தமிழ்நாட்டின் நகர்ப்புற, கிராமப்புற வறிய மக்கள் பழைய சோற்றுக்கு வெங்காயத்தை கடித்துக் கொண்டு பசியாறுகிற காட்சி இனி கடந்த காலத்ததாகிவிடும். அந்த வெங்காயம் கூட இனி அவர்கள் வாங்க முடியாது என்ற நிலையை அய்முகூ ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டார்கள். நடுத்தரப் பிரிவினர் கூட வெங்காயம் என்ற சொல் கேட்டால் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
அக்டோபரில் விலை குறைந்துவிடும் என்று சரத்பவார் சொன்ன ஆருடம் பொய்த்து வெங்காயத்தின் விலை ரூ.100அய் எட்டி விட்டது. பெட்ரோல் விலை, டாலரின் ரூபாய் மதிப்பு ஆகியவற்றுடனான போட்டியில் வெங்காயம் வெற்றி பெற்றுவிட்டது. அப்போது, மழை வந்தால் விலை குறையும் என்றவர், இப்போது, மழை பெய்வதால் விலை அதிகரித்துள்ளது என்கிறார்.
வெங்காய ஏற்றுமதியை நிறுத்த முடியாது என்றும் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள் உணவு அமைச்சர் கே.வி.தாமசும் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மாவும். சீனா, துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யலாம் என்று ஆலோசனை சொல்கிறார் கே.வி.தாமஸ்.
நாட்டில் போதுமான வெங்காய இருப்பு உள்ளது என்றும் பதுக்கலை தடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறார் ஆனந்த் சர்மா. வர்த்தக அமைச்சருக்கு தெரிகிற இருப்பு, உணவு அமைச்சருக்கு தெரியவில்லையா? அல்லது பதுக்குபவர்கள் பதுக்கி பயன் பெற, இறக்குமதியாளர்கள் மறுபுறம் பயன் பெறட்டும் என்று உணவு அமைச்சர் கருதுகிறாரா? யார் சொல்வதை நாம் நம்ப வேண்டும்?
ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.315 முதல் ரூ.415 வரை வாங்கி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்கலாம் என்கிறார் உணவு அமைச்சர். 2013 ஜ÷ன் மாதத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10க்கு விற்றது. கோடிக்கணக்கான இந்திய மக்களால் அதையே வாங்க முடிய வில்லை. இப்போது உணவு அமைச்சர் சொல்வதைப் பார்த்தால் வெங்காய விலை ரூ.40, ரூ.45, ரூ.50 என்று நிலைகொண்டுவிடும்போல் தெரிகிறது.
திட்டக் கமிசன் இருக்கிறது; மான்டெக்சிங் அலுவாலியா என்ற பொருளாதார நிபுணரான அதன் துணைத் தலைவர் பயன்படுத்த, ரூ.35 லட்சம் செலவு செய்து கழிப்பிடம் கூட செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறோம். விதவிதமான திட்டங்களுக்கு கமிசன் பெறுவது அல்ல திட்டக் கமிசன். நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப திட்ட மிடுவது திட்டக் கமிசன்.
நாட்டில் ஓர் ஆண்டில், உள்நாட்டு நுகர்வுக்கு 1.5 கோடி டன் வெங்காயம் தேவை எனும்போது, அதை விட கூடுதலாக விளைச்சலும் இருக்கும்போது, அந்தத் தேவையை நிறைவேற்றும் விதம் நடவடிக்கைகளை திட்டமிடாத திட்டக்கமிசன் எதற்கு?
உலகம் காணாத உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்ததாக அய்முகூ ஆட்சியா ளர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, சாதாரண வெங்காயம் கைக்கெட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டது. அய்முகூ சொல்கிற உணவுப் பாதுகாப்பு எவ்வளவு கேலிக்கூத் தானது என்பதை வெங்காயம் வெளுத்துக் காட்டிவிட்டது. வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 900 டாலர் என உயர்த்தியதால் ஏற்றுமதி ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் உள்நாட்டு பதுக்கல் நிலைமையை மோசமாக்கியது.
சீனத்துக்கு அடுத்து இந்தியாவில்தான் வெங்காய உற்பத்தி அதிகம். மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என இந்திய வெங்காயம் ஏற்றுமதி ஆகிறது. இப்போது உள்நாட்டில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதி செய்யலாம் என்று உணவு அமைச்சரும் வர்த்தக அமைச்சரும் துடியாய் துடிப்பதற்கு என்ன காரணம்?
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு குவின்டால் வெங்காயத்தை விவசாயிகளிடம் ரூ.1500க்கு வாங்கிய வர்த்தகர்கள் ஒரு குவின்டால் ரூ.4500க்கு விற்றனர், பதுக்கிவைக்கப்பட்ட வெங்காயத்தை சந்தைக்கு விட்ட வியாபாரிகள், ஆகஸ்ட் 12 முதல் 15க்குள் நான்கு நாட்களில் ரூ.150 கோடி பார்த்தனர் என்று செய்திகள் வெளியாகின்றன.
வெங்காய விலை இப்போதுதான் முதல் முறையாக ஏறவில்லை. 1998ல் தேஜமு ஆட்சி வீழ்வதில் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததில் இருந்து, 2010 வரை அவ்வப்போது இதுபோன்ற தாறுமாறான ஏற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 2010ல் வெங்காய கார்ட்டல் ஏதும் இருக்கிறதா என்று ஆய்வு செய்த இந்திய போட்டி ஆணையம், பெயரே குறிப்பிடாமல், சில நிறுவனங்கள் விலையை நிர்ணயிப்பதில் பங்காற்றுவதாகச் சொல்கிறது.
பதுக்கல்காரர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பொத்தாம் பொதுவாக சொல்லும் வர்த்தக அமைச்சர், யார் அந்த பதுக்கல்காரர்கள் என்று எந்த ஒரு பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எந்த மாநில அரசும் எங்கள் மாநிலத்தில் வெங்காயத்தை யாரும் பதுக்கவில்லை என்றும் இதுவரையிலும் சொல்லவில்லை.
யார் அந்த பதுக்கல்காரர்கள்? உருவமற்றவர்களா? அல்லது, மத்திய மாநில அரசுகளுக்கு தெரியாமல் குகைகளுக்குள் வாழ்கிறார்களா? நாட்டில் வெங்காய வர்த்தகத்தில் முதல் நிலையில் அல்லது இரண்டாவது நிலையில் ஈடுபடுபவர்கள்தான் பதுக்கலில் ஈடுபட வேண்டும். இவர்கள் யார் என்பது மத்திய மாநில அரசாங்கங்களுக்கு நிச்சயம் தெரியும்.
சல்மான் குர்ஷித் மனைவி தொண்டு நிறுவனம் நடத்துவதுபோல், தயாநிதி மாறனின் சகோதரர் தொலைக்காட்சி தொழில் செய்வதுபோல், வேறோர் அமைச்சரின் அல்லது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் அல்லது வேண்டப்பட்டவர் வெங்காய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழி லில் ஈடுபடுபவராக இருக்கக் கூடும்.
தமிழ்நாட்டில் ரத்தத்தின் ரத்தங்கள், கழக கண்மணிகள், உடன்பிறப்புக்கள் ஆதரவு பெற்றவர்கள் தவிர வேறு யார் இந்தத் தொழில் செய்ய முடியும்? செல்வமும் செல்வாக்கும் உள்ளவர்கள் தவிர எந்த சாமானிய இந்தியனும் இந்தத் தொழில் செய்யும் வாய்ப்பு பெறும் நிலையில் இல்லை.
மத்திய அரசு நிறுவனமான இந்திய தேசிய விவசாய விற்பனை கூட்டமைப்பு, இன்னும் சில மாநில அரசு நிறுவனங்கள், தவிர சில தனியார் நிறுவனங்கள் வெங்காய ஏற்றுமதியில் ஈடுபடுகின்றன.
மத்திய அரசு நிறுவனமான இந்திய தேசிய விவசாய விற்பனை கூட்டமைப்பு ஏற்றுமதிக்கான வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்குவதில்லை. வர்த்தகர்களிடம் இருந்தே வாங்குகிறது. இதனால் விவசாயிகள் பெற வேண்டியதை வர்த்தகர்கள் பெறுகிறார்கள். அல்லது விவசாயிகளிடமிருந்து நேடியாக கொள்முதல் செய்தால் கொடுக்க வேண்டிய விலையை விடக் கூடுதலாக வர்த்தகர்களுக்கு அரசு தருகிறது. இன்னும் சற்று இழுத்துச் சொன்னால் மக்கள் வரிப்பணம் வர்த்தகர்கள் பைக்குச் செல்கிறது.
2011 - 2012ல் 15,52,904 மெட்ரின் டன், 2012 - 2013ல் 18,22,760 மெட்ரின் டன், 2013 2014 அக்டோபர் வரை 7,39,136 மெட்ரின் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயத்தை ஏற்றுமதிக்காக கொடுத்த வர்த்தகர்கள் அதில் லாபம் பார்த்திருப்பார்கள். இன்று வெங்காய விலை ஏறியிருப்பதில் லாபம் பார்ப்பார்கள். பின்னர் பதுக்கி வைத்ததை ஏற்றுமதிக்கோ, கூடுதல் விலைக்கோ கொடுத்து அடுத்தச் சுற்று லாபம் பார்ப்பார்கள்.
பிறகு இறக்குமதி தொழிலில் சில வர்த்தகர்கள் மீண்டும் லாபம் பார்ப்பார்கள். இவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து வெங்காய விலையை நிர்ணயிக்கும் கார்ட்டல்களாக மாறுவார்கள். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டாலும், எல்லைப் பிரச்சனை தொடர்ந்தாலும் வெங்காயம் மட்டும் போவதும் வருவதுமாக இருக்கும்.
சில பணப்பெட்டி கள் நிரம்பி வழிய, வழிவதில் ஒரு பகுதி, ஒரு சில அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுக்கு வந்து சேரும். எப்படிப் பார்த்தாலும் ஆனந்த் சர்மா. கே.வி.தாமஸ் மற்றும் சரத் பவார் ஆகியோரின் கணக்கு லாபம்தான்.
அப்பட்டமாக கண்ணில் தெரியும்விதம், வெங்காய வர்த்தகர்களை பாதுகாப்பதில் மவுனக் கருத்தொற்றுமை காட்டுபவர்கள், ஒருவர் பொறுப்பை இன்னொருவர் மீது சுமத்தி நழுவும் போது, சுமை அனைத்தும் சாமானிய மக்கள் தலையை அழுத்துகிறது. பண்டிகை நாளில் கொண்டாட்டம் இருக்கட்டும், நல்ல உணவு கூட இல்லாமல் இந்த ஆண்டு இந்திய மக்களுக்கு கழியும். தீபாவளிக்குப் பிறகு விலை குறையும் என்று அமைச்சர்கள் சொல்கின்றனர்.
விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டும் என்று சரத் பவார் சொல்கிறார். அதாவது வெங்காய விலை உயர்வு நல்லது என்கிறார். விளைவிப்ப வரிடம் இருந்து நுகர்வோருக்கு வெங்காயம் வந்து சேருவதற்குள் அது பல கைகள் மாறுகிறது. இடைத்தரகர்களும் வியாபாரிகளும்தான் இங்கு நல்ல விலை பெறுகிறார்களே தவிர சரத் பவார் சொல்வதுபோல் விவசாயிகள் அல்ல.
பார்தி நிறுவனத்துடன் இணைந்த செயல்பாடு என்று பின்கதவு வழியாக இந்தியாவில் நுழைந்த வால்மார்ட், அய்முகூ அரசாங்கத்தின் அயராத முயற்சியால் சில்லறை வர்த்தகத்தில் நுழைய கதவு திறந்துவிடப்பட்டுவிட்டதால் பார்தி நிறுவனத்திடம் இருந்து பிரிந்த பிறகு, 30% பொருட்களை இந்தியச் சந்தையில் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க முடியாது என்று சொல்கிறது.
வெங்காயத்தில் வந்துள்ள கார்ட்டல் நாளை எல்லா அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரும் என்பதற்கு வால்மார்ட் நிறுவனம் துவக்கத்திலேயே போடுகிற இந்த ஆட்டம் அறிகுறி. சிறுவர்த்தகர்களுக்கு விற்பதை விட 40% குறைவான விலையில் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு பெப்சி, கோக் ஆகியவை விற்கப்படுவதை எதிர்த்து திரு.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் கூட சமீபத்தில் நடத்தப்பட்டது.
பெயர் சொல்லாமல் மறைக்க வேண்டியிருக்கும் வெங்காய வியாபாரிகளை பாதுகாப்பதற்கே இவ்வளவு முனைப்பு காட்டும் ஆளும் வர்க்க கட்சிகள், இந்திய நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் ஆதரவுடன், வால்மார்ட் போன்ற சில்லறை வர்த்தகப் பெருநிறுவனங்கள் எடுக்கவிருக்கும் லாப நோக்கிலான நடவடிக்கைகளை, அது சாமான்ய மக்களை வாட்டும்போதும், தங்கள் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று கூத்தாடிக் கொண்டாடுவார்கள்.
வெற்று என்று சொல்வதற்கு பெரியார் வெங்காயம் என்ற சொல்லை பயன்படுத்தினார். அவ்வளவு மலிவானதாக இருந்த வெங்காயம் இன்று தேர்தல் நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு சவாலாகி இருக்கிறது. இந்த நேரத்திலும் அய்முகூ ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் வசதி படைத்தவர்களை ஊக்குவிப்பவையாக இருக்கின்றனவே தவிர, பிரச்சனையை தீர்ப்பதாக இல்லை. கூடுதல் விளைச்சல், போதுமான பதன வசதிகள், கிட்டங்கிகள் ஆகியவை பற்றி, அய்ந்து மாநிலங்களில் தேர்தல்களை சந்திக்கவிருக்கும் இந்த நிலையிலும் அவர்கள் பேசவில்லை.
வெங்காய விலையேற்றத்துக்குப் பின் மறைந்துள்ள கரங்களை வலுப்படுத்துவது தான் அவர்களின் பிரதான செயல்பாடு. அவர்களை, அவர்கள் ஆணையில் வைத்துள்ள நவதாராளவாதக் கொள்கைகளை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் இந்திய மக்களின் இன்றைய பிரதான கடப்பாடு.