுத்திய புதிய சூழலை சீன கம்யூனிஸ்ட் கட்சி புரிந்துகொண்டிருந்தது.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, உள்நாட்டுப் போரை நிறுத்தி, ஜப்பானிய எதிர்ப்பு அலைகளுடன் இணைய ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கெதிரான சாத்தியப்பட்ட அளவுக்கு பரந்துபட்ட சக்திகளை அணி திரட்டி ஒன்றுபடுத்த அழைப்பு விடுத்தது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தப் புதிய கொள்கை, சீன சமூகத்தின் புறநிலை ரீதியான இயங்காற்றலால் மறுஉறுதி செய்யப்பட்டது.
1935ல் சீனா முழுவதும் வெகுமக்கள் தேசம் காக்கும் போராட்டங்களில் புதிய எழுச்சி காணப்பட்டது. டிசம்பர் 9 அன்று, ‘உள்நாட்டுப் போரை நிறுத்துவோம்’, ‘அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்க்க ஒன்றுபடுவோம்’, ‘ஜப்பான் ஏகாதிபத்தியம் வீழட்டும்’ போன்ற முழக்கங்களுடன் பீஜிங் மாணவர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தேசம் காக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்துகொண்டு குவான்மின்டாங் அரசாங்கம் திணித்த நீண்ட ஒடுக்குமுறை ஆட்சியை இந்த இயக்கம் கிழித்தெறிந்தது.
வெகுவிரைவாகவே, நாடு முழுவதும் மக்கள் ஆதரவைப் பெற்றது. ‘ஜப்பானிய எதிர்ப்பு தேசிய அய்க்கிய முன்னணி’ என்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைப்பை தேசப்பற்றுமிக்க மக்களின் பொதுவான எதிர்ப்பு என்று மாற்றுவதில் இந்த இயக்கம் பங்காற்றியது. இதனால், துரோகத்தனமான கொள்கை கொண்ட ஷியாங் கே ஷெக் தனிமைப் படுத்தப்பட்டார்.
ஆனால், சீனத்தில் ஏற்பட்ட இந்தப் புதிய மாற்றத்தின் துவக்க கட்டத்தில், ஷியாங் கே ஷெக் ஆக்கபூர்வமாக பதில்வினையாற்றவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைப்பு, வெகுமக்களின் மனப்போக்கு ஆகியவற்றுக்கு எதிராக, சீனத்தை ஆக்கிரமிக்கும் ஜப்பான் ராணுவத் தாக்குதலின் முன் அப்பட்டமான ஊசலாட்டம் மற்றும் கூட்டு என்ற போக்கை வெளிப்படுத்தினார். ஷியாங் கே ஷெக்கின் இந்த அணுகுமுறையின் தாக்கத்தால், குவாமின்டாங் அணிகள் மத்தியில் மோதலும் குழப்பமும் தீவிரப்படுத்தப்பட்டது.
திடீரென நிகழ்ந்த சியான் சம்பவம், ஜப்பான் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இயக்கத்தில் ஒரு புதிய திருப்புமுனையாக எழுந்தது.
சியான் சம்பவம் என்பது என்ன?
சீனச் செம்படை மற்றும் மக்களின் ஜப்பான் எதிர்ப்பு இயக்கத்தின் செல்வாக்கில், சேங் சூச் - லியாங் தலைமையிலான குவாமின்டாங் கின் வடகிழக்குப் படைகள், யாங் ஹு - சாங் தலைமையிலான 17ஆவது வழித்தடப்படை ஆகியவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் வைப்பான ஜப்பானிய எதிர்ப்பு தேசிய அய்க்கிய முன்னணியை ஏற்றுக்கொண்டன; ஜப்பானை எதிர்க்க ஷியாங் கே ஷெக் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்தின. ஷியாங் கே ஷெக் இதை மறுத்ததுடன், இன்னும் வக்கிரத்துடன் கம்யூனிஸ்டுகளை ‘ஒடுக்க’ அவரது ராணுவ தயாரிப்புக்களை அதிகப்படுத்தினார். சியானில் மாணவர்களின் ஜப்பானிய எதிர்ப்பு இயக்கத்தின் மீது ஒடுக்குமுறையை ஏவினார்.
1936 டிசம்பர் 12 அன்று, சேங் சூச் - லியாங், யாங் ஹு- சாங் ஆகியோர் சியான் சம்பவத்தை நிகழ்த்தி ஷியாங் கே ஷெக்கை கைது செய்தனர். அதன்பின், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சேங் சூச் - லியாங், யாங் ஹு- சாங் ஆகியோரின் தேசம் காக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதியான ஆதரவு தெரிவித்தது. அதே நேரம், ஒற்றுமை மற்றும் ஜப்பான் எதிர்ப்பு என்ற அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. டிசம்பர் 23 அன்று, ஷியாங் கே ஷெக், ஜப்பானுக்கு எதிராக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான ஒற்றுமை பற்றிய நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் விடுதலை செய்யப்பட்டு நான்கிங்குக்கு பின்வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை இது குறித்தது; ஜப்பானுக்கு எதிராக உண்மையான எதிர்ப்பை வடிவமைத்தது. சியான் சம்பவம் பற்றிய, குவாமின்டாங்கின் கொள்கையின் துவக்ககட்ட மாற்றங்களும் அதன் மத்திய செயற்குழுவின் மூன்றாவது மாநாடும் துவக்கமாக அமைந்தன.
ஜப்பான் எதிர்ப்பு பற்றிய, ஜூலை 17 அன்று வெளியிடப்பட்ட ஷியாங் கே ஷெக்கின் லுஷன் அறிக்கை மற்றும் தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான அவரது பல நடவடிக்கைகள், ஜப்பானுக்கு எதிரான இயக்கத்தில் முக்கிய ஆக்கபூர்வமான மாற்றங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்தப் பின்னணியில், ஜப்பானை முழுமையாக முறியடிப்பதை உறுதிசெய்ய, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, 10 அம்ச தேசப்பாதுகாப்பு திட்டத்தை குவாமின்டாங்கிடம், நாட்டு மக்களிடம், அனைத்து அரசியல் கட்சிகளிடம், ஆயுதப்படைகளிடம் முன்வைத்தது.
அ) ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிவது
ஆ) நாட்டின் அனைத்து ராணுவ வல்லமையை யும் அணிதிரட்டுவது
இ) நாட்டு மக்கள் அனைவரையும் அணிதிரட்டுவது
ஈ) அரசு எந்திரத்தை சீரமைப்பது
உ) ஜப்பான் எதிர்ப்பு வெளியுறவு கொள்கைளை கடைபிடிப்பது
ஊ) போர்க்கால நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடிப்பது
எ) மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது
ஏ) ஜப்பான் எதிர்ப்பு கல்வி கொள்கையை கடைபிடிப்பது
ஐ) துரோகிகளையும் ஜப்பான் ஆதரவு சக்திகளையும் அழிப்பது
ஒ) ஜப்பானுக்கு எதிராக தேசிய ஒற்றுமையை எட்டுவது.
நாடு தழுவிய ஜப்பான் எதிர்ப்புப் போராட்டம் வடிவமெடுத்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அந்தப் போராட்டத்தை அரசியல் மற்றும் ராணுவம் என்ற இரண்டு தளத்திலும் வழிநடத்தியது.
உதாரணமாக, நான்கு கடமைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னகர்த்தியது.
அவை, அடுத்த இதழில்...